முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரா விற்பனையாளனின் காதல்




பர்ஹாத் ஓர் எலிஜிபிள் பேச்சுலர். அம்மா கோண்டு. பார்ஸி சமுதாயத்தைச் சேர்ந்த அவனுக்கு கல்யாணம் தள்ளிக்கொண்டே போகிறது. காரணம் அவனது வேலை.
மும்பையில் பெண்கள் உள்ளாடை விற்கும் பெரிய கடை ஒன்றில் விற்பனையாளனாக பணிபுரிகிறான். பெண் பார்க்கச் செல்லும் இடங்களில் எல்லாம் ‘பிரா, ஜட்டி விற்பவன்’ என்கிற இவனது பணியை கிண்டல் செய்கிறார்கள். பர்ஹாத்துக்கு தன் பணி மீது உயர்ந்த அபிப்ராயம் இருக்கிறது. உள்ளாடை பயன்படுத்தாத பெண்ணே இல்லை என்கிறபோது, அதை விற்பது எவ்வளவு கவுரவமான பணி என்கிறான். ஒரு பெண்ணை பார்த்ததுமே அவளது ‘சைஸ்’ என்ன என்பதை அளக்காமலேயே ‘பளிச்’சென்று சொல்லக்கூடிய நிபுணத்துவத்தைப் பெற்ற ‘கில்லி’ அவன். ‘அண்டர் வேர்ல்ட்’ என்கிற பெயரில் பெண்களுக்கான பிரத்யேக உள்ளாடை வணிகவளாகத்தை உருவாக்குவது அவனது கனவு. பையனுக்கு கல்யாணம் ஆகி பேரக்குழந்தைகளை பார்க்க முடியவில்லையே என்று அவனது அம்மாவுக்கும், அம்மாவின் அம்மாவுக்கும் ஆதங்கம்.
கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு காலை வேளை. தான் பணிபுரியும் கடையில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் பொம்மைக்கு (பெண் பொம்மை) ஜட்டியும், பிராவும் மாட்டிவிட்டுக் கொண்டிருக்கிறான். கடைக்கு வெளியே ஒரு தேவதை கொஞ்சம் வெட்கமாகவும், கொஞ்சம் அருவருப்போடும், கொஞ்சம் காமெடியாகவும் இவனைப் பார்க்கிறாள். அவள் ஷெரீன். தன்னை ஒருத்தி ஒரு மாதிரியாக பார்ப்பதை பர்ஹாத்தும் கவனித்து விடுகிறான். பார்த்ததுமே புரிந்துவிட்டது. தனக்காக படைக்கப்பட்டவள் இவள்தான். அவனது மூளைக்குள் எண்டாக்ரீன் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. ஹார்மோன்கள் தறிகெட்டு அலைந்தன.


கடைக்குள் நுழைகிறாள் ஷெரீன். பர்ஹாத் எதிர்கொள்கிறான்.

“எனக்கு பிரேசியர் வேண்டும்”
“ஏகப்பட்ட மாடல்கள் இருக்கின்றன. நிறைய வண்ணங்களில். ஃப்ளோரசண்ட் கூட இருக்கிறது. பார்க்கிறீர்களா?”
“இல்லை. சாதாரணமான வெள்ளை ப்ராவே போதும்”
“உங்கள் சைஸ்?”
கொஞ்சம் வெட்கத்தோடும், பீதியோடும் “38”
“இல்லை. 36தான் உங்களுக்கு சரியாக இருக்கும். 38 கொஞ்சம் லூஸ்”
“மிஸ்டர். என்னுடைய அளவு எனக்குத் தெரியும். நான் கேட்டதை கொடுங்கள்”
பற்றிக்கொண்டது காதல். வாழ்க்கையில் முதன்முறையாக காதலை உணர்கிறான் பர்ஹாத். இந்தப் பரவசம் அவனது உடலெங்கும் பெய்யென பெய்யும் மழையாய் சோவென அடிக்க, காதல் காலராவில் அவதிப்படுகிறான்.

