முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கழிவுகளின் காலம்.

மலர்ச்செண்டுகள் குப்பையில் வீசப்பட்டு, கழிவுகளால் அரியணைகள் அலங்காரம் செய்யப்படும் காலம் இது.  பொன் ஆபரணங்கள் தூர வீசப்பட்டு துருப்பிடித்த தகரங்கள் அரிதாரம் பூசிக்கொள்ளும் காலம் இது.   பேய்களின் அரசில் சாத்திரங்கள் பிணந்திண்ணும் என்றார் பாரதியார். ஒரு பேயின் மரணத்தால் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விடுதலை என்று நம்பிக்கை கொண்டிருந்த வேளையில், பேயின் இடத்தில் ஒரு புளி மூட்டை அமர்ந்து நம்மையெல்லாம் வதைக்கும் ஒரு அவலமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நள்ளிரவில் பதவியேற்கும் டிகே.ராஜேந்திரன்.
நள்ளிரவில் பதவியேற்கும் டிகே.ராஜேந்திரன்.
எடப்பாடி பழனிச்சாமியை நியமிக்கையில் சசிகலா ஒரு பொம்மையாகத்தான் அவரை நினைத்திருந்தார்.  122 எம்எல்ஏக்கள் இருக்கையில், முன்னாள் புளி வியாபாரியான புளிமூட்டை பழனிச்சாமியை சசிகலா தேர்ந்தெடுத்ததன் காரணம், அவரின் சிறந்த நிர்வாகத் திறமையோ ஆளுமையோ அல்ல.   காசை சரியாக வாங்கி கல்லாவில் போடுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே.   நிர்வாக விதிகளுக்கும், நடைமுறைகளுக்கும், மரபுகளுக்கும் உரிய மரியாதை தருபவர்தான் கருணாநிதி.  அதிகாரிகளை நியமிக்கையில், பணியில் இளையவரை மூத்த பதவிகளுக்கு நியமித்தால், அது அவருடைய மூத்த அதிகாரிகளை எப்படி பாதிக்கும், அதிகாரிகள் இடையே அது எப்படிப்பட்ட குழப்பத்தை விளைவிக்கும் என்பதையெல்லாம் நன்கு உணர்ந்தவர் அவர்.   அதிகாரிகள் நியமனத்தில் பணி மூப்புக்கு உரிய மதிப்பை அளிப்பார். தன்னை நள்ளிரவில் கைது செய்த அதிகாரிகளை கூட, ராமநாதபுரம் மண்டபம் அகதிகள் முகாமுக்கு நியமனம் செய்ததில்லை அவர்.   ஜெயலலிதாவால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட முத்துக்கருப்பனின் பணி இடை நீக்கத்தை ரத்து செய்து, அவருக்கு பதவி உயர்வு அளித்தவர்தான் கருணாநிதி.   அவரின் நள்ளிரவு கைதில் மிக முக்கிய பங்கு வகித்தவர் முத்துக்கருப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஜெயலலிதா இதற்கு நேர் எதிர். எடுத்தேன் கவிழ்த்தேன்தான்.  விதிகளோ, மரபுகளோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுபவர் அல்ல ஜெயலலிதா.  அவற்றை காலில் போட்டு மிதிக்கக் கூடியவர்.   அலெக்சாண்டர் போன்ற ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரியை ஒரு உதவி ஆய்வாளர் பணியிடமான மண்டபம் அகதிகள் முகாமுக்கு நியமனம் செய்தவர்தான் ஜெயலலிதா.  ஊரை கொள்ளையடித்து உலையில் போட்டவராக இருந்தாலும் ஜெயலலிதா தன்னுடைய அதிகாரிகளின் மீது வரும் ஊழல் புகார்களை பெரும்பாலும் புறந்தள்ளியதில்லை.   ஆதாரத்தோடு சிக்கும் அதிகாரிகளை, குறிப்பாக அவருக்கு பங்கு கொடுக்காமல் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அவர் தயங்கியதில்லை.
