முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அறம்




ஒரு வழியாக என் ஆதர்ச எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் சிறுகதைத் தொகுப்பினை படித்து முடித்தாயிற்று.  மன அழுத்தம் சென்ற இரண்டு வாரங்களாக உச்சத்தில் இருந்த நிலையில் வார இறுதியில் அனைத்துக் கதைகளையும் தொடர்ச்சியாக படித்து முடித்தேன். ஒவ்வொரு கதையின் முடிவிலும் துக்கம் தொண்டையின் வழியே சென்று நேரடியாக நெஞ்சை அடைத்ததைப் போல உணர்ந்தேன். மிகை படுத்திச் சொல்லவில்லை. இது நடந்தது உண்மை. ஜெயமோகனை என் எழுத்துக்கு வித்திட்ட மிகப் பெரிய ஆளுமையாகவே பார்கிறேன். சற்று அவர் மேல் கோபமும் வரத்தான் செய்கிறது. கோபத்திற்கான முதல் காரணம் என்னை நான் ஒரு வளர்ந்து வரும் எழுத்தாளனாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஊமைச் செந்நாய் மற்றும் அறம் தொகுப்பினை படித்தவுடன் என் எண்ணம் அனைத்தும் தவுடு பொடி ஆகிவிட்டது. நான் இந்நாள் வரை எழுதியிருந்த சிறுகதைகளை வலைத்தளத்தில் வெளியிடவே கூச்சமாக உள்ளது. இன்னும் எவ்வளவோ உழைக்கவும், படிக்கவும் வேண்டியிருக்கிறது. மெல்ல அவரது தாக்கத்தை என் எழுத்திலிருந்து வெளியேற்றவும் அவசியம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது படைப்புக்களை வாசித்து வரும் நான் அந்த பாதிப்பிலிருந்து மீண்டு எழுந்து எனக்கென தனிப் பாதை ஒன்றை போட்டுக்கொள்ள வேண்டிய நிர்பந்தமும் அறை கூவலும் என் முன் தடை கற்களாக நிற்கின்றன. அவற்றிலிருந்து கூடிய விரைவில் மீண்டு வந்து எனக்கென ஒரு பாதையை அமைப்பேன்.
இன்னொரு கோபம், மனித உணர்வுகளுக்குள் கூறிய கத்தியை நுழைத்து ஸ்தம்பிக்கச் செய்து, ஆழ்மனக் குமுறல்களை வெளிப்படுதவைக்கின்றன. அறம் தொகுப்பின் ஒவ்வொரு கதையிலும் பல இடங்களில் கண்களில் ஈரமும், மூக்கை உறிஞ்சிக்கொள்ளும் செய்கையையும் நான் வெளிக்காட்டாமலே இல்லை. ஜெயமோகனை "hitchcock of human emotions" என்று புனைப்பெயர் சூட்டி அழைக்கவேண்டும் என்றும் நினைக்கிறேன்.
அறம் தொகுப்பின் மூலம் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை பதிவு செய்யாமல் ஒரு எழுத்து இருந்தால் அது முழுப் படைப்பாகாது என்பதை நன்கு தெரிந்துகொண்டேன். சமூக மாற்றத்துக்கு தேவைப் படும் தர்கவாத விளக்கங்களும், அவசியங்களும் மிக அழகாக வெளிக்கொனர்ந்திருக்கிறார் ஜெயமோகன். அந்தந்த கதையின் மாந்தர்கள் அறத்தின் வழியே வாழ்க்கை நெறிகளை பின்பற்றியவர்கள். அவர்கள் கதை மாந்தர்கள் மட்டும் அல்ல, உண்மை மனிதர்களும் கூட. குறிப்பிட்டு சொல்லப்போனால் யானை டாக்டரின் ஜே கே, சோற்றுக்கணக்கின் கெத்தேல் சாஹிப், நேசமணி நாடார், மத்துறு தயிர் கதையின் ராஜம் நாடார் போன்ற உண்மை மனிதர்களின் வாழ்க்கை நம்மை உணர்ச்சிச் சரடுகளால் பின்னிக்கொண்டு கதை படித்து பல நாட்களுக்கு கட்டவிழ்க்க மறுக்கிறது. இதுவே ஒரு படைப்பாளியின் வெற்றியாக நான் கருதுகிறேன்.
அறம் தொகுதியில் உள்ள கதைகளின் மையம் "அறம் என்றால் இது தான்" என சுட்டிக்காட்ட ஜெயமோகன் முயற்ச்சிக்கவில்லை. அறம் சார்ந்த ஓர் அக எழுச்சியில் இருந்து அக்கதைகள் அனைத்தும் தொடங்குகின்றன, அவ்வளவுதான். பலசமயம் அறத்தின் முகங்களை சுட்டிக்காட்டுகின்றன. சிலசமயம் அறம் திகைத்து நிற்கும் இடங்களை. அறம் என்றால் என்ன என்றல்ல அறம் எப்படி வாழ்வில் செயல்படுகிறது என்றே அக்கதைகள் வினவிக்கொள்கின்றன. அறம் சிறுகதைத் தொகுப்பைப் பற்றி ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன், இது நம் கண்முன்னால் நிகழ்ந்த வாழ்க்கை. நம் காலகட்டத்திலும் எங்கோ இன்னும் நிகழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை.
கொஞ்சம் மிகையாக இருந்தாலும் என் இதயத்தின் உள்ளிருந்து வரும் வார்த்தை இது... "ஜெயமோகனுக்கு அறம் தொகுப்புக்காக ஞான பீட விருதோ, அல்லது ஏன், booker prize கூட கொடுக்கலாம். அத்துனை ஆழமான படைப்புகள் இவை.
இத்தொகுப்பின் குறிப்பிட்ட சில கதைகளின் அலசலை செய்திருக்கிறேன்.


