முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"பிரா"’புராணம்




‘I didn't even know my bra size until I made a movie.’  - நடிகை ஏஞ்சலினா ஜோலி ப்ரா என சுருக்கமாக அழைக்கப்படும் ப்ரேஸியர் என்ற உள்ளாடை பெண்களின் மார்புகளை மறைக்கவும் (சில பல சமயங்களில் நிறைக்கவும்!), கவர்ச்சியாகவும் கம்பீரமாகவும் நிமிர்ந்து நிற்கச் செய்யும் சப்போர்ட் உபகரணமாகவும் உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. ப்ரா என்பது இன்று ஃபேஷன் மட்டுமல்ல; அத்தியாவசியம். ஆதிகாலந் தொட்டே மனித இனம் ஏதாவது வடிவில் ப்ராக்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறது. கிமு 14ம் நூற்றாண்டில் மினோயன் என்ற கிரேக்க நாகரிகத்தில் பெண் அத்லெடிக் வீராங்கனைகள் ப்ராவுக்கும் பிகினிக்கும் இடைப்பட்ட உள்ளாடையை அணிந்திருக்கின்றனர். கி.மு. 2500ல் மார்புகளை தூக்கி நிறுத்தி நன்கு பார்வைக்கு காட்டும்படி உள்ளாடைகளை அணிந்தனர். கி.மு. 450வாக்கில் ரோம் பெண்கள் தங்கள் மார்பக அளவைக் குறைத்துக் காட்ட, பேண்ட் போன்ற கச்சையைப் பயன்படுத்தினர். பண்டைய எகிப்தில் பொதுவாய் பெண்கள் திறந்த மார்புகளோடே வலம் வந்தனர். சிலர் ஒருபுறம் தோள்பட்டை சுற்றிய ஸ்ட்ராப் வைத்த மேலாடைகள் அணிந்தனர்.

நம் இந்தியாவில் ஹர்ஷர் காலத்தில் (கி.பி. முதல் நூற்றாண்டு) பெண்கள் ‘கஞ்சுகா’ என்ற மார்க்கச்சை அணிந்தனர். இதற்கென ஸ்பெஷல் டெய்லர்களும் இருந்தனர்! சங்க காலத் தமிழகத்தில் ப்ரா பயன்படுத்தியதாய்த் தெரியவில்லை. பிற்பாடு மார்க்கச்சைகள் பழக்கத்துக்கு வந்தன. பதினாறாம் நூற்றாண்டில் பிரெஞ்சு அரசர் இரண்டாம் ஹென்றியின் மனைவி கேத்ரீன், ‘அரசவையில் பெண்கள் பருத்த இடையுடன் வரலாகாது’ என்ற சட்டம் கொண்டு வந்தார். இதனால் ஸ்டீல் கார்ஸெட்கள் புழக்கத்துக்கு வந்தன. இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரையிலும் கார்ஸெட்களின் ஆட்சிதான்!

19ம் நூற்றாண்டில் பெண்கள் தமது உடை குறித்து சுதந்திர பிரக்ஞை கொள்ளத் துவங்கினர். 1859ல் ப்ராவுக்கான முதல் மாதிரியை ஹென்றி லெஷர் என்பவர் வடிவமைத்தார். 1863ல் லூமன் சேப்மன் என்பவர் இந்தப் புதிய உடைக்கு பேடன்ட் பெற்றார். 1866ல் பிரிட்டனில் முதல் ப்ரா தயாரிக்கப்பட்டது. 1904ம் ஆண்டு சார்லஸ் டெபொவைஸ் என்பவர் இதற்கு ‘ப்ரேஸியர்’ என்று பெயரிட்டார். 1907ம் ஆண்டு இச்சொல் முதன்முதலாக அமெரிக்காவின் ‘Vogue’   பத்திரிகையில் பயன்படுத்தப்பட்டது. 1911ல் ஆக்ஸ்போர்டு அகராதியில் சேர்க்கப்பட்டது.

1910ல் மேரி ஃபெல்ப்ஸ் என்ற 19 வயதுப் பெண், தன் பருத்த மார்புகள் காரணமாக அப்போது பரவலாக இருந்த கார்ஸெட்களை அணிய சங்கடப்பட்டார். அவர் இரு பட்டுக் கைக்குட்டைகளை ரிப்பன் கொண்டு இணைத்து தனக்கென ஒரு புதுவகை உள்ளாடையை உருவாக்கினார். அதுதான் நவீன ப்ராக்களின் துவக்கப்புள்ளி. 1914ல் அவர் பேடன்ட் வாங்கி வியாபாரம் தொடங்கினார். அவர் கணவருக்கு இந்தத் தொழிலில் விருப்பமில்லாததால், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துக்கு 1,500 டாலர்களுக்கு தன் பேடன்ட் உரிமத்தை விற்றார். இன்று வார்னர் பிரதர்ஸ் மிகப் பெரிய ப்ரா உற்பத்தி நிறுவனம்!

