வாலிப வயது முதல் முப்பதுகள் வரை உடல் சார்ந்து தேவை இருக்கும் வரைக்கும் குடும்பம் குட்டி படுக்கை என்றே போய்விடும் அவளின் வாழ்க்கை ஒரு கட்டத்தில் யாரும் இட்டு நிரப்ப முடியாத ஒன்றைத் தேடும். அப்பொழுது தான் அவளுக்கே இத்தணை ஆண்டுகள் நடித்தே இருக்கிறோம் என்று புரியும் . எவளும் உடலுக்காகவோ படுக்கைக்காகவோ எவனையும் தேடுவதில்லை. அவளுக்கான அவனைத் தேடுவாள். அதனால் தான் முப்பதுகளில் தன்னை மறைக்க முற்படும் பெண்கள் கூட தோற்றப் பொலிவில் கவனம் செய்வார்கள்.யாரேனும் தன்னை அழகு என்று சொல்ல மாட்டார்களா என்று. பேசிச் சிரிக்க பகிர்ந்து கொள்ள அவளுக்கென்று பிரத்யேகமாய் ஒரு உறவு வேண்டும். அதே நேரதில் ஆண்களோ அழுக்கு நைட்டியும் அழுத முகத்தையும் பார்த்துப் பார்த்து அலுத்துப் போய் வேறு சும்மா கிளுகிளுப்புக்கு எவளும் கிடைக்க மாட்டாளா என்று தேடுவதும் நடக்கும். ஆயினும் இந்த தேடலில் உடலின் தேவை வயதினால் குறைந்து தான் இருக்கும். ஆம்பள சிங்கம் எழுபது வயசு நான் கில்லின்னு எவன் சொன்னாலும் அது பொய். உண்மையில் எவ்வளவு நல்லவனோ வல்லவனோ 35-36 க்கு மேல் பாதி பியூஸ் புடுங்கிய கேஸ் தான். ஒத்துக் கொள்ளாதவன் முழுசும் போன கேஸ். சுவாரசியம் இன்மையே இதற்குக் காரணம். இந்த வேளையில் கிடைக்கும் ஆண் பெண் நட்பு வரம். அந்த மெல்லிய காம தேடலோடு அழகாய் நகரும். துணையிடம் நெருக்கம் அதிகமாகும். நட்பு ஒருவேளை காதலாச்சு வேற ஒண்ணும் இல்ல காமவயப்படுதலத் தான் காதல்ன்னு சொல்றோம். கட்டாயம் நடக்கும். ஈர்ப்பு அது தான். தள்ளியே போய்ட்டால் பிரச்சனையில்லை. ஆனாலும் அந்த ஆணால் அவளை நேசிப்பதை அவள் உள் நுழைந்து விட்டாள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் தான் விரும்பும் அந்த அவனுக்காக எதையும் செய்யும் அன்பின் உச்சத்தில் நிற்பாள் அவள். அவளின் இந்த அன்பு அவனை பயமுறுத்தும். சமுதாயம் நோக்கி பார்வை திரும்பும். தன் குடும்பம் நினைத்து மிரளும். தன் துணைவி இவ்விடம் வந்து விட்டால் என்ற கேள்வி கிழங்கெடுக்கும். அவளின் நேசம் தனை மறுக்கும் அவன் ஆண். அந்த நிலையில் அவளை உடல் சார்ந்து உபயோகப்படுத்திக் கொள்பவன் பேடி. அந்த ஆணின் பிரிவு வலி தந்தாலும் அவனின் மௌனம் வலி தந்தாலும் தனக்கானவன் அவன் என்று அவள் மனம் அறிந்த வேளையில் அவளின் வெறுமை நிறையும். அது தான் காதல். இருவரும் சேர முடியாது எனினும், தொடர முடியாது எனினும்,காதல் என்று சுற்றாவிட்டாலும், உடல் வேட்கைக்காக என்று இல்லாமல் இருவர் உள்ளும் புதைந்து கிடக்கும். வாழ்வில் எல்லாருக்கும்.எல்லா பெண்களுக்கும் இப்படி ஒரு காதல் வரும். இல்லை என்பவள் முகம் மூடி போட்டிருக்கிறாள். அந்த அவனின் பெயரையோ அவளின் பெயரையோ சொல்ல நேர்ந்தால் ஈரக்குலை வரை நடுங்கும்.
அது காதல்.
கருத்துகள்
கருத்துரையிடுக