முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜனனம் நீ


ஆண்களுகுக் சுகப்பிரசவம் என்றால் என்னவென்று தெரியாது என்பதால் இந்த பதிவு
சரி பிரசவ வலி எப்படி வரும்? முதலில் வலப்பக்க இடுப்பில் சுரீரென்ற குத்தல், இடைவெளி விட்டு மீண்டும், இடைவெளி விட்டு மீண்டும், இப்படியே தொடர்ந்து நடு வயிறு வலி ஆரம்பிக்கும் போது குழந்தை, தான் பிறக்க போகும் நேரத்தை முடிவு செய்தவிட்டது என்று அர்த்தம், உண்மை தான் குழந்தைதான் பிறக்கும் நேரத்தை முடிவு செய்கிறது மருத்துவர்கள் அல்ல.
புதிய உலகை காண வேண்டும் என்று குழந்தைகள் முடிவு செய்த பின், அதற்கு முதலில் இதுவரை வாழ்ந்து வரும் கருவறை உலகில் தனக்கான வாழ்வாதராத்தை அழிக்கும். அது பனிக்குடத்தை உடைத்தல். அங்குதான் குழந்தை சுவாசிக்கும், நீந்திகொண்டிருக்கும்.. அதை உடைத்த பின் புதிய வாழ்வாதாரத்திற்கான வழி நோக்கி முன்னெடுக்கும் போது பிரசவ வலி உச்சத்தில் இருக்கும், (முழு பனிக்குட நீரும் வெளியேறும் முன் மருத்துவமனை சென்றுவிட வேண்டும்) மொத்த வயிறும் வலிக்கும், சீராக சுவாசிக்க முடியாது. அதிக பதட்டம், இந்த நேரத்தில் பெண் வேண்டுவதெல்லாம் கணவனின் கரத்தை இறுக பற்றுதல் தான். அந்த நேரத்தில் வேறு யாரையும் தேடாது ‘புருஷன் புருஷன் புருஷன் மட்டும்தான்.. ஆனா நம்மூர் மருத்துவமனைகளில் புருஷனை வெளியே நிப்பாட்டி விடுகிறார்கள்.
முதலில் இனிமா கொடுத்து வயிற்றை சுத்தம் செய்வார்கள். ஏற்கனவே வயிறு வலி இந்த லட்சணத்துல இது வேற.. அப்போ நைசா டாக்டர கூப்பிட்டு சொல்வாங்க,.”டாக்டர் என்னாலலாம் குழந்தை பெத்துக்க முடியுமான்னு தெர்ல ஆப்பரேட் செஞ்சுடுங்க” //சுகப்பிரசவத்தை ஆப்பரேசன் செய்ய விரும்பாத காசுக்கு அலையாத அதிக நல்ல டாக்டர்ஸ் இருக்காங்க. // என்ன கத்துனாலும் கதறுனாலும் ”மவளே உனக்கு சுகப்பிரசவம்தான் என்பதில் உறுதியாக நிற்பாங்க” அப்படி ஒரு டாக்டர் தான் திருநெல்வேலி பிரேமசுதா..
இப்ப பிரசவம்
கால் இரண்டையும் விரித்து வைத்துக்கொள்ளச் சொல்வார்கள். அப்போது வலி முதுகுத்தண்டை தாக்க ஆரம்பித்திருக்கும், எப்படி என்றால் கத்தியை எடுத்து முதுகுதண்டின் டிஸ்க்களுக்கு இடையில் சொருகினால் எப்படி இருக்கும் அப்படியான வலி.
ஒரு நர்ஸ் நெஞ்சு மேல ஏறி வயித்த பார்க்க உக்காந்து தன்னோட இரண்டு கால் முட்டுகளால் மேல்வயிற்றின் இரண்டு பக்கங்களில் இருந்தும் அழுத்தம் கொடுக்கும், கைகளால் மேல் வயிற்றை கீழாக தள்ளும். இந்த டாக்டர் வேற முக்கு முக்கு ன்னு உசுர எடுக்கும்.. ஏம்மா முடிஞ்சா முக்க மாட்டனா?
சிசேரியனில் மட்டும்தான் மயக்க மருந்து கொடுத்து பிரசவம் நடக்கும். அது சிசேரியன்,/ கத்திய வச்சி அறுப்பாங்க அப்பறம் தையல் எல்லாம் போட வேண்டுமே அதனால் என்கின்றிர்களா? நிற்க. சுகப்பிரசவதிலும் தையல் போட வேண்டும்.. அது வயிற்றில் கிடையாது /
பிறப்புறுப்பு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் விரிவடையாத சூழல் இருக்கும்,. / கத்தரிப்பான் தோற்றத்தில் தேங்காய் உரிக்கும் உபகரணம் பார்த்து இருக்கிறிர்களா? தேங்காயில் அதன் கூர்மையான முனை கொண்டு ஒரு குத்து குத்தி இரண்டாக பிளக்க வேண்டும்… அதே மாதிரி ஒரு உபகரணம் கொண்டு பிறப்புறுப்பில் செலுத்தி அதன் கைப்பிடியை விரித்து ஒரு திருக்கு.. த்தா அங்கயே கண்ணு டொய்ங்ன்னு சொருகிடும்… ரைட்டு…. இந்த டாக்டர் நம்மள இன்னிக்கு கொல்லாம விடாது. செத்தே போயிடுவோம்ன்னு தான் தோணும்.
குழந்தையோட தலை வெளில தெரிது.. push push push…
…டாக்டர் முடியல டாக்டர்
ஏம்மா உனக்கு வலிக்கற மாதிரி தான் உன்னோட குழந்தைக்கும் வலிக்கும் அதோட வலியை குறைக்கணும்ன்னா நீ சீக்கிரம் முக்கி பிள்ளைய பெத்துக்கனும் அப்பறம் உன் இஷ்டம்.
அப்போ வரும் ஒரு வெறி.. நரம்புகள் முறுக்கி உடம்பின் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி ஓரிடத்தில் குவித்து முப்பது நொடி அளவில் நீண்ட முக்குதல்.. பிறப்புறுப்பை கிழித்துக்கொண்டு குழந்தை வந்து விழும்.
என்ன குழந்தை என்று சொல்லிய பின் குழந்தையை குளிப்பாட்ட கொண்டு போயிடுவாங்க.. ஹப்பாடா என்று நிம்மதியில் கொஞ்சம் ஆசுவாசம் அடையும் போது.. கிழிந்த பிறப்புறுப்பை டாக்டர் தைக்க ஆரம்பித்து இருப்பாள்