முதல் உலகப்போரின்போது பெண் சிப்பாய்கள் சீருடைக்குள் ப்ரா அணிய வேண்டி இருந்தது. அப்போதுதான்பெண்கள் கும்பலாய் கார்ஸெட்டிலிருந்து ப்ராவுக்கு மாறினர். 1928ல் இடா மற்றும் வில்லியம் ரோஸெந்தால் என்ற ரஷ்ய தம்பதியர், ஒவ்வொரு பெண்ணுக்கும் மார்பளவு வெவ்வேறாக இருப்பதைக் கவனித்து வேறுபட்ட அளவு கொண்ட ப்ராக்களைத் தயாரித்தனர். இதைத் தொடர்ந்து 1935ல் வார்னர் நிறுவனம் கப்   A, B, C, D என்ற அளவுகளில் ப்ராக்களை விற்பனை செய்யத் தொடங்கியது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் தேசப் பற்றுடன் ப்ரா பற்றும் பரவலானது. ‘புல்லட் ப்ரா’ போன்ற யுத்த தொடர்புடைய பெயர்களில் ப்ராக்கள் விற்கப்பட்டன. ப்ரா மிக சகஜமான ஓர் ஆடையாக உருவெடுத்தது அப்போதுதான். ஃப்ரெட்ரிக் மெலிங்கர் 1948ல் ‘ரைசிங் ஸ்டார்’ என்ற முதல் புஷ் அப் ப்ராக்களை உருவாக்கினார். 1959ல் வார்னர் நிறுவனத்தார் முதல் எலாஸ்டிக் ப்ராக்களை அறிமுகப்படுத்தினர்.



தொண்ணூறுகளில் காற்று, நீர், சிலிக்கான் என ஏதாவது அடைக்கப்பட்ட, க்ளீவேஜை எடுப்பாய்க் காட்டும் ப்ராக்கள் உருவாக்கப்பட்டன. இன்று ஃபுல்கப், டெமிகப், சாஃப்ட்கப், பேக்லெஸ், ஸ்ட்ராப்லெஸ், அன்லைன்ட், பேடட் ப்ரா என பலவகை வந்தாயிற்று. குழந்தைக்குப் பாலூட்ட வசதியாக நர்சிங் ப்ரா, ஆண்களுக்கு பெரிதாக வளர்ந்த மார்புகளை மறைக்க ‘மேல் ப்ரா’வும் இருக்கிறது.

75 முதல் 85 சதவீதம் பெண்கள் தமக்குப் பொருந்தாத தவறான அளவு ப்ராக்களையே பயன்படுத்துகிறார்கள். இதற்காக அமெரிக்க சாஃப்ட்வேர் எஞ்சினியர்களான ஆர்த்தி ராமமூர்த்தியும் (பூர்வீகம் சென்னை), மிச்செல் லேமும் இணைந்து ஓர் இணையதளம் உருவாக்கி இருக்கிறார்கள். பல சர்வேக்கள் மூலம் கண்டடைந்த அல்காரிதத்தைப் பயன் படுத்தி சில எளிய கேள்விகள் மூலம் ஒவ்வொரு பெண்ணுக்குமான சரியான ப்ரா சைஸை அடையாளம் காட்டுகின்றனர்.

சிலருக்கு மார்பு வலி, தோல் அரிப்பு போன்றவை ப்ரா அணிவதால் வருகின்றன. ‘Dressed to Kill’   என்ற தமது புத்தகத்தில் சிட்னி ராஸ் சிங்கர், சோமா க்ரிஸ்மேய்கர் இருவரும், ‘‘ப்ரா அணிவதால் கேன்சர் கூட வரும்’’ என்று பயமுறுத்துகிறார்கள். ‘விக்டோரியாஸ் சீக்ரெட்’ நிறுவனம் காஸ்ட்லி ப்ராக்களை உருவாக்குவதில் புகழ் பெற்றது. 2001ல் இந்நிறுவனம் தயாரித்த- 69 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள - ‘ஹெவன்லி ஸ்டார்’ ப்ராவே இன்றைய தேதியில் உலகின் விலையுயர்ந்த ப்ரா. இதில் 1,200 நீலக்கற்களும், 90 கேரட் மரகத வெட்டு வைரம் ஒன்றும் பதிக்கப்பட்டிருந்தது. ஐம்பது வருடங்களுக்கு முன்பு இறந்த மர்லின் மன்றோவின் ப்ரா ஒன்று, 2009ம் ஆண்டு லண்டனில் 5,200 டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டது. 2010ல் 7,000 டாலர்களுக்கு அவரது இன்னொரு ப்ரா ஏலம் எடுக்கப்பட்டது. தற்போது நல்ல விஷயங்களுக்காக நடிகைகள் ப்ராக்களை ஏலம் விடுகின்றனர். லேடி காகா தன் கார்ஸெட்டை 5,000 டாலர்களுக்கு ஏலத்தில் விற்றார். அந்தப் பணத்தை ஹைதி பூகம்ப நிவாரணத்துக்கு வழங்கினார்.

