முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

NO BRA DAY


ட்விட்டரில் எப்போதும் எலியும், பூனையுமாக அடித்துக் கொள்ளும் செக்ஸ் குயீன்களான பூனம் பாண்டேவும், ஷெர்லின் சோப்ராவும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக‌  ‘கேப்டன் – அம்மா’ மாதிரி திடீர் கூட்டணி அமைத்து ஆச்சரியப் படுத்தினார்கள். விஷயம் என்னவென்றால் அக்டோபர் 13, ‘மார்புக்கச்சை இல்லாத நாளாம்’. அதாவது தமிழில் மொழிபெயர்த்தால் ‘நோ ப்ரா டே’. இருவரும்மார்புக்கச்சை அணியாமல் ஏகப்பட்ட போட்டோக்கள் எடுத்து, ட்விட்டரில் பகிர்ந்து தங்களதுஃபாலோயர்களை ஏகத்துக்கும் குஷிப்படுத்தினார்கள். எலிசபெத் மகாராணி கூட ’நோ ப்ரா டே’குறித்து ஏதோ ட்விட் போட்டிருக்கிறார்களாம்.

இணையத்தில் மேலதிகமாக இதுகுறித்து தேடி வாசித்தபோது, நிறைய பெண்கள் ‘ப்ரா’ என்பதை அடிமைச் சின்னமாக பார்க்கிறார்கள் என்கிற அவசியத் தகவலை அறிந்துகொள்ள முடிந்தது. அது எவ்வாறு அவர்களை அடிமைப்படுத்துகிறது என்பதை ஒரு ஆணாக உணரமுடியவில்லை. கடந்த அக்.13 அன்று பெண்கள் பலரும் விடுதலையாக ஃபீல் செய்திருக்கிறார்கள். இந்த நாளை சுதந்திரத் திருநாளாக கொண்டாடிய பெண்களைப் பார்த்து வேறொரு பெண் கேலியாகச் சொன்னார், “For me every day is No Bra day””

நான் பதிமூன்று வயதில் பேண்ட் போட ஆரம்பித்ததில் இருந்தே மேல் உள்ளாடையாக ‘கட் பனியன்’ (கை வைக்காத பனியன்) அணிந்து வருகிறேன். டீஷர்ட் அணியும்போது மட்டும் கட்பனியனுக்கு டாட்டா. என்றாவது பனியன் ஸ்டாக் இல்லாதபோதோ அல்லது மறந்தோ அணியாவிடில், ஆடையே அணியாதது போன்ற ஓர் உணர்வு நாள் முழுக்க uneasyயாக உணரவைக்கும்.

மேற்கத்திய நாடுகளில் 75 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை பெண்கள் ‘பிரா’ அணிவதாக சொல்கிறார்கள். சமீப ஆண்டுகளாக பெண் என்றால் இந்த உடையை அணிந்தே ஆகவேண்டும் என்பதாக ட்ரெஸ்-கோட் கலாச்சாரம் உருவாகியிருக்கிறது. இருப்பினும் நம் நாட்டில் நகர்ப்புறம் தவிர்த்துப் பார்த்தால், ‘பிரா’ இன்னமும் ஓர் ஆடம்பர உடைதான்.

ஓக்கே, நாம் தலைப்புக்கு வருவோம்.

அக்டோபர் மாதம் முழுக்கவே மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப் படுகிறது. இந்த விழிப்புணர்வுக்கு சொல்லப்பட்ட வித்தியாசமான ஐடியாக்களில் ஒன்றுதான் ’நோ ப்ரா டே’. அதாவது “ஏன் இன்று பெண்கள் பிரா அணியவில்லை?” என்கிற சந்தேகம் யாருக்கோ ஏற்பட்டு, என்னை மாதிரி மேலதிகமாக விசாரித்து மார்பகப் புற்றுநோய் பற்றி வாசித்தோ, கேட்டோ விழிப்புணர்வு பெறுவார்கள் என்பதுதான் ஐடியா. இந்த ‘புத்திசாலித்தனமான’ ஐடியாவின் காரணமாகதான் இரண்டு நாட்களுக்கு முன்பாக அந்த ‘டே’ கொண்டாடப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே அமெரிக்காவில் ‘தேசிய மார்புக்கச்சை அணியா தினம்’ வெகுசிறப்பாக ஜூலை 9 அன்று வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அந்தந்த ஊர் செலப்ரிட்டீஸ்களை போட்டோ எடுக்க அமெரிக்க போட்டோகிராபர்களிடையே வெட்டுக்குத்து கூட நிகழ்வதுண்டு. இவ்வருடம் விழிப்புணர்வுக்காக உலகளாவிய அளவில் களமிறங்கியிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து இந்தியாவில் ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே ஆகிய இருவரும் ஆதாரப்பூர்வமாக இத்திருநாளை வெகுவிமரிசையாக கொண்டாடியிருக்கிறார்கள். 
ப்ராவுக்கும், மார்பகப் புற்றுநோய்க்கும் மருத்துவரீதியாக, நேரடியாக என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. ஆனால் ப்ரா அணிவதால் மார்பகப் புற்றுநோய் வரக்கூடிய சாத்தியங்கள் கூடுதலாக இருப்பதாக கூறி பதினேழு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு அமெரிக்கத் தம்பதியர் புத்தகம் எழுதி பரபரப்பு ஏற்படுத்தினார்கள். அந்தப் புத்தகத்தின் பெயரே கொஞ்சம் டெர்ரர் ஆக இருக்கிறது, ‘Dressed to kill’
ப்ரா அணிவதால் இயல்பான இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, அதுவே புற்றுநோய்க்கும் காரணமாகிறது என்று வாதிடுகிறது அந்த புத்தகம். எழுபது சதவிகித மார்பகப் புற்றுநோய், காரணம் சொல்லவியலா காரணங்களால் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அந்த காரணம் ‘பிரா’ தான் என்று அடித்துப் பேசுகிறார்கள் இப்புத்தகத்தின் ஆசிரியர்கள்.

