முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அவன் பெயர் பொறுக்கி !






வீட்டில் சமைக்கும் பெண்களுக்கு பொதுவான ஒரு பிரச்சனை உண்டு. அவர்களால் எளிதாக சமைத்திட முடியும் ஆனால் என்ன சமைப்பது என்பதை முடிவு செய்வது அவ்வளவு எளிதல்ல. பதிவெழுதலாம் என நினைக்கும் போதெல்லாம் என் பிரச்சனையும் அதுதான், என்ன எழுதுவது?? சரி இருக்கவே இருக்கிறது 'காதல்', காதல் சலித்துப்போகும் அளவிற்கு நாம் இன்னும் தரம் இழக்கவில்லை என்பதால், மீண்டும் ஒரு காதல் கதை.... 

நான் கல்லூரி படிக்கும்போது, என் சீனியரி.......

ஹே நிறுத்து... நிறுத்து..... இப்ப எதப்பத்தி எழுத போற??

நீ யாரு??

ஹே எரும நான்தாண்டா......

வாடி நல்லாருக்கியா??

நான் நல்லாருக்குறது கெடக்குது... இப்ப நீ எந்தக் கதைய எழுதப்போற??

ஏன் நம்ம கதையத்தான்.....

இல்ல கூடாது நம்ம கதைய நீ எழுதக் கூடாது....

ஏன்??

நீ எழுதினா உண்மைய அப்புடியே எழுதுறேன்னு..... என்னைய சந்தி சிரிக்க வச்சுபோடுவ... 

ச்சீ ச்சீ நான் அப்டி செய்வேனா???

கண்டிப்பா செய்வ.... உன்ற நகக்கண் அசைவு கூட எனக்கு தெரியும்..... 

சரி சரி இப்போ கை பரபரங்குது நான் எதையாவது எழுதியே ஆகணுமே... 

அதெல்லாம் ஒரு மண்ணும் தேவையில்ல.... நம்ம கதைய எழுதுறதுக்கு நீ எதுக்குடா?? கோயம்புத்தூர்ல சுத்திட்டிருக்குற நாய், எரும, பறந்துட்டிருக்குற காக்கா, குருவிக்கு கூட நம்ம கத தெரியுமேடா அதுங்களே எழுதும் அதுவும் உன்ன விட சூப்பரா ...

அப்போ ஒன்னு பண்ணலாம்... எப்போ காக்கா குருவிக்கு கூட நம்ம கதைய எழுதும்னு சொன்னியோ, நம்ம கதைய நீ எழுதலாம் எழுதுறியா??

நானா... ஒதச்சே போடுவேன் ஓடிப்போய்டு.... நானும் ஒன்னயாட்டம் வெட்டினு நெனச்சியாக்கும்?? 

அட டையலாக் எழுதும்போது பழகுதமிழ், பத்தி எழுதும்போது உரைநடைத் தமிழ் அவ்ளோதான் அனுபத்தத்தான எழுதப்போற.... கற்பனை செஞ்சு எழுதுறதுதான் கொஞ்சம் கஷ்டம்...

சரி, நானே எழுதுறேன் ஆனா இனி இந்தப்பக்கம் நீ எட்டியே பாக்கக்கூடாது சொல்லிப்போட்டேன் ஆமா, இப்டியே ஓடிப்போய்டு எழுதி முடிச்சுப்போட்டு கூப்புடுறேன்.....

இனி இந்திரனுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை, உங்களுக்கு கதை சொல்லவிருப்பது நான், நான் யாரென்று சொல்லி விடுறேன். என் உண்மையான பெயரைச் சொல்வதில் எனக்கு கொஞ்சம் தயக்கம் இருக்கிறது. அவனிடம் கேட்டால், அபர்ணா என்று வைத்துக்கொள்ள சொல்வான். அந்த பெயரை எனக்கு சூட்டிக்கொண்டால் கண்களில் புகுந்து தூசியாய் உறுத்துகிறது ஆகவே எனக்கு இந்தக் கதையில் பெயர் இல்லை. அவனுக்கு பெயர் இருக்கிறது அதை கடைசியில் சொல்கிறேன். நான் அப்படியொன்றும் பேரழகி கிடையாது, உங்கள் பக்கத்து வீட்டில், அடுத்த வீட்டில் இருக்கும் 12வது படிக்கும் பெண்கள் யாரையேனும் நானாக கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டிலேயே இருக்கும் பெண்ணை கற்பனை செய்து கொள்ளச் சொல்லலாம். ஆனால் இந்தக் கதையில் நான் காதலிக்கிறேன், காதலிக்கும் பெண்கள் அடுத்த வீட்டில் இருப்பதே நம் ரசனைக்கு உகந்தது. நான் சொல்லப்போவது, உலகில் இதுவரை சொல்லப்படாத கதையொன்றும் இல்லை. நீங்கள் படித்து ரசித்த கதையாகவோ, பார்த்து சலித்த சினிமாவாகவோதான் இருக்கும் எங்கள் கதையும். இது மற்றுமோர் காதல் கதையே.... இதை நான் உங்களுக்கு சொல்வதுதான் இதில் இருக்கும் சிறப்பும், குறையும்.

