முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துண்டை உதறித் தோளில் போட என்ன தயக்கம்?


-சரவணன் சந்திரன்
கோடை விடுமுறைக் காலம் வந்து விட்டது. ஆங்காங்கே மழை விட்டு விட்டு பெய்கிறது தமிழ்நாட்டிற்குள். காரில் ஏசி போடத் தேவையில்லை சில இடங்களில். பார்க்கிற இடங்களிலெல்லாம் தற்காலிக பசுமை கொஞ்சம் எட்டிப் பார்க்கிறது. இந்த நேரத்திலும் வீட்டை விட்டுக் கிளம்பாமல், அலுவலகத்தில் சீட்டை கெட்டியாகப் பிடித்து உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? ஆனாளப்பட்ட அரசியல்வாதிகளே தலைநகரில் ஒன்றும் பேராமல், சுற்றுப் பயணம் என்கிற பெயரில் ஊர்சுற்றிப் பார்க்கக் கிளம்பி விட்டனர். இதற்குப் பிறகும் எல்லோரும் சும்மா உட்கார்ந்திருந்தால் டூர் என்கிற வார்த்தைக்கே அசிங்கம்.
இந்த டூர் என்றதும் ஒரு விஷயம் சொல்லத் தோன்றுகிறது. காஷ்மீர் போய் வர இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் மிகச் சொற்பமானதுதான் என நண்பர் ஒருத்தர் சமீபத்தில் சொன்னார். உண்மையில் நான் ஆயிரக் கணக்கில் ஆகும். எதுக்கு இந்த நேரத்தில் இப்படியொரு செலவு என யோசித்துக் கொண்டிருந்தேன். என்னைப் போல பலரும் யோசிக்கலாம். உண்மையில் சீட்டில் பெல்ட் கட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் மனநிலையில் இருந்து மாறினாலே போதுமானது. ஆக பயணம் செய்வதற்கு பணம் பிரச்னையில்லை. மனம்தான் பிரச்னை.
ஒருபக்கம் தொல்காப்பியத்தில் முந்நீர் வழக்கம் என தமிழர்களின் கடல் கடக்கும் வேட்கையைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள். முந்நீர் வழக்கம் என்றால், மூன்று நேரம் முறைவைத்து கட்டிங் அடிப்பது என நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல. கல்விக்காக, செல்வம் சேர்ப்பதற்காக, போர் நடவடிக்கைகளுக்காக என்று பிரித்திருக்கிறார்கள். அதிலும் முந்நீர் வழக்கம் மகடுவோடு இல்லையாம். பெண்களோடு போகக் கூடாதாம். அதனால்தான் முன்னீர் வழக்கம் போகிற இடத்தில் எல்லாம் வப்பாட்டிகளை வைத்துக் கொண்டார்கள்.
அப்பா பெயர் தெரியாத குழந்தைகளை உலகெங்கும் விதைத்து விட்டுக் குற்றவுணர்வு இல்லாமல் கிளம்பி வந்தார்கள் என்பது தனிக்கதை. இப்படி தமிழ் இனம் ஒரு காலத்தில் பல்வேறு காரியங்கள் நிமித்தமாக சீட்டை விட்டு எழுந்து வெளியே போய்ச் சுற்றி விட்டு வந்தார்கள் என்பதைச் சொல்வதற்காகச் சொல்கிறேன். மற்றபடி உங்களைக் குழந்தைகளை உற்பத்தி செய்கிற தொழிற்சாலை மேனேஜராக மாறச் சொல்லவில்லை. நீங்கள் மாற நினைத்தாலும் முடியாதெனச் சொல்லி பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்ந்து விட்டது உலகம். தந்தை தெரியாத பையன்களை உலகிற்குத் தராமல் இருப்பதற்குக் காரணம் உங்களது தாராளம் அல்ல. ஒரு குட்டியூண்டு சாதனம். அவ்வளவுதான். குற்றவுணர்வைக் கொல்வதுகூட இந்த குட்டியூண்டு சாதனம்தான். பயணம் என்றால் பலதையும் மனசு யோசிக்கத்தான் செய்யும் என்பதால் விட்டு விடுங்கள்.
இப்படி ஒருபக்கம் ஒரு பிரிவினர் உலகம் முழுக்க பயணம் செய்தார்கள். ஆனால் இன்னொரு பக்கம் நான் இந்த ஊரு எல்லையைக்கூடத் தாண்டியதில்லை என்று பெருமை பேசியே செத்துப் போன பல பெரிசுகளை நானறிவேன். பயணம் போவது, புதிய அனுபவம் ஆகியவற்றிற்கு நேர் எதிரான மனநிலையே தமிழர்களின் அடியாழத்தில் புதைந்து கிடக்கிறது. ஒரேயிடத்தில் அமர்ந்து கொண்டு நாட்டாமை செய்வது. விளையாட்டாக இந்த மனநிலையை இப்படிச் சொல்லிக் கிண்டலடிப்பார்கள். சொந்தத் தெருவில் சொறிநாய்கூடக் குரைக்கும். வெளி இடங்களில் போய் குரைத்து விட்டு வரலாம் என்றுதானே பலர் பல்வேறு காரணங்களுக்காகப் பயணம் செய்தார்கள் சொல்லுங்கள்.
