சமீபத்தில் இங்கு மார்பகம், தாய்ப்பால் முதலிய பெண்கள் சார் விஷயங்கள் பேசப்பட்டன; சரி commentsஇல் ஏதாவது முன்னேற்றம் நடந்துள்ளதா என்று பார்த்தால் எழுதிய statusஇல் இருக்கின்ற maturity commentsஇல் இல்லை. ஆக பெண்கள், cleavage, bra, feeding மற்றும் குழந்தை வளர்ப்பு என ஆங்காங்கே சிறுசிறு குறிப்புகள் கொடுக்கலாம் எனத் தோன்றியது.
முதலில் cleavage பற்றி பார்த்து?! விடலாம்; இந்திய சினிமாவின் கவர்ச்சியின் பெரும்பகுதி இந்த cleavageஐ நம்பிதான் இருக்கின்றது. Cleavage பெரிய அதிசயமெல்லாம் இல்லை. Cleavage உருவாக்க makeup எல்லாம் வந்துவிட்டது. ஆண்களுக்கே shave செய்துவிட்டு foundation cream இரண்டு shadeகளில் பயன்படுத்தி சற்றே shades பூசி compact apply செய்து cleavage உருவாக்க முடியும். கிட்டத்தட்ட 3D body art என்று சொல்லலாம். உற்றுப் பார்த்தால்கூட கண்டறிய முடியாது. இவ்வளவுதான் cleavage கவர்ச்சி.
அடுத்து brassiere என்பதும் இன்று வரை ஒரு ரகசியப் பொருள்போல ஒருசில பெண்களால் கையாளப்படுகின்றது. இதற்கும் தமிழ் சினிமா ஒரு காரணம்; Bra என்பது உடை என்பதைத் தாண்டி கிளுகிளுப்பான பொருளாகக் கருதப்படுகின்றது. இன்றும் Marks &Spencer இல் bra sectionஐ ஏதோ தீண்டத்தகாத இடம்போல அணுகும் ஆண்கள் உள்ளனர். இத்தனைக்கும் மனைவி மகள் எல்லாம் இருப்பார்கள். பெண்களே அதுமாதிரி, கணவர்களை அந்த இடத்தைவிட்டு அப்புறப்படுத்துவார்கள். இவர்கள் எல்லாம் எப்படிக் குழந்தை பெற்றுக்கொண்டார்கள் என நமக்கு ஆச்சரியமாக இருக்கும். இங்கேயே பலருக்கும் மனைவி அல்லது காதலிகளின் bra size தெரியாது. இதைவிட 80% பெண்கள் தவறான அளவுகளில் bra அணிகின்றனராம். சென்ற வாரம் EAவில் M&S இல் ஒருவர் bra section அருகில் என்னைப் பார்த்தபடி சுற்றிக் கொண்டிருந்தார்; நான் புன்னகைத்துவிட்டுக் கடந்தேன்; பிறகு அருகில் வந்து bra select செய்து தரமுடியுமா? என்றார். எனக்குத் தெரிந்த sales girlஉம் அருகில் வர சரியாக இருந்தது; என் மாதிரி உடலமைப்பு என்று சொல்லி semi padded, wired வரை சொன்னார். பிறகு 4 pieces வாங்கிக்கொண்டு கண்ணில் அந்தக் காதலுடன் நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றார். நிச்சயம் அந்தக் காதலி ஆசிர்வதிக்கப்பட்டவர்.
இப்போது நானும் அம்மாவாகின்றேன் வகையிலான பெண்களை அதிகம் பார்க்கின்றேன். BMW, iphone போன்று பாப்பாவும் நம் statusஐ காட்டும் பொருளாகிவிட்டது. வண்டியில் தள்ளிக்கொண்டுவருவதையும் மீறி கிளி ஜோசியக்காரர்கள் போல் பிரம்புக்கூடைக்குள் பாப்பாக்களைப் போட்டு கொண்டு வருகின்றனர். கணவர்கள் shopping பொருட்களையும் அம்மாக்காள் அந்தப் பிரம்புக் கூடைகளையும் தூக்க இவர்கள் வழக்கம்போல் selfie எடுத்துக்கொண்டு திரிகின்றனர். எப்படிப் பார்த்தாலும் 5kg வரையில் தான் குழந்தைகள் இருக்கும்; அதைத் தூக்கிக் கொள்வதில் என்ன கஷ்டம் என்று தெரியவில்லை; இன்னும் சில தாயுள்ளங்கள் துப்பட்டா கசங்கிடும், புடவை மடிப்பு போயிடும் என்றெல்லாம் குழந்தைகளைக் கணவர்களிடம் தள்ளிவிட்டு சம்பந்தமில்லாததுபோல் அலைகின்றனர். நிஜமாகவே இதற்கெல்லாம் வலுவில்லாம் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுகின்ற அளவிற்கு ஆரோக்கியமில்லாத நாமெல்லாம் எதற்குக் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்?