2001ஆம் ஆண்டு, அவன் யாரென்றே எனக்கு தெரியாது, பெயர் என்ன? ஊர் என்ன? ஒன்றுமே தெரியாது. இன்னும் சொல்லப்போனால் அன்று அந்த தொலைபேசியை அவன் தொட்டிருக்கவே கூடாது. அண்ணா, ஊட்டியில் இருக்கும் கல்லூரி ஒன்றில் படித்துக் கொண்டிருந்தான். அந்த கல்லூரியில் பெண்களுக்கு மட்டுமே விடுதி இருந்தது. அண்ணா தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தான். மொத்த ஹாஸ்ட்டலுக்கும் ஒரே ஒரு தொலைபேசிதான். நான் வீட்டிலிருந்து அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால், பேசியது அண்ணா இல்லை அந்த ராட்சஷன்....

ஹலோ ****** மேன்சன் ...

கருணா இருக்கானா???

இல்லீங்க இன்னும் கால்ஜ்லேர்ந்து வரல இன்னும் பத்து நிமிசத்துல கூப்டுங்க.... நீங்க??

நான் அவனோட சிஸ்டர்...

ஓ சரிங்க்கா வந்த உடனே சொல்றேன்....

டொக் 

அவன் சொன்னதை கேட்டீர்களா?? அக்காவாம் எப்படியும் எனக்கு மூத்தவனாகத்தான் இருக்க வேண்டும். பின் எப்படி என்னை அக்கா எனலாம்?? கருணா வரட்டும் அவன்கிட்ட சொல்லி அவனை உண்டு இல்லைன்னு செஞ்சிடலாம். எனதான் மனதில் நினைத்துக்கொண்டேன். ஏனோ திரும்பவும் அவனுடன் பேசத் தோன்றியது. ஐந்து நிமிடங்களில் மீண்டும் டயல் செய்தேன். விதி இப்படித்தான் விளையாடும் என்பது எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. இன்னும் வரவில்லை என்றான். இப்போதும் அக்கா என்றுதான் சொன்னான். பெயர் கேட்டேன் சொன்னான். என் பெயரை கேட்பான் என நினைத்தேன். இறுதிவரை கேட்கவே இல்லை, 'ஏதாது பேசுங்க அண்ணா வர்ற வரைக்கும்' அப்டின்னு நான்தான் ஆரம்பித்தேன். பிற்பாடு அவன் நிறுத்தவே இல்லை, அவனை நிறுத்தச் சொல்வதில் எனக்கும் உடன்பாடு இருந்திருக்கவில்லை, இடையிலேயே அண்ணா வந்துவிட்டான். முதல் புகாராக அந்த பொடியன் என்னை அக்கா என விளித்ததை கூறி கண்டிக்கச் சொன்னேன்.

அண்ணா கண்டித்திருப்பான் போல, இம்முறை பேசும்போது அக்காவென சொல்லவில்லை. என்ன பாக்குறீங்க?? ஆம் அடுத்தநாளும் டயல் செய்து பேசினேன். தினமுமான உரையாடலில் கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை குறைய ஆரம்பித்தது. அம்மாவின் பார்வையில் வித்தியாசமும் தெரிய ஆரம்பித்தது. நல்ல வேலையாக செமஸ்டரும் முடிந்து விட்டிருந்தது. பைனல் இயர்  முடித்து அச்சடிக்கப்பட்ட ஆட்டோகிராப் நோட்டோடு வந்த இறங்கினான் அண்ணா. ஒரு குறுகுறுப்பான ஆர்வத்தோடு அந்த நோட்டை புரட்டியதில், அவனும் எழுதியிருந்தான். டிஸ்லைக்ஸ் என்ற காளத்தில் ஸ்மோக்கிங் என எழுதி இருந்தான் ஆஹா. அண்ணாவுடனான க்ரூப் போட்டோவில் சிரித்தவாரு ஒரு பக்கமாக சாய்ந்து நின்றிருந்தான். அழகாக இருக்கிறான் போல்தான் இருந்தது. அண்ணாவிடம் கேட்காமலே அவன்தான் அந்த ராஸ்கல் என்பதை அறிந்துகொண்ட என் மூளையை நானே வியந்து கொண்டேன். ஆட்டோகிராப் நோட்டில் இருந்த அவன் வீட்டு தொலைபேசி என்னை யாருமறியாமல் குறித்து வைத்துக் கொண்டேன். 