2001 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், நெல்லை மாவட்ட எஸ்பியாக இருந்தவர் சாரங்கன்.  தற்போது திமுகவில் இருக்கும் அய்யாவு எம்எல்ஏவின் துணையோடு சாரங்கன் ஒரு சுரங்க நிறுவனத்தின் பங்குகளை அபகரிக்க முயன்றார்.  ஓய்வு பெற்ற சுரங்கத் துறை அதிகாரியான அவரை, சென்னையிலிருந்து கைது செய்து, நெல்லை அழைத்துச் சென்று அவரை மருத்துவமனையில் அனுமதித்து, மருத்துவமனையிலேயே வைத்து மிரட்டி அவர் பணியாற்றிய நிறுவனத்தின் பங்குகளை எழுதி வாங்கினார் சாரங்கன்.   இந்தத் தகவல் உளவுத்துறை மூலமாக ஜெயலலிதாவை எட்ட, சாரங்கனை சென்னை வரவழைத்து வெளுத்துள்ளார்.  சாரங்கன் நெல்லை திரும்பிச் சென்று அலுவலகத்தில் நுழைகையில் அவருக்கான பணி இடைநீக்க உத்தரவு காத்திருந்தது.   லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால் புளிமூட்டை பழனிச்சாமி, தனக்கு ஒரு தலைமைக்கான ஆளுமையும் இல்லை, நீதி நியாயம் என்ற உணர்வும் இல்லை, சூடு சொரணையும் இல்லை என்பதை முதல்வராக பதவியேற்ற முதல் நாள் தொடங்கி நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.  ஆட்சியிலிருக்கும் ஒவ்வொரு கணமும் எம்எல்ஏக்களின் ஆதரவு அவசியம்.  ஒரே ஒரு எம்எல்ஏ அணி மாறினால் கூட தனது முதல்வர் பதவி பறிபோய் விடும் என்பதை உணர்ந்து, ஏறக்குறைய எம்எல்ஏக்களின் அடிமையாகவே இருந்து வருகிறார். எம்எல்ஏக்களுக்கே அடிமையாக இருக்கும் பழனிச்சாமியை அமைச்சர்கள் என்ன பாடு படுத்துவார்கள் என்பதை உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை.  பழனிச்சாமி தங்கள் தயவில்தான் ஆட்சி நடத்துகிறார் என்பதை நன்றாக உணர்ந்த எம்எல்ஏக்கள், தங்கள் தொகுதியில் நடக்கும் அரசின் ஒவ்வொரு திட்டத்திலும், திட்டத்தின் மொத்த ஒதுக்கீட்டையே கபளீகரம் செய்யும் அளவுக்கு சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள்.   திட்டங்களில் சுரண்டுவதோடு மட்டுமல்லாமல், உயர் அதிகாரிகள் பணி நியமனம் முதல், இளநிலை உதவியாளர் பணி நியமனம் வரை, புளிமூட்டை கவனத்துக்கு எடுத்துச் சென்று சிபாரிசு செய்யச் சொல்கிறார்கள். அவர்களின் தயவில் முதல்வர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் புளி மூட்டை பழனிச்சாமி, அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆடிக் கொண்டிருக்கிறார்.
51595-ynzkfmqjpp-1487244685
இந்த அயோக்கியத்தனங்களின் உச்சமாகத்தான் தமிழகத்தின் டிஜிபியாக டிகே.ராஜேந்திரனை நியமனம் செய்தது.    உச்சநீதிமன்றம் பிரகாஷ் சிங் என்ற காவல்துறை அதிகாரியின் நியமனத்தில், டிஜிபி நியமனம் தொடர்பாக பிறப்பித்த வழிமுறைகளின் அடிப்படை நோக்கமே, காவல்துறையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர், அரசியல்வாதிகளின் கைப்பாவையாக இருக்கக் கூடாது.   அரசியல் வாதிகளின் விருப்பத்திற்கேற்ப டிஜிபிக்கள் பந்தாடப்படக் கூடாது.  குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது பணியில் உறுதியாக நீடிக்க வேண்டும்.  அப்போதுதான் காவல்துறையை சரியாக வழிநடத்த முடியும்.  சட்டம் ஒழுங்கை சுதந்திரமாக பேணிக் காக்க முடியும் என்பதற்காகத்தான்.
