முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டாஸ்மாக் தமிழ்

tas_boy_1
உள்ளே நுழையும்போதே தலையை சொறிந்து கொண்டே வந்தான் டாஸ்மாக் தமிழ்.   வந்ததும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்தான்.
“என்னப்பா அமைதியா இருக்க… ? எதுவும் பிரச்சினையா… ? “ என்று தமிழைப் பார்த்து வாஞ்சையோடு கேட்டார் கணேசன்.
“எனக்கு எதுவும் பிரச்சினை இல்லண்ணே…  ராஜ்யசபா தேர்தல்ல என்ன நடக்குதுன்னே புரிய மாட்டேங்குது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை நிலைமை மாறிக்கிட்டே இருக்கு. ஆதரவு தருவாங்கன்னு நெனைச்ச பாட்டாளி மக்கள் கட்சி முறுக்கிக்கிட்டாங்க.“
“அவங்க ஏன் மச்சான் முறுக்கிக்கிட்டாங்க…  ? “ என்று உரையாடலுக்குள் நுழைந்தான் பீமராஜன்.
“செயற்குழு தீர்மானம்னு சொல்றாங்க. “
“அவங்க செயற்குழுவுல, டாக்டர் ராமதாஸுக்கு நெஞ்சு வலின்னுல தீர்மானம் போட்டாங்க….“
“ அது மட்டுமா போட்டாங்க…  “தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான ராமதாஸ் அய்யா ஏற்கனவே இதய நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இத்தகைய சூழலில் 110 டிகிரி வெப்பநிலை நிலவிய திருச்சி மத்திய சிறையில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு பிரிவில் அவரை தமிழக அரசு அடைத்துக் கொடுமைப் படுத்தியது. இதனால் ராமதாஸ் அய்யாவின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ராமதாஸ் அய்யா சிறையிலிருந்து உயிருடன் வெளிவருவாரா? என்ற ஐயம் ஏற்பட்டது. சிறையிலிருந்து வெளிவந்த உடனேயே ராமதாஸ்க்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு இதய பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நிலை உருவானது. “ ன்னு ஒரு தீர்மானம் போட்ருக்காங்க…
600155_10151529470098303_329328819_n
“இதுக்குப் பேரு தீர்மானமா… இது புலம்பல் மாதிரியில்ல     இருக்கு… ? “   என்று சிரித்துக் கொண்டே கேட்டான் ரத்னவேல்.
“இன்னும் கொஞ்சம் கேளுடா… “ஏற்கனவே கழுத்து வலி, முதுகுத் தண்டு வலி ஆகியவற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த காடுவெட்டி உடல் நிலை, காவல்துறையினரின் அலைக்கழிப்புகள் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது“ இது குரு அண்ணனைப் பத்திப் போட்ட தீர்மானம். “
“இதையெல்லாம் இவங்க மருத்துவர்கிட்டல்ல சொல்லனும்.. எதுக்கு செயற்குழுவுல பேசறாங்க.. “ என்று சொல்லி விட்டு வாய் விட்டுச் சிரித்தான் வஜ்ரவேல்.
“என்னமோ பேசறாங்க… செயற்குழுவுலதான், ராஜ்யசபைத் தேர்தலில் விலகி இருக்கறதுன்னு முடிவெடுத்துருக்காங்க. “
“அது சரி.. செயற்குழுவுக்கு போதுமான உறுப்பினர்களே இருந்துருக்க மாட்டாங்களே… ? “ என்று உள்ளே நுழைந்தான் வடிவேல்.
“நீ சொல்றது ஒரு வகையில சரிதான் மச்சான்.  ராமதாஸ் கைதுக்குப் பிறகு நடந்த வன்முறை சம்பவங்களுக்காக 1153 பாட்டாளி மக்கள் கட்சிக் காரங்க கைது பண்ணப்பட்டாங்க.  அதுல 122 பேர் இன்னும் குண்டர் தடுப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் இதுல உள்ள இருக்காங்க. இதுல பெரும்பாலானவங்க செயற்குழு உறுப்பினர்கள்.  ஆனா அவங்கள்லாம் சிறையில இருக்கப்ப செயற்குழுவைக் கூட்டி, ராமதாஸுக்கு நெஞ்சு வலி.. காடுவெட்டி குருவுக்கு கழுத்து வலின்னு தீர்மானம் போட்ருக்காங்க. எல்லாரும் இருந்தா மட்டும் எதுத்து பேசிடுவாங்களா என்ன… திமுகல இருக்க மாதிரி, அன்புமணிதான் வாரிசுன்னு ஆயிடுச்சு. அப்புறம் என்ன……. நாளைக்கு அன்புமணி மனைவி தலைமையில செயற்குழு கூடுனா எதுத்துப் பேசிடுவாங்களா என்ன…-?“
“அதுவும் சரிதான்..  திமுகவும் அதிமுகவும் பல சாதி மடம்னா, இது வன்னியர் மடம். ராமதாஸ் மடாதிபதி. அவரு நியமிக்கிற ஆளுதானே அடுத்த மடாதிபதியாக முடியும் ? “
“சரி என்னதான் நடக்கப் போகுது தேர்தல்ல… ? “
“கனிமொழியை எம்.பியாக்க கருணாநிதி என்னென்ன பாடு பட்றாருன்னு நான் சொல்லியிருந்தேன்.  வெண்ணை திரண்டு வர்ற நேரம் தாழி உடையற மாதிரி, எதிர்ப்பாக்காத கட்சியெல்லாம் ஆதரவு குடுத்துடுச்சு… ஆனா எதிர்ப்பார்த்த பா.ம.கவும், காங்கிரஸும் காலை வாரிடுச்சுன்னு வருத்தத்துல இருக்காரு. “
“என்னதாம்பா நடந்துச்சு… ? “
“அண்ணே… மனிதநேய மக்கள் கட்சியோட 2 எம்எல்ஏ ஆதரவை அதிமுக கேட்டதும், பெரிய பட்டியலை நீட்டுனாங்க..  எங்க சின்னத்துலதான் போட்டியிடுவோம்.  2 எம்.பி சீட் வேணும். வக்ஃப் போர்டு பதவி வேணும்னு சொன்னாங்க.  நீங்க வச்சுருக்கற ரெண்டு எம்.எல்.ஏவும் தேவையில்லாத ஆணின்னு சொல்லி அனுப்பிட்டாங்க. அவங்களும், அக்கரைக்கு போயி சேந்துட்டாங்க.