தாய்மாமாவின் கல்யாணம் வந்தது, அவனையும் அழைக்கச் சொல்லி அண்ணாவிடம் சொன்னேன். நானே அழைக்கத்தான் போகிறேன் என்றான். பத்திரிகையில் அவன் முகவரியை நான்தான் எழுதினேன். கால் செய்து, தான் வரமுடியாது எனச் சொன்னதாக அண்ணா சொன்னான். அன்று இரவே அவனுக்கு போன் செய்தேன், கிரிக்கெட் விளையாட போயிருப்பதாய் சொன்னார்கள். என்ன இது இந்த இரவு நேரத்தில், யாராவது கிரிக்கட் விளையாடச் செல்வார்களா.... அவன் செல்வான். எப்போது பார்த்தாலும் கிரிக்கெட்தான் அவனுக்கு மதியம் 3 மணி, காலை 6 மணி இப்படி எத்தனை மணிக்கு டயல் செய்தாலும், சார் கிரிக்கெட் விளையாடத்தான் சென்றிருப்பார். (அப்போதெல்லாம் செல் போன்கள் இவ்வளவு தூரம் வளர்ச்சியடைந்திருக்கவில்லை). அடுத்தடுத்த முயற்சிகளில் எப்படியோ பிடித்து விட்டேன், என் தாய்மாமா என்னை திருமணம் செய்துகொள்ள நிர்பந்தித்ததையும் அதனால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலையும், ஒரு வருடம் என் படிப்பு தடை பட்டதையும் அவனிடம் சொன்னேன், ஆமாம் ஏன் சொன்னேன்?? இதையேதான் அவனும் கேட்டான் 

இதெல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்ற???

தெரியல தோனுச்சு சொன்னேன்.... என்னை பாக்கனுன்னு உனக்கு ஆசை இல்லையா??

பாக்கனுந்தான் உங்க அண்ணா கல்யானம், இல்ல உன்னோட கல்யாணம்னா பரவால..... உங்க மாமா கல்யாணத்துக்கு எப்டி வர்றது??

ஏன் வந்தா என்னா?? நீ வைக்கிற அம்பத்தோர்ருவா மொய்ய திரும்ப வைக்காம போய்டுவாங்களா??

