முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"சப்பையும் ஒரு ஆம்பள தான்... எல்லா ஆம்பளையும் சப்பை தான்!" - ஆரண்யகாண்டம் எனும் கல்ட் க்ளாஸிக் #6YearsOfAaranyakaandam


 கார்த்திக் ஜீவானந்தம்

அன்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை பார்த்தால் நமக்கு அந்த சந்தேகம் வந்திருக்கும்.இது தமிழ் திரைப்படம் தானா?  மஞ்சளும், கருப்புமாக டிசைன் செய்யப்பட்டிருந்த அந்த போஸ்டரில் தெரிந்த பெயர் ஒன்றுமே இல்லை.யுவன்சங்கர் ராஜாவை தவிர.இன்று தியாகராஜன் குமாரராஜாவின் "அநீதிக் கதைகள்" திரைப்படத்திற்கு பெருங்கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.


"ஆரண்ய காண்டம்"

வெகுஜன மக்கள் அப்படி ஒரு படம் வந்ததா என்று சந்தேகத்துடன் கேட்டால் நாம் ஆச்சர்யப்படக்கூடாது.  இத்தனைக்கும் சினிமா விமர்சகர்கள் , ஆர்வலர்கள் , ரசிகர்கள் என அனைவரும் பாராட்டிய படம்,தேசிய , சர்வதேச விருதுகளைப் பெற்ற படம்.

 "படத்தின் ப்ளூ ரே (Blue Ray) சிடியை வெளியிடலாமே?" என்று அதன் தயாரிப்பாளரான எஸ்.பி.பி.சரணிடம் கேட்டபோது ,"அதை வெளியிட என்னிடம் பணம் இல்லை.உங்களிடம் இருந்தால் சொல்லுங்கள்" என்று அவர் அளித்த பதிலை பார்த்தே தெரிந்திருக்கும் ஆரண்ய காண்டத்தின் வணிகரீதியான வெற்றி.

சொல்லப்போனால் 8 வருடங்களை ஆரண்யகாண்டம் நிறைவு செய்திருக்கிறது.படப்பிடிப்பு 2008 ல் ஆரம்பிக்கப்பட்டு 2009 லேயே முழுவதும்  தயாராகிவிட்ட நிலையில் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டு தெற்காசிய திரைப்பட விழாவில் (SAIFF) சிறந்த திரைப்படத்திற்கான விருதை வாங்கிய, நியோ நாயர்(Neo-Noir) வகைமையில் வெளிவந்த முதல் தமிழ்த்திரைப்படமாக அடையாளப்படுத்தப்படும் ஆரண்ய காண்டம் சென்ஸார் போர்டின் '52' கட் களுக்குப் பிறகு UA சான்றிதழுடன் வெளியாகி இன்றுடன் ஆறு ஆண்டுகள் ஆகிறது. இதற்கு முன்பே புதுப்பேட்டை போன்ற படங்களில் நியோ நாயர் ஓரளவு முயற்சி செய்திருந்த போதும், அதை முழுமை செய்தது குமார ராஜா தான். 


நியோ நாயரில் பல்வேறு வடிவங்களில் கதைசொல்லல் அமைந்த திரைக்கதை முழுக்க மாஃபியா , கேங்ஸ்டர் போன்ற குற்றப் பின்னணியில் அமைந்திருக்கும்.
நியோ நாயர்  களத்தையும், கதை சொல்லலைச் சார்ந்தது.
மேலும் தொடரும் முன் இந்த "வேற" லெவல் டிரெயிலரை பார்த்து விட்டு தொடர்வது நலம்.

கதை  நிகழும் காலம் ஒரே நாள் - எட்டு கதாப்பாத்திரங்கள் 

*சிங்கப் பெருமாள் - பசுபதி
ஆரண்ய காண்டம்

பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் தான்  சிங்கப்பெருமாளுக்கு உயிர் கொடுத்தவர்.கருணை என்பதே பழக்கப்படாத இந்த தாதா ,தேவையில்லால் கத்திக் கொண்டிருக்கும் வழக்கம் அறவே இல்லாமல் "ஈ" என்று க்ளோசப்பில் பல்லை காட்டும் போது பகீர் அடிப்பது தான்  கேரக்டர் ஸ்கெட்சின் பலம்.

பசுபதியின் ஐடியாவை கேட்டபின், ரிஸ்க் வேண்டாமென சிங்கப்பெருமாள் கூற ,"நல்ல டீலு" என்று பசுபதி  மீண்டும் இழுப்பான். பல் விளக்கிக்கொண்டே கண்களை சுருக்கிக் கொண்டு வாயே திறக்காமல் மறுக்கும் அந்த பாவனையை நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். அது ஒரு தரிசனம் போல எளிதில் காணக்கிடைக்காத நடிப்பு.

ஓடிக் கொண்டே ,படத்தை நகர்த்திக் கொண்டிருக்கும் புத்திசாலி தளபதி கதாப்பாத்திரம் தான் பசுபதி.மையக் கதாப்பாத்திரம் பசுபதியாக நடித்திருக்கும் சம்பத் , தான் தமிழின் மிக முக்கியமான நடிகன் என்பதை நிரூபித்திருப்பார். 

*கொடுக்கா புலி - காளையன்
ஆரண்ய காண்டம்

வாழ்ந்து கெட்ட ஜமீன் குடும்பம் அப்பனும் மகனுமாய் பட்டணத்தை வந்தடைபவர்கள்.நேர்மாறான குணம் கொண்டவர்கள். காளையனாக குருசோமசுந்தரம். (இதில் தான் இவர் அறிமுகம்) எரிந்து விழும் மகனிடம் ,முகம் சுருங்கி ,"அப்பனை ஏச்சுப் புட்டானுவய்யா" எனும் போதும் , தாதா ஆகிய சிங்கப்பெருமாளை சேவல் சண்டையில்  வென்றதும் "ஏய் தோத்தாங்கொலி" என்று வம்பிழுத்து சேவலை பலி கொடுக்கும் போதும் வெவ்வேறு பரிமாணங்களில் வெளிப்படும் பாவனைகள் ப்ளாக் ஹியூமரின் நுண்ணிய தருணங்கள்.

அப்பனை மானாவாரியாக திட்டி விட்டு,கடைசியில் ''அப்பான்னா ரொம்