எது வரை உறுப்பு கிழிந்து இருக்கும் தெரியுமா? மலத்துவாரத்தின் மேற்பகுதி வரை.. இந்த டாக்டர் அப்பயும் மயக்க ஊசி போடாது.. உசுரோட வச்சுக்கிட்டே தையல் போடும். அதெல்லாம் கொடுமையிலும் கொடுமை.

அப்பறம் பெட் எல்லாம் மாத்தி புதுசா வார்ட் ரூம்ல கூட்டிட்டு போயி விட்ருவாங்க actually தூக்கிட்டு போயி..
குழந்தைக்கு பால் கொடுக்கணும்.. அந்த பயபுள்ளைக்கு கண்ணும் முழிச்சு இருக்காது.. பாலும் எப்படி உறிஞ்சு குடிக்கணும்ன்னு தெரியாது. ஆனா பசில அழும் பார்க்கவே பாவமா இருக்கும்.. பாலை கொஞ்சம் பீச்சு அதோட வாய்ல விட்டுட்டு .. காதை தடவி கொடுத்தா உறிஞ்சி குடிக்க ஆரம்பிச்சிடும். இன்னிய வரைக்கும் தீராத ஆச்சர்யமாக இருக்கிறது அது../ எப்படி காதை தடவினா உறிஞ்சு குடிக்க தோணுது?
எது எப்படியோ என்னிலிருந்து பிறந்த என்னுயிர், இன்னொரு நான், எனக்கான பசியை என்னிடமே தீர்த்துக்கொள்வது போல இருக்கும் குழந்தையின் பால் குடித்தல். அதுவரை உடல் அனுபவித்த கஷ்டங்களுக்கு மனது இலகுவாக இருக்கும். அதன் பெயர் மகோன்னதம்.
பிறந்த உடலும் நீ
பிரியும் உயிரும் நீ
மரணம் மீண்ட ஜனனம் நீ
நீடூழி வாழ்க.



 நன்றி :மீனம்மா


கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

உடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்!

எ வ்வளவுதான் உடற்பயிற்சி, டயட்னு இருந்தாலும் நாம நினைக்கிற உடலமைப்பு வர மாட்டேங்குதே!’ என்பதுதான் நவீனகாலத்துப் பெண்களின் பெரும் ஏக்கம். இவர்களுக்காக மார்க்கெட்டில் பல்வேறு வகையான `ஷேப்வேர்கள்’ (Shapewear) உலா வந்துகொண்டிருக்கின்றன.  சரியான உடல் வடிவம் என்பது முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளின் மூலம் அது சாத்தியமா? ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் அந்த உடையில் இருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது? - நிபுணர்கள் விளக்குகிறார்கள். ஷேப்வேர்களின் வரலாற்றுடன் பேச ஆரம்பிக்கிறார், `விஸ்வரூபம்’ பூஜா குமாரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி. கார்செட், ஷேப்வேராக மாறியது எப்படி? ``உடைகள் உடுத்துவது அவசியம் என்கிற நிலையைத் தாண்டி, ஃபேஷன் கான்செப்ட் வந்தபோதே ஷேப்வேர்களும் வந்துவிட்டன. 1730-களில் ஷேப்வேர்களின் முன்னோடியாக `கார்செட்’ (Corset) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கிரேக்கர்களால் ஓவன், லெதர், லினன் போன்ற துணி வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட `Griddles’ பயன்பாட்டுக்கு வந்தது. மேலாடைக்குள் அணியக்கூடிய இந...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...