ஒருவாறு பேசி அவனை கல்யாணத்திற்கு வர சம்மதிக்க வைத்துவிட்டேன். கல்யாணத்தில் நடந்த சம்பவமெல்லாம் இன்னுமொரு அழகான சிறுகதை, (இதை எழுத ஆரம்பிக்கும்போதே எனக்கிருந்த ஒரே பயம் இதுதான் எவ்வளவு சுருங்கச் சொன்னாலும் கதையின் நீளம் சற்று அதிகமாகவே இருக்கும். நல்லவேளை நான் எழுதுகிறேன் அந்த தடியன் மட்டும் எழுதியிருந்தால், இப்போதுதான் நீங்கள், நான் முதல் முறை அவனிடம் பேசி முடித்ததை கடந்திருப்பீர்கள்) மண்டபத்தின் உள்ளே ஒரு குழந்தையை தூக்கி வைந்திருந்தேன். ஏதோ இரு கைகள் அதுவாகவே வந்து குழந்தையை தூக்கிக் கொண்டது திரும்பி பார்த்தால் என்னைக் கவனியாமல் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தான். நானும் அவனும் ஒரே நிறத்தில்தான் உடை அணிந்திருந்தோம். முன் ஒத்திகை எதுவும் இல்லாமல் தற்செயலாக நடந்த சம்பவமிது. இதிலென்ன இருக்கிறது? தினம் நம்மை கடந்து செல்லும் எத்தனயோ பேர் நம்மை போன்றே உடை அணிந்து செல்கிறார்கள். அவன் என்னை கடந்து செல்லும் ஏதோ ஒருவன் போல் எனக்கு தோன்றவில்லை. யார் கண்டது இன்று ஒரே நிறத்தில் உடை அணிந்திருக்கும் நாங்கள், நாளை ஒரே மேடையில் அமர்ந்து திருமணம் கூட செய்து கொள்ளலாம், அதுவும் இதே மண்டபமெனில் யார் தடுப்பார்கள்!. தானாக முன் சென்று சிரித்தேன் சில நொடிகள் யோசித்து ஹே ****** நல்லா இருக்கியா?? என்றான். அவன் கண்கள் மிகப் பெரியதாக விரிந்தது முட்டைக் கண்ணன்.  ம் என்றேன். அப்புறம் பேச்சு வரவில்லை. அத்துணை பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்த பந்தியில் என் கண்கள்  அவன் இலையில் மட்டுமே இருந்தது.  நான் சற்று அதிகமாக வைத்த கேசரியோடு என் கண்களையும் சேர்த்துத்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ஒரு வடை, 4 பணியாரம், ஒரு ஊத்தப்பம் என்ற எண்ணிக்கை கட்டுப்பாட்டையெல்லாம் மீறி அவன் இலையில் சற்று அதிகமாகவே பரப்பினேன். அவனுடன் யாரோ இரண்டு பேர் வந்திருந்தனர் சரியாக கவனிக்கவில்லை. வீட்டிற்கு வரச் சொல்லி கேட்டேன் முடியாதெனக் கூறி அன்றே சென்று விட்டான். என்னையும் அவனுடனே அழைத்துக்கொண்டு சென்றிருக்கலாம்.

செமஸ்டர் ஹாலிடேய்ஸில் அவனுடன் சரியாக பேச முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பேசுவதே அரிதாகிப் போயிருந்தது. எப்போடா காலேஜ் திறப்பார்கள் என்றிருந்தது. ஒருமுறை, எப்பப்பாரு கிரிக்கெட் விளையாட போறியே?? இன்னிக்கு எத்தன ரன் அடிச்ச?? என்ற என் கேள்விக்கு, டக்கவுட் என்றான். 50, 60 ரன் அடிச்சேன்னு சொல்ல வேண்டியதுதான... எனக்கு தெரியவா போகுது? என்றேன். சின்ன விஷயத்துக்கெல்லாம் பொய் சொல்லக் கூடாது, என்றான். கல்லூரி தொடங்கியது, அவன் தனது இரண்டாமாண்டு படிப்பை தொடர்ந்தான், நானும் கோயம்பத்தூர் காலேஜ் ஒன்றில் சேர்ந்தேன். வீட்டில் அம்மாவின் சந்தேகப் பார்வையில் தொடங்கி பின் அவளின் அனுமதியோடவே அவனுடனான தொலைபேசி உரையாடல் நீண்டது. அவனொருமுறை வீட்டிற்கு வந்திருந்தான், மிகுந்த சங்கடத்துடனையேதான் வந்தான், வற்புறுத்தி அழைத்தது நான்தான். நான்தான் சமைப்பேன் என்று அடம்பிடித்து சமையலறை நுழைந்தேன். அதிக அனுபவம் இல்லையெனினும் உப்பு முதல் உள்ளது வரை அளந்தே செய்தேன். எனக்கே தெரியாத என்னிடம் இருந்த சிரத்தை சிறப்புற வெளிவந்தது. மனது முழுதும் சிரித்துக் கொண்டிருந்தேன். என் அம்மா, அப்பாவுக்கு சாப்பாடு பரிமாறும்போது அவளிடம் இருக்கும் ஆத்மதிருப்தியோ, ஆயுட்கால பலனோ ஏதோ ஒன்றை பார்த்திருக்கிறேன். இவனுக்கு பரிமாறும்போது நானதை உணர்ந்தேன். அண்ணாவின் பார்வையில் நிறையவே சகுனித்தனம் தெரிந்தது, பொருட்படுத்தவில்லை. அவனை ரசிக்கவே எனக்கு நேரம் போதவில்லை. எங்கள் வீட்டு மத்தியில் என் அருகில் அமர்ந்திருக்கிறான், நான் பறந்து கொண்டிருக்கிறேன். அடிக்கடி தலை முடியை கோதுகிறான்.... இவனுக்கு அறிவே கிடையாது அருகில்தான் நானிருக்கிறேனே... என்னிடம் சொன்னால் என்ன.... என் விரல்களே அவன் தலை முடியை கோதுவதற்க்குத்தான் படைக்கப்பட்டது என திடமாக நம்பினேன்.   பெரிய இளையராஜா ரசிகன், ராஜா பாடல்கள் பற்றி நிறையச் சொல்லுவான். எனக்கும் ஏ ஆர் ரஹ்மான்தான் பிடிக்கும். இதை முன்னிட்டு பல சண்டைகள் நிகழ்ந்திருக்கிறது எங்களுக்குள். ரஹ்மான், ராஜா இருவருமல்லாதவர்கள் இசையமைத்த பாடல்கள் நிறைந்த கேசட் ஒன்றை பரிசளித்தான். பாராமல் போன பௌர்ணமி எல்லாம் பறித்துக்கொடுக்கும் ஒருவன். உள்ளுக்குள் காதலோ என்னவோ ஒன்று அலாரம் அடித்தவாறே இருந்தது. யார் முந்தி சொல்வது என்பதில் இருவருக்குமான பொதுவான தயக்கத்தில் இருவருமே சொல்லவே இல்லை. இடையில் இன்னுமொரு செமஸ்டர், நான்கு முறை கோயம்பத்தூரில் திருட்டுச் சந்திப்பு, சினிமா என என்னென்னவோ கடந்திருந்தது. இதோ வந்தே விட்டது பிப்ரவரி 14. உள்ளுணர்வு எப்படியும் அவன் சொல்லிவிடுவான் என்றே சொல்லியது. சில ரிங்குகளை கடந்து அவன் குரல், பின்னணியில் 'எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது'  பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. பேச்சுவாக்கில்தான் சொன்னான், 

நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா, பொறக்குற கொழந்த ரொம்ப அழகா இருக்கும்ல....

இருக்குந்தான்... உன்ன யார்ரா கட்டிக்குவா???

எரும... நான் ஐ லவ் யூனு நேரா சொல்லாமா அப்டி சுத்தியடிச்சு சொன்னேன்..... 

திடீர்னு கேட்டா எப்டி?? நான் கொஞ்சம் யோசிச்சு சொல்றேன் ...

எத்தன நிமிஷம்??

பன்னி .... ஒரு டூ டேய்ஸ்??

ம் 

ரீசீவரை வைக்கும்போது பின்னணியில் 'லவ் பண்ணு ஹைய்யோ பண்ணு' என்று ஒலித்தது,  பண்ணிட்டேன். 

வாரம் தவறாமல் அவன் கோயம்பத்தூர் வந்தான். நான் ஸ்பெசல் கிளாஸ் எனச் சொல்லி வந்துவிடுவேன். என்ன மாயம் செய்தானோ என் அம்மாவிற்கு அவனை ரொம்பவே பிடித்திருந்தது, அந்த தம்பி இருக்கே... என ஆரம்பித்தால் ஒரே தம்பி புராணம்தான். நான் சொல்லவேண்டியது அனைத்தையும் அவளே சொல்வாள். பேசாம அவன நீயே கட்டிக்கலாம் என்பேன் அடிமனத்தின் வெளிப்படுத்த இயலா பொறாமை காரணமாய். அடி செருப்பால... என்பாள் நிஜமான கோபத்துடன். சொல்ல மறந்துவிட்டேன் நான் இரண்டாமாண்டு முடிக்க போகிறேன் அவனும் மூன்றாமாண்டு முடிக்க போகிறான் இடையில் மூன்று முறை எங்கள் வீட்டிற்கு விஜயம் செய்திருந்தான். அதையெல்லாம் முழுமையாக எழுத வேண்டுமெனில் இச்சிறுகதையை குறு நாவலாகத்தான் மாற்ற வேண்டும். அவன் இல்லாத அடுத்த நொடி தீக்கங்குகளை மென்று தின்னுவது போல் இருந்தது. அப்பாவின் சந்தேக பார்வை, சங்கேத மொழி அனைத்தையும் தாண்டி அவ்வப்போது அவன் நினைவு என் உதடுகளை புன்னகையில் நனைக்கத்தான் செய்தது. பெண்ணாய் இருப்பதன் மொத்த சந்தோசங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தேன். யோசித்துப் பார்த்ததில் இவன் மேல காதல் வந்த காரணம் இதுவரை புரியவில்லை.  இவனை காதலித்தது சரியென்று மட்டும் பட்டது. (இடையில் அவன் வீட்டிற்கு போன் செய்து அவனில்லாமல், என் மாமனார் ஹலோ சொல்லி, நான் யாரென்பதை உளறி அல்லது சொல்லியே தீருவேன் என்ற ஆர்வத்தில் கொட்டித் தீர்த்து, அதனால் அவன் சந்தித்த இன்னல்களை சொல்லச் சொன்னால் இன்னும் 7 அத்தியாயம் எழுதலாம். ) கர்ணா எங்களை முன்னமே மோப்பம் பிடித்திருந்தான். இப்போது கையும் காதலுமாக பிடித்துவிட்டான்.