இருபத்தி நான்கு மணி நேரமும் ப்ரா அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு, பிராவே அணியாத பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதை விட நூற்றி இருபத்தி ஐந்து சதவிகிதம் கூடுதல் வாய்ப்பு இருப்பதாக அணுகுண்டை தூக்கிப் போடுகிறார்கள்.

இந்தப் புத்தகம் எழுதப்படுவதற்கு முன்பாக மார்பகப் புற்றுநோய் பாதித்த பெண்களிடம் அவர்கள் ஒரு கணக்கெடுப்பு எடுத்தார்களாம். அதில்,

- மார்பகப் புற்றுநோய் பாதித்த பெண்களில் நான்கில் மூவர் நாள் முழுக்க பிரா அணியும் பழக்கம் கொண்டவர்கள்.

- ஏழில் ஒருவர் ஒரு நாளைக்கு பன்னிரெண்டு மணி நேரமாவது ப்ரா அணிபவர்கள். தூங்கும்போது மட்டும் ஃப்ரீயாக இருப்பவர்கள்.

என்று ஒரு புள்ளிவிவரத்தை அளிக்கிறார்கள்.

இந்த புத்தகத்துக்கு உலகளாவிய ப்ரா ஆதரவாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. வருடா வருடம் பல்லாயிரம் கோடி லாபம் பெற்றுத்தரும் ப்ரா விற்பனையை முடக்க நடக்கும் சதியே இந்தப் புத்தகம் என்று ப்ரா விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் போர்க்கொடி தூக்கினார்கள். போதுமான உண்மையோ, ஆதாரங்களோ, கணக்கெடுப்புகளோ இல்லாத அர்த்தமற்ற புத்தகம் என்று மருத்துவ உலகமும் இந்த புத்தகத்தை முற்றிலுமாக நிராகரித்திருக்கிறது. இருந்தாலும் கொஞ்சம் அச்சமாகதான் இருக்கிறது. கட் பனியன் அணிவதால் இதுமாதிரி ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படுமா என்று யாரேனும் ஒரு நல்ல மருத்துவரை முதலில் கலந்தாலோசிக்க வேண்டும்.

No Panty Day கூட மேலைநாடுகளில் கொண்டாடப்படுவது உண்டாம். மே மாதத்தின் முதல்வெள்ளிக்கிழமை இந்த நாளாக கொண்டாடப்படுகிறதாம். அன்றைய நாளில் ஷெர்லினும், பூனமும்என்னென்ன போட்டோக்களை பகிரப்போகிறார்களோ என்று இப்போதே கற்பனை செய்துப் பார்த்து,அதன் விளைவாக கிளுகிளுப்பு கலந்த அச்சம் ஏற்பட்டிருப்பதால் லேசாக டெங்கு காய்ச்சல்அடிக்கிறது.

கருத்துகள்

  1. இதுவரை இப்பதிவினை பார்த்து படித்துவிட்டு பின் லைக் இடாதவர்களின் எண்ணிக்கை 23

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவரை இப்பதிவினை பார்த்து படித்துவிட்டு பின் லைக் இடாதவர்களின் எண்ணிக்கை 60

      நீக்கு

கருத்துரையிடுக

அலமாரி:கவர்ஸ்டோரி

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பத்தி எழுதுவது எப்படி?

