முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிறம் மாறும் பச்சை







பத்திரிகையுலகில் ஒரு பிரபலமான ஜோக் ஒன்று உண்டு. தமிழகக் கிராமப்புற மக்களின் வெள்ளந்தியான அரசியல் புரிதலுக்கு இதுவரை இருக்கிற மிகச் சரியான உதாரணமும் அதுதான். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, பல்வேறு அடக்குமுறைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, உசிலம்பட்டி அருகில் ஒரு மூதாட்டியை பேட்டியெடுத்ததாகச் சொல்லப்படுகிற கதை இது. “ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடவே மாட்டேன்” என்று சொல்லியிருக்கிறார் அந்த மூதாட்டி. “அப்புறம் யாருக்கு ஓட்டுப் போடுவீர்கள்” என்கிற பதில் கேள்விக்கு அந்த மூதாட்டி, “அதுல என்ன சந்தேகம் ரெட்ட எலைக்குத்தான் ஓட்டுப் போடுவேன்” என்று பதில் சொன்னதாகச் சொல்வார்கள். இது உண்மையா, பொய்யா என்று தெரியாது. 
ஆனால் தென் தமிழகம், அதிலும் குறிப்பாக ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளாக அறியப்படும் பகுதிகள் அதிமுகவின் கோட்டை என்பதை அந்த ஊர்களில் ஓடும் மினி பேருந்தைக் கேட்டால்கூடச் சொல்லி விடும். சில நேரங்களில் தேர்தல் கணக்குகள் மாறியிருக்கலாம். ஆனால் அதிமுகவின் அந்தக் கோட்டையை நிரந்தரமாக அரித்து எடுக்க முடிந்ததில்லை.
இந்த தமிழ் வசந்தம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு அதே தென்மாவட்டங்களில் பயணம் செய்த போது வேறு சில காட்சிகளைக் காண முடிந்தது. இளநீர் கடையொன்றில் முதிய தம்பதியினரைச் சந்தித்த போது, அவர்கள் கையில் ரெட்டை இலையைப் பச்சை குத்தியிருந்தார்கள். ஜெயலலிதாவின் அகால மரணம் அவர்களை கடுமையாகப் பாதித்திருந்ததை உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர்கள் இருவரும் அதிமுகவின் தற்போதைய பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவிற்கு எதிரான மனநிலையில் இருப்பதை எடுத்த எடுப்பிலேயே உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர்கள் பேசியதைச் சத்தியமாக அச்சில் ஏற்ற முடியாது. ஜெயலலிதா கொலை செய்யப்பட்டதாகவே நேரடியாகக் குற்றம் சாட்டினார்கள். இனி ரெட்டை இலைக்கு வாக்களிக்கப் போவதில்லை எனத் தீர்மானமாகச் சொன்னார்கள்.
அவர்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்கப் போகிறார்களா? அல்லது வேறு சின்னங்களுக்கு வாக்களிக்கப் போகிறார்களா என்பது அவர்களது கடைசி நேர மனநிலையைப் பொறுத்தது. ஆனாலும் அவர்கள் தெளிவாக இவர்களுக்கு இல்லை என்று முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த மனநிலை மெல்ல தென் மாவட்டங்கள் முழுக்கப் பரவியிருக்கிறது. அதிமுகவின் கோட்டை எனக் கருதப்படும் இடங்களில் எல்லாம் இது போலவான அல்லது இதற்கு நிகரான காட்சிகளைப் பார்க்க முடிகிறது. மக்களின் வெறுப்பு இந்த அரசின் மீதும், இந்த அரசை மறைமுகமாக ஆட்டிப் படைப்பவர்களின் மீதும் பாம்பு கடிபட்ட ஒரு பீர்க்கன் செடியைப் போலப் பரவியிருக்கிறது.
இந்த வெறுப்பைச் சரிக்கட்டுவது எளிதான காரியமில்லை என்பது சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் வீட்டிற்கு அருகில் தினம்தோறும் குறைந்தது நூறு பேராவது கூடுகிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் அதிமுகவின் கரை வேட்டியோடு தென்படும் எளிய முகங்கள். இதுவரை வெளிச்சத்திற்கே வந்திராத ஒரு இளம்பெண் மீது நம்பிக்கை வைத்து அவர்களால் எப்படி ஒன்றுகூட முடிகிறது? உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், சசிகலாவிற்கு எதிராக யார் முஷ்டியை முறுக்கிக் கொண்டு நின்றாலும் அவர்களுக்குப் பின்னால் அணி திரள்வதற்கு ஒரு கூட்டம் தயாராகவே இருக்கிறது என்பதைத்தான் இந்த அணி திரள்தல்கள் உறுதிப்படுத்துகின்றன.