அடுத்து தாய்ப்பால் கொடுப்பது என்கிற ஒரு கடமை உள்ளதல்லவா?! பணிக்குச் சென்று பால் கட்டுவது, வலி இதெல்லாம் தாண்டி ஒரு elite வகைப் பெண்கள் உள்ளனர்; elite என்றதும் பணக்கார என்றெல்லாம் நினைக்க வேண்டாம்; நடுத்தர வர்க்கம் அதிகம். அதாவது பாலே வரவில்லை என்று மூன்று மாதத்தில் breast feedingஐ நிறுத்திவிட்டு ஹாயாக பசும்பால் இன்னபிற powderகள் என கலந்து கொடுப்பது. பெண்களுக்கு இயற்கையிலேயே கர்ப்பகாலத்தில் prolactin hormone பால் சுரப்பினைத் துவங்கிவிடும்; எனவே ஒரு வயது வரையிலாவது தாய்ப்பால் பிரதான உணவாக குழந்தைக்கு இருக்க வேண்டும். தாய்ப்பால் IgAவால் குழந்தைக்கு எதிர்ப்புசக்தி கிடைக்கின்றது; இயற்கையிலேயே கிடைக்கிற ஒரு intelligenceஆனது இந்த தாய்ப்பாலினால் கிடைக்கின்றது. மேலும் பல குறைபாடுகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கலாம். இன்னும் ஊர்புறங்களில் "நான் அஞ்சு வயசு வரைக்கும் தாய்ப்பால் குடிச்சு வளர்ந்தவளாக்கும்" என சில விவரமான பாட்டிகள் பேசக் கேட்டிருக்கின்றேன். இதையெல்லாம் கடந்து நீங்கள் feed பண்ண விரும்பவில்லையென்றால் மறந்தும் கூட pregnant ஆகி விடாதீர்கள்.
Bra problems..
பெண்களோட உடலமைப்பு அப்படிதான்.. இரண்டு மார்பகங்கள் இருக்கும். இரண்டு முலைகள் இருக்கும். சிலருக்கு பருத்து இருக்கும், சிலருக்கு கீழ இறங்கி இருக்கும். இதுல No more awkward shape, no more bulgesனுலாம் வேற. அதையெல்லாம் இழுத்து நேரா நிக்க வைச்சு, முலையெல்லாம் மறைச்சு வைச்சு... எதுக்காகன்றன்? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான உடலமைப்பு இருக்கும். அதற்கேத்தபடி அவர்கள் உடையணிவார்கள். எல்லாமே நேரா தான் நிக்கணும்.. எல்லாமும் மூடி மறைச்சுருக்கணும்..எதுவும் வெளியே தெரிஞ்சுருற கூடாதுனா எப்படி? சாதரண உடல் அமைப்பை கூட எப்படியெல்லாம் உடைகளினால் மாத்திக்க வேணும்னு ஒரு புத்தியை மக்களுக்குள்ள எவ்ளோ அழகா திணிச்சு பெண்களை போகப்பொருளாக மட்டுமே காட்டுது இந்த அமைப்பு..
பெண்களோட உடலமைப்பு அப்படிதான்.. இரண்டு மார்பகங்கள் இருக்கும். இரண்டு முலைகள் இருக்கும். சிலருக்கு பருத்து இருக்கும், சிலருக்கு கீழ இறங்கி இருக்கும். இதுல No more awkward shape, no more bulgesனுலாம் வேற. அதையெல்லாம் இழுத்து நேரா நிக்க வைச்சு, முலையெல்லாம் மறைச்சு வைச்சு... எதுக்காகன்றன்? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான உடலமைப்பு இருக்கும். அதற்கேத்தபடி அவர்கள் உடையணிவார்கள். எல்லாமே நேரா தான் நிக்கணும்.. எல்லாமும் மூடி மறைச்சுருக்கணும்..எதுவும் வெளியே தெரிஞ்சுருற கூடாதுனா எப்படி? சாதரண உடல் அமைப்பை கூட எப்படியெல்லாம் உடைகளினால் மாத்திக்க வேணும்னு ஒரு புத்தியை மக்களுக்குள்ள எவ்ளோ அழகா திணிச்சு பெண்களை போகப்பொருளாக மட்டுமே காட்டுது இந்த அமைப்பு..
கருத்துகள்
கருத்துரையிடுக