இந்த விதிமுறையை வளைத்து ராமானுஜத்தை முதல் முறையாக சட்டவிரோதமாக இரண்டாண்டு பணி நீட்டிப்பு வழங்கி சட்டத்தை மீறினார் ஜெயலலிதா.   ஒரு நேர்மையான அதிகாரி, ஊழலுக்கு அப்பாற்பட்ட அதிகாரி என்று அதுவரை பெயரெடுத்திருந்த ராமானுஜத்தின் நேர்மை அந்த பணி நீட்டிப்பை ஏற்றுக் கொண்டபோது பள்ளிளித்தது.   ஒரு காவல்துறை அதிகாரியாக இல்லாமல் ஏறக்குறைய ஜெயலலிதாவின் அடிமையாகவே இருந்தார் ராமானுஜம்.   இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு முடிந்த பிறகும், ஆலோசகர் என்ற பதவியில் வெட்கமேயில்லாமல் தொடர்ந்தார் ராமானுஜம்.   இரண்டு ஆண்டு பணி நீட்டிப்பால், அவருக்கு பின்னால் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பது ராமானுஜத்துக்கு நன்றாகத் தெரியும்.   ஆனால் அவர் அது குறித்து கவலைப்படவில்லை.   இந்த சட்டவிரோத பணி நீட்டிப்பை ஏற்றுக் கொண்ட காரணத்தால், ஓய்வு பெற்று ஐந்தாண்டுகளை கடந்தும், ராமானுஜத்துக்கு மத்திய அரசு இன்னும் ஓய்வூதியம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.    தற்போது தலைமைத் தகவல் ஆணையராக இருக்கும் ராமானுஜம், இந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஓய்வூதியம் இல்லாமல் சோற்றுக்கு என்ன செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை.
அதன் பிறகு நடந்த அப்பட்டமான விதிமீறலாக மட்டுமில்லாமல் ஒரு அயோக்கியத்தனமான செயலாகவே டிகே.ராஜேந்திரனின் நியமனம் அனைவராலும் பார்க்கப்படுகிறது.   ராமானுஜம் பணி ஓய்வு பெற இருந்த நாளில் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு டிஜிபியாக்கப் பட்டது சட்டவிரோதமான செயல்தான் என்றாலும் அயோக்கியத்தனமானது கிடையாது.  ராமானுஜத்தின் மீது எவ்வித ஊழல் புகாரும் இருந்தது இல்லை.    ஆனால் தற்போது டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள டிகே.ராஜேந்திரன் குட்கா வியாபாரிகளிடம் மாத மாமூல் பெற்றது அம்பலமாகியுள்ளது.   ராஜேந்திரன் எந்தெந்த தேதிகளில் குட்கா வியாபாரியிடம் லஞ்சம் பெற்றார் என்பதற்காக வருமான வரித்துறையின் ஆவணங்கள் வெளியாகியுள்ளன. ராஜேந்திரனின் மீதான இந்தப் புகார்கள் யாரோ சாலையில் செல்பவரோ, அல்லது அவரால் பழிவாங்கப்பட்ட அதிகாரியோ கூறும் புகார்கள் அல்ல.    வருமான வரித்துறை என்ற மத்திய அரசின் ஒரு துறை உரிய விசாரணை நடத்தி, ஒப்புதல் வாக்குமூலம் பெற்று அரசுக்கு அனுப்பிய அறிக்கை.  இந்த அறிக்கையையே புளிமூட்டை பழனிச்சாமி உதாசீனம் செய்கிறார் என்றால் இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமா   இல்லையா ?
தகுதி வாய்ந்த உரிய அதிகாரிகள் பட்டியலில் இருந்தும் டிகே.ராஜேந்திரன் என்ற பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் என்று புளிமூட்டை பிடிவாதம் பிடிப்பதற்கான காரணம், டிகே.ராஜேந்திரன் வரலாறு காணாத சிறப்பு வாய்ந்த காவல்துறை அதிகாரி என்பதற்காக அல்ல. சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் நிகரற்றவர் என்பதற்காக அல்ல. புலனாய்வுப் புலி என்பதற்காக அல்ல.   கற்றறிந்த ஞானி என்பதற்காக அல்ல. நிர்வாகத்தில் ஈடு இணையற்றவர் என்பதற்காக அல்ல.   சட்ட நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் நிபுணர் என்பதற்காக அல்ல.   கொடுத்த காரியத்தை செவ்வனே செய்து முடிக்கும் சிறந்த அதிகாரி என்பதற்காக அல்ல. டிகே ராஜேந்திரனைப் போல ஒரு சிறந்த சொம்பு கிடையாது என்பதற்காகவே அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டை நியமித்துள்ளார் புளி மூட்டை.