மத்துறு தயிர்
இக்கதை குருசீட உறவின் கதை மட்டும் அல்ல. இரண்டுவகையான உணர்ச்சிநிலைகளின் கதை. உணர்வுரீதியாக வாழ்க்கையைப்பார்ப்பதற்கும் சமநிலையாக வாழ்க்கையைப்பார்ப்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு.
ராஜம் அண்ணாச்சி யார் என்று யூகிக்க முடியவில்லை. அந்த நாயர் பெண்ணும் யாரென்று பல முறை கூகுளில் வினவி இருப்பேன்! உயிர் பிரிந்தது போல ராஜம் அந்த பெண் ஊரை விட்டு சென்றதும் துடித்தது, பேராசிரியர் ராஜம் குறித்து பட்ட வேதனை, ராஜம் அண்ணாச்சியின் தந்தை அம்மன் முன்பு கையை வெட்டி ரத்தம் ஊற்றி அழுதது, பேராசிரியரை எதிர்கொள்ள முடியாமல் ராஜம் பட்ட வேதனை, ஒவ்வொன்றையும் பல நூறு மடங்கு துல்லியமாக உணர்ந்து ஒவ்வொருமுறை படிக்கும் பொழுதும் கண் கலங்கி இருக்கிறேன்!
காதலில் உண்மையாக இருந்தவர்களில், மீள முடியாமல் மூழ்கியவர்களே அதிகம்! மீண்டு வந்து விடுதல் ஒரு பெரும் வெற்றி உணர்வையும்,  இறுமாப்பையும் அளித்தாலும், இறப்புவரை உள்ளுக்குள் ஒரு முள் குத்திக்கொண்டே இருக்கும் போலும்! ராஜம் அண்ணாச்சியாக என் நண்பன் ஒருவனையே நினைத்துக்கொண்டேன். கூடுதல் சிறப்பம்சம் கம்பனையும் அவனது கவிதைகளையும் கதையின் போக்கில் உள்ளே நுழைத்த எழுத்தாளருக்கு hats off!!!

 யானை டாக்டர் 
குழந்தைகள் தங்களுக்கு  கிடைத்த பிரியமான பரிசு பொருளை தங்களுடனே வைத்து கொள்வர் ,தூக்கத்திலும் விட்டு பிரிய மறுத்து  அதனை கட்டி பிடித்து தான் உறங்கி போவர்கள்.கட்டிலின் அடியில் விழுந்து காணமல் போன அந்த பரிசினை மீண்டும் அந்த குழந்தை கண்டுகொள்ளும் போது அடையும் ஆச்சரியமும் மகிழ்வும் தான் யானை டாக்டர் கதையைப் பற்றி பதிவு செய்யும் நான் இன்று அடைந்த மனநிலையும். ஒரு துலைந்து போன புதையலை கண்டெடுத்த உணர்சிமிகுதியை அடைந்தேன்.
அப்படி என்ன இருக்கிறது இந்த கதையில்?
கதையை வாசித்த அத்தனை பேரின் மனதிலும் புழுவும்,யானையும் நிச்சயம் வருடி கொண்டு இருக்கும்.  
டாக்டர். கே போல தனது வாழ்வின் ஒரு நொடியினையாவது மற்ற உயிர்க்கு அர்பணிக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சியம் எழும்.  
ஆதியில் இயற்கையின் அத்துணை அம்சங்களுடன்  இணைந்து  வாழ்ந்த மனிதனின் வாழ்வு  எதனுடனும் வேறு படவில்லை.அவனுக்கு எறும்பும் யானையும்,தவளையும் சிங்கமும் அனைத்தும் உயிர்கள் தான்.மனித உயிர்  தான்  பெரியது என்ற எண்ணம் நிச்சயம் இருந்திருக்க முடியாது  அந்த மனிதனின் கால்கள் இந்த மண்ணின் ஈரத்தையும் கோடி கணக்கான பூச்சிகளையும்,தாவரங்களையும்  நிச்சயம் உணர்ந்து இருந்திருக்கும்.
கண்டிப்பாக மனித மனத்தின் ஆழங்களை சென்று அடையும் இந்த கதை .

