சரவணன் சந்திரன்(எழுத்தாளர்)
சென்ற ஆண்டுதான்(2016) முதல் நாவலான 'ஐந்து முதலைகளின் கதை" வெளிவந்தது.அதற்குள் அடுத்தடுத்து மூன்று நாவல்கள்.சமீபத்தில் இவரது"அஜ்வா" நாவல்,அதிர்வு நரம்புகளை மீட்டியது.சம கால இலக்கிய தளத்தில் தவிர்க்கமுடியாத குரல் சரவணனுடையது.எளிமையும் அழமான எழுத்துக்கள் ஈர்க்கின்றன.நாம் வாழ்வின் துயரங்களை,பிரச்சனைகளைப் பேசும் விரல்.ஒரு பக்கம் காட்சி ஊடகப் பணிகள், இன்னொரு பக்கம் மீன் வியாபாரம் என மக்களோடு புழங்கும் வாழ்க்கை...இந்த இளைஞனின் எழுத்துக்களைத் தனித்து அடையாளப்படுத்துகிறது
சரவண சந்திரனின் பன்முக படைப்புகள்
தமிழ் சமகால இலக்கியம் அதிக அளவில் நவீன வாழ்க்கையை பிரதிபலிப்பதில்லை.அந்த சூழலில் வந்திருக்கும் மாறுபட்ட எழுத்தாளர்களில் ஒருவர் சரவணன் சந்திரன். 12 மாதங்களில் அவர் நான்கு நாவல்களை எழுதிவிட்டார். ஐந்து முதலைகளின் கதை,ரோலக்ஸ் வாட்ச்.வெண்ணிற ஆடை,அஜ்வா நான்கும் உயிர்மை வெளியீடு.
இதில் எதுவும் வரலாறு சார்ந்த புதினம் இல்லை.அல்லது வரலாற்றை பின்புலமாக வைத்துக்கொண்டு சமகாலத்தைப் பேசும் புனைவும் அல்ல."நான்கும் நான்கு வேறுபட்ட உலகங்களை
பேசுபவை.ஒன்று தெற்காசிய நாடுகளுக்கு வணிகம் செய்யப் போன ஒரு இளைஞனின் கதை,மற்றொன்று தரகு வேலைகள் முதன்மை பெற்ற அரசியல் உலகில் புகுந்த ஒரு சாமானியனின் கதை.மூன்றாவது படைப்பு விளிம்பு நிலை மனிதர்களின் கதைகள்" நான்காவதாக மீட்சிக்காக தவிக்கும் மனிதர்களின் கதைகள் என்கிறார் சரவணன் சந்திரன்.
"முழு நேர எழுத்தாளராக விரும்பவில்லை"என்று அவரே கூறினாலும் குறுகிய காலத்தில் கவனிக்கத்தக்க இளம் படைப்பாளராக உயர்ந்திருப்பவர் அவர் .
2016 ஆண்டிற்கான விகடனின் டாப் 10 இளைஞர்களில் ஒருவர் சரவணன் சந்திரன்.
வாழ்வனுபவமே ஒரு நல்ல எழுத்தின் சாரம் என்ற எளிமையான புரிதல்தான் அவரது படைப்புகளாக நம் முன் விரிகிறது. வழுக்கிச் செல்லும் மெட்ரோ ரயிலின் ஓசையற்ற பயணம் போல சரளமான நடை இவருடையது.இது வாசிப்பை எளிமையாக்குகிறது.அவரிடம் அதிகம் சொல்லக்கூடிய குறையே இந்த எளிமைதான்.சற்று நிதமான சித்தரிப்பு.எழுத்தில் கூடுதல் அடுக்குகளை சேர்ப்பது இன்னும் சிறப்பாக இருக்குமா என்பது அதிகபட்ச விமர்சனம். அவரது கவனம் வேறு திசைகளில் திரும்பாத பட்சத்தில் தமிழ் இலக்கியத்தளத்தில் இன்னும் சிறந்த எழுத்தாளராக சரவணன்சந்திரன் ஒரு நீண்ட இன்னிங்க்ஸ் போடுவார் என்று நம்பலாம்.