அதே மாதிரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும் அக்கரைக்கு போயி சேந்துட்டார்.  ரெண்டு கட்சியும் வெளிப்படையா, எங்க வாக்குகள் வீணாப்போகும் அதனாலதான் ஆதரவு குடுக்கறோம்னு சொன்னாக் கூட, தலா 2 கோடியும், வெற்றி வாய்ப்பு உள்ள ஒரு பாராளுமன்றத் தொகுதியும்தான் திரைமறைவில் நடந்த பேரம். “
“வெளியில வந்து யோக்கியம் மாதிரி பேட்டி குடுத்தாங்களே…  “
 “அப்புறம் நாங்க ரெண்டு கோடிக்காகவும், ஒரு பாராளுமன்றத் தொகுதிக்காகவும் அணி மாறிட்டோம்னு பேசச் சொல்றியா…“
“சரி… காங்கிரஸ் பக்கம் என்ன சொல்றாங்க.. ? “ என்று ஆர்வமாக கேட்டான் ரத்னவேல்.
“காங்கிரஸ் பக்கம் ரொம்ப பிகு பண்றாங்க மச்சான்.  தேமுதிக போயி காங்கிரஸ்கிட்ட ஆதரவு கேட்டதும், ராகுல் காந்திக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கு.  அவரு திமுகவுக்கு ஆதரவு குடுக்கறத விட, தேமுதிகவுக்கு குடுக்கறதுதான் நமக்கு நல்லதுன்னு சொல்லிட்டு டெல்லி போயிட்டார்.
தமிழக காங்கிரஸ்ல வாசன் மட்டும் திமுகவோட போகணும்னு நெனைக்கிறார். மற்ற காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், கடைசி நேரத்துல நம்பளை கழட்டி விட்டுட்டு போனவருக்கு எதுக்காக, நம்ப உதவி பண்ணணும்னு சொல்றாங்க.
இதுக்கு நடுவுல சுதீஷ் வெள்ளிக்கிழமை இரவு டெல்லி போயிட்டாரு.  அங்க போயி சோனியாவோட ஆலோசகர் அகமது படேலை சந்திச்சுப் பேசிட்டாரு. அவர் கிட்டயே ராகுல் காந்தியை சந்திக்க நேரம் வேணும்னு கேட்டுருக்காரு.  ராகுல் இப்போ லண்டன் போயிருக்கறதால, ஞாயிற்றுக் கிழமை தங்கியிருந்து பாத்துட்டு வர்றதுன்ற முடிவோட டெல்லியிலயே இருக்காரு…“
“சரி கேப்டன் என்ன சொல்றாரு… ? “
“கேப்டன் எப்படியாவது காங்கிரஸ் கட்சியோட கூட்டணி சேந்து பாராளுமன்றத் தேர்தல்ல பலமான கூட்டணிய அமைக்கணும், திமுகவுக்கும், அதிமுகவுக்கும் பாடம் புகட்டணும்னு நெனைக்கிறார்.  அதுக்குள்ள கட்சி எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருத்தரா காணாமப் போயிட்டு இருக்கறதால, 27ம் தேதி வரைக்கும் யாரும் வெளியில போகக் கூடாதுன்னு, கோயம்பேடு கட்சி ஆபீஸ்லயே எல்லாரையும் அடைச்சுப் போட்டு வச்சுருக்கார்.  ரமணா படத்துல வர்ற மாதிரி கட்டிப் போட்டு அடிக்கறாரான்னு தெரியல. ஆனா, எல்லோர் செல்போனையும் ஆப் பண்ணி வச்சுட்டார்.  எல்லோருக்கும் சரக்கு, சாப்பாடு எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணிக் குடுத்துட்டு, வெளியில போனா காலை ஒடச்சுடுவேன்னு சொல்லியிருக்காரு…“ என்று தமிழ் சொல்லி முடித்ததும் எல்லோரும் சிரித்தார்கள்.
“சரி… கருணாநிதி என்ன நம்பிக்கையில இருக்காரு ? “
“5 எம்எல்ஏக்களோட ஆதரவு குடுக்கறதுக்குப் பதிலா, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு சேத்து 18 சீட்களை ஒதுக்கணும், சோனியாவுக்கு போன் பண்ணி ஆதரவு கேக்கணும். அதை நாங்க ஊடகங்களுக்கு சொல்லுவோம்னு விதிச்ச நிபந்தனையைப் பாத்து எரிச்சலாயிட்டாரு கருணாநிதி.
இதுக்கு நான் ஜெயலலிதாகிட்டயே ஆதரவு கேட்டுடுவேனே… நான் போன் பண்ணி ஆதரவு கேட்டா, அதையே சாக்கா வச்சு என்னை விமர்சனம் பண்ணுவாங்கன்னு ரொம்ப கடுப்பாயிட்டாராம்…“
ஆனா… அவருக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு.  பணத்துக்கு மயங்காத ஆளு யாரு இருக்கா… வெளியில பேசறதையெல்லாம் பேசுங்க.  எப்படி என் பொண்ணை ஜெயிக்க வக்கிறேன்னு பாருன்னு தெம்பா இருக்காரு. தேர்தல் முடியற வரைக்கும் அறிக்கை, கடிதம்னு விட்டு, குட்டையக் குழப்பக் கூடாதுன்னு அமைதியா இருக்காரு… பாப்போம்“
“சிதம்பரம் என்ன நெனைக்கிறாரு…. “ என்று கேட்டான் பீமராஜன்.