மிகச் சிலரே இந்த அடியாழக் குறிப்பை உதறியிருக்கிறார்கள். அவர்களையும் பரதேசம் போனவர் என தமிழ்ச் சமூகம் ஒதுக்கி வைத்தே வேடிக்கை பார்த்திருக்கிறது. என்னுடைய குடும்பத்திலேயே இப்படி ஒருத்தர் கிளம்பிப் போய் ஊர் சுற்றி விட்டு ஜடாமுடியுடன் திரும்பி வந்து நின்றார். இந்தியாவில் ஒரு நிலத்தை விட்டு விட்டு இன்னொரு நிலத்திற்கு நகரும் போது ஜடாமுடி பாதுகாப்பு. அப்படி வந்து நின்றவரிடம் "துன்னூறு வாங்கிக்கோடா. நம்ம சித்தப்பன்"என்றார்கள். பிறகு ஓய்வாய் அவர் செய்த பல பயணங்களைப் பற்றி எனக்குச் சொன்னார்.
அவர் செய்த பயணத்திற்கும் ஜடாமுடிக்கும் சம்பந்தமே இல்லை. சோறு திங்கறதுக்கு மட்டும்தான் கோவிலுக்குப் போயிருக்கிறது சித்தப்பூ! ஆனால் இதுபோல ஜடாமுடி போங்காட்டம் போல அல்லாமல் 90களுக்கு அப்புறம் பயணம் செய்வது குறித்த விழிப்புணர்வு கொஞ்சம் பெருகியிருப்பது ஆறுதல் தரும் விஷயம்தான். ஆனாலும் இன்னமும் சாகும் வரை மண்ணை விட்டு வெளியேற மாட்டேன். பயணம் என்று கிளம்பினால் நேரடியாக பரமபதம்தான் என்று சொல்பவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய?
எழுத்தாளர் சுந்தர ராமசாமி வீடுகிளம்புதலை பயணம், ஊர்சுற்றல் என இரண்டு வகையாகப் பிரிக்கிறார். திட்டமிட்டு செய்யப்படுவது பயணம். இலக்கில்லாமல் சுற்றுவது ஊர்சுற்றல். இந்த இரண்டாவது வகையில்தான் புதுப்புது அனுபவங்கள் சாத்தியமாகும். சமீபத்தில் ஒரு செய்தி என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு டீக்கடை வைத்திருக்கும் குழந்தைகள் இல்லாத வயதான தம்பதி வருடம் முழுக்க மாடாய் உழைக்கிறார்கள். வருடத்திற்கு பத்து நாட்கள் கடையை இழுத்து மூடிவிட்டு நாடு சுற்றக் கிளம்பி விடுகிறார்கள். வாழ்க்கையை ரசனையாக கொண்டாடத் தெரிந்தவர்கள் இவர்கள். இவர்களைப் பார்க்கையில் நாமும் அப்படி இருக்க வேண்டுமென சிறகடிக்கிறது மனசு.
உங்களுக்கும்கூட இருக்கலாம். செய்ய வேண்டியதெல்லாம் துண்டை உதறித் தோளில் போடுகிற வேலை மட்டும்தான். உங்களது பாக்கெட்டில் எவ்வளவு இருக்கிறது என்று தெரியாமல், இங்கே போங்கள், அங்கே போங்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? சிம்ப்பிளாகச் சொல்ல வேண்டுமெனில் எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன். இந்த நிமிடத்தில் என் பாக்கெட்டிலும் அவ்வளவு பணம் இல்லையென்பதால் பாங்காக்கிற்கெல்லாம் போக முடியாது.
இந்தா இருக்கிற மேகமலைக்கு ஒரு எட்டு போய் விட்டு வாருங்கள். கை படாத காடு. தேனி போய் சின்னமனூர் வழியாக மேலேறும் மேற்குத் தொடர்ச்சி மலை. பஸ் வசதி கொஞ்சம் குறைவுதான். விசாரியுங்கள். அதைக்கூடச் செய்ய மாட்டீர்களா? மேலே இரண்டு டீக்கடைகளில் முறை வைத்து சோறு பொங்கிப் போடுவார்கள். காசு கொடுத்தால் கெடா விருந்தும் நிச்சயம். ஒரு கிலோ சமைத்துத்தர நூற்றியம்பது ரூபாய் என்பது குறைவுதானே?
மற்றபடி மேகமலையில் ட்ரக்கிங் போகலாம். மொட்டைப் பாறையொன்று இருக்கிறது. இன்னும் கொஞ்சம் மேலேறி தேயிலை பேக்டரிகளையும் காபி பேக்டரிகளையும் பார்க்கலாம். பசுமையோடு இருப்பதற்கு உத்தரவாதம். இதைத்தான் ப்ளாண்ட்டேஷன் ஸ்டே என்று சொல்லி உலகம் முழுக்கக் கொண்டாடுகிறார்கள். எந்த நேரம் வேண்டுமானாலும் மழை புது மனைவி மாதிரி சிணுங்கிக் கொண்டே இருக்கும். பட்ஜெட்டிற்கு ஏற்ற சிணுங்கல்.


நன்றி மனம் இணைய இதழ்.

           


-சரவணன் சந்திரன்.
எழுத்தாளர், இயக்குநர். நாவலாசிரியர்.
இந்தியாடுடேயின்  மூத்த செய்தியாளராக‌ இருந்தவர்.
தேர்ந்த பத்திரிக்கையாளர்




கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...