நாவல் : அஜ்வா
ஆசிரியர் : சரவணன் சந்திரன்
பதிப்பகம் : உயிர்மை
விலை : ரூ. 130
"அஜ்வா".. பாலைவனத்தில் வளரும் ஒரு வகை பேரிச்சம்பழம். அதை இங்கு கொண்டு வந்து செம்மண் பூமியில் விதைத்தால் அது துளிர் விட எத்தனை போராட்டமாக இருக்கும் ?? நம் கதையின் நாயகனும் அது போன்ற துளிர் விட முடியாத, ஆனால் துளிர் விடத் துடிக்க போராடும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
அஜ்வா கதையின் மையம் "போதை." அதாவது போதை வஸ்துகளுக்கு அடிமையான, மிகவும் பயந்த சுபாவம் கொண்ட ஒருவன், தன் நாடோடி வாழ்க்கையை, சந்திக்கும் மனிதர்களை, அவன் பார்வையிலேயே நமக்கு கதையாகக் கூறுகிறான்.
போதைக்கு அடிமையானவர்கள் என்றால், சினிமாவில் காண்பிப்பது போல் மோசமானவர்களாக, பித்து பிடித்தவர்கள் போல் ஏதோ ஒரு இடத்தில் அடைந்துக் கொண்டெல்லாம் இருக்க மாட்டார்கள் என்பது புரிகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை எளிதாக கண்டு பிடித்து விடலாம். ஆனால் போதை வஸ்துகளை பயன்படுத்துபவர்களை இனங்காணவே முடியாது என்றும் புரிந்து கொள்ள முடிகிறது. அதுவும் உச்சகட்ட போதையை அனுபவிக்க அவர்கள் செய்யும் செயல்கள் பயங்கரம் !!
ஒருவரின் எண்ண ஓட்டங்களை அவரின் பார்வையில் இருந்து சொல்லும்போது அது சுய புலம்பலாக மாறிவிட வாய்ப்பு அதிகம். அதுபோல் அல்லாமல் அந்த எண்ண ஓட்டங்களை எழுதுவது என்பது ஒரு கலை. அது இந்த நாவலின் முதல் அத்தியாயத்திலேயே உணர முடிகிறது.
"ஐந்து முதலைகளின் கதை"யில் வரும் மனிதர்கள் போல் இந்நாவலிலும் நிறைய மனிதர்கள்.. டெய்ஸி, ஜார்ஜ் ஆண்டனி, விஜி அண்ணன், சுந்தர் சிங் அண்ணன், அம்மா, அத்தை, மினிஸ்டர் தாய்மாமன், ராஜன் அண்ணன், கனகரத்தினம், சங்கீதா, ராஜகுரு, சம்பத்....... இன்னும் இன்னும்.... பலப்பல மனிதர்களோடு பலப்பல கிளை கதைகளோடு சிறிதும் சுவாரஸ்யம் குன்றாமல், நாம் தெரிந்திராத, அறிந்திராத ஒரு வாழ்க்கையை நம்முன் அழகாக படைத்திருக்கிறார் சரவணன் சந்திரன்.
டெய்ஸியுடனான அத்தியாயங்கள் அழகான கவிதைகள் !!
ஜார்ஜுடனான நட்பு, அந்த பிணைப்பு.. "ரோலக்ஸ் வாட்ச்" சந்திரனை ஆங்காங்கே நினைவூட்டியது !!
ஜார்ஜுடனான நட்பு, அந்த பிணைப்பு.. "ரோலக்ஸ் வாட்ச்" சந்திரனை ஆங்காங்கே நினைவூட்டியது !!