“சிதம்பரத்தோட தாயார் மறைவுக்கு திமுகவுலேர்ந்து யாரும் போகலன்னு அவருக்கு ரொம்ப வருத்தம். திமுக கூட்டணியிலேர்ந்து விலகுனப்போ, அவரை சமாதானப்படுத்த குலாம்நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி மற்றும் சிதம்பரம் வந்தாங்க… அப்போ செட்டியாரை கன்னா பின்னான்னு திட்டிட்டார் கருணாநிதி.. உன்னைய ஜெயிக்க வச்சதே நானு…. ஏதாவது ஒரு உதவி பண்ணியாய்யா ன்னு திட்டித் தீத்துட்டார்.. அதனால சிதம்பரமும், திமுகவுக்கு இப்போ உதவுற மூட்ல இல்லை. “
“அவரு பையன் மூலமா ட்ரை பண்ணுவாங்களே… “
“அவரு பையன் இன்னொரு என்.சீனிவாசன் மச்சான்.. என்.சீனிவாசன் எப்படி கிரிக்கெட்டை கைக்குள்ள வச்சுக்கணும்னு நெனைக்கிறாரோ, அதே மாதிரி கார்த்தி சிதம்பரம் டென்னிஸ் விளையாட்டை தன்னோட கைக்குள்ள வைக்கணும்னு நெனைக்கிறாரு.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தோட துணைத் தலைவரா இருக்காரு கார்த்தி சிதம்பரம். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, இந்திய டென்னிஸ் சங்கத்துக்கு தலைமைச் செயல் அலுவலரா மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஹிரன்மோய் சாட்டர்ஜின்னு ஒரு ஆளை நியமிக்குது அகில இந்திய டென்னிஸ் சங்கம். இந்த நியமனத்தை எதுத்து, திருச்சி டென்னிஸ் சங்கத்தைச் சேர்ந்த விஸ்வநாதன்ற நபர், உயர்நீதிமன்றத்துல வழக்கு தொடுக்கறாரு.  இந்த ஆளு என்னமோ டென்னிஸ் நலனுக்காக வழக்கு தொடுக்கறா மாதிரி வெளியில தெரிஞ்சாலும், இந்த ஆளு வழக்கு போட்டதே கார்த்தி சிதம்பரத்தோட தூண்டுதல்லதான்.
643918_423930797688380_644741274_n
148946_397175903697203_1137318314_n
தமிழ்நாடு டென்னிஸை தன்னோட கைக்குள்ள வச்சுக்கிட்டு, இத பத்தி ட்விட்டர்லயும், ஃபேஸ் புக்லயும் எழுதிக்கிட்டு, விளையாட்டுப் புரவலர் மாதிரி சுத்தி வர்றதுதான் கார்த்தி சிதம்பரத்தோட நோக்கம். சில ஆண்டுகளுக்கு முன்னாடி, கருத்து டாட் காம்னு ஒரு இணைய தளத்தை கனிமொழியோட சேந்து தொடங்குனாரு… அப்போ பெரிய அப்பாடக்கர் மாதிரி பேட்டியெல்லாம் குடுத்தாரு.  அப்புறம் அதை அப்படியே கை கழுவிட்டு, டென்னிஸ், ஃபாரின் கார்னு இறங்கிட்டாரு..  ஒன்னாம் நம்பர் ஃப்ராடு இந்த கார்த்தி சிதம்பரம். “
“என்னடா இப்படித் திட்ற… “
“பின்ன என்னடா…  அப்பா அம்மா சம்பாதிச்ச சொத்துல உக்காந்து தின்னுக்கிட்டு, காங்கிரஸ் கட்சியோட அகில இந்திய பொதுச்செயலாளர் மாதிரி சீன் போட்டுட்டு சுத்தறான்…  எவனோ ஒரு ஆளு ட்விட்டர்ல இந்த தறுதலையைப் பத்தி ட்வீட் பண்ணிட்டான்னு பாண்டிச்சேரி போலீஸ்ல ஈமெயில்ல புகார் கொடுத்து அந்த ஆளை கைது பண்ண வச்சான்.. இவருதான் கருத்து சுதந்திரத்துக்காக கருத்து டாட்காம் ஆரம்பிச்சாரு...  இவனுக்கெல்லாம் என்னடா மரியாதை… “ என்று கோபமாகப் பேசித் தீர்த்தான் தமிழ்.
“சரி சரி… விடப்பா….  வேற மேட்டருக்கு வா… “ என்று தமிழை சமாதானம் செய்தார்
அமைதியாக இருந்தான் தமிழ்.   அவனை சமாதானப்படுத்தும் வகையில், “இந்து நாளேடு தமிழ்ப் பேப்பர் தொடங்கறாங்களாமே…“ என்று  கேட்டான் பீமராஜன்.
“ஆமாடா.. பேரு காமதேனு.  அதுக்கு உங்க பத்திரிக்கையில பப்ளிஷரா இருந்தவருதான் ஆசிரியர்.  ரெண்டு நாளுக்கு முன்னாடி அவர் உங்க பத்திரிக்கையில ராஜினாமா கடிதம் குடுத்துட்டு, இந்தப் பொறுப்பை ஏத்துக்கிட்டாரு. “
“யாரு மச்சான் அது.. ? “ என்று கேட்டான் வடிவேலு.