அண்ணா என்னை தனியாக அழைத்து, தீராத வார்த்தைகளில் திட்டி தீர்த்தான். அம்மாதான் ஆறுதல் கூறினாள், பிற்பாடு அவளையும் வந்து திட்டினான். இவனுக்கு பைத்தியம்தான் பிடித்திருக்க வேண்டும். அம்மாவும் அப்படித்தான் சொன்னாள், எல்லாவற்றையும் அவனிடம் சொன்னேன். வழக்கத்திற்கு மாறாக அவன் அமைதி காத்தது விசித்திரமாய் இருந்தது. என்னைச் சுற்றி ஏதோ ஒரு வலை பின்னப்படுவதை மனம் உணரத் தொடங்கியது. இந்த வாரம் வர முடியாது எனச் சொல்லிவிட்டான். ப்ராஜக்ட் வொர்க் இருக்கிறது என்றான். பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டான். என் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக என்னிடமிருந்து நழுவிக் கொண்டிருந்தது தெரிந்தது காரணம்தான் விளங்கவே இல்லை. அண்ணாவின் அலட்சிய புன்னகையும், எதையோ சாதித்த திமிர் கொண்ட அவன் பார்வையும் என் தலை மயிரை கத்தையாக பிடித்து சுவற்றில் முட்டும் வலியை தந்தது. போர்வைக்குள் புகுந்துகொண்டு பேசியதையும், ஹஸ்கி வாய்ஸில் கொஞ்சியதையும் நினைத்துக் கொண்டேன். சேமிப்பு கிடங்கில் ஆனந்தக் கூத்தாடும் அவன் முத்தங்களில் கொஞ்சத்தை அள்ளிப் பருகிக்கொண்டேன், கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. இவையனைத்திற்கும் மௌன சாட்சியாய் எங்கள் வீட்டு கருநீல நிற தொலைபேசி என்னைப் பார்த்து சிரித்தது. என்னைப் பாருங்கள், நான் நிறையவே அழுதிருக்கிறேன் கண்கள் வீங்கி, தலை சீவுவதில் கூட அக்கறையில்லாமல் கலைந்த கேசத்தோடு, குளிப்பது, சாப்பிடுவது, உறங்குவது  பற்றிய எந்த பிரஞ்ஞையுமின்றி அமர்ந்திருக்கிறேன். 

இந்த வாரம் வருகிறேன் என்றான். என்னையுமறியாமல் என் சிறகுகள் என் மேலாடை தாண்டி விரிந்து விட்டிருந்தது. போனேன், பார்த்தோம் நான் அவனை கட்டிக்கொண்டு கதறியழுதபடியே நடந்த அனைத்தையும் சொன்னேன். சலனமற்ற கண்களினால் அனைத்தையும் உள் வாங்கிக்கொண்டான். அவன் உடலில் சிகரட் வாடை அடித்தது, புது பழக்கம்.  பின்பு, ஏதேதோ சொன்னான் பை நிறைய அவன் கொண்டு வந்ததை என்னிடம் தந்தான்... பிரித்துப் பார்த்........
.
.
.
.
.
.
.
.

ஹே அடுத்து சொல்லுடி இப்டி பாதில விட்டுட்டா எப்டி??

அன்னைக்கு நான் என்னடா பேசினேன்?? நீதாண்டா பேசுன.... நான் அழுதுகிட்டேதான இருந்தேன்... இப்போ மாதிரியே... போடா இங்கயும் என்ன அழ வச்சுட்டேள.... பொறுக்கி 

உங்ககிட்ட அவன் பேர கடைசியா சொல்றேன்னு சொன்னேன் இல்லையா?? "அவம்பேரு பொறுக்கி"

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...