இதற்கிடையே அவனுடைய அம்மா பார்ஸி சங்கத்தின் மேட்ரிமோனியல் சேவையை நாடியிருக்கிறாள். நம்மூர் கல்யாண மாலை மாதிரி ஒரு சுயம்வரத்துக்கு பர்ஹாத் செல்கிறான். அங்கே நடைபெறும் ஏகப்பட்ட கலாட்டாக்களுக்கு இடையே ஷெரீனை மீண்டும் காண்கிறான். கொஞ்சம் தைரியமாகவே அவளிடம் போன் நம்பர் கேட்கிறான்.
“உங்களுடைய நம்பர் என்ன?”
“38” சொல்லிவிட்டு குறும்பாக சிரிக்கிறாள்.

அப்புறம் என்ன பையனுக்கு வந்த காதல் காலரா பெண்ணுக்கும் தொற்றிக் கொள்கிறது. பார்ஸி சங்கத்தில் அவள் செயலராகப் பணிபுரிகிறாள். பர்ஹாத்தை விட வசதியான குடும்பம். பையனுக்கும், பெண்ணுக்கும் பிடித்துவிட்டது. அடுத்து கல்யாணம்தான் எனும்போது ஒரு பெரிய சிக்கல்.
பர்ஹாத்தின் அம்மாவுக்கு பெண்ணை சில காரணங்களால் பிடிக்கவில்லை. அம்மாவின் செல்லக் குழந்தையான பர்ஹாத் தாய்க்கும், காதலிக்கும் இடையே அல்லாடுகிறான். இப்படிப்பட்ட சூழலில் ஒரு முக்கியமான விஷயத்துக்காக ஷெரீன் இவனை அழைக்க செல்போனில் முயற்சிக்கிறாள். அப்போது அம்மாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பர்ஹாத் கோபமாக போனை எடுத்து, “எப்பவும் கொஞ்சிக்கிட்டிருக்கணுமா” என்பது மாதிரி கேட்டு போனை தூக்கிப்போட்டு உடைக்கிறான். இயல்பிலேயே இனியவன் என்பதால்தான் ஷெரீனுக்கு இவன் மீது காதல் பிறந்தது. மாறாக முதன்முதலாக அவனது கோபத்தை உணர்ந்தவள் தனது காதலை துறக்கிறாள். பிற்பாடு எவ்வளவு கெஞ்சியும் மீண்டும் பர்ஹாத்தை காதலிக்க ஷெரீன் துணியவில்லை. இதற்கிடையே பர்ஹாத்தின் அம்மா அவனுக்கு வேறு பெரிய இடங்களில் பெண் பார்க்க ஆரம்பிக்கிறாள்.
க்ளைமேக்ஸ்.
பர்ஹாத் கடைசியாக ஷெரீனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறான். டிசம்பர் 31 இரவு 9 மணிக்கு தயாராக இரு. நாம் நியூ இயர் பார்ட்டிக்கு செல்கிறோம். நீ வர மறுத்தால் நம்முடைய காதல் முடிந்தது என்று நினைத்துக் கொள்கிறேன். இடைபட்ட ’பசலை’ நாட்களில் பர்ஹாத்துடனான தன்னுடைய தினங்களை ஷெரீன் நினைத்துப் பார்க்கிறாள். தன் வாழ்க்கையிலேயே மிக மகிழ்ச்சியான தினங்கள் அவைதான் என்று உணர்கிறாள். பர்ஹாத்துடன் வாழ்ந்தால் மட்டுமே அது வாழ்க்கை என்பதை உணர்ந்த ஷெரீன் பார்ட்டிக்கு தயார் ஆகிறாள்.