“அவரோட வரலாறு நம்ப பீமராஜனுக்கே தெரியாது மச்சான். பேரு அசோகன். சில இணையதளங்கள்ல சாம்ராட்னும் சொல்றாங்க விகடன்ல மாணவப் பத்திரிக்கையாளர் திட்டம் தொடங்குனாங்க. அந்தத் திட்டத்துல இவரு இரண்டாவது பேட்ச்.   அந்த ரெண்டாவது பேட்ச்ல சிறந்த மாணவப் பத்திரிக்கையாளரா தேர்ந்தெடுக்கப்பட்டாரு.  வேலூர் ஊரிஸ் காலேஜ்ல பி.காம் படிச்சாரு.  சிறந்த நிருபரா தேர்ந்தெடுக்கப்பட்டதும் இவரை கொஞ்ச நாளு வேலூர் சிறப்பு நிருபரா நியமிச்சுட்டு, பிறகு விகடன் தலைமை அலுவலகத்துக்கு எடுத்துக்கிட்டாங்க.
asokan_2
அசோகன்
விகடன்ல சேர்ந்ததும் படிப்படியா வளர்றாரு.  இவரு வேலை பாக்கறப்போ மதன் இணை ஆசிரியராவும், ராவ் அசோசியேட் எடிட்டராவும், விஎஸ்வி என்கிற வி.சீனிவாசன் எக்சிக்யூட்டீவ் எடிட்டராவும் இருக்காங்க.   அப்போ ஜுனியர் விகடனுக்கு பொறுப்பா சுந்தரம்னு ஒருத்தர் இருக்காரு.   அந்த சுந்தரத்தை காலி பண்ணிட்டு அவரு இடத்துக்கு அசோகன் வர்றாரு.  ஒரு கட்டத்துல ஜுனியர் விகடனோட மொத்த பொறுப்புக்கும் வந்துட்டாரு.  ஆனந்த விகடன் ஆசிரியரா பாலசுப்ரமணியன் இருந்தாரு. அவர் மகன் சீனிவாசன் இணை மேலாண் இயக்குநரா இருந்தாரு.  சீனிவாசன் பொறுப்புக்கு வந்ததுலேர்ந்தே அப்பாவை ஓரங்கட்டனும்னு நெனைச்சு வேலை பாக்கறாரு.  மொதல்ல ஆனந்த விகடன்லேர்ந்து தூக்கறாங்க.  அதுக்கு அப்பறம் ஜுனியர் விகடன்லேர்ந்தும் பாலசுப்ரமணியத்தைத் தூக்கிட்டு சேர்மேன் அப்படின்னு உயர்ந்த பதவியா குடுக்கறாங்க.  ஆனா அந்த பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை. எல்லாமே அவர் மகன் சீனிவாசன்தான்.  இந்த சண்டைக்கு அசோகனை பயன்படுத்தி அவரை ஆனந்த விகடனுக்கும், பின்னாளில் ஜுனியர் விகடனுக்கும் ஆசிரியரா ஆக்கறாங்க.   அதுக்கு அப்பறம் தொடர்ந்து அசோகனுக்கு ஏறுமுகம்தான்.
அசோகன், விகேஷ், பாலகிஷன், சரவணக்குமார், கண்ணன், இவங்கள்லாம் ஒன்னா வேலை பாத்தவங்கதான்.  அசோகனோட குணம் என்னன்னா தனக்கு போட்டியா யாரு இருந்தாலும், அவங்களை திட்டம் போட்டு காலி பண்ணிட்டுதான் மறு வேலை பாப்பாரு.  யாரையும் வளர விட மாட்டாரு.  பல காவல்துறை அதிகாரிகளோட ரொம்ப நெருக்கம்.
இப்படி வளந்துக்கிட்டே இருக்கறப்போ, இவரோட நண்பர் விகேஷ் இவருக்கு ஆபத்தா உருவாவாருன்னு நெனைக்கிறாரு.  ஏன்னா விகேஷ் அப்போ மேலாண் இயக்குநரா உருவாயிட்ட சீனிவாசனோட நெருக்கமா ஆகறாரு.   விகேஷ் தன்னோட தொடர்புகளால வெளியிடுற பல செய்திகள், சீனிவாசனுக்கு மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தி தருது.   எங்க விகேஷ் எம்.டியோட நெருக்கமாயி தன்னை காலி பண்ணிடுவாரோன்னு நெனைச்சு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்காரு.  அப்போ, ஒரு டெண்டர் விஷயமா ஜுனியர் விகடன் வெளியிட்ட செய்தியால புகழேந்தின்ற நபர், பெங்களுரு நீதிமன்றத்துல அவமதிப்பு வழக்கு தொடுக்கறாரு.
அவரு ஏன் அவமதிப்பு வழக்கு தொடுக்கறாருன்னா, அவருக்கு டெண்டர் வாங்கித் தர்றேன்னு சொல்லி, ஒரு கணிசமான தொகையை அசோகன் சரவணக்குமார் மூலமா ஆட்டையைப் போட்டுட்டாரு.   என்கிட்ட பணத்தையும் வாங்கிட்டு என்னை ஏமாத்தவும் செஞ்சுட்டீங்களேன்னு புகழேந்திக்கு வருத்தம்.   இவங்கள நம்பி டெண்டர் வாங்கித் தர்றேன்னு, அந்த புகழேந்தி மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கிட்ட ஒரு பெரும் தொகையை வாங்கிட்டு டெண்டர் வாங்கித் தராததால, மும்பை நிறுவனம் புகார் கொடுத்து, புகழேந்தியை கைது செய்ய வச்சுடுச்சு.
இந்தப் பஞ்சாயத்து, எம்.டி வரைக்கும் போயி, அதுல பணம் வாங்கினதே விகேஷ்தான்னு போட்டுக் குடுத்து, விகேஷை வேலையை விட்டுத் தூக்குனாரு.  அப்போ இவருக்கு துணையா இருந்தது சரவணக்குமார், கண்ணன், பாலகிஷன்.