புளிமூட்டை பழனிச்சாமிக்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வேறுபாடு தெரியாது. பாம்புக்கும் பழுதுக்கும் வித்தியாசம் தெரியாது.   அவருக்கு தெரிந்ததெல்லாம் கல்லாவில் காசை வாங்கிப் போடுவது மட்டுமே.   இது போன்ற நியமனங்களில் புளிமூட்டையின் கண்களும் காதுகளுமாக செயல்படுபவர், உளவுத்துறையின் தலைவராக உள்ள கேஎன்.சத்தியமூர்த்தி என்ற கவுண்டர். அனைத்து அதிகாரிகளின் நியமனத்தையும் தீர்மானிப்பவர் சத்தியமூர்த்தி மட்டுமே. சத்தியமூர்த்தி பரிந்துரைத்தால், ஒரு கான்ஸ்டபிளை ஐஜியாக பதவி உயர்வு தரும் உத்தரவில் கையெழுத்து போடக் கூட புளி மூட்டை தயங்க மாட்டார்.   ஒரு கான்ஸ்டபிள் ஒரு நாளும் ஐஜியாக முடியாது என்ற விதிகளெல்லாம் புளி மூட்டைக்கு தெரியாது.  சத்தியமூர்த்தி புளிமூட்டையிடம் அளித்த பரிந்துரை, சார் டிகே.ராஜேந்திரன் போன்ற விசுவாசமான அடிமையை நாம் தேடினாலும் கண்டு பிடிக்க முடியாது.  இதர அதிகாரிகள், அதிகாரிகளைப் போல நடந்து கொள்வார்கள்.  ஆனால் ராஜேந்திரன் அடிமையாக நடந்து கொள்வார்.   சொன்னதை செய்வார்.  எதிர் கேள்வி கேட்க மாட்டார்.   இவரைப் போன்ற நல்ல அடிமை இருப்பதுதான் நமக்கு நல்லது என்பதை அவர் வலியுறுத்தி உள்ளார்.   அந்த அடிப்படையில்தான் புளிமூட்டை டிகேஆர் என்ற பெட்ரோமாக்ஸ் லைட்டை தேர்ந்தெடுத்துள்ளார்.
கே.என்.சத்தியமூரத்தி
கே.என்.சத்தியமூரத்தி
டிகே.ராஜேந்திரன் குறித்து காவல்துறையில் யாரிடம் வேண்டுமானாலும் விசாரியுங்கள்.  ஒரே ஒரு அதிகாரி கூட அவரை நல்லவர், நல்ல அதிகாரி என்று சொல்ல மாட்டார்.  அப்படி ஒரு தயாள குணம் நிறைந்த ஒரு தரமான அதிகாரி.  உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு கண்டிப்போடு சேர்ந்து கருணையும் வேண்டும்.   அரசுப் பணியில், குறிப்பாக காவல்துறையில், பல்வேறு சூழல்கள் காரணமாக காவலர்கள், தலைமைக் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள் போன்ற பதவிகளில் உள்ளவர்கள் மீது பல்வேறு தண்டனைகள் நிலுவையில் இருக்கும்.  பல நேரங்களில் அவர்கள் தவறுகள் செய்திருப்பார்கள்.  சில நேரங்களில் உயர் அதிகாரிகளோடு ஏற்பட்ட மோதல் காரணமாகவும் இது நேரும்.  டிகே.ராஜேந்திரன் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்கள், இது போல தண்டனை வழங்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்து வருகையில் பெரும்பாலும் கருணையோடு நடந்து கொள்வார்கள்.  பல நேரங்களில் தண்டனை குறைப்புகளையும், சில நேரங்களில் தண்டனைகள் ரத்துகளையும் செய்வார்கள்.   யாருக்காவது டிகே.ராஜேந்திரன் உதவியிருக்கிறாரா என்று கேளுங்கள்.
