மலர்ச்செண்டுகள் குப்பையில் வீசப்பட்டு, கழிவுகளால் அரியணைகள் அலங்காரம் செய்யப்படும் காலம் இது. பொன் ஆபரணங்கள் தூர வீசப்பட்டு துருப்பிடித்த தகரங்கள் அரிதாரம் பூசிக்கொள்ளும் காலம் இது. பேய்களின் அரசில் சாத்திரங்கள் பிணந்திண்ணும் என்றார் பாரதியார். ஒரு பேயின் மரணத்தால் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விடுதலை என்று நம்பிக்கை கொண்டிருந்த வேளையில், பேயின் இடத்தில் ஒரு புளி மூட்டை அமர்ந்து நம்மையெல்லாம் வதைக்கும் ஒரு அவலமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நள்ளிரவில் பதவியேற்கும் டிகே.ராஜேந்திரன். எடப்பாடி பழனிச்சாமியை நியமிக்கையில் சசிகலா ஒரு பொம்மையாகத்தான் அவரை நினைத்திருந்தார். 122 எம்எல்ஏக்கள் இருக்கையில், முன்னாள் புளி வியாபாரியான புளிமூட்டை பழனிச்சாமியை சசிகலா தேர்ந்தெடுத்ததன் காரணம், அவரின் சிறந்த நிர்வாகத் திறமையோ ஆளுமையோ அல்ல. காசை சரியாக வாங்கி கல்லாவில் போடுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே. நிர்வாக விதிகளுக்கும், நடைமுறைகளுக்கும், மரபுகளுக்கும் உரிய மரியாதை தருபவர்தான் கருணாநிதி. அதிகாரிகளை நியமிக்கையில், பணியில் இளை...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்