விகேஷ் வெளியில போன பிறகு, இவரும், கண்ணனும், பாலகிஷணும் சேந்து, சரவணக்குமாரை இதே போல வெளியில அனுப்பறாங்க.   இவருக் கிட்ட தொழில் கத்துக்கிட்ட கண்ணன், ஒரு கட்டத்துல எம்.டி சீனிவாசனுக்கு நெருக்கமாகி, அசோகனுக்கே செக் வைக்க ஆரம்பிச்சுட்டாரு.  இது பல மாதங்களா தொடர்ந்து நடந்துக்கிட்டு வருது. “
“சரி.. இவருதானே எடிட்டர்.. ? இவரை யாரு என்ன பண்ண   முடியும் ?  “
“அங்கதான் தப்பு பண்ற.  விகேஷ் வெளியில அனுப்பப் பட்டதும், இவருக்கு பதவி உயர்வு வருது.  ஒரு கட்டத்துல கண்ணன் ஆசிரியரா ஆகிறாரு.  கண்ணன் ஆசிரியரா ஆனதும், அசோகனை பதிப்பாளரா பதவி உயர்த்துறாங்க. “
“நல்லதுதானே….. ஆசிரியர் பதவியை விட பதிப்பாளர் பதவி உயர்ந்ததுதானே… ? “
“பதிப்பாளர் பதவி, குடியரசுத்தலைவர் பதவியைப் போல…  எந்த அதிகாரமும் இல்லை.  இப்படி மாத்துனதுமே அசோகனுக்கு விஷயங்கள் புரிஞ்சுடுச்சு.    சரி. எப்படியாவது நம்ப அதிகாரத்தை நிலை நிறுத்தலாம்னு தொடர்ந்து வேலை பாத்துக்கிட்டு இருக்காரு.  ஒரு கட்டத்துல, கண்ணன், அசோகனை சுத்தமா ஓரங்கட்டிட்டாரு.  எல்லாமே கண்ணன்தான்னு ஆயிடுச்சு…“
“சரி. இதையெல்லாம் ஏன் மச்சான் எம்.டி சீனிவாசன் அனுமதிக்கிறாரு… ? “
“எம்.டிக்கு கீழ வேலை பாக்கறவங்க சண்டை போட்டுக்கிட்டே இருக்கணும்.  தனக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது.  தன்னோட சாம்ராஜ்யம் மேலும் மேலும் விரிவாகணும்ன்றதைத் தவிர வேற எண்ணம் கிடையாது.  ஆனா, அதுக்கு யாரைத் தேர்ந்தெடுத்து, எந்த பதவிக்கு நியமிக்கணும்னு சரியான கணிப்பு கிடையாது.
விகேஷ் இருந்தவரைக்கும் ஜுனியர் விகடனோட சர்குலேஷன் 2.75 லட்சம்.  விகேஷ் போன பிறகு, அந்தத் எண்ணிக்கையை இன்னைக்கு வரைக்கும் தொட முடியலை.  1.65, 1.80 இந்த அளவைத் தாண்ட மாட்டேங்குது.  எப்பயாவது அட்டையில குஷ்பு படத்தையோ, இல்ல செக்ஸ் மேட்டரையோ போட்டா, அந்த இஷ்யூ மட்டும் 2 லட்சத்தைத் தாண்டும்“
“சரி மேல சொல்லு.. என்று அவசரப்படுத்தினார் பீமராஜன். அவன் வேலைப் பார்க்கும் பத்திரிக்கை குறித்த செய்தியல்லவா..
asokan__2
“ஒரு கட்டத்துல விகேஷ் தனக்கு ரொம்ப பாதிப்பை ஏற்படுத்துவாருன்னு அசோகன் யோசிச்சுக்கிட்டு இருக்கற நேரத்துல, அப்போதைய புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டைப் பத்தி ஒரு செய்தி வருது. ஜாங்கிட் பத்திரிக்கையாளர்களுக்கு பணத்தை அள்ளி இறைச்சாலும், அவர்கிட்ட பணம் வாங்காத பத்திரிகைகயாளர்களும் இருக்கத்தானே செய்யறாங்க.. ஜுனியர் விகடன்ல ஜாங்கிட்டுக்கு எதிரா செய்தி வந்ததும், தமிழ்நாடு முழுக்க, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர்னு ஜாங்கிட்டுக்கு ஆதரவா மான நஷ்ட வழக்கு பதிவு செய்யப்படுது.  இதுக்கு அப்பறம், விகடன் நிர்வாகம் என்ன செய்யலாம்னு யோசிச்சு ஒரு சிறப்பான முடிவுக்கு வர்றாங்க…“
“என்ன முடிவு.. வழக்கை சந்திக்கலாம்னா ? “ என்று ஆர்வமாகக் கேட்டான் ரத்னவேல்.
“போடா லூசு.. அந்த சிறப்பான முடிவு என்னன்னா, ஜாங்கிட் கால்ல விழறதுன்ற முடிவுதான்.  சென்னை தியாகராய நகர்ல இருக்கற ரெசிடென்சி ஹோட்டல்ல ஜாங்கிட், அசோகன், கண்ணன் மூணு பேரும் சந்திக்கிறாங்க…  ஜாங்கிட் வைக்கிற ஒரே கோரிக்கை “விகேஷை வேலையை விட்டுத் தூக்குது.. நம்பளைப் பத்தி நல்லா நியூஸ் போடுது. “ என்பதுதான். இதை நாங்கள் எப்படியாவது செய்து காட்டுகிறோம் என்று உத்தரவாதம் கொடுத்து விட்டுத்தான் வருகிறார்கள் அசோகனும், கண்ணனும்.
அதுக்குப் பிறகு, ஒரு சில நாட்கள்ல விகேஷ் வெளியேற்றப் படறார்.  கண்ணணுக்கும் பதவி உயர்வு. எல்லோரும் மகிழ்ச்சியா இருக்காங்க.