லஞ்ச ஒழிப்புத் துறையில் அவரிடம் ஐந்து ஆண்டுகள் ஒரு அதிகாரி பணியாற்றினார்.   அவருக்கு முழு நேர வேலை இணை இயக்குநராக இருந்த டிகே.ராஜேந்திரன் மகளை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் இறக்கி விட கார் உரிய நேரத்துக்கு சென்று விட்டதா, காலை காய்கறி வாங்க வாகனம் சென்று விட்டதா, டிகே.ராஜேந்திரன் தினந்தோறும் படிக்கும் 12 செய்தித்தாள்களுக்கான மாதாந்திர பில்லுக்கு ரகசிய நிதியிலிருந்து பணம் கொடுக்கப்பட்டதா, சேலத்திலும் திருவண்ணாமலையிலும் உள்ள டிகே.ராஜேந்திரனுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் விளையும் விளைபொருட்கள் சந்தைக்கு அடைந்து விட்டதா என்பதை பார்ப்பது மட்டுமே.  ஐந்து ஆண்டுகள் அவர் இந்தப் பணியை மட்டுமே செய்து கொண்டிருந்தார்.    சில ஆண்டுகள் கழித்து டிகே.ராஜேந்திரன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.   அவரிடம் சென்ற அந்த அதிகாரி, சார் எனக்கு பதவி உயர்வு வருகிறது.  என்னை சென்னையில் எந்தப் பிரிவில் வேண்டுமானாலும் நியமியுங்கள்.  குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டார்.    சரி செய்கிறேன் என்று தலையாட்டி விட்டு, அவரை திருநெல்வேலிக்கு நியமித்தார் ராஜேந்திரன்.  இப்படிப்பட்ட அதிகாரிதான் டிகே.ராஜேந்திரன்.  சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்தவரை, ஆய்வாளர் நியமனத்துக்கு 3 லட்சமும், டிஎஸ்பி நியமனத்துக்கு 5 லட்சமும் வாங்கிக் கொண்ட பிறகே நியமன உத்தரவுகளை வழங்குவார் ராஜேந்திரன்.  அவரிடம் பணம் கொடுத்து நியமனங்களை பெற்ற அதிகாரிகளே என்னிடம் இந்தத் தகவலை கூறியிருக்கிறார்கள். சென்னை மாநகர ஆணையராக இருந்தபோது குட்கா வியாபாரியிடம் டிகே.ராஜேந்திரன் பெற்ற மாமூல் ஒரு சிறு துளியே.
சென்னை மாநகர ஆணையாளராக 2001ம் ஆண்டில் முத்துக்கருப்பன் இருந்தபோது சென்னை சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் பெரும் தடியடி நடந்தது. அப்போது இணை ஆணையராக இருந்த ஜார்ஜ், விடுதிக்குள் புகுந்து மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்க உத்தரவிட்டார்.  பல மாணவர்களின் கை கால் உடைக்கப்பட்டது.  இது பெரும் போராட்டத்தை உருவாக்கியது.  கருணாநிதியின் நள்ளிரவு கைது, அதன் பிறகு திமுக பேரணியில் நடந்த தாக்குதல் என்று அரசுக்கு தொடர்ந்து காவல்துறையால் அவப்பெயர் ஏற்பட்டிருந்த காரணத்தால் ஜெயலலிதா எரிச்சலடைந்து முத்துக்கருப்பனை அழைத்து விசாரிக்கிறார்.  அந்த தாக்குதலுக்கு முத்துக்கருப்பன் சற்றும் பொறுப்பு கிடையாது.  அந்த சம்பவத்தை தவறாக கையாண்டதன் முழு பொறுப்பு ஜார்ஜையே சேரும்.  ஆனால் முத்துக்கருப்பன் நான்தான் தடியடி நடத்த உத்தரவிட்டேன் என்றே கூறினார். ஜார்ஜ் பெயரை போட்டுக் கொடுத்து தப்பிக்க முயற்சிக்கவில்லை.  ஆனால் டிகே.ராஜேந்திரனாக இருந்திருந்தால், அதற்கும் எனக்கும் சம்பந்தமேயில்லை என்றுதான் கூறியிருப்பார்.  ஒரு தலைமைக்கான அடிப்படையான பண்பு, பொறுப்புகளை ஏற்றுக் கொள்வது.   பொறுப்புகளை தட்டிக் கழிப்பதை மட்டுமே தனது வாடிக்கையாக கொண்டவர்தான் ராஜேந்திரன்.