புழுவினை பற்றிய இந்த 15 வரிகள் போதும் , ஜெயமோகனின் மொழி ஆளுமையையும், சொல்நேர்த்தியையும் கொண்டாட!!!!
"புழுக்களைப்பாத்து பயந்துட்டேள் என்ன?’ என்றார் டாக்டர் கே. ’புழுக்களை பாத்தாலே பெரும்பாலானவங்களுக்கு பயம்… அந்த பயம் எதுக்காகன்னு எப்பவாவது கவனிச்சா அதை தாண்டி போயிடலாம். பயத்தையும் அருவருப்பையும் சந்தேகத்தையும் திரும்பி நின்னு கவனிச்சா போரும், அப்டியே உதுந்துடும். ..குண்டுக்குண்டாக மென்மையாக புசுபுசுவென்று ஆவேசமாகத் தின்றுகொண்டு நெளிந்துகொண்டிருக்கும் புழுக்களில் தெரியும் உயிரின் ஆவேசத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போது மனம் மலைப்புறும். வெண்ணிறமான தழல்துளிகளா அவை? அறியமுடியாத மகத்துவம் ஒன்றால் அணுவிடை வெளி மிச்சமில்லாமல் நிறைக்கப்பட்டது இப்பிரபஞ்சம் என்று அப்போது தோன்றி புல்லரித்துவிடும். உண் என்ற ஒற்றை ஆணை மட்டுமே கொண்ட உயிர். அந்த துளிக்கு உள்ளே இருக்கின்றன சிறகுகள், முட்டைகள். ஒவ்வொரு கணமும் உருவாகும் ஆபத்துக்களை வென்று மேலெழுந்து அழியாமல் வாழும் கற்பனைக்கெட்டாத கூட்டுப்பிரக்ஞை"

காட்டு யானையின் உலகமும் அது மனிதனின் மிக மோசமான செயல்களினால் பாதிக்கப்படும் விதங்களும் மேலும் கோவில் யானைகளின்  சலிப்பூட்ட கூடிய அனுதின வாழ்கையும் நாம் என்றும் உணர்ந்திருக்க மாட்டோம்.
"யானை டாக்டர்" கிருஷ்ண மூர்த்தி  அவர்களின் எளிய உருவமும் இந்த கதையாடலின் மூலமாக விவரிக்கப்படும் அவரின் பேச்சும் செயல் பாடுகளும் நம்மை நிச்சயம் ஒரு லட்சிய பாதையினை நோக்கி கூட்டி செல்லும்.அவரினை போன்ற அற்புத ஆன்மாவை  நமக்கு இந்த உன்னத கதையின் மூலம் அறிமுகபடுத்திய ஜெயமோகன் அவர்களுக்கு  நன்றி ..
அதிகாரத்தாலும், எதை குறித்தும் அக்கறையற்ற  மனநிலையாலும் நிரம்பி வழியும் நம் மனதினை நிச்சயம் ஒரு சுதந்திர வாழ்வுக்காக ஏங்கும் நம் மன  நிலையை இந்த உண்மை கதை உருவாக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும்  இல்லை.என் வலைப்பதிவை வாசிக்கும் வாசகர்களுக்கு என் வேண்டுகோள் - தயவு செய்து யானை டாக்டர் கதையை ஒரு முறை படியுங்கள்....