அதிமுகவின் மிகப் பெரிய கோட்டையான மணப்பாறையில் மருந்திற்குக்கூட சசிகலா படம் தாங்கிய பேனர்களைப் பார்க்க முடியவில்லை. மாறாக தீபா எல்லா பேனர்களிலும் மர்மமாக புன்னகைக்கிறார். திரண்டு உருண்டெழுந்து வரும் இந்த வெறுப்பை எப்படி அணை போட்டுத் தடுப்பது என திக்கித் திணறிக் கொண்டிருந்த போதுதான் அவர்களுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தது.
மெரீனாவில் அந்தக் குறிப்பிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் இளைஞர்கள் திரண்டு கொண்டிருந்த போதே தமிழக அரசால் தடுத்து நிறுத்தியிருக்க முடியாதா? ஒரு நூறு பேர் திரண்டாலே லத்தியோடு களத்தில் குதிக்கும் காவல்துறை, ஐயாயிரம் பேர் வரை திரண்டும் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது? ஏனெனில் அந்த நேரத்தில் மெரீனாவில் தீபா தனிக்கட்சித் துவங்கப் போவதாகச் சூளுரைத்துக் கொண்டிருந்தார். ஆட்சியாளர்களின் அவர்களை ஆட்டுவிக்கும் சக்திகளின் காதில் புகுந்த எறும்பைப் போல அங்கு நின்று கொண்டு, அவர் தனி ஆவர்த்தனம் நடத்திக் கொண்டிருந்தார். அதைத் திசை திருப்ப வேண்டும். இது போல எதிர்ப்பாளர்கள் அணி திரள்வதை மட்டுப்படுத்த வேண்டும். அதற்குக் கிடைத்ததுதான் இந்தப் போராட்டம். வேண்டுமென்றேதான் மெரீனாவில் இளைஞர்கள் திரள்வதை ஊக்குவித்தார்கள்.
போராட்டமாக மாறும் என்று எதிர்பார்த்தார்களே தவிர, அது வசந்தமாக மலரும் என்பதை எதிர்பார்க்கவில்லை. அதிமுக நினைத்திருந்தால் கடந்த ஆண்டே இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் இப்போதுதான் அது சம்பந்தமான விழிப்புணர்வு வந்தது போல, நடந்து கொண்டார்கள். தமிழகம் முழுக்க ஒரு உணர்வுப்பூர்வமான விஷயத்தைக் கிளறிவிடுவதன் மூலம் எதிர்ப்பை மட்டுப்படுத்தி விடலாம் என தப்புக் கணக்குப் போட்டார்கள். அது பூமராங் போல அவர்களுக்கு எதிராகவே அமைந்து விட்டது. தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இயல்பிலேயே ஜல்லிக்கட்டு ஆதரவாளர். தன்னுடைய இடத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.
உண்மையைச் சொல்லப் போனால் போராட்டம் துவங்கிய இரண்டாவது நாளிலேயே எல்லா குரல்களும் எதிரொலித்துக் கொண்டுதானிருந்தன. ஒருநூறு பேர் திரண்டாலே அதில் அத்தனை வகைமையினரும் இருக்கும் போது, இலட்சம் பேரில் இருக்க மாட்டார்களா? இது அரசிற்கும் நன்றாகவே தெரியும்.
ஒன்று திரண்டிருந்த இந்தக் கூட்டத்தைக் காட்டி ஜல்லிக்கட்டைக் கொண்டு வருவதன் வழியாக, செயல்படாத அரசு, காலில் விழுந்து கொண்டிருக்கும் அரசு என்கிற அதிருப்திகளைச் சரிக்கட்டி விடலாம் என்று நினைத்தார்கள். மாணவர்களின் போராட்டத்தின் வழியாக தங்களது அரசியல் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள விரும்பினார்கள். அவர்கள் நினைத்தவை எல்லாம் நடந்தன. நினைக்காத விஷயங்களும் நடந்தன. ஆரம்பத்திலிருந்து காவல்துறை கட்டுப்பாடாகவே இருந்தது. காவல்துறை சார்பாக இந்தப் போராட்டம் பற்றிக் கருத்துச் சொன்ன போதுகூட, அமைதியான அறப்போராட்டம் என்றுதான் ஆரம்பத்தில் வர்ணித்தார்கள். காவலர்களும் மாணவர்களும் கூடிக் களித்தார்கள். தங்களுக்குள் உணவுகளைக்கூடப் பகிர்ந்து கொண்டார்கள். எங்கே இந்த விலகல் ஆரம்பமானது?
ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச் சட்டம் வந்து விடும் என்பது உறுதியாகத் தெரிந்தபிறகுதான் இந்த விலகல் ஆரம்பமானது. இந்த அவசரச் சட்டத்தால் அரசியல் ரீதியிலாக யாருக்குப் பயன் கிடைக்கும் என்கிற கேள்வி வந்த பிறகிலிருந்துதான் இந்த விலகல் ஆரம்பமானது. ’ஜல்லிக்கட்டைக் கொண்டு வந்த வீரத்தாயே’ என்று சசிகலா பெயரில் போஸ்டர்கள் எல்லாம் தயாராகிவிட்டன. ஆனால் அதைப் பயன்படுத்த முடியாத துர்பாக்கிய நிலை. மத்திய அரசு ஆரம்பத்தில் இருந்தே இந்த விஷயத்தில் உறுதியாக பன்னீர்செல்வத்தை மட்டுமே ஆதரிக்கிறது. அதிமுக என்கிற பேக்கரியை மட்டும் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என உறுதியாகச் சொல்லி விட்டது. சசிகலா முதல்வராவதற்கு நாள் குறித்து விட்டார்கள். நட்சத்திர பலன்படி நேரம்கூட குறித்து விட்டார்கள். ஆனால் தசா புத்தி பலாபலன்கள்படி அந்த நாற்காலியில் அமரும் யோகம் கைகூடி வரவில்லை. பணிக்கர் வந்தாலும் பலிக்கவில்லை ஜாதகம்.
அவர்கள் முன்னால் இதுவரை கைகட்டி நின்று கொண்டிருந்த கபாலி, நாற்காலியில் நிமிர்ந்து அமர ஆரம்பித்து விட்டார். குறிப்பிட்ட சாதியின் முகவர்களாக இருந்தவர்களைத் தாண்டி அதே இனத்தில் இருந்தாலும் இதுவரை அடிமையாக அறியப்பட்ட ஒரு முகம் நிமிர்ந்து பார்க்க ஆரம்பித்துவிட்டது. அந்த முகம் அவர்களின் சுயசாதியில் இருந்து உருவாகி வந்தது என்பதால் நேரடியாகவும் கைவைக்க முடியாது. கட்சியை உடைப்பதற்கான சாவியும் அந்த முகத்தின் சட்டைப் பையிலேயே எப்போதும் பத்திரமாக இருக்கிறது. அந்த சாவிக்கான கடவுச் சொல் தில்லியில் இருக்கிறது.
அந்த முகத்தில் சேற்றை வாரி அடித்தால்தான் உண்டு என்கிற புரிதலுக்கு அவர்கள் வந்த போதுதான் போராட்டம் அதன் உச்சகட்டத்தை எட்டியிருந்தது. மத்திய அரசைப் பகைத்துக் கொள்ள முடியாது. வெளிப்படையாக எதிர்க்கவும் முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர்களை அணி திரட்டுவதன் மூலம் ஏதாவது செய்து பார்க்கலாம் என முயன்றார்கள். கௌதமி போன்றவர்களையெல்லாம் சந்திக்கிற இந்தியப் பிரதமர், அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்டு கொள்ளவேயில்லை. இதுவரை இரண்டு தடவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை வழியாகப் பிரதமரைச் சந்திக்க முயன்றார்கள். விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் மற்றும் ஜல்லிக்கட்டு என இந்த இரண்டு விசயங்களுக்காக பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்ட போதும், அவர்களைச் சந்திக்கவில்லை. மாறாக தமிழக முதலமைச்சரைத்தான் இந்த விஷயங்களுக்காக பிரதமர் சந்தித்தார்.
முதல்வர் இந்தச் சந்திப்பை முடித்தவுடன் அதிமுகவின் தில்லி முகமாக அறியப்படும் தம்பித்துரை அடைந்த பதற்றத்தை இந்திய தொலைக்காட்சிகள் அத்தனையும் பார்த்தன. பிரதமரின் புரோட்டோகால் அது என்றுகூடச் சொல்லித் தப்பிக்கலாம். ஆனால் எல்லா நேரங்களிலும் அதனடிப்படையிலா அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது?
முட்டிப் மோதிப் பார்த்து எல்லா கதவுகளும் அடைத்திருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டார்கள். எப்போதுமே காவல்துறையை ஆட்டுவித்தே பழக்கப்பட்ட அந்த நிழல் அரசாங்கத்து மனிதர்கள் இந்த விஷயத்திலும் தங்களுக்குப் பழக்கமான லத்தியைச் சுழற்ற ஆரம்பித்தார்கள். அவர்கள் சுழற்றிய லத்திதான் அந்த அறப்போராட்டத்தில் அடிகளாக விழுந்தன. அரச வன்முறையாக இந்தத் தாக்குதல்கள் இருந்திருந்தால் தமிழகம் முழுக்க ஒரே சீராக அடியும் உதையும் கிடைத்திருக்க வேண்டுமே? திருச்சியில் ஒரு சின்னக் கீறல்கூட இல்லாமல் போராட்டக்காரர்களைக் கலைத்தது எப்படி? அங்கேயும் மாணவர்கள் திமிறிக் கொண்டுதானே நின்றிருந்தார்கள். மதுரையில் சென்னையை விடத் தீவிரமாக மாணவர்கள் இருந்தார்கள். ஆனால் அங்கேயும் சிறுசிறு லத்தியடிகள், தள்ளுமுள்ளுகளைத் தவிர பெரியளவிற்கு அசம்பாவிதங்கள் இல்லையே ஏன்? சென்னையில் மட்டும் ஏன் இந்த வெறித்தனம் அரங்கேறியது? இந்தக் கேள்விகளைக் கேட்டுப் பார்த்தால், இதற்குப் பின்னால் நின்றது அரச காவல்துறையின் லத்தி அல்ல. பிரைவேட் கம்பெனி ஒன்றின் லத்தி என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.