சில மாதங்களுக்கு முன்பாக, ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டுக்குள் கொள்ளையடிக்க முயன்று ஒரு காவலாளி கொலையுண்ட சம்பவம் நம் அனைவருக்கும் தெரியும்.   முதல் நாள் அதிகாலை அந்த சம்பவம் நடைபெறுகிறது.   மறுநாள் மாலை ஏழு மணிக்கு ஒரு மூத்த பத்திரிக்கையாளர் டிஜிபியாக இருக்கும் ராஜேந்திரனை தொடர்பு கொள்கிறார்.   சார் என்ன நடந்தது என்று கேட்கிறார்.   ராஜேந்திரன், “சில சுற்றுலா பயணிகள் அந்த எஸ்டேட்டுக்குள் நுழைந்து பழம் பறிக்க முயன்றிருக்கின்றனர்.  அப்போது காவலாளிகளுக்கும் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு கொலை நடந்து விட்டது” என்று கூறியிருக்கிறார்.   சார், வந்தவர்கள் முகமூடி அணிந்து வந்திருக்கிறார்கள், எஸ்டேட் பங்களாவுக்குள் நுழைந்திருக்கிறார்கள் என்று கேட்டதற்கு, “அது ஊட்டிங்க. குளுருக்காக எல்லாரும் முகமூடி போட்டுருப்பாங்க” என்று பதிலளித்திருக்கிறார் ராஜேந்திரன்.  இப்படி கூசாமல் பொய் பேசும் ராஜேந்திரனை அந்த பத்திரிக்கையாளர் மதிப்பாரா ?  ஒரு பத்திரிக்கையாளர் கேட்டால் அத்தனை விபரங்களையும் ஒரு அதிகாரி சொல்ல வேண்டுமென்ற அவசியம் இல்லை.  விசாரணையில் இருக்கிறது. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று தாராளமாக கூறலாம்.  ஆனால் ஒரு கொள்ளை சம்பவத்தை, கொய்யாக்காய் பறிக்க வந்த சம்பவம் என்று ஒரு டிஜிபி கூறலாமா ?  எதற்காக இந்த பொய் ?   இப்படி ஒரு பொய்யை சொன்னால் சிரிக்க மாட்டார்களா ? இதுதான் ராஜேந்திரன்.
IMG-20170701-WA0010
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் இது குறித்து பேசுகையில் “ஓய்வு பெற்றவர்களை வைத்து அரசை நடத்துவதையே இந்த அரசு வாடிக்கையாக கொண்டிருக்கிறது.  இந்த நடைமுறையால் பணியில் உள்ள பல்வேறு அதிகாரிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள்.  விதிமுறைகளையும் சட்டங்களையும் இந்த அரசு துளியும் மதிப்பதில்லை.  தற்போது டிஜிபியாக நியமிக்கப் பட்டிருக்கக் கூடிய டிகே.ராஜேந்திரன் மீது கடுமையான ஊழல் புகார்கள் உள்ளன.  இவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் இந்தியா முழுக்க விவாதிக்கப்பட்டுக் கொண்டுள்ளது.  ஆனால் இப்படிப்பட்ட நேரத்தில் அவரை டிஜிபியாக நியமித்துள்ளது இந்த அரசு.  இவர் மீதான குற்றச்சாட்டுகள் சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.   முதல்வரே, இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை நடைபெற்று வருகிறது என்று பதிலளித்துள்ளார்.  அதையும் மீறி ஊழல் விசாரணையில் உள்ள ஒரு நபரை டிஜிபியாக நியமித்துள்ளார்.
DMK-MLA-J-Anbazhaganஇந்த அரசு வெறும் எண்ணிக்கையின் அடிப்படையில் நடைபெறும் ஒரு அரசு.  எண்ணிக்கையில் மாறுபாடு ஏற்பட்டால், இந்த அரசு எந்த நேரம் வேண்டுமானாலும் கவிழும் நிலையில் உள்ளது. காவல்துறையை வைத்து எம்எல்ஏக்களை மிரட்டவும், அவர்களை பாதுகாக்கும் நோக்கத்துடன்தான் டிகே.ராஜேந்திரனை இந்த அரசு டிஜிபியாக அவர் ஓய்வு பெறும் நாளில் நியமித்துள்ளது.
பணி இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய அதிகாரிதான் டிகே.ராஜேந்திரன்.  ஆனால் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது கடுமையாக கண்டிக்கத்தக்கது.  நேர்மையான அதிகாரிகளுக்கு இந்த அரசாங்கத்தில் அங்கீகாரமே இல்லை.
திமுக இந்த விவகாரத்தை எளிதில் விட்டு விடாது.  வரும் திங்கட்கிழமை இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் மீண்டும் கேள்வி எழுப்புவோம்.   இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடர உள்ளோம்.    ஊழல் அதிகாரிகளை கவுரவிக்கும் இந்த அரசு குறித்து மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்” என்றார்.
