ரஜினி -
இது மந்திரச் சொல்னு எல்லாம் புரியத்துவங்கற வயசுக்கு முன்னமே மந்திரத்தில் கட்டுண்டாச்சு. 'தளபதி'ல பார்த்த பிம்பம் ஆயுளுக்கும் அழியாது. அப்படி ஒரு.. ஒரு.. அதென்ன.. மேன்லி!
தளபதினாலே அவர்தான்யா. நடிப்பு பத்திலாம் எதும் தெரியாத வயசுல இந்த மனுசன் பண்ணின வித்தைலாம் நிஜம்னு சந்தோஷமா ஏமாந்தேன். ராஜாதி ராஜால கத்தி சுத்துமே அந்த சீன்லாம் ஆ..னு பாத்தேன். ஆனா அது மாதிரி ஒரு காட்சிய தலைவர் தவிர யார் பண்ணிணாலும் நம்பிருக்க மாட்டோம்ல. என்ன ஒண்ணு, இன்னும் கூட ரஜினி படம்னா சந்தோஷமா ஏமாறத் தயார்!
கொஞ்சம் தலைவரை வர்ணிக்கலாமா!
கண்கள் - ரசிகனுக்கும் ரஜினிக்குமான உரையாடலில் பாதி கண்கள் வழியேதான். காந்தக் கண்கள்! காட்சியின் தீவிரத்தை கண்கள்ல கொண்டு வரதில் கில்லாடி. (அழும் காட்சிகள் விதிவிலக்கு :p)
நிறம் - சொல்லவே தேவையில்ல. கருப்பு கலர் பிடிச்சு போக ரஜினியும் ஒரு காரணம். அப்பாஸ் அரவிந்த்சாமிலாம் கிட்ட நெருங்க முடியல.
முடி - நல்ல தமிழ் பேசக்கூடிய நிறமான திறமையுள்ள நடிகர்கள் நிறைந்த சந்தைல பரட்டை தலைய சரியாக்கூட சீவாம ஒரு மனுசன் அசால்டா இது எப்படி இருக்குனு வந்ததும் பாத்தவங்க நம்மள்ல ஒருத்தன்றாப்ல ஏத்துகிட்டாங்க. ஆனா இப்ப வரை 'தளபதி' ஹேர்ஸ்டைல் தான் என் ஃபேவரிட்.
வேகம் - யானை இல்ல குதிரை னாரு. வேகத்தைப் பொருத்தவரை சிறுத்தைய்யா அவர். அட, அப்படி ஒரு நடை நடக்க அவராலதான்யா முடியும். (ஆனா தலைவா தயவு செஞ்சு ஓடாதீங்க. நல்லால்ல :p. சரி, நடந்தாலே யாரும் நெருங்க முடியாதே!)
பேச்சு - என்னத்த தமிழ் பேசறாருன்னு ஒரு கூட்டம். தெரியாத பாஷைய இவ்ளோ வேகமா பேசுங்கய்யா பாக்கலாம். எதையுமே வித்யாசமா ஆனா வசீகரமாபேசுவாரு.
ஸ்டைல் - எனக்கு இந்தாள் ஸ்டைல் பண்றார்னே தோணல. பண்றதெல்லாமே ஸ்டைலா அமைஞ்சிடுது. ஒரு கோணவாய் சிரிப்புண்டு. அது ரொமான்டிக் சீன்ல ஒரு விதம்னா வில்லன்ட சிரிக்கறப்ப விதவிதம். ரஜினி ஸ்டைல்ங்றது வார்த்தை விரயம். ரஜினினாலே ஸ்டைல் தானே!
கேலிகள் தவிர்த்து இந்தப் பரவலான மக்கள் ஈர்ப்பு யாருக்கும் சாத்தியமில்ல தானே!
குழந்தைப் பருவம் எல்லாருக்கும் ஒரே மாதிரி அமையறதில்லை. எனக்கு அப்படி சில சங்கடமான சூழ்நிலைகளின் போது என் குழந்தைமையை மீட்டு அப்படியே வைக்க உதவியது ரஜினி படங்கள் தான். அம்மா ஞாபகம் வந்து அழற சிட்சுவேசனைலாம் ரஜினி படங்கள் மாத்திக் கொடுத்திருக்கு. இதெல்லாம் இப்ப கேக்க, படிக்க தமாஷா தோணும். ஆனா ரஜினி படங்கள் இல்லாட்டி நான் ஒரு சீரியஸான ஆளாவே இறுக்கமான நிலையில் இருந்திருப்பேன்.தேங்க்ஸ் டூ ரஜினி!
கொடுக்கற காசுக்கு படம் முடிஞ்சு வரப்ப சந்தோஷமா வரமான்றதுதான் சராசரி ரசிகனின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. கணிசமான முறை அதை நிறைவா செய்தவர் தலைவர்.
யாருக்கு வேணும் அரசியலும், பிரியாணியும். வருசம் ஒரு படம் பண்ணு தலைவா. விருந்தே அதான்!
தலைவருக்கு கமல் ஒரு போட்டியாளரே தவிர வெற்றியாளர் அல்ல. புதுமை புரட்சினு எல்லாம் எந்த முயற்சியும் பண்ணாமலே, மெனக்கெடலும் இல்லாமலே இவரை யாரும் நெருங்க முடிலை.
இனி யார் வந்தாலும் - ரஜினி நடிக்காமலே போனாலும் கூட - அவர் இடம் அவரிடமே.

கருத்துகள்
கருத்துரையிடுக