அது தமிழக முதலமைச்சருக்கும் தெரியும். சட்டசபையில் அப்புறம் ஏன் அவர் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்? செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து விட்டால் இதையெல்லாம் செய்துதானே ஆகவேண்டும்? தவிர இந்த அறப் போராட்டத்தைக் கண்டு தில்லியும் அச்சத்தில்தானே உறைந்திருக்கிறது? முன்னவர்கள் செய்ததை இன்னொரு கோணத்தில் தில்லியில் உள்ள பின்னவர்களும் ஆதரித்தார்கள்.
தமிழக முதலமைச்சரைப் பொறுத்தவரை அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததில் இருந்து அவர் மிகச் சரியான காய்நகர்த்தல்களச் செய்து கொண்டிருக்கிறார். ’எல்லா பக்கமும் போட்டு வை ஒரு கும்பிடை’ என்பதுதான் அவரது வியூகம். வெளிப்படையாக எதிர்க்காமல் மெல்லப் புன்னகையுடன் காய்களை நகர்த்தும் வித்தையில் அவர் எப்போதோ கைதேர்ந்துவிட்டார். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது ஓபிஎஸ் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. ஆனால் அதையும் மீறி அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததற்கு ஜெயலலிதாவின் நம்பிக்கை மட்டும் காரணமில்லை. முதல்வரின் சாணக்கியத்தனமும் அதில் அடங்கியிருக்கிறது.
பெரியகுளம் மாதிரி ஒரு சின்ன ஊரில் இருந்து கிளம்பி அதிகாரத்தைப் பிடித்திருக்கிறார் என்றால், சாணக்கியத்தனம் இல்லாமல் இருக்குமா? அதை இப்போது முழுவீச்சில் பயன்படுத்திப் பார்க்கிறார். அது இப்போதைக்கு சாதகமான பலன்களையே அவருக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. பணிக்கர்கள் தயவில்லாமலேயே அவர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்த அரசியல் சடுகுடு ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், அவர்கள் எதிர்பார்த்தபடி இந்த ஆட்சி மீது ஒரு நல்லெண்ணம் பிறந்து கொண்டிருப்பதையும் இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால் அந்த நல்லெண்ணத்தின் தூதுவராக ஓபிஎஸ் மட்டுமே அறியப்படுகிறார் என்பதுதான் நிழல் மனிதர்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்தப் போராட்டத்தினால் நிறைய நன்மைகள் விளைந்திருக்கின்றன. அதைப் பற்றி நிறையக் கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. இந்தப் போராட்டத்தின் காரணமாக இன்னொரு முக்கியமான விளைவும் ஏற்பட்டிருக்கிறது. அதிமுகவின் பொதுச் செயலாளராக இருக்கிற வி.கே.சசிகலா முதல்வராவதற்கு ஆடிய பகடையாட்டங்கள் ஒத்திப் போடப் பட்டிருக்கின்றன. ஒருவேளை மத்திய அரசு அதற்கு அனுமதித்தால்கூட இந்தத் தரப்பு தற்போதைக்கு தயாராகயில்லை என்பது போலத்தான் செய்திகள் வருகின்றன.
ஏனெனில் காளைகளுக்கு ஆதரவாகத் திரண்டதைப் போல, இவர்களுக்கு எதிராக இது போல திரண்டு விட்டால் என்னாவது என்கிற பயம்தான் அந்த நியூட்டனின் மூன்றாவது விளைவு. எந்த வினைக்கும் எதிர்வினை உண்டு. பல்லாயிரம் பணிக்கர்கள் வந்தாலும் அதைத் தள்ளிப் போட முடியாது. ஜெயலலிதா விஷயத்திலேயே அதுதான் நடந்தது. தமிழ் வசந்தம் கொண்டு வந்த உருப்படியான விஷயங்களில் தலையாய விளைவு இது. அச்சத்தை மாணவர்கள் அவர்களுக்குள் விதைத்திருக்கின்றனர். அடியெல்லாம் ஒரு பொருட்டே இல்லை தோழா!

சரவணன் சந்திரன் உயிர்மை

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...