திமுக தொடர்ந்து எடப்பாடி அரசின் ஊழல்கள் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிக் கொண்டுதான் உள்ளது.  ஆனால் எருமைமாட்டின் மீது மழை பெய்தது போல இந்த அரசாங்கம் எது குறித்தும் கவலைப்படுவதாக தெரியவில்லை.  தன்னை ஒரு தலித் என்று இழிவு செய்து விட்டார்கள் என்று நீலிக்கண்ணீர் வடித்த சபாநாயகர் தனபால், எந்த விவகாரத்தையும் பேச அனுமதிக்காமல் சட்டப்பேரவையை அடிமைகள் மன்றமாக நடத்தி வருகிறார்.
சென்னை நகரெங்கும் கிடைக்கும் குட்கா பாக்கெட்டுகளை வாங்கி சட்டப்பேரவையில் சபாநாயகர் முன்பாக கொட்டி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய திமுக, புதிய யோசனைகள் இன்றி வெளிநடப்பு செய்வதோடு தனது கடமையை முடித்துக் கொள்கிறது.  எதிர்க்கட்சிகளை பேசவே விடாமல் விவாதத்துக்கு இடமே தராமல் நடத்தும் சபையை 89 எம்எல்ஏக்களை வைத்திருக்கும் திமுக நடத்த விடலாமா ?   கூட்டத் தொடர் முடிந்து விட்டால்,  ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க எந்த வழியும் இல்லை என்பதை திமுக உணர்ந்ததாக தெரியவில்லை. அராஜகமாக நடத்தப்படும் சட்டப்பேரவையில் அராஜகம் செய்வதுதானே சிறந்த தந்திரம் ?
டிகே.ராஜேந்திரனின் நியமனம் குறித்து பேசிய ஒரு ஆங்கில ஊடக செய்தியாளர், “சமூகத்தை ஊழல் புற்றுநோய் போல அரித்து வருகிறது. குட்கா விற்பனையை ஒழிக்க வேண்டிய காவல்துறையினரே புற்றுநோய் பரவுவதற்கு உதவுகிறார்கள்.  குட்கா ஊழலில் டிகே.ராஜேந்திரனின் பெயர் சிக்கியது துரதிருஷ்டவசமானது என்றால், அவரின் டிஜிபி நியமனம் அதிர்ச்சியை அளிக்கிறது.  குட்கா விற்பனையில் காவல்துறை அதிகாரிகள் பங்குதாரர்களாக இருந்தனர் என்பது ஆவணங்களின் மூலமாக வெளிப்பட்டுள்ளது.
டிகே.ராஜேந்திரனை காவல் துறை தலைமை இயக்குநராக நியமித்ததன் மூலம் தமிழக அரசு ஒரு செய்தியை வெளிப்படையாக உலகுக்கு சொல்கிறது.   இந்த அரசில் ஊழல் ஏற்றுக் கொள்ளப்படும்.   ஊழல் புரிவோர் ஏற்றுக் கொள்ளப்படுவதோடு பாதுகாக்கவும் படுவர்.  அவர்களுக்கு பணி நீட்டிப்பும் வழங்கப்படும்.  கொள்ளையடிப்பதற்கு வழங்கப்பட்டிருக்கும் வெளிப்படையான லைசென்ஸ்தான் டிகே.ராஜேந்திரனின் நியமனம்.    மத்திய அரசின் உதவியோடு இது நடைபெற்றிருக்கிறது.   ஊழலை எதிர்ப்போம், ஒழிப்போம் என்ற மோடி அரசின் முகமூடி கிழிந்து விட்டது.  ஆனால் இவர்களின் பேராசைக்கு நாம்தான் பலிகடா ஆகப் போகிறோம் என்பதுதான் வேதனை” என்றார்.
டிஜிபி டிகே.ராஜேந்திரனுக்கு, தனக்கு கிடைத்த இந்த பதவி நீட்டிப்பு எத்தனை மதிப்புள்ளது என்பது தெரியும்.  எத்தனை தடைகளுக்கு இடையில் புளிமூட்டை பழனிச்சாமி தனக்கு இந்த பதவியை வழங்கியுள்ளார் என்பதும் தெரியும்.  இதற்காக அவர் தனது சுயமரியாதையை முற்றிலும் துறந்து, பல்வேறு சட்டவிரோதமான காரியங்களை செய்ய நிர்பந்திக்கப்படுவார் என்பதும் அவருக்கு தெரியும். ஆனால் இந்த பணி நீட்டிப்பை அடைவதற்கு எத்தகைய தியாகத்தையும் அவர் செய்வதற்கு தயாராகி விட்டார் என்பதையே அவரது நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.   நியமன உத்தரவு வருவதற்கு கடும் தாமதமாகி, காலை 10 மணி முதல் இரவு 11.30 வரை தன் அலுவலகத்திலேயே காத்திருந்தார் டிகே.ராஜேந்திரன்.  ஓய்வு பெற 30 நிமிடங்களே இருந்த நிலையில்தான் நியமன உத்தரவு வந்து சேர்ந்தது.  நள்ளிரவு வரை அவர், தனது அறையில் இருந்த ஃபேக்ஸ் மிஷினையே முறைத்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்ததாக கூறப்படுகிறது.