நூறு நாற்காலிகள் 
புத்தருக்கு போதி மரம் போல எனக்கு நூறு நாற்காலிகள். இது போன்ற சமூகங்கள் இருப்பதே எனக்கு தெரியாது என்பது அவமானமாய் இருக்கிறது. இது வரை வாழ்ந்து வரும் போலியான பொருலாசைகொண்ட வாழ்கையை நினைத்து வெறுக்கிறேன். அந்த கையாலாகாத கதாநாயகனை தோளோடு சாய்த்து தேற்ற வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரே ஒரு பிரச்சனை…அவனுக்கு ஆறுதலாய் நான் இருப்பதை விட்டு விட்டு நான் கதறி அழுது விட வாய்ப்பு நிறைய உண்டு…..
இதைப் போன்ற நெஞ்சை உலுக்கிப்போடும் கதை இப்படி ஒரு நேர்மறையான முடிவை அடையும் என்று சற்றும் எதிர்பார்கவில்லை நான். பெரும் மன நிறைவைத் தந்தது. முழுவதுமாய் வெளிப்படுத்த முடியாத என் உணர்சிகளை என் எழுத்துக்களின் மூலம் ஜெயமோகனுக்கு சமர்ப்பிக்கிறேன்.

சோற்றுக்கணக்கு
மனிதன் எதற்கு வேண்டுமானாலும் கணக்குப் பார்க்கலாம். ஆனால் சோற்றுக்கு கணக்குப் பார்க்கலாமா? உண்மையில் உற்றார் உறவினர் என்பவர்கள் கணக்குப் பார்க்கத்தானே செய்கிறார்கள்? அப்படியிருக்கும் இந்தக் காலத்தில் ஒரு உணவு விடுதி நடத்துபவர் அப்படி இருக்கமுடியுமா? முடியும் என்பதை ஜெயமோகனின் இந்தக் கதை சொல்கிறது. ஜெயமோகனின் அறம் சிறுகதைகளில் சோற்றுக் கணக்கு ஆகச்சிறந்த கதைகளுள் ஒன்று. இந்தக் கதை தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் நுட்பங்கள் அநேகம். இந்தக் கதை நம்முள் ஏற்படுத்தும் தாக்கம் ஆழமானது. கதையைப் படித்து முடித்ததும் நம் மனம் கொள்ளும் பரவசம், நம் மூளையில் ஏற்படும் பாய்ச்சல் வார்த்தையில் சொல்லும் தரமன்று.
பசி எவ்வளவு கொடுமையானது என்பதை நாம் அறியாதவர்கள் அல்ல. மனிதனுக்கு அவனுடைய வாழ்வில் எத்தனையோ இல்லாமை இருக்கலாம் ஆனால் உணவு இல்லாமையைப் போலக் கொடியது வேறு ஒன்றுமில்லை.
கெத்தேல் சாகிப்பை நாம் முழுவதுமாகப் புரிந்துகொள்ள ஜெயமோகன் காட்டும் மூன்று காட்சிகளின் சித்தரிப்பும், அந்தச் சித்தரிப்பிலிருந்து எழும் அவரது மூன்று பரிமாணங்களையும் நாம் உணரவேண்டியது அவசியம்.
முதல் காட்சி:
மாமிக்கு கொஞ்சம்கூட மனமில்லை என்பது அன்றைக்குச் சாயங்காலம் சாப்பிடும்போதே தெரிந்தது. எல்லாரும் அப்பளம் பொரியல் சாம்பாருடன் சாப்பிடும்போது என்னை அழைக்கவில்லை. சாப்பிட்டு முடித்தபின்னர் அடுப்படியில் ஒரு அலுமினிய பாத்திரத்தில் எனக்கு தண்ணீர்விட்ட சோறு அதிலேயே விடப்பட்ட குழம்புடன் இருந்தது.
இரண்டாம் காட்சி:
அம்மா நல்ல அரிசி வாங்கி மீன்குழம்பு வைத்து அவளே பரிமாறுவாள். ஆனால் எத்தனையோ காலமாக நீண்டு நின்ற வறுமை. அவளுக்கு பரிமாறத்தெரியாது. ஒரு கண் எப்போதும் பானையில் இருக்கும் சோறையும் சட்டியில் இருக்கும் குழம்பையும் கணக்குபோடுவதை தவிர்க்க தெரியாது. அகப்பையில் அவள் சோறோ குழம்போ அள்ளினால் அரைவாசி திரும்ப கொட்டிவிடுவாள். இன்னும் கொஞ்சம் குழம்பு என்றால் அவளுடைய அகப்பை சில சொட்டுகள் தான் அள்ளும். கையோ மனமோ குறுகிவிட்டது. சாளைப்புளிமுளமும் சம்பா அரிசி சோறும் அவள் அள்ளி வைக்கையில் நான் நாலாவது உருண்டைச் சோறில் வயிறு அடைத்த உணர்வை அடைவேன். அந்த சோற்றை அள்ளி வாயில் போடுவதே சலிப்பாக தெரியும். பலவீனமாக ’சாப்பிடுடா’ என்பாள் அம்மா.
மூன்றாம் காட்சி:

என்னருகே வந்தவர் என்னை ஏறிட்டுப் பார்த்தார். ‘எந்தா புள்ளேச்சன், புத்தனா வந்நதா?’ என்றார். என்னை வெள்ளாளன் என்று எப்படி கவனித்தார் என்று வியந்து பேசாமல் இருந்தேன். சோற்றைக் கொட்டி அதன் மேல் குழம்பை ஊற்றினார். ஒரு பெரிய பொரித்த சிக்கன் கால். இரண்டு துண்டு பொரித்த மீன். ‘தின்னு’ என்று உறுமியபின் திரும்பிவிட்டார். அதற்கு எப்படியும் மூன்று ரூபாய்க்குமேல் ஆகிவிடும். என் கைகால்கள் பதற ஆரம்பித்தன. சோறு தொண்டையில் அடைத்தது. சட்டென்று திரும்பிய சாகிப் ‘நிங்ங அவிடே எந்து எடுக்கிணு? தின்னீன் பிள்ளேச்சா’ என்று ஒரு பயங்கர அதட்டல் போட்டார். அள்ளி அள்ளி சாப்பிட்டேன். அந்த ருசி என் உடம்பெல்லாம் பரவியது. ருசி! கடவுளே, அப்படி ஒன்று உலகில் இருப்பதையே மறந்து விட்டேனே. என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டி வாய் வரைக்கும் வழிந்தது.