வீட்டிலிருந்து கிளம்பிக் கொண்டிருந்த பர்ஹாத்துக்கு பெரிய அதிர்ச்சி. ‘பையன்’ பார்க்க பெண்வீட்டாரை அழைத்திருக்கிறாள் அம்மா. 9 மணிக்கு செல்லாவிட்டால் ஷெரீன் இனி வாழ்நாள் முழுக்க தன்னை மன்னிக்கவே மாட்டாள். டென்ஷன்.
நயமாக தன்னைப் பார்க்க வந்த பெண்ணிடம் தான் காதல்வசப்பட்டிருப்பதை எடுத்துச் சொல்கிறான். அம்மாவிடமும் தன் காதலின் வீச்சு எவ்வளவு புனிதமானது என்பதை விளக்குகிறான். ஷெரீன் வீட்டுக்கு மிகச்சரியாக ஒன்பது மணிக்குச் செல்கிறான். அவளது வீட்டு வாசலில் நடக்கும் நியூ இயர் கலாட்டாவில் போலிஸ் இவனை அள்ளிப்போட்டுக் கொண்டு செல்கிறது. பர்ஹாத் வருவான் என்று காத்திருக்கும் ஷெரீன் பதட்டமடைகிறாள். நேரம் போய்க்கொண்டே இருக்கிறது. 9.00, 10.00, 11.00, 12.00
புதுவருடம் பிறக்கிறது. பர்ஹாத் வரவேயில்லை. இனி அவன் தன் வாழ்க்கையில் வரவே மாட்டான் என்று நினைக்கிறாள் ஷெரீன். காதலர்கள் இணைந்தார்களா என்பதை நீங்கள் ஏதேனும் திரையரங்கின் வண்ணத்திரையில்தான் காணவேண்டும்.
இதுவரை நீங்கள் பார்த்த, கேட்ட பிழியப் பிழிய காதல் திரைப்படங்களையும், கதைகளையும் கொஞ்சம் நினைவுறுத்திப் பாருங்கள். ரோமியோ ஜூலியட், அம்பிகாபதி அமராவதி, ஏக் துஜே கலியே, அன்பே வா, அலைகள் ஓய்வதில்லை, காதலுக்கு மரியாதை, வைகாசி பொறந்தாச்சி, காதல் கோட்டை, விண்ணைத் தாண்டி வருவாயா... இதெல்லாம் சட்டென்று நினைவுக்கு வரலாம். இந்த எந்த படைப்புகளுக்கும் ஒப்பானது பர்ஹாத் – ஷெரீனின் காதல். ஒரே ஒரு வித்தியாசம்தான். நீங்கள் இதுவரை பார்த்த ‘காதல்’களின் காதலர்கள் வயது அதிகபட்சம் இருபதுகளின் இறுதியில் இருக்கும். Shirin Farhad Ki Toh Nikal Padi படத்தில் பையனின் வயது 45. பெண்ணுக்கு வயது 40+. வயது ஒரு மேட்டரே இல்லை என்பதை படம் பார்க்கும்போது உணர்வீர்கள். விண்ணைத்தாண்டி வருவாயாவில் சிம்பு என்னென்ன செய்வாரோ அது அத்தனையையும் பர்ஹாத் என்கிற பொமான் இரானி செய்கிறார். இடுப்பொடிய நடனம் ஆடுகிறார். நொடிக்கொரு முறை காதலியை நினைத்து சிலிர்க்கிறார். திரிஷா செய்கிற அத்தனையையும் ஷெரீன் என்கிற ஃபராகான் செய்கிறார். முகம் சிவந்து வெட்கப்படுகிறார். காதலனை தன் பின்னாலேயே ஹட்ச் நாய்க்குட்டி மாதிரி அலைய விடுகிறார்.


