கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நந்தினி, சிவில் சர்வீஸஸ் தேர்வில் 849-வது இடத்திலிருந்து விடாமுயற்சியின் காரணமாக முதல் இடத்துக்கு முன்னேறி, அபார சாதனை படைத்துள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் சிவில் சர்வீஸஸ் பணிக்கு 1,099 (846 ஆண்கள், 253 பெண்கள்) தேர்வுசெய்யப்படுவர். இவற்றில் 500 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 347 இடங்கள் ஓ.பி.சி பிரிவினருக்கும், 163 இடங்கள் எஸ்.சி பிரிவினருக்கும், 89 இடங்கள் எஸ்.டி பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ளவற்றில் 180 ஐ.ஏ.எஸ்., 150 ஐ.பி.எஸ்., 45 ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளுக்கான பணியிடங்கள். மீதம் உள்ளவை 834 'ஏ' மற்றும் 'பி' ரகப் பணிப் பிரிவுகள். இதுதவிர 220 பேர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பார்கள். கடந்த 2016- ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் 25 இடங்களில் 18 ஆண்களும், 7 பெண்களும் இடம்பிடித்துள்ளனர்.
தேசிய அளவில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நந்தினி, முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த இவரின் தந்தை, பள்ளி ஆசிரியர். இதற்கு முன் மூன்று முறை சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதிய நந்தினி, முதல்முறை 849-வது இடத்தைப் பெற்றார். மனம் சோர்வடையாமல் போராடிய அவரின் கடின உழைப்பால் இப்போது முதல் இடத்தை எட்டியுள்ளார். இன்ஜினீயரிங் படித்துள்ள இவர், கர்நாடக பவனில் சிவில் இன்ஜினீயராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது இந்திய வருவாய்த் துறை அதிகாரியாகப் பணிபுரிந்துவருகிறார். இனி, ஃபரிதாபாத்தில் உள்ள சுங்கம் மற்றும் கலால்வரித் துறை நிறுவனத்தில் ஐ.ஏ.எஸ் பயிற்சி பெறப்போகிறார்.
''என்னைப் பொறுத்தவரை ஐ.ஏ.எஸ் ஆவது மட்டும்தான் குறிக்கோயூபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்த நந்தினி, 'சமுதாயமும் பெண்களுக்கு சம வாய்ப்பு கொடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

யூபிஎஸ்சி, 2016 ஆம் ஆண்டு குடிமைப் பணிகளில் தேர்வானவர்கள் பட்டியல் நேற்று வெளியானது. இதில் 1,099 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெற்றனர். கர்நாடகாவைச் சேர்ந்த கே.ஆர்.நந்தினி, இந்தமுறை முதலிடத்தைப் பிடித்தார். தமிழகத்தைச் சேர்ந்த பிரதாப் முருகன், தேசிய அளவில் 21-வது இடத்துக்கு வந்தார். தனது முதல் முயற்சியிலேயே இந்திய அளவில் 21-வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார், பிரதாப் முருகன்.. குதிரைக்கு சேனை கட்டிவிட்டதுபோல் அதை மட்டுமே இலக்காகக்கொண்டு முயற்சித்தேன். நான்கு முறை சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதினேன். ஒவ்வொரு முறையும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டே இருந்தேன். நமது இலக்கு எதுவோ, அதை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது. கடினமாக உழைத்தேன். வெற்றி தள்ளிப்போடப்பட்டிருக்கலாம். ஆனால், கிடைக்காமல் போகாது என்பதற்கு நானே உதாரணம். கடைசி முறை 642-வது இடத்தைப் பிடித்தேன். இப்போது முதல் இடத்துக்கு வந்திருக்கிறேன். உழைப்பால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. இந்தியாவில் எந்த இடத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டாலும் என்னால் சிறப்பாகச் செயல்பட முடியும். என் பெற்றோர்தான் என் ரோல்மாடல். அவர்களின் ஆதரவு இல்லாமல் இத்தகைய வெற்றியை நான் பெற்றிருக்க முடியாது. ஐ.ஏ.எஸ் ஆவதுதான் என் கனவு. இப்போது அது நனவாகியுள்ளது. நான் அடைந்துள்ள மகிழ்ச்சிக்கு அளவே இல்லை'' என்று உற்சாகத்துடன் கூறுகிறார் நந்தினி.
காஷ்மீர் மாநிலத்திலிருந்து அதிகபட்சமாக 14 பேர் சிவில் சர்வீஸஸ் தேர்வில் பாஸாகியுள்ளனர். வடக்கு காஷ்மீரின் லாங்தே பகுதியில் உள்ள ஹரிபுரா யூனிசு கிராமத்தைச் சேர்ந்த பிலால் மொகைதீன் ( வயது 31) தேசிய அளவில் 10-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். தற்போது லக்னோவில் இந்திய வனத்துறை அதிகாரியாகப் பணியாற்றிவரும் பிலால் மொகைதீன், கடந்த 2012-ம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் பணிக்குத் தேர்வாகியிருந்தார். கடந்த ஆண்டு காஷ்மீரிலிருந்து 12 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். சிவில் சர்வீஸ் தேர்வில் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சிபெற்றிருப்பது இதுவே முதல் முறை.
கருத்துகள்
கருத்துரையிடுக