இருவரும் கட்டிலில் படுத்திருந்தோம்.
"எனக்கு யூரின் போகணும்.." என்றாள் மீரா.
அவள் கழுத்தின் மீது போட்டிருந்த கையை விலக்கினேன். உடலை மறைத்திருந்த போர்வையை உதறிவிட்டு பாத்ரூமிற்கு எழுந்து சென்றாள்.
ஸ்ஸ்ஸ்ஸ்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
என்னால் இந்த மனிதர்கள் மூத்திரம் போகும் சப்தத்தை மட்டும் தாங்கிக்கொள்ளவே முடியாது.
"மீரா.. கதவை சாத்திட்டு போகக்கூடாதா?"
"அட! அதான் என் உடம்பு முழுக்க பார்த்தாச்சே.. இப்போ கதவை தொறந்து போறதுதான் கூச்சமா இருக்குதாக்கும்.." பெய்துகொண்டே பேசினாள்.
"விண்டர்ல அதான்.. அடிக்கடி வருது.." பாத்ரூம் விளக்கை அணைத்துவிட்டு என்னருகே வந்து எதையோ தேடினாள்.
"என்ன தேடுற...?"
"என் கழற்றி போட்ட பிரா, பேண்டிஸ் எங்கே காணோம்..?"
"அது எங்கேயாவது கெடக்கும்.. என்ன அவசரம்.? காலையில பாத்துக்கலாம்.."
"அய்யோ.. இல்லை. நான் இப்பவே போகணும். பத்து மணிக்கு ஃப்ளைட் அரைவல். தீபக் வந்துடுவான்.. சிரிச்சுகிட்டே வரவேற்கணும்"
தீபக் மீராவின் கணவன். மீராவின் உடம்புக்கு சட்டப்படி சொந்தக்காரன். நான் சட்டத்தை மீறும் கலகக்காரன்.
"ஓ.. ரெண்டு வாரத்துக்கு அப்புறம் வரான்ல.. ஸோ, நாளைக்கு கண்டிப்பா உங்களுக்குள்ள கச்சேரி நடக்கும்.."
சொல்லிவிட்டு மீராவின் முகத்தையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தேன்.
"சீ.. நாட்டி.. அவன் மேக்சிமம் பதினைஞ்சு நிமிஷம்தான்.. கக்கிட்டு சுருண்டு படுத்துருவான்.. "
"நெஜமாவா.?"
"ம்ம்.. அவனுக்கு ஃபோர் ப்ளே, போஸ்ட் ப்ளேன்னு எதுவுமே தெரியாது.. டிப்பிகல் தமிழ் புருஷன்.."
"நான்..?"
"நீ காளை மாடுடா.." என்று சொல்லி காதை கடித்தாள்.
ஒரு ஆணுக்கு இதுபோன்ற பாராட்டுதல்களை விட பெரிதாக எதுவும் இருக்கமுடியாது. அது பொய்யான பாராட்டாக இருப்பினும்.
"நீ ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குற..?" இக்கேள்வியை மீரா என்னிடம் நூற்றி ஏழாவதுமுறை கேட்கிறாள்.
"எனக்கு செக்ஸ் மட்டும் போதுமானது. வைஃப் தேவையில்லை.. வொர்க். ஈட். ட்ரிங்க் . ஃபக். ஷிட்... இவ்வளவு போதும்.. செக்ஸுக்காக பெர்மெனண்டா ஒரு ஜந்துவை வெச்சிகிட்டு தனிமையை இழக்க விருப்பமில்லை...."
"நீயும் உன் தனிமையும்.. போடா.." காலைத்தூக்கி மேலே போட்டாள்.
"தனிமையோட போதையை அவ்ளோ ஈசியா உனக்கு புரிய வெக்க முடியாது.. கவிதை படிக்கறது, காடுகளுக்கு போறது, மியூசிக் கேக்கறது, சும்மாவே உட்கார்ந்து இருக்கறதுன்னு எதையும் தனியா செய்யத்தான் எனக்கு புடிச்சிருக்கு.. இவ்வளவு ஏன்? தனியா அழறது கூட பெரிய சந்தோஷம்தான்.. ஃபேமிலி வாழ்க்கையில இதெல்லாம் இவ்வளவு சுலபமா கிடைக்காதுன்னு எனக்கு தோணுது.."
"You are becoming a hermit. "
"Already I am.." அவளின் உதட்டை வருடினேன்.
"சரி.. டைம் ஆயிடுச்சு.. நான் கெளம்புறேன்.. நெக்ஸ்ட் வீக் முடிஞ்சா மீட் பண்ணுவோம்.. காஃபி ஷாப்ல.." டிரெஸ்ஸை போட்டுக்கொண்டாள்.
"கார்ல டிரா பண்ணட்டும்மா..?"
"வேண்டாம்.. விடிஞ்சிரிச்சு.. ஆட்டோ புடிச்சி போய்க்கிறேன்.." என்று போய்விட்டாள்.
எனக்கும் 'பிஸ்' அடிக்கவேண்டும் போல இருந்தது. பெட்டிலிருந்து எழுந்து பாத்ரூமிற்கு சென்றேன்.
ஸ்ஸ்ஸ்ஸ்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
ஆம். என்னால் நிச்சயமாய் சொல்லமுடியும். நான் மூத்திரம் போகும் சப்தத்தைவிட வேறு யாருடையதையும் என்னால் சகித்துக்கொள்ள முடியாது. I am naturally a loner.
கருத்துகள்
கருத்துரையிடுக