இந்த நாவலில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள். வாசகனை பார்த்து கதையின் நாயகன் இவ்வாறு கூறுகிறான்.. "உங்களுக்குத் தேவையில்லாத விஷயங்கள் குறித்துச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லையென்று நினைக்கிறேன். தவிர நீங்கள் ஒன்றும் குப்பைத் தொட்டியல்ல. தேவை இல்லாதவைகளை எல்லாம் உங்களிடம் கொட்டுவதற்கு"
வாசகனை கேனையனாக நினைத்து மலத்தை எழுத்தாக கொடுக்கும் எழுத்தாளர்களுக்கு மத்தியில், வாசகனை பார்த்து இப்படி சில வரிகள். பெருமையாக உள்ளது சரவணன் சந்திரன்.
சாருவின் எழுத்தை வாசிக்கும்போது நடுவில் சில வரிகள் ச்சட்டென்று நம்மை வெடித்துச் சிரிக்க வைத்து விடும். அதுபோல் இந்நாவலிலும் அவ்வப்போது நம்மை ச்சட்டென்று புன்னகை பூக்க வைத்து விடுகிறார் சரவணன் சந்திரன். உதாரணம்..
ஹோமோ செக்ஸ் என்ற வார்த்தையை உச்சரிப்பதே பாவம் என்று நினைக்கும் ஜார்ஜ், பள்ளியில் சக மாணவர்களுக்கு செக்ஸ் கதைகள் கூறிக்கொண்டிருக்கிறான். நம் கதையின் நாயகன் ஜார்ஜிடம் கேட்கிறான்.. "செக்ஸ் கதைகள் சொல்வது மட்டும் பாவமில்லையா" என்று. அதற்கு ஜார்ஜின் பதில்.. "பாவமன்னிப்புக் கொடுக்கற பாதிரியாரே ஒரு தடவை செக்ஸ் புத்தகம் வாங்கிப் போவதைப் பார்த்தேன்" என்கிறான். இன்னொரு உதாரணம்.. அந்த ஜட்டி மேட்டர்
:-)
ஹோமோ செக்ஸ் என்ற வார்த்தையை உச்சரிப்பதே பாவம் என்று நினைக்கும் ஜார்ஜ், பள்ளியில் சக மாணவர்களுக்கு செக்ஸ் கதைகள் கூறிக்கொண்டிருக்கிறான். நம் கதையின் நாயகன் ஜார்ஜிடம் கேட்கிறான்.. "செக்ஸ் கதைகள் சொல்வது மட்டும் பாவமில்லையா" என்று. அதற்கு ஜார்ஜின் பதில்.. "பாவமன்னிப்புக் கொடுக்கற பாதிரியாரே ஒரு தடவை செக்ஸ் புத்தகம் வாங்கிப் போவதைப் பார்த்தேன்" என்கிறான். இன்னொரு உதாரணம்.. அந்த ஜட்டி மேட்டர்

அஜ்வாவை ஒரே சிட்டிங்கில் வாசித்து முடித்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புத்தகத் திருவிழாவில் நீங்கள் வாங்க இருக்கும் புத்தக லிஸ்ட்டில் "அஜ்வா"வையும் தவற விடாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். வாங்கி வாசித்துப் பாருங்கள். அட்டகாசமானதொரு வாசிப்பனுபவம் கிடைக்கும் 

வாசகனை கேனையனாக மலத்தைக் கொடுக்கிற என்ற வரிகளைச் சகிக்க முடியவில்லை, எந்த எழுத்தாளனும் எழுத்தை மலம் என்று கூறுவதை ஏற்றகொள்ளமாட்டான்(நல்ல வாசகனும் கூடதான்).
பதிலளிநீக்குசசிகலா கூறுவது //பல எழுத்தாளர்களின் எழுத்துகளை படித்து மனம் கெட்டு அதில் தனக்கு தேவையான தன் ரசனைக்குரிய எழுத்துக்களை இனம் கண்டுகொண்ட போது ஏற்படும் சிலிர்ப்பின் மிகுதியால் அந்த வரிகளை கூறி இருக்கலாம் என்றே கருத வேண்டியிருக்கிறது அன்பரே..
பதிலளிநீக்கு