படத்தில் நாயகன் நாயகியை நினைத்தும், நாயகி நாயகனை நினைத்தும் காதலை கொட்டோ கொட்டுவென்று கொட்டி பாடல் காட்சிகள். டூயட்டுகள். அதிலும் ஒரு டூயட்டில் இந்தி சினிமாவின் புகழ்பெற்ற காதல் திரைப்படங்களான ஹம் ஆப்கே ஹைன் கோன், ஜப் வி மெட் மாதிரி படங்களில் இடம்பெற்ற காட்சிகளை உல்டா அடித்து பயங்கர கலாட்டா.
காதலுக்கு வயது ஒரு பொருட்டேயில்லை. காதல் எப்பவும் காதல்தான். படம் பார்க்கும்போது நம் அம்மா-அப்பா, சித்தப்பா-சித்தி, மாமா-அத்தை, பக்கத்து வீட்டு அங்கிள் - ஆண்ட்டி என்று அத்தனை பேரின் காதலையும், நாம் ரகசியமாக எட்டி நின்று பார்ப்பது மாதிரி ஃபீலிங். இரண்டு மணி நேர திரைப்படத்தில் இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறையாவது நீங்கள் வாய்விட்டு சிரிப்பீர்கள். காதல் என்பது வேடிக்கை பார்ப்பவர்களுக்கு நகைச்சுவையும்தான்.

ஹீரோ-ஹீரோயின் வயதானவர்கள் என்பது தவிர்த்து, ஒரு காதல் படத்தில் இருக்கவேண்டிய அத்தனை அம்சங்களும் படத்தில் உண்டு. லேசான செக்ஸ் கூட. காதல் படங்களுக்கு அவசியமான வஸ்துவான மழை அவ்வப்போது தூறி, காதல் சிற்றாறாய் ஓடுகிறது. படம் பார்ப்பவர்களின் மனம் கரைகிறது.
படத்தில் நடிகர்கள் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு ஆப்ட்டாக இருக்கிறது. இசை பிரமாதம். எடிட்டிங் நறுக். மிகக்குறைவான கேரக்டர்களை வைத்து, சிக்கனமான பட்ஜெட்டில் சிறப்பான கதை, திரைக்கதை அமைத்து ‘ரிச்’சாக எடுத்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் நாம் இப்படத்தை விமர்சிக்க வேண்டியதே இல்லை. படம் பார்ப்பவர்களே அதையெல்லாம் உணர்ந்துக் கொள்வார்கள்.
இந்தி சினிமா உள்ளடக்க ரீதியில் சர்வதேசத் தரத்தை எட்டியிருப்பதற்கு இப்படம் நல்ல உதாரணம். இப்படம் பார்க்கும்போது காட்டப்பட்ட சில ட்ரைலர்கள் மேலும் சில உதாரணங்களாய் எனக்குப் பட்டது. அதில் ஒன்று ஸ்ரீதேவி மீண்டும் நடிக்கும் படம் ஒன்று. அமெரிக்காவுக்கு ஒரு இந்தி குடும்பம் இடம் பெயர்கிறது. குடும்பத் தலைவியான ஸ்ரீதேவிக்கு மட்டும் ஆங்கிலம் சரியாக வராது. அதனால் அவர் அங்கே படும் பாடு. ஒரு என்.ஆர்.ஐ குடும்பத்தலைவி ஆங்கிலம் கற்றுக் கொள்வது என்று ஒரு ஒன்லைன். இன்னொரு படம் சக்கரவியூக். மாவோயிஸ்ட்டுகளை குறித்த விரிவான திரைப்படம். இன்னொன்று ராஸ்-3 (3டி) – லேசான போர்னோ கலந்த திகில் படம். இப்படி ஏகப்பட்ட genreகளில் இந்தியில் நிறைய படங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. அவர்களது இண்டஸ்ட்ரி ஆரோக்கியமாக இருப்பதையே இது காட்டுகிறது.
மாறாக நம் கோலிவுட்டை நினைத்துப் பாருங்கள். தெரியாத்தனமாக ‘ஓக்கே ஓக்கே’ ஹிட் அடித்துவிட்டது என்று நகைச்சுவைத் துணுக்குத் தோரணங்களை கட்டிக் கொண்டிருக்கிறார்கள் நம்மூர் இயக்குனர்கள். இல்லாவிட்டால் சைக்கோ த்ரில்லர். இந்தியிலும், தெலுங்கிலும், மலையாளத்திலும் வெரைட்டியாக பிரியாணி போட்டுக் கொண்டிருக்க, நாம் வடுமாங்காய் வைத்து தயிர்ச்சாதம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