உறவும் சரி, பெற்ற தாயும் சரி சோற்றுக்குக் கணக்குப் பார்க்கும்போது கெத்தேல் சாகிப்பின் இந்தப் பண்பு வார்த்தைகளால் அளவிட முடியாதது. அவர் உணவு விடுதி நடத்துகிறார். எல்லோருக்கும் இலவசமாக உணவு கொடுக்கிறார். பணம் இருப்பவர்கள் கொடுக்கலாம், இல்லாதவர்கள் வெறுமே சாப்பிட்டுப் போகலாம் என்பது ஒரு பக்கமிருப்பினும், அதைச் செய்யும் விதத்தில் அன்பு, இரக்கம், பாசம் இருப்பது அவசியம். இல்லையேல் அந்தச் செயலால் ஒரு பயனும் இல்லை. இலவசம் என்பதற்காகச் சாப்பிடுபவன் குற்ற உணர்வு இல்லாமல் சாப்பிட வேண்டும் என்ற அவரின் உயர்ந்த பண்பு இதனால் வெளிப்படுகிறது. அது மட்டுமல்ல, அந்த உணவின் ருசி, இது வெறும் கடனுக்காகச் செய்யும் காரியமல்ல கடமைக்காகச் செய்யும் காரியம் என்பதையும் நமக்குக் காட்டுகிறது. இங்கேதான் கெத்தேல் சாகிப் வானளவு உயர்ந்து நிற்கிறார். இது அவரது முதல் பரிமாணம்.
தான் பல வருடங்களாக சாப்பிட்டதற்கு ஒட்டுமொத்தமாக பணத்தை உண்டியலில் போடுகிறான் கதைசொல்லி. ஒரு பக்தன் கடவுளின் சன்னிதியில் உண்டியலில் காணிக்கையிடும் காட்சிக்கு நிகரானது இது. கடவுளுக்கு நாம் ஏதேனும் உபகாரம் செய்யமுடியமா? இருந்தும் நம் சிற்றறிவு அதில் சற்றே திருப்பதி அடைகிறது. அவரது சோற்றுக் கணக்கை எத்தனை எத்தனை பணம் கொட்டிக் கொடுத்தாலும் தீர்க்கத்தான் முடியுமா? ஏழேழு ஜன்மத்திற்கும் தீர்க்க இயலாத ஒரு கடன் அல்லவா? கெத்தேல் சாகிப் அவனைப் பார்த்து சற்றே தலையசைத்து ஒரு பார்வை பார்த்து விடமாட்டாரா என்ற ஏக்கம் அவனுக்கு மட்டுமல்ல நமக்கும் ஏற்படுகிறது. ஆனால் அப்படி பார்த்துவிட்டால் அவர் செய்த காரியத்தின் மகத்துவம் நமக்கு விளங்காமலே போய்விடும். மாறாக நம் அகங்காரம், “பார்த்தாயா இதுவரை சாப்பிட்டதற்கு மொத்தமாக கணக்குத் தீர்த்துவிட்டேன்” என்று கொக்கரிக்கும். இத்தகைய காரியத்தைச் செய்வதும், அதை அன்புடன் செய்வதும் மட்டும் போதுமானது அல்ல. மாறாக அதற்கான பலனின் மீதும் பற்று வைக்காமல் இருப்பது போற்றுதற்குரியது. இந்த இடத்தில், கீதை காட்டும் கிருஷ்ணனின் தரிசனம் போன்று, கெத்தேல் சாகிப்பின் விஸ்வரூப தரிசனம் வெளிப்படுகிறது. நாம் அவரைக் கண்டு பரவசமடைந்து பேச்சடைத்து நிற்கிறோம். இது அவரது இரண்டாவது பரிமாணம்.
அவர் வெறும் உணவை மட்டும் தன் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறவில்லை மாறாக உணவுடன் சேர்த்து அற உணர்வையும் பரிமாறுகிறார். இந்த அறம், நேர்மை, அன்பு, இரக்கம் என்பது எப்போதும் ஒரு தரப்பை மட்டும் சார்ந்ததல்ல. இரண்டு தரப்பையும் சார்ந்தது. எனவே ஒரு தரப்பு மட்டும் தீவிரத்துடனும், தீரத்துடனும் இவற்றை நடைமுறைப் படுத்தும்போது அடுத்த தரப்பினரும் அவற்றைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதுவே காந்தியடிகள் மேற்கொண்ட அகிம்சையின் அடிப்படைத் தத்துவம். ஆகவே கெத்தேல் சாகிப்பின் இந்தப் பண்பு கதைசொல்லியிடம் இயல்பாகப் படிந்து விடுகிறது. கிடைத்த பணத்தை தன் அத்தையிடம் கொடுத்து அவள் கணக்கைத் தீர்க்கப்போகிறான் என்றே நாம் நினைக்கிறோம். ஆனால் அவளது மகளைத் திருமணம் செய்வதன் மூலம் அந்தக் கணக்கைத் தீர்க்கிறான். தன்னைப் புறக்கணித்து அவமானப்படுத்திய அத்தையின் மகளைக் கட்டிக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் அவனுக்கு இல்லை. இருந்தும் அப்படி ஏன் செய்கிறான் என்றால் அதற்குக் காரணம் கெத்தேல் சாகிப்புதான். அந்த உணர்வை அவனுக்குக் கொடுத்தது அவர்தான். இங்கே அவரது மூன்றாவது பரிமாணத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம்.
சோற்றுக்கணக்கு மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் கதை. அறம் சிறுகதை தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை. எப்போது படித்தாலும் புதிது போல இந்தக் கதை என்னை வெகுவாக அலைக்கழிக்கிறது. படித்துப் படித்துத் தீராத கதை இது.

ஜெயமோகனின் கதைகளைப் படிக்கும் போது எனக்கு கிட்டத்தட்ட இளையராஜாவின் இசையை கேட்கும் போது வரும் அதே உணர்வு ஏற்படுகிறது. ஏன் என்று தெரியவில்லை.இன்னும் இந்தப் படைப்பை பற்றி எவ்வளவோ எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை. மாயனூரின் அகண்ட காவிரியில் காவிரித் தாயின் முழுப் பிரயோகத்தில் குளிப்பதுபோல் ஒருசுகமான அனுபவம் இந்த கதைகளை படித்தது எனக்குள் ஏற்படுத்தியது. நல்ல மனிதர்கள், நல்ல நினைவுகள் மேலும் மேலும் நமக்கு அறிமுகமாவதில் மிகுந்த மகிழ்ச்சி!!!
 அறம் தொகுப்பின் லிங்க் கீழே
http://www.jeyamohan.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2#.VWNNn0bWG50