சமகால இதழியலில் எல்லோரும் எழுத்து கூட்டி பத்தி எழுதுகிறார்கள். எல்லோரும் பத்தி கட்டுரைகளை தொகுப்பாக்குகிறார்கள். ஆனால் பத்தி எழுத்தாளர்களில் எத்தனை பேர் என்னைப் போல் பிரபலத்தை அனுபவிக்கிறார்கள்? நான் பல முக்கிய நாவல்களை எழுதியிருக்கிறேன். குழந்தைகளைக்கூட விட்டு வைக்காமல் அவர்களுக்கும் புத்தகம் எழுதியிருக்கிறேன். எனினும் எனது பிரபலத்திற்கு பத்திதான் காரணம். குறைந்த உழைப்பில் நிறைந்த வருமானம் பத்தி எழுத்தில்தான் கிடைக்கிறது. இந்தப் பிரபலம் எல்லோருக்கும் வாய்க்காத காரணம் அவர்கள் நான் அல்ல என்பதே. எனது வெற்றியால் உந்தப்பட்டு பத்தி எழுத துவங்குபவர்கள் என்னைப் போலவே எழுதினால் ஓரளவு வெற்றியடையலாம். இப்போது அரிச்சுவடியை கற்போமா? முதலில் ஏதோ ஆழமாக சொல்ல முயல்வது போன்ற வரிகளுடன் தொடங்க வேண்டும். ஆனால் ஆழமாக இருந்துவிடக்கூடாது. அது பத்தி எழுத்துக்கு எதிரானது. அந்த வரிகளில் இல்லாத கருத்தை விளக்கிசொல்ல சொந்த அனுபவத்திலிருந்து சப்பையான ஒரு சம்பவத்தை நினைவு கூற வேண்டும். அது சமீபத்தில் நடந்ததாக இருப்பது நல்லது. சம்பவத்தை கூறி முடித்தபின் மீண்டும் ஏதோ ஆழமாக சொல்ல முயல்வது போன்ற வரிகளில் முட...

ஜெயலலிதா- துயரம் நிரம்பிய சகாப்தம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் டிசம்பர் 5ம் தேதியன்று இரவு 11.30 மணிக்குப் பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவமனையின் செய்திக்குறிப்பு கூறியது. அவரைப் போலவே, அவருடைய ஆட்சிக்காலத்தைப் போலவே அவருடைய மரணமும் கேள்விக்குரியதாய் ஆகியிருக்கிறது.  72 நாட்கள் மருத்துவமனை வாசம், எவராலும் பார்க்க முடியாமல் அவரை வைத்திருந்தது என்று எல்லாமே மர்மமுடிச்சுகளாய் இன்று தமிழக மக்கள் முன் கேள்விகளாய் நிற்கின்றன. ஜெயலலிதாவை இரும்பு மனுஷி என்று அவருக்கான அஞ்சலிக் குறிப்புகளில் பலர் எழுதியதைக் காண முடிந்தது. உண்மையில் ஜெயலலிதா இரும்பு மனுஷியா?  ஆம்! அவர் இரும்பு மனுஷிதான். எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில் ராணுவ வண்டியிலிருந்து ஜானகியின் உறவினர் நடிகர் தீபனால் இறக்கிவிடப்பட்ட ஜெயலலிதா பின்னாளில் எம்.ஜி.ஆரின் கட்சிக்குப் பொதுச் செயலாளரானார். எவரைப் பற்றியும் கவலைப்படாமல் தான் நினைத்ததை செய்து முடிக்கும் துணிச்சல் அவருக்கு இருந்தது. அதனால்தான் இரும்பு மனுஷி என்று பெயர் பெற்றிருக்கிறார்.  ஆனால், அவர் எதையெல்லாம் நினைத்தார், செயல்படுத்தினார். அந்த இரும்பு மனம் கொண்டு அவர் எப்படிச் செயலாற்றினார் என்பதை...

முதல்வர் ஓபிஎஸ்

.மகேஷ் இடது: டீக்கடை | வலது: ஓபிஎஸ் பூர்வீக வீடு தமிழ்நாட்டைத் தாண்டியும், “அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும்? சவால்களைச் சமாளிப்பாரா ஓபிஎஸ்?” என்று பேசிக்கொண்டிருக்கும் நிலையில், ஓபிஎஸ்ஸை வளர்த்தெடுத்த ஊர்க் காரர்கள் ‘இதுபற்றியெல்லாம் என்ன நினைக்கிறார்கள்?’ என்ற கேள்வியோடு பெரியகுளம் புறப்பட்டேன். பெரியகுளத்துக்காரர்கள் பேசப் பேச… ஓபிஎஸ் உருவம் பிரம்மாண்டம் ஆகிறது! பெரியகுளம் மக்களிடமும், பன்னீர்செல்வத் தின் முன்னாள், இந்நாள் நண்பர்களிடமும் நான் பேசியதில் தெரிந்துகொண்ட மிக முக்கியமான முதல் விஷயம், பொதுச் சமூகம் நம்பிக்கொண்டிருக்கிறபடி ஓபிஎஸ்ஸின் இன்றைய வளர்ச்சிக்கு அவருடைய விசுவாசம் மட்டும் காரணமல்ல; தன்னை நம்பி வேலையை ஒப்படைப்பவர்களிடம், அதைக் கச்சிதமாக முடித்துக்கொடுக்கும் திறனும் பெற்றவர் அவர் என்பது. அடுத்த முக்கியமான புரிதல், தன் வாழ்க்கைப் பாதையின் குறுக்கே சிக்கலான சாலைச் சந்திப்புகள் தென்படும்போதெல்லாம் எந்தச் சாலையில் செல்வது வளர்ச்சிக்கு நல்லது என்பதைத் தேர்ந்தெடுப்பதிலும் அவர் புத்திசாலி என்பது. இதயத்தில் இடம்பிடித்த பன்னீர் ஓபிஎஸ் வளர்ச்சிக் ...

டாஸ்மாக் தமிழ்

உள்ளே நுழையும்போதே தலையை சொறிந்து கொண்டே வந்தான் டாஸ்மாக் தமிழ்.   வந்ததும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்தான். “என்னப்பா அமைதியா இருக்க… ? எதுவும் பிரச்சினையா… ? “ என்று தமிழைப் பார்த்து வாஞ்சையோடு கேட்டார் கணேசன். “எனக்கு எதுவும் பிரச்சினை இல்லண்ணே…  ராஜ்யசபா தேர்தல்ல என்ன நடக்குதுன்னே புரிய மாட்டேங்குது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை நிலைமை மாறிக்கிட்டே இருக்கு. ஆதரவு தருவாங்கன்னு நெனைச்ச பாட்டாளி மக்கள் கட்சி முறுக்கிக்கிட்டாங்க.“ “அவங்க ஏன் மச்சான் முறுக்கிக்கிட்டாங்க…  ? “ என்று உரையாடலுக்குள் நுழைந்தான் பீமராஜன். “செயற்குழு தீர்மானம்னு சொல்றாங்க. “ “அவங்க செயற்குழுவுல, டாக்டர் ராமதாஸுக்கு நெஞ்சு வலின்னுல தீர்மானம் போட்டாங்க….“ “ அது மட்டுமா போட்டாங்க…  “தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான ராமதாஸ் அய்யா ஏற்கனவே இதய நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இத்தகைய சூழலில் 110 டிகிரி வெப்பநிலை நிலவிய திருச்சி மத்திய சிறையில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு பிரிவில் அவரை தமிழக அரசு அடைத்துக் கொடுமைப் படுத்தியது....

கர்நாடகா – மாற்றப்பட்ட ஆட்ட விதிகள்

. BY  SAVUKKU   ·  மே 15 கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியான பின்னால், பல்வேறு ஊடகங்களில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்துள்ளன.  காங்கிரஸின் தோல்வி, அதில் சித்தாராமைய்யாவின் பங்கு, பிஜேபியின் திடீர் வெற்றி, மோடியின் செல்வாக்கு, கர்நாடகத்தில் உள்ள பெரும்பான்மை சாதிகளான ஒக்கலிகா மற்றும் லிங்காயத் சாதி சமன்பாடுகள், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் தேவேகவுடா குமாரசாமியின் செல்வாக்கு, அமித் ஷாவின் தேர்தல் யுக்தி உள்ளிட்ட பலவற்றை ஆராய்ந்து பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இந்த கட்டுரைகள் அத்தனையும் படித்துப் பார்த்தால், ஒவ்வொரு காரணமும் சரியான காரணங்களாகவே தோன்றும்.   ஆனால் இந்த ஆராய்ச்சிகளிலும், காரணங்களிலும் எனக்கு நம்பிக்கை இல்லை.  ஓரளவு உத்தேசமாக ஒரு ஊகத்துக்கு வர மட்டுமே இத்தகைய ஆராய்ச்சிகள் உதவும்.  1991 தேர்தலில், அடித்த ராஜீவ் காந்தி மரண அனுதாப அலை, 1996ல் ஏற்பட்ட ஜெயலதா மீதான கோப அலை, 2004ல் ஏற்பட்ட ஜெயலலிதா எதிர்ப்பு அலை போன்ற சமயங்களில் மட்டுமே தேர்தல் முடிவுகளுக்கான உறுதியான காரணங்களை கண்டறிய முடியும். சாதாரணமாகவே, இந்திய வாக்காளர்கள...

வெளிவராத புத்தகங்கள்-2016

 

Vijayakanth with wife rare family photos

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...