இப்போ இவரு கூட நகமும் சதையுமா இருந்த கண்ணனே அசோகனுக்கு ஆப்பு வச்சுட்டாரு.  எம்.டி சீனிவாசனுக்கு கண்ணன் நெருக்கமானதுமே, அசோகன் டரியல் ஆயிட்டாரு.  நாளடைவில, அசோகன் ஓரங்கட்டப்படறார்னு தெரிஞ்சதும், வெளியில வேலை தேட ஆரம்பிச்சுட்டாரு. விகடன்ல வேலை பாத்துக்கிட்டே, தொடர்ந்து பல இடங்கள்ல வேலை தேடிய அசோகனுக்கு கிடைச்சதுதான் காமதேனு ஆசிரியர் பதவி….“
“அது சரி.. ஒரு தகுதியில்லாத ஆளையா, இந்து நாளேட்டின் தமிழ் செய்தித்தாளுக்கு ஆசிரியராப் போடுவாங்க… “ என்று வியப்பாகக் கேட்டார் கணேசன்.
“அண்ணே.. அசோகனோட திறமையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.  காமதேனு நாளேட்டுக்கு ஆசிரியரா இருக்க எல்லாத் தகுதியும் படைச்சவர். சிறந்த ஆசிரியர். சிறந்த படைப்பாளி. சிறந்த திரைப்பட ரசிகர்.  சிறந்த எழுத்தாளர். “
“அப்புறம் என்னப்பா ? “
“இருங்கண்ணே… ஆனா மோசமான மனிதர். “
“ஏம்ப்பா… ஒரு பத்திரிக்கை தொடங்கறவங்க யாரு நல்லா வேலை செய்யறாங்களோ, அவங்களைத்தானேப்பா தேர்ந்தெடுப்பாங்க… அசோகன் அரசியல் பண்ணா என்ன… பண்ணலன்னா அவங்களுக்கு என்ன… ? சரி இப்போ விகடன்ல யாரு முக்கிய பொறுப்பு கண்ணன்தானே... ?“
vvvv
கண்ணன்
"கண்ணனேதான்.... அசோகன் வெளியில போனபிறகு நடந்த எடிட்டோரியல் மீட்டிங்லயே எம்.டி வழக்கமா உக்கார்ற சேர்லதான் கண்ணன் உக்காந்தார்.   இவரை எம்.டி மலை போல நம்பறார்...  கொள்ளிக்கட்டையை வைச்சுதான் தலையை சொறியிவேன்னு சீனிவாசன் நெனைச்சா யாரால தடுக்க முடியும் ?
“மச்சான் வேற பத்திரிக்கை செய்தி எதுவுமே இல்லையா    மச்சான் ? “ என்று கேட்டான் வடிவேலு.
“ஜெயா டிவியில ரமணியை வேலையை விட்டு தூக்கிட்டாங்க“
“என்ன மச்சான் சொல்ற… ?  நாம கூட ரமணியைப் பத்தித்தானே பேசிக்கிட்டு இருந்தோம். டெல்லி அசைன்மென்டையும், ஸ்ரீரங்கம் அசைன்மென்டையும் சொதப்புனதால 13 பேரை வேலையை விட்டுத் தூக்கிட்டாங்கன்னு பேசிக்கிட்டு இருந்தோமே….“
“ஆமாம் மச்சான்…  டெல்லி அசைன்மென்டை சொதப்புனது யாருன்னு கார்டன்லேர்ந்து லிஸ்ட் கேட்டதும், அந்த லிஸ்ட்ல ரமணி பேரை விட்டுட்டு, போயஸ் கார்டன்ல ஜெயலலிதா விமான நிலையத்துக்கு கௌம்பும்போது அங்க பைட் எடுக்கறதுக்காக ஜெயா டிவியிலேர்ந்து போன ஆளு பேரை அனுப்பிட்டாங்க.  அன்னைக்கு அசைன்மென்டுக்குப் போனது பேச்சிமுத்துன்னு ஒரு ரிப்போர்டர்.
பேச்சிமுத்து, திருநெல்வேலி மாவட்டத்துல ஒரு விவசாயக் குடும்பத்துலேர்ந்து சென்னைக்கு பத்திரிக்கையாளரா ஆகணும்னு வந்த ஆளு. இதுக்கு முன்னாடி ராஜ் டிவியில வேலை பாத்தாரு. ராஜ் டிவியில கவர் வாங்காத ஆட்களே இல்லைன்ற அளவுக்கு கவர் வாங்குவாங்க.  ஆனா இந்த ஆளு அங்கயும் கவர் வாங்க மாட்டாரு.   ஜெயா டிவி ரிப்போர்டர்கள்ல பெரும்பாலான பேரு, போற எடத்துல கட்சிக் காரங்க செய்யற சலுகையை ஏத்துக்குவாங்க.  ஆனா, இவரு, எந்த சலுகையையும் ஏத்துக்காதவரு.  குடுத்த வேலை என்னவோ, அதை கச்சிதமா முடிச்சுடுவாரு.  கூடுதலாவும் செய்ய மாட்டாரு. குறைச்சலாவும் செய்ய மாட்டாரு.  அந்த ஆள்தான் டெல்லி அசைன்மென்டுக்கு போனாருன்னு அவரை வேலையை விட்டுத் தூக்கிட்டாங்க…“
“இப்போ அவரு எங்கடா இருக்காரு.. “
“வேலை போச்சு…. எங்க இருப்பாரு…. சொந்த ஊரு திருநெல்வேலிக்குப் போயிட்டாரு. “
“சரி ரமணியை ஏன் வேலையை விட்டுத் தூக்குனாங்க… ? “
“ஜெயலலிதா அசைன்மென்டுகளை சொதப்புனது மட்டுமில்லாம, இவர் சிஎம் ஆபீஸ் பி.ஆர்.ஓ மாதிரி செயல்படுறது தொடர்பா தொடர்ந்து புகார்கள் போயிக்கிட்டு இருந்துச்சு.  மேலும், ரெண்டு அசைன்மென்டுகளை சொதப்புனதுக்கு இவருதான் காரணம்ன்றதை மறைச்சுட்டு, அப்பாவிகளை பலிகடா ஆக்கிட்டாருன்ற விபரமும், கார்டனுக்கு தெரிஞ்சுடுச்சு.
சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு, அவரைக் கூப்பிட்டாங்க.  இதுல ஒரு கையெழுத்துப் போடுங்கன்னு சொன்னாங்க.  அது அவரோட ராஜினாமா கடிதம். ஐடென்டிடி கார்டை குடுங்க, சிம் கார்டை குடுங்க.  நீங்க போகலாம்னு சொல்லிட்டாங்க. “
34555_1223442565185_1365307_n
262877_1710161772861_6263306_n
“அடப்பாவமே…. !!! “ என்று அனுதாபப்பட்டான் ரத்தினவேல்.
“அனுதாபப்படாத மச்சான்… ஒரு அப்பாவியை  மட்டுமில்லாம, 8 பேரோட வேலை பறிபோறதுக்கு இவர்தானே காரணமா இருந்தாரு. விதைத்தனை அறுத்துதானே ஆகணும் ? “
“சரி… இன்னும் சில பேரை வேலையை விட்டுத் தூக்கினதா செய்தி வருதே….. ? “ என்று வினா எழுப்பினான் வடிவேலு.
“ஆமாம் மச்சான்… அந்த தகவல் சரிதான்.  சரவணராஜன், ரமணி டைமன்ட் பாபு மற்றும் இன்னொருத்தரையும் தூக்கிட்டாங்க….“
“இந்த டைமன்ட் பாபு சினிமா பிஆர்ஓ தானேப்பா… “ என்றார் கணேசன்.
“ஆமான்ணே….  இவர் மேலயும் பல புகார்கள் வந்துருக்கு.   அதனாலதான் ஜெயா டிவி ஊழியரா இருந்த இவரையும் தூக்கியிருக்காங்க….“
“சரி.. இந்த பெப்சி உமா குடுத்த புகார்ல கைது பண்ணி சிறைக்கு போனவர்தானே இந்த சரவணராஜன் ? “
“ஆமாம் மச்சான்…  பெப்சி உமா, சன் டிவியோட ஆரம்ப காலத்துலேர்ந்து இருந்தவங்க.   பெப்சி உங்கள் சாய்ஸ்ன்ற நிகழ்ச்சியை சன் டிவியில ரொம்ப நாள் தொகுத்து வழங்குனாங்க.  சன் டிவியில இவங்கதான் பெரிய ஸ்டாரா இருந்தாங்க அப்புறம் திருமணமாகி தொலைக்காட்சியை விட்டு ஒதுங்கிட்டாங்க.
31MPPPEPSIUMA1__31_1472208e
பல வருஷத்துக்குப் பிறகு, இப்போ ஜெயா டிவியில “ஆல்பம்“னு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குற வேலையை செஞ்சாங்க.   இந்த நிகழ்சிக்கு அவ்வளவா வரவேற்பு இல்லன்னு முடிவு செஞ்ச ஜெயா டிவி நிர்வாகம், இந்த நிகழ்ச்சியை நிறுத்தனும்னு முடிவு பண்ணாங்க.   அதனால அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் சரவணராஜனை கூப்புட்டு, நிகழ்ச்சிக்கு இனிமே ஷட்டிங் பண்ணாதீங்க.  நிகழ்ச்சியை நிறுத்திடுங்க.  நீங்க தயாரிக்கற பல நிகழ்சிகள் மொக்கையா இருக்கு உங்களையே தூக்க வேண்டி வரும்னு சொன்னாங்க.  பயந்து போன சரவணராஜன், பெப்சி உமா கிட்ட, ஷுட்டிங் பண்ணாதீங்கன்னு சொல்லிட்டாரு.   ஆனா, உமா தொடர்ந்து சரவணராஜனை தொல்லை பண்ணிக்கிட்டே இருந்தாங்க.  ஒரு கட்டத்துல, என் ஷுட்டிங்கை நிறுத்துனா என்ன ஆகும் தெரியுமான்னு மெரட்ற அளவுக்கு போயிட்டாங்க….“
சரவணராஜனும், ஒரு நாள் கோபமாகி, உன்னைப் பத்தித் தெரியாதாடி  ன்னு, கெட்ட வார்த்தையில திட்டி, ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பிட்டாரு. “
“உமா, ஜெயா டிவி நிர்வாகத்துக்கிட்ட புகார் பண்ணாங்க.  அவங்களும் நாங்க நடவடிக்கை எடுக்கறோம்னு சொன்னாங்க. “
“ஜெயா டிவியில நிர்வாகம்னு எங்கடா இருக்கு… ? “ என்று சொல்லி விட்டு சிரித்தான் பீமராஜன்.
“அதான் மச்சான்… ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு நிர்வாகம்.  அன்னைக்கு நிர்வாகத்துல இருந்தவங்க… நாங்க பாக்கறோம்னு சொன்னாங்க. “
ஒரு கட்டத்துல இனிமே நமக்கு நிகழ்ச்சி கிடைக்காதுன்னு உணர்ந்த பெப்சி உமா, கிண்டி காவல் நிலையத்துக்குப் போய் புகார் குடுத்துட்டாங்க… உயர் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட காவல்துறை அதிகாரிகள், சரின்னு சம்மதம் கிடைச்சதும், சனிக்கிழமை காலையில 2 மணிக்கு சரவணராஜனை கைது பண்ணிட்டாங்க…“
“இதுக்குப் பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா“ என்று கேட்டு விட்டு வாயைப் பிளந்தான் வடிவேலு..