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

ஒண்டிக்கட்டை இதிகாசம்

சிபி கே. சால‌மனின் ஒண்டிக்கட்டை உலகம். "லட்சோப லட்ச ஒண்டிக்கட்டைகளுக்கு இந்தப்புத்தகம் தண்ணீர் தெளித்து விடப்படுகிறது" என்று சமர்ப்பணத்திலிருந்தே களைகட்டத் தொடங்கி விடுகிறது புத்தகம் ("A COMPLETE GUIDE FOR BACHELORS" என்று தமிழ் சினிமா ஸ்டைலில் என்று சப்டைட்டில் வேறு). ஒரு நல்ல சிறுகதையின் முதல் காட்சி போல் ஒரு மாதிரி பேச்சிலர் அறையின் நிழற்படத்துடன் (புதூர் சரவணன்) அட்டைப்படத்திலேயே தொடங்கும் இந்த‌புத்தகம் தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் ஆவுடையப்பன் என்கிற பாத்திரம் நகரத்தில் சந்திக்கும் பேச்சிலர் வாழ்க்கையின் சிக்கல்களின் தொகுப்பாய் ஒரு சுவாரசியாமான நாவல் போல் விரிந்து பின் ஒரு அழகான கவிதையின் கடைசி வரி போல் கதாநாயகர்களான பேச்சிலர்களுக்கு வரப்போகும் மனைவிக்கு சமைப்பதற்கு "ஆல் த‌ பெஸ்ட்" சொல்வதுடன் முடிகிறது. ஒரு சிற‌ந்த திரைக்கதைக்கு இணையான சுவாரசியத்துடன் சொல்லப்பட்டிருப்பது இப்புத்தகத்தை தனித்தன்மையுடன் நிற்கச்செய்கிறது. அடிப்படையில் இப்புத்தகம் பேச்சிலர் வாழ்க்கையின் சில்லறைத் தொந்தரவுகளுக்கு தீர்வு சொல்லும் வழிகாட்டியாகவே எழுதப்பட்டுருந்...

பெண் பெரியார்.

யார் இந்த பெண் பெரியார் என்று உங்களுக்கு வியப்பு ஏற்படக் கூடும். ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்க உள்ள சசிகலாவைத்தான் பெண் பெரியாராக உருவாக்க ஊடகங்கள் முயன்று வருகின்றன.   இப்படி இவரை பெண் பெரியாராக்க உருவாக்குவதில் பார்ப்பன ஊடகங்களும் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன என்பதுதான் விசித்திரமான செய்தி. தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பை மீண்டும் கிளப்ப ஒரு பெருங்கூட்டமே போராடி வருகிறது.   ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அவர் இறுதி அஞ்சலி வரை, பூலான் தேவி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் எப்படி இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை ஜெயாவின் அண்ணன் மகள் தீபாவைக் கூட உள்ளே விடாமல் ஆக்ரமித்தனர் என்பதை நாம் அனைவருமே பார்த்தோம். இப்போது அடுத்த கட்டமாக அதிமுகவுக்கு சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கி அவரை முதல்வராக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் அவர் கணவர் நடராஜன் எடுத்து வருகிறார். சசிகலா தலைமையிலான மன்னார்குடி கும்பல் தொண்ணூறுகள் முதல் அடித்து வந்த கொள்ளை என்ன என்பதை நாடே அறியும்.  சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட பெரும்பாலான வேட்பாளர்களி...

The Sasikala web: how a maze of shell companies link up to her, her family and friends

V.K. Sasikala.   These shell companies have fake addresses, no business activity and large transactions Sandhya Ravishankar Midas and Jazz Signet Exports Sri Jaya Finance and Investments Fancy Steels Jazz Cinemas Missing People, Fake Addresses In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two. A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman. The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier H...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

NO BRA DAY

ட்விட்டரில் எப்போதும் எலியும், பூனையுமாக அடித்துக் கொள்ளும் செக்ஸ் குயீன்களான பூனம் பாண்டேவும், ஷெர்லின் சோப்ராவும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக‌  ‘கேப்டன்  –  அம்மா’ மாதிரி திடீர் கூட்டணி அமைத்து ஆச்சரியப் படுத்தினார்கள். விஷயம் என்னவென்றால் அக்டோபர் 13, ‘மார்புக்கச்சை இல்லாத நாளாம்’. அதாவது  தமிழில்   மொழிபெயர்த்தால்  ‘ நோ   ப்ரா   டே ’.  இருவரும் மார்புக்கச்சை   அணியாமல்   ஏகப்பட்ட   போட்டோக்கள்   எடுத்து ,  ட்விட்டரில்   பகிர்ந்து   தங்களது ஃபாலோயர்களை   ஏகத்துக்கும்   குஷிப்படுத்தினார்கள் .   எலிசபெத்   மகாராணி   கூட  ’ நோ   ப்ரா   டே ’ குறித்து   ஏதோ   ட்விட்   போட்டிருக்கிறார்களாம் . இணையத்தில் மேலதிகமாக இதுகுறித்து தேடி வாசித்தபோது, நிறைய பெண்கள் ‘ப்ரா’ என்பதை அடிமைச் சின்னமாக பார்க்கிறார்கள் என்கிற அவசியத் தகவலை அறிந்துகொள்ள முடிந்தது. அது எவ்வாறு அவர்களை அடிமைப்படுத்துகிறது என்பதை ஒரு ஆணாக உணரமுடியவில்லை. கடந்த அக்.13 அன்று பெண்க...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