2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக விகே.ராஜகோபாலன் நியமிக்கப்பட்டார்.   அவருக்கு ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவு, 1996 ஆட்சியில் திமுக பதிவு செய்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்பதே.   அனைத்து கோப்புகளையும் பரிசீலித்த ராஜகோபாலன், வழக்குகளை ரத்து செய்ய முடியாது என்று மறுத்து விட்டார்.  ஜெயலலிதா கடும் கோபம் அடைந்தார்.   உடனடியாக போயஸ் தோட்டத்துக்கு வரவழைக்கப்பட்டார். உள்ளே அழைக்கப் படவில்லை.  தனது காரிலேயே காத்திருந்தார்.   சிசிடிவி கேமரா வழியாக அவர் காரில் அமர்ந்திருப்பதை பார்த்த ஜெயலலிதா, அவரை காரை விட்டு இறங்கி வெளியே நிற்குமாறு உத்தரவிட்டார்.   ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காரில் கை வைத்தபடி காத்திருந்த விகே.ராஜகோபாலன், திரும்பி வந்ததும் முதல் வேலையாக விருப்ப ஓய்வு எழுதிக் கொடுத்தார்.  டிகே.ராஜேந்திரனாக இருந்தால் என்ன செய்திருப்பார் தெரியுமா ? காருக்கு பக்கத்தில் தரையில் அமர்ந்திருப்பார்.    தமிழகத்தில் எந்த அதிகாரியும் செய்யாத ஒரு காரியமாக, நியமன உத்தரவு வந்ததும், முதல்வர் புளிமூட்டை பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார் ராஜேந்திரன்.  அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் எப்படி இருக்கப் போகிறார் என்பதற்கு இது ஒரு சான்று.
IMG-20170701-WA0013
இந்த நியமனம் குறித்து பேசிய காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர், “இந்த நியமனம், காவல்துறையின் ஒழுங்கமைவையே சிதைக்கும்.  படிச்சவன் சூதும் வாதும் பண்ணா, போவான் போவான் அய்யோன்னு போவான்” என்று பாரதியின் பாடலை மேற்கோள் கூறினார்.
இந்த பணி நீட்டிப்பை ஏற்றுக் கொண்டதன் மூலம் டிகே.ராஜேந்திரன் ஒரு மிகப் பெரும் தவறை செய்து விட்டார் என்றே தோன்றுகிறது.   அவரின் பேராசை அவரை பெரும் சிக்கலில் மாட்டி விட இருக்கிறது.   தமிழகத்தின் வரலாற்றில், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்தபோதே பணி இடைநீக்கம் செய்யப்பட்ட முதல் டிஜிபி ரவீந்திரநாத் ஐபிஎஸ். ஜெயலலிதாவின் 2001 ஆட்சியில் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.   ராஜேந்திரன் அந்த வரலாற்றை மீண்டும் படைப்பார் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.    ராமானுஜம் ஓய்வு நாளன்று இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டபோது அதனால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றம் செல்லவில்லை.   அதற்கு காரணம் ஜெயலலிதா. ஆனால் இன்று ஜெயலலிதா இல்லை.  இன்று இந்த அதிகாரிகள் நிச்சயமாக நீதிமன்றத்தை அணுகுவார்கள். டிகே.ராஜேந்திரனின் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களின் விபரத்தை தோண்டி எடுக்கப் போகிறார்கள்.
டிகே.ராஜேந்திரன் தனது நிம்மதியை 30 ஜுன் 2017 இரவு முதல் இழந்து விட்டார்.    அவர் எடுத்த இந்த தவறான முடிவுக்காக அவர் காலம் முழுவதும் வருந்தப் போகிறார் என்பது மட்டும் உறுதி.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...