“இது மட்டும் இல்ல.. விரைவில் அனுராதா மீண்டும் ஜெயா டிவியோட நிர்வாகப் பொறுப்புக்கு வரப்போறாங்கன்னும் சொல்றாங்க. “
“என்னடா சொல்ற ? “
“ஆமாம்டா…  ரபி பெர்நார்ட் பொறுப்பேத்துக்கிட்ட பிறகு, எப்படி தொடர்ந்து பணி நீக்கங்கள் நடந்துக்கிட்டு இருக்குப் பாரு.  தொடர்ந்து பணி நீக்கங்கள், ரபி பெர்நார்ட் கொண்டு வந்த மாற்றங்களுக்கு முட்டுக்கட்டை இப்போ பாலியல் தொல்லை காரணமா ஒருத்தர் கைது….“
“ஆமா இதுக்கும் அனுராதா வர்றதுக்கும் என்ன சம்பந்தம் ? “
“அக்கா பாருங்கக்கா…. அனுராதா இருந்த வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லாம இருந்துச்சு (அவங்க பணத்தை மட்டும்தான் ஆட்டையப் போட்டாங்க) ஆனா இப்போ தெனம் தெனம் பிரச்சினையா இருக்கு.. பேசாம அனுராதாவையே கொண்டு வந்துடலாம்கா னு ஒரு நல்ல  நேரத்துல சசிகலா சொன்னா, ஜெயலலிதா ஓ.கே சொல்லப் போறாங்க… வேற என்ன சொல்லுவாங்க…..“
19VBG_SASIKALA_868561g
சசிகலாவிலிருந்து மூன்றாவதாக வருபவர் அனுராதா
“அப்போ அதுக்காகத்தான் எல்லாம் பண்றாங்களா… ? “
“அது மட்டும் இல்ல.  ரபி பெர்நார்ட் ஒரு தலித்.  அனுராதா உக்காந்து இருந்த எடத்துல ஒரு தலித் எப்படி இருக்கலாம்ன்ற வெறுப்பும் இருக்கும். சசிகலா குடும்பத்துக்கு இருக்க ஜாதி வெறியைப் பத்தி சொல்லணுமா என்ன ?  தூரத்து சொந்தத்துல பொண்ணு எடுத்தா, ஜாதி சுத்தமா இருக்காதுன்னு, அத்தனை பேரும், அக்கா பொண்ணு, மாமா பொண்ணைத்தானே கல்யாணம் பண்ணியிருக்காங்க.  அந்த அளவுக்கு ஜாதி வெறி புடிச்சவங்க எப்படி ஒரு தலித்தை அங்க விடுவாங்க…“
“சரி குட்டிப் புலி வசூல் எப்படியாம்டா… “ என்று சினிமாவுக்குத் தாவினான் வடிவேலு.
“குட்டிப்புலி வசூலை அள்ளிக் கொட்டுது.  அந்தப் படத்தை இணையத்துல கழுவி கழுவி ஊத்துனாலும், வசூல் பின்னுது.  சன் பிக்சர்ஸ் வெளியீடு… சொல்லனுமா  என்ன ? “
“மத்த படங்கள்லாம் அப்படி ஓட மாட்டேங்குதே… ? “
“மச்சான்… தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்கிட்ட இருக்கற ஒரு சென்டிமென்ட் என்னன்னா, எந்த செய்தியா இருந்தாலும் அது தினத்தந்தியில மொதல்ல வந்தா படம் சூப்பர் ஹிட்டாயிடும்னு ஒரு சென்டிமென்ட்.  இதுக்காக தினத்தந்தி சினிமா ரிப்போர்டர் கங்காதரனுக்கு கவர் மேல கவரா குடுப்பாங்க.  முதல் செய்தியா வரணும்னா 5 ஆயிரம், ரெண்டாவது செய்தியா வரணும்னா 3 ஆயிரம், இந்த மாதிரி ரேட்.
fe_2306_mn_15_cni
இந்த சென்டிமென்ட் பல காலமா வந்துக்கிட்டு இருக்கு.  சினிமா பிஆர்ஓக்கள்தான் இப்படி கவர் குடுக்கற வேலையை கவனமா செய்யறாங்க.  ஆனா இப்போ புகார் என்னன்னா, கவரையும் வாங்கிட்டு, செய்தியையும் கங்காதரன் போடறதில்லன்னு புகார் வந்துருக்கு…“
“படத்தை ஒழுங்கா எடுங்கடான்னா அதை செய்யாம, மொதல் செய்தி, ரெண்டாவது செய்தின்னு…. நல்ல படமா எடுத்து, அதைப் பத்தி தினத்தந்தியில செய்தி வராம இருந்துச்சுன்னா படம் ஓடாதா என்ன… ?  லூசுப் பயலுங்க.. இந்த மாதிரி லூசுப் பயலுங்க இருக்கற வரைக்கும், கங்காதரன் மாதிரி ஆட்கள் காட்டுல மழைதான். “ என்றான் ரத்தினவேல்.
“தம்பி போலாமாப்பா…. “ என்ற கணேசனின் வார்த்தையைக் கேட்டு, அனைவரும் மொட்டை மாடியைக் காலி செய்தார்கள்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

கெட்ட வார்த்தைகள் தெரியுமா? ஒன்றிரண்டு தெரியாது இது மனச்சாட்சியின்படி ஆண் பெண் இருபாலரது நேர்மையான பதில்

அன்புள்ள ஜெ.  வணக்கம் …                   பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி மாவட்டம். இந்த கால கட்டத்தில் தான் நிறைய கெட்ட வார்த்தைகள் எனக்கு அறிமுகம்..                 இன்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் எல்லா பகுதி சொல்வழக்கையும் நான் கேட்டதுண்டு. நான் கேட்டவரையில் எங்கும் தாயைப் பழிக்கும் சொல்லால் ஒருவரை ஏசினால் கண்டிப்பாக கைகலப்பில்தான் முடியும். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் நான் படி...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....