ஜெயலலிதா- துயரம் நிரம்பிய சகாப்தம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் டிசம்பர் 5ம் தேதியன்று இரவு 11.30 மணிக்குப் பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவமனையின் செய்திக்குறிப்பு கூறியது. அவரைப் போலவே, அவருடைய ஆட்சிக்காலத்தைப் போலவே அவருடைய மரணமும் கேள்விக்குரியதாய் ஆகியிருக்கிறது.  72 நாட்கள் மருத்துவமனை வாசம், எவராலும் பார்க்க முடியாமல் அவரை வைத்திருந்தது என்று எல்லாமே மர்மமுடிச்சுகளாய் இன்று தமிழக மக்கள் முன் கேள்விகளாய் நிற்கின்றன. ஜெயலலிதாவை இரும்பு மனுஷி என்று அவருக்கான அஞ்சலிக் குறிப்புகளில் பலர் எழுதியதைக் காண முடிந்தது. உண்மையில் ஜெயலலிதா இரும்பு மனுஷியா?  ஆம்! அவர் இரும்பு மனுஷிதான். எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில் ராணுவ வண்டியிலிருந்து ஜானகியின் உறவினர் நடிகர் தீபனால் இறக்கிவிடப்பட்ட ஜெயலலிதா பின்னாளில் எம்.ஜி.ஆரின் கட்சிக்குப் பொதுச் செயலாளரானார். எவரைப் பற்றியும் கவலைப்படாமல் தான் நினைத்ததை செய்து முடிக்கும் துணிச்சல் அவருக்கு இருந்தது. அதனால்தான் இரும்பு மனுஷி என்று பெயர் பெற்றிருக்கிறார்.  ஆனால், அவர் எதையெல்லாம் நினைத்தார், செயல்படுத்தினார். அந்த இரும்பு மனம் கொண்டு அவர் எப்படிச் செயலாற்றினார் என்பதை...

வெளிவராத புத்தகங்கள்-2016

 

வசீகர எழுத்துக்காரன்

சரவணன் சந்திரன்(எழுத்தாளர்) சென்ற ஆண்டுதான்(2016) முதல் நாவலான 'ஐந்து முதலைகளின் கதை" வெளிவந்தது.அதற்குள் அடுத்தடுத்து மூன்று நாவல்கள்.சமீபத்தில் இவரது"அஜ்வா" நாவல்,அதிர்வு நரம்புகளை மீட்டியது.சம கால இலக்கிய தளத்தில் தவிர்க்கமுடியாத குரல் சரவணனுடையது.எளிமையும் அழமான எழுத்துக்கள் ஈர்க்கின்றன.நாம் வாழ்வின் துயரங்களை,பிரச்சனைகளைப் பேசும் விரல்.ஒரு பக்கம் காட்சி ஊடகப் பணிகள், இன்னொரு பக்கம் மீன் வியாபாரம் என மக்களோடு புழங்கும் வாழ்க்கை...இந்த இளைஞனின் எழுத்துக்களைத் தனித்து அடையாளப்படுத்துகிறது சரவண சந்திரனின் பன்முக படைப்புகள் தமிழ் சமகால இலக்கியம் அதிக அளவில் நவீன வாழ்க்கையை பிரதிபலிப்பதில்லை.அந்த சூழலில் வந்திருக்கும் மாறுபட்ட எழுத்தாளர்களில் ஒருவர் சரவணன் சந்திரன். 12 மாதங்களில் அவர் நான்கு நாவல்களை எழுதிவிட்டார். ஐந்து முதலைகளின் கதை,ரோலக்ஸ் வாட்ச்.வெண்ணிற ஆடை,அஜ்வா நான்கும் உயிர்மை வெளியீடு. இதில் எதுவும் வரலாறு சார்ந்த புதினம் இல்லை.அல்லது வரலாற்றை பின்புலமாக வைத்துக்கொண்டு சமகாலத்தைப் பேசும் புனைவும் அல்ல."நான்கும் நான்கு வேறுபட்ட உலகங்களை  ...