Shirin Farhad Ki Toh Nikal Padi மாதிரி ஒரு படத்தை நம்மூரில் எடுக்க முடியாதா? இங்கே இப்படிப்பட்ட படத்தில் நடிக்க பொமன் இரானி, ஃபராகான் மாதிரி ’ஸ்டார்’ கலைஞர்கள் இல்லையா? சிறப்பாக படம்பிடிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் இல்லையா? என்னதான் பிரச்சினை? உறுதியாக சொல்லலாம். இதே கதை, இங்கு ‘பிரபு – அம்பிகா’ காம்பினேஷனில் எடுக்கப்பட்டிருந்தால் பரபரப்பான ஹிட் படம் ஆகியிருக்கும். பிரச்சினை என்னவென்றால் ஏற்கனவே ஹிட் கொடுத்த இயக்குனர்கள் இன்னமும் தமக்கென்று ஒரு ‘டெம்ப்ளேட்’ அமைத்துக்கொண்டே இயங்குகிறார்கள். புது இயக்குனர்களும் சேஃபாக அதே டெம்ப்ளேட்டில்தான் சிந்திக்கிறார்கள். அதை உடைத்து சிந்தனையை பரவலாக்க அவர்கள் தயார் இல்லை. குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவதே அவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கிறது. அவ்வப்போது அங்காடித்தெரு, மதுபானக்கடை, அட்டக்கத்தி மாதிரி ஒரு சில வித்தியாச முயற்சிகள் அத்திப்பூத்தாற்போல ஒரு ஒளிக்கீற்றாக தென்படுவதை தவிர்த்து, கோலிவுட் ஜிலோவென்று இருளாகத்தான் இருக்கிறது.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

ஒண்டிக்கட்டை இதிகாசம்

சிபி கே. சால‌மனின் ஒண்டிக்கட்டை உலகம். "லட்சோப லட்ச ஒண்டிக்கட்டைகளுக்கு இந்தப்புத்தகம் தண்ணீர் தெளித்து விடப்படுகிறது" என்று சமர்ப்பணத்திலிருந்தே களைகட்டத் தொடங்கி விடுகிறது புத்தகம் ("A COMPLETE GUIDE FOR BACHELORS" என்று தமிழ் சினிமா ஸ்டைலில் என்று சப்டைட்டில் வேறு). ஒரு நல்ல சிறுகதையின் முதல் காட்சி போல் ஒரு மாதிரி பேச்சிலர் அறையின் நிழற்படத்துடன் (புதூர் சரவணன்) அட்டைப்படத்திலேயே தொடங்கும் இந்த‌புத்தகம் தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் ஆவுடையப்பன் என்கிற பாத்திரம் நகரத்தில் சந்திக்கும் பேச்சிலர் வாழ்க்கையின் சிக்கல்களின் தொகுப்பாய் ஒரு சுவாரசியாமான நாவல் போல் விரிந்து பின் ஒரு அழகான கவிதையின் கடைசி வரி போல் கதாநாயகர்களான பேச்சிலர்களுக்கு வரப்போகும் மனைவிக்கு சமைப்பதற்கு "ஆல் த‌ பெஸ்ட்" சொல்வதுடன் முடிகிறது. ஒரு சிற‌ந்த திரைக்கதைக்கு இணையான சுவாரசியத்துடன் சொல்லப்பட்டிருப்பது இப்புத்தகத்தை தனித்தன்மையுடன் நிற்கச்செய்கிறது. அடிப்படையில் இப்புத்தகம் பேச்சிலர் வாழ்க்கையின் சில்லறைத் தொந்தரவுகளுக்கு தீர்வு சொல்லும் வழிகாட்டியாகவே எழுதப்பட்டுருந்...