நியூசிலாந்தில் ஒரு பிரபல டூரிஸ்ட் ஸ்பாட் ‘ப்ரா வேலி’. சாலையை ஒட்டி இருக்கும் ஒரு கம்பி வேலி முழுக்க ப்ராக்கள் தொங்குகின்றன. தினம் தினம் வரும் பெண் டூரிஸ்ட்கள், வேலிக்குத் தத்தம் பங்களிப்பை அளித்துச் செல்கின்றனர். பெண்களைப் பிடித்தும், ஆண்களுக்குப் பிடித்தும், உலகம் முழுக்க மக்கள் மனதில் ப்ராக்கள் சிம்மாசனமிட்டிருந்தாலும் அவ்வப்போது எதிர்ப்புகளையும் சந்திக்கின்றன. பெண்களை போகப் பொருளாகப் பயன்படுத்துவதை எதிர்த்து அறுபதுகளில் பெண்ணிய அமைப்புகள் ப்ரா எதிர்ப்பு மற்றும் எரிப்புப் போராட்டங்கள் நடத்தினர். 1968ல் அட்லாண்டிக் சிட்டியில் ‘மிஸ் அமெரிக்கா’ அழகிப் போட்டியின்போது நிகழ்ந்த ப்ரா எரிப்புப் போராட்டம் பலத்த அதிர்வுகளை உண்டாக்கியது.



1969ல் ருலால்ஃப் கிறிஸ்டியன் என்ற ஃபேஷன் வரலாற்று ஆய்வாளர் ‘ப்ராவுக்கு அஞ்சலி’ என்ற தலைப்பில் ‘ப்ராக்கள் விரைவில் அழியும்’ என்று ஆரூடம் சொல்லி ஒரு கட்டுரை எழுதினார். பொதுவாக பிரபலங்களே அந்தந்த காலகட்டங்களின் ஃபேஷனை நிர்ணயிக்கிறார்கள். இப்போது ப்ரிட்னி ஸ்பியர்ஸ், பாரிஸ் ஹில்டன் போன்ற பிரபலங்கள் ப்ரா அணியாமல் உலா வருவது சகஜமாகி வருகிறது. ஆனாலும் ப்ராக்கள் இன்றும் பெண்களின் அந்தரங்க இஷ்ட சங்கதியாக நீடித்து வருகிறது. ஆண்கள் உள்ள வரை பெண்கள் ப்ராக்களை பகிஷ்கரிக்க மாட்டார்கள்!

ப்ரேஸியர்

புவியீர்ப்பு விசை
எதிர்க்கும் போரில்
விழியீர்ப்புப் பசை
பூசியபடி நிற்கும்
பருத்தி வீரன்.
- கவிஞர் காத்துவாயன்

Stats சவீதா

*  சராசரியாக ஒரு பெண்ணிடம் 9 ப்ரேஸியர்கள் உள்ளன.
*  மேற்கத்திய நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும் 90 % பெண்கள் ப்ரா அணிகிறார்கள்.
*  உலகெங்கும் ஒரு நாளில் 40 லட்சம் ப்ராக்கள் உற்பத்தியாகின்றன.
*  ஆண்டுதோறும் 88,732 கோடி ரூபாயை ப்ராக்களுக்கென செலவழிக்கிறார்கள்.
*  கடந்த 15 ஆண்டுகளில் சராசரி ப்ரா சைஸ் 34  ஙியிலிருந்து 36சி ஆகி விட்டது.

1. ப்ரா

சினிமா சித்தாளு
கிரேஸி மோகன் வசனம் எழுதும் கமல்ஹாசன் படங்களில் பாடி ஜோக் தவறாது இடம்பெறும். நாம் இருவர் நமக்கு இருவர் படத்தில் பிரபுதேவா போடும் ப்ரா காஃபி மிகப் பிரபலம். விவேக் தம் நகைச்சுவைகளில் நாயுடு ஹாலை பிரபலப் படுத்தினார். செல்லமே படத்தில் ரீமா சென் மனதைத் தொடுவது மாதிரி கிஃப்ட் தர வேண்டும் என ப்ரா வாங்கப் போவார் விஷால். ஃபாரா கான் நடித்து சமீபத்தில் வெளியான Shirin Farhad Ki Toh Nikal Padi என்ற இந்திப் படத்தில் நாயகன் பொமன் இரானி ஒரு உள்ளாடை சேல்ஸ்மேன். படம் முழுக்க ப்ராக்கள் மயம் தான்.

The
காமன் Man
காமன் மேன் ஆஃபர் சேலில் கார் டயர்களை வாங்கி வந்தார். அவர் மனைவி கோபமாக "முட்டாளா நீங்கள், நம்மிடம் தான் காரே இல்லையே இதை எதற்கு வாங்கி வந்தீர்கள்?" எனக் கேட்டார். காமன் மேன் அமைதியாக "நீ கூடத் தான் ஆடித் தள்ளுபடியில் ப்ரா வாங்கினாய், நான் ஏதாவது சொன்னேனா?" என்றார்

நன்றி ரைட்டர்

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...