தோசை என்றவுடன் வட்ட வடிவு, தொடுக்கொள்ள விதவிதமான சட்டினி, மிளகாய் பொடி, சாம்பார்... இதுதானே நம் எல்லார் நினைவிலும் வரும். ஆனால் அதே தோசை முக்கோணம், கோபுரம், சதுரம், ரோல்கள் என்ற பல வடிவுகளில் ’ சேஸ்வான் தோசா’, ’மெக்சிகன் ரோஸ்ட் தோசா’, ’சேண்ட்விச் ஊத்தப்பம்’, ’ராக்கெட் தோசா’, ’அமெரிக்கன் டிலைட் தோசா’ என்று நீண்டு செல்லும் புதிய பெயர்களில் தோசை வகைகள் கிடைப்பது என்று தெரிந்தால் யாருக்குதான் நாவில் எச்சில் ஊறாது?? இத்தனை புதுவகை தோசைகளுடன் தொடுக்கொள்ள கிடைக்கும் புதுவகை சாஸ்கள், சட்னிகள் என்று சர்வதேச அளவில் தோசையின் பெருமையையும், அதை உண்பதற்கான ஈர்ப்பையும் உருவாக்கியுள்ள ‘தோசா ப்ளாசா ’, உலகளவில் 1 500 ஊழியர்கள் கொண்டு, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன், துபாய், சிங்கப்பூர், மலேசியா என பல கிளைகளை விரித்து சுமார் 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. உணவுச்சந்தையில் உள்ள சர்வதேச உணவுவகைகள் மற்றும் பிரபல ப்ராண்டுகளுடன் போட்டியிட்டு இந்த சாதனையை படைத்துள்ள ’தோசா ப்ளாசா’ வின் பின்னணியில் இருப்பவர், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தூத்துக்குடியில் பிறந்து, வளர்ந்த தமிழ் ...
கருத்துகள்
கருத்துரையிடுக