பெண் பெரியார்.

யார் இந்த பெண் பெரியார் என்று உங்களுக்கு வியப்பு ஏற்படக் கூடும். ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்க உள்ள சசிகலாவைத்தான் பெண் பெரியாராக உருவாக்க ஊடகங்கள் முயன்று வருகின்றன.   இப்படி இவரை பெண் பெரியாராக்க உருவாக்குவதில் பார்ப்பன ஊடகங்களும் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன என்பதுதான் விசித்திரமான செய்தி. தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பை மீண்டும் கிளப்ப ஒரு பெருங்கூட்டமே போராடி வருகிறது.   ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அவர் இறுதி அஞ்சலி வரை, பூலான் தேவி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் எப்படி இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை ஜெயாவின் அண்ணன் மகள் தீபாவைக் கூட உள்ளே விடாமல் ஆக்ரமித்தனர் என்பதை நாம் அனைவருமே பார்த்தோம். இப்போது அடுத்த கட்டமாக அதிமுகவுக்கு சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கி அவரை முதல்வராக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் அவர் கணவர் நடராஜன் எடுத்து வருகிறார். சசிகலா தலைமையிலான மன்னார்குடி கும்பல் தொண்ணூறுகள் முதல் அடித்து வந்த கொள்ளை என்ன என்பதை நாடே அறியும்.  சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட பெரும்பாலான வேட்பாளர்களி...

The Sasikala web: how a maze of shell companies link up to her, her family and friends

V.K. Sasikala.   These shell companies have fake addresses, no business activity and large transactions Sandhya Ravishankar Midas and Jazz Signet Exports Sri Jaya Finance and Investments Fancy Steels Jazz Cinemas Missing People, Fake Addresses In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two. A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman. The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier H...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

NO BRA DAY

ட்விட்டரில் எப்போதும் எலியும், பூனையுமாக அடித்துக் கொள்ளும் செக்ஸ் குயீன்களான பூனம் பாண்டேவும், ஷெர்லின் சோப்ராவும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக‌  ‘கேப்டன்  –  அம்மா’ மாதிரி திடீர் கூட்டணி அமைத்து ஆச்சரியப் படுத்தினார்கள். விஷயம் என்னவென்றால் அக்டோபர் 13, ‘மார்புக்கச்சை இல்லாத நாளாம்’. அதாவது  தமிழில்   மொழிபெயர்த்தால்  ‘ நோ   ப்ரா   டே ’.  இருவரும் மார்புக்கச்சை   அணியாமல்   ஏகப்பட்ட   போட்டோக்கள்   எடுத்து ,  ட்விட்டரில்   பகிர்ந்து   தங்களது ஃபாலோயர்களை   ஏகத்துக்கும்   குஷிப்படுத்தினார்கள் .   எலிசபெத்   மகாராணி   கூட  ’ நோ   ப்ரா   டே ’ குறித்து   ஏதோ   ட்விட்   போட்டிருக்கிறார்களாம் . இணையத்தில் மேலதிகமாக இதுகுறித்து தேடி வாசித்தபோது, நிறைய பெண்கள் ‘ப்ரா’ என்பதை அடிமைச் சின்னமாக பார்க்கிறார்கள் என்கிற அவசியத் தகவலை அறிந்துகொள்ள முடிந்தது. அது எவ்வாறு அவர்களை அடிமைப்படுத்துகிறது என்பதை ஒரு ஆணாக உணரமுடியவில்லை. கடந்த அக்.13 அன்று பெண்க...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

ஜெயலலிதா- துயரம் நிரம்பிய சகாப்தம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் டிசம்பர் 5ம் தேதியன்று இரவு 11.30 மணிக்குப் பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவமனையின் செய்திக்குறிப்பு கூறியது. அவரைப் போலவே, அவருடைய ஆட்சிக்காலத்தைப் போலவே அவருடைய மரணமும் கேள்விக்குரியதாய் ஆகியிருக்கிறது.  72 நாட்கள் மருத்துவமனை வாசம், எவராலும் பார்க்க முடியாமல் அவரை வைத்திருந்தது என்று எல்லாமே மர்மமுடிச்சுகளாய் இன்று தமிழக மக்கள் முன் கேள்விகளாய் நிற்கின்றன. ஜெயலலிதாவை இரும்பு மனுஷி என்று அவருக்கான அஞ்சலிக் குறிப்புகளில் பலர் எழுதியதைக் காண முடிந்தது. உண்மையில் ஜெயலலிதா இரும்பு மனுஷியா?  ஆம்! அவர் இரும்பு மனுஷிதான். எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில் ராணுவ வண்டியிலிருந்து ஜானகியின் உறவினர் நடிகர் தீபனால் இறக்கிவிடப்பட்ட ஜெயலலிதா பின்னாளில் எம்.ஜி.ஆரின் கட்சிக்குப் பொதுச் செயலாளரானார். எவரைப் பற்றியும் கவலைப்படாமல் தான் நினைத்ததை செய்து முடிக்கும் துணிச்சல் அவருக்கு இருந்தது. அதனால்தான் இரும்பு மனுஷி என்று பெயர் பெற்றிருக்கிறார்.  ஆனால், அவர் எதையெல்லாம் நினைத்தார், செயல்படுத்தினார். அந்த இரும்பு மனம் கொண்டு அவர் எப்படிச் செயலாற்றினார் என்பதை...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

வெளிவராத புத்தகங்கள்-2016

 

வசீகர எழுத்துக்காரன்

சரவணன் சந்திரன்(எழுத்தாளர்) சென்ற ஆண்டுதான்(2016) முதல் நாவலான 'ஐந்து முதலைகளின் கதை" வெளிவந்தது.அதற்குள் அடுத்தடுத்து மூன்று நாவல்கள்.சமீபத்தில் இவரது"அஜ்வா" நாவல்,அதிர்வு நரம்புகளை மீட்டியது.சம கால இலக்கிய தளத்தில் தவிர்க்கமுடியாத குரல் சரவணனுடையது.எளிமையும் அழமான எழுத்துக்கள் ஈர்க்கின்றன.நாம் வாழ்வின் துயரங்களை,பிரச்சனைகளைப் பேசும் விரல்.ஒரு பக்கம் காட்சி ஊடகப் பணிகள், இன்னொரு பக்கம் மீன் வியாபாரம் என மக்களோடு புழங்கும் வாழ்க்கை...இந்த இளைஞனின் எழுத்துக்களைத் தனித்து அடையாளப்படுத்துகிறது சரவண சந்திரனின் பன்முக படைப்புகள் தமிழ் சமகால இலக்கியம் அதிக அளவில் நவீன வாழ்க்கையை பிரதிபலிப்பதில்லை.அந்த சூழலில் வந்திருக்கும் மாறுபட்ட எழுத்தாளர்களில் ஒருவர் சரவணன் சந்திரன். 12 மாதங்களில் அவர் நான்கு நாவல்களை எழுதிவிட்டார். ஐந்து முதலைகளின் கதை,ரோலக்ஸ் வாட்ச்.வெண்ணிற ஆடை,அஜ்வா நான்கும் உயிர்மை வெளியீடு. இதில் எதுவும் வரலாறு சார்ந்த புதினம் இல்லை.அல்லது வரலாற்றை பின்புலமாக வைத்துக்கொண்டு சமகாலத்தைப் பேசும் புனைவும் அல்ல."நான்கும் நான்கு வேறுபட்ட உலகங்களை  ...