முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

NO BRA DAY


ட்விட்டரில் எப்போதும் எலியும், பூனையுமாக அடித்துக் கொள்ளும் செக்ஸ் குயீன்களான பூனம் பாண்டேவும், ஷெர்லின் சோப்ராவும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக‌  ‘கேப்டன்  அம்மா’ மாதிரி திடீர் கூட்டணி அமைத்து ஆச்சரியப் படுத்தினார்கள். விஷயம் என்னவென்றால் அக்டோபர் 13, ‘மார்புக்கச்சை இல்லாத நாளாம்’. அதாவது தமிழில் மொழிபெயர்த்தால் ‘நோ ப்ரா டே’. இருவரும்மார்புக்கச்சை அணியாமல் ஏகப்பட்ட போட்டோக்கள் எடுத்துட்விட்டரில் பகிர்ந்து தங்களதுஃபாலோயர்களை ஏகத்துக்கும் குஷிப்படுத்தினார்கள். எலிசபெத் மகாராணி கூட ’நோ ப்ரா டேகுறித்து ஏதோ ட்விட் போட்டிருக்கிறார்களாம்.

இணையத்தில் மேலதிகமாக இதுகுறித்து தேடி வாசித்தபோது, நிறைய பெண்கள் ‘ப்ரா’ என்பதை அடிமைச் சின்னமாக பார்க்கிறார்கள் என்கிற அவசியத் தகவலை அறிந்துகொள்ள முடிந்தது. அது எவ்வாறு அவர்களை அடிமைப்படுத்துகிறது என்பதை ஒரு ஆணாக உணரமுடியவில்லை. கடந்த அக்.13 அன்று பெண்கள் பலரும் விடுதலையாக ஃபீல் செய்திருக்கிறார்கள். இந்த நாளை சுதந்திரத் திருநாளாக கொண்டாடிய பெண்களைப் பார்த்து வேறொரு பெண் கேலியாகச் சொன்னார், For me every day is No Bra day

நான் பதிமூன்று வயதில் பேண்ட் போட ஆரம்பித்ததில் இருந்தே மேல் உள்ளாடையாக ‘கட் பனியன்’ (கை வைக்காத பனியன்) அணிந்து வருகிறேன். டீஷர்ட் அணியும்போது மட்டும் கட்பனியனுக்கு டாட்டா. என்றாவது பனியன் ஸ்டாக் இல்லாதபோதோ அல்லது மறந்தோ அணியாவிடில், ஆடையே அணியாதது போன்ற ஓர் உணர்வு நாள் முழுக்க uneasyயாக உணரவைக்கும்.

மேற்கத்திய நாடுகளில் 75 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை பெண்கள் ‘பிரா’ அணிவதாக சொல்கிறார்கள். சமீப ஆண்டுகளாக பெண் என்றால் இந்த உடையை அணிந்தே ஆகவேண்டும் என்பதாக ட்ரெஸ்-கோட் கலாச்சாரம் உருவாகியிருக்கிறது. இருப்பினும் நம் நாட்டில் நகர்ப்புறம் தவிர்த்துப் பார்த்தால், ‘பிரா’ இன்னமும் ஓர் ஆடம்பர உடைதான்.

ஓக்கே, நாம் தலைப்புக்கு வருவோம்.

அக்டோபர் மாதம் முழுக்கவே மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப் படுகிறது. இந்த விழிப்புணர்வுக்கு சொல்லப்பட்ட வித்தியாசமான ஐடியாக்களில் ஒன்றுதான் ’நோ ப்ரா டே’. அதாவது “ஏன் இன்று பெண்கள் பிரா அணியவில்லை?” என்கிற சந்தேகம் யாருக்கோ ஏற்பட்டு, என்னை மாதிரி மேலதிகமாக விசாரித்து மார்பகப் புற்றுநோய் பற்றி வாசித்தோ, கேட்டோ விழிப்புணர்வு பெறுவார்கள் என்பதுதான் ஐடியா. இந்த ‘புத்திசாலித்தனமான’ ஐடியாவின் காரணமாகதான் இரண்டு நாட்களுக்கு முன்பாக அந்த ‘டே’ கொண்டாடப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே அமெரிக்காவில் ‘தேசிய மார்புக்கச்சை அணியா தினம்’ வெகுசிறப்பாக ஜூலை 9 அன்று வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அந்தந்த ஊர் செலப்ரிட்டீஸ்களை போட்டோ எடுக்க அமெரிக்க போட்டோகிராபர்களிடையே வெட்டுக்குத்து கூட நிகழ்வதுண்டு. இவ்வருடம் விழிப்புணர்வுக்காக உலகளாவிய அளவில் களமிறங்கியிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து இந்தியாவில் ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே ஆகிய இருவரும் ஆதாரப்பூர்வமாக இத்திருநாளை வெகுவிமரிசையாக கொண்டாடியிருக்கிறார்கள். 
ப்ராவுக்கும், மார்பகப் புற்றுநோய்க்கும் மருத்துவரீதியாக, நேரடியாக என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. ஆனால் ப்ரா அணிவதால் மார்பகப் புற்றுநோய் வரக்கூடிய சாத்தியங்கள் கூடுதலாக இருப்பதாக கூறி பதினேழு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு அமெரிக்கத் தம்பதியர் புத்தகம் எழுதி பரபரப்பு ஏற்படுத்தினார்கள். அந்தப் புத்தகத்தின் பெயரே கொஞ்சம் டெர்ரர் ஆக இருக்கிறது, ‘Dressed to kill’
ப்ரா அணிவதால் இயல்பான இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, அதுவே புற்றுநோய்க்கும் காரணமாகிறது என்று வாதிடுகிறது அந்த புத்தகம். எழுபது சதவிகித மார்பகப் புற்றுநோய், காரணம் சொல்லவியலா காரணங்களால் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அந்த காரணம் ‘பிரா’ தான் என்று அடித்துப் பேசுகிறார்கள் இப்புத்தகத்தின் ஆசிரியர்கள்.

இருபத்தி நான்கு மணி நேரமும் ப்ரா அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு, பிராவே அணியாத பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதை விட நூற்றி இருபத்தி ஐந்து சதவிகிதம் கூடுதல் வாய்ப்பு இருப்பதாக அணுகுண்டை தூக்கிப் போடுகிறார்கள்.

இந்தப் புத்தகம் எழுதப்படுவதற்கு முன்பாக மார்பகப் புற்றுநோய் பாதித்த பெண்களிடம் அவர்கள் ஒரு கணக்கெடுப்பு எடுத்தார்களாம். அதில்,

- மார்பகப் புற்றுநோய் பாதித்த பெண்களில் நான்கில் மூவர் நாள் முழுக்க பிரா அணியும் பழக்கம் கொண்டவர்கள்.

- ஏழில் ஒருவர் ஒரு நாளைக்கு பன்னிரெண்டு மணி நேரமாவது ப்ரா அணிபவர்கள். தூங்கும்போது மட்டும் ஃப்ரீயாக இருப்பவர்கள்.

என்று ஒரு புள்ளிவிவரத்தை அளிக்கிறார்கள்.

இந்த புத்தகத்துக்கு உலகளாவிய ப்ரா ஆதரவாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. வருடா வருடம் பல்லாயிரம் கோடி லாபம் பெற்றுத்தரும் ப்ரா விற்பனையை முடக்க நடக்கும் சதியே இந்தப் புத்தகம் என்று ப்ரா விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் போர்க்கொடி தூக்கினார்கள். போதுமான உண்மையோ, ஆதாரங்களோ, கணக்கெடுப்புகளோ இல்லாத அர்த்தமற்ற புத்தகம் என்று மருத்துவ உலகமும் இந்த புத்தகத்தை முற்றிலுமாக நிராகரித்திருக்கிறது. இருந்தாலும் கொஞ்சம் அச்சமாகதான் இருக்கிறது. கட் பனியன் அணிவதால் இதுமாதிரி ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படுமா என்று யாரேனும் ஒரு நல்ல மருத்துவரை முதலில் கலந்தாலோசிக்க வேண்டும்.

No Panty Day கூட மேலைநாடுகளில் கொண்டாடப்படுவது உண்டாம்மே மாதத்தின் முதல்வெள்ளிக்கிழமை இந்த நாளாக கொண்டாடப்படுகிறதாம்அன்றைய நாளில் ஷெர்லினும்பூனமும்என்னென்ன போட்டோக்களை பகிரப்போகிறார்களோ என்று இப்போதே கற்பனை செய்துப் பார்த்து,அதன் விளைவாக கிளுகிளுப்பு கலந்த அச்சம் ஏற்பட்டிருப்பதால் லேசாக டெங்கு காய்ச்சல்அடிக்கிறது.

கருத்துகள்

  1. இதுவரை இப்பதிவினை பார்த்து படித்துவிட்டு பின் லைக் இடாதவர்களின் எண்ணிக்கை 23

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவரை இப்பதிவினை பார்த்து படித்துவிட்டு பின் லைக் இடாதவர்களின் எண்ணிக்கை 60

      நீக்கு

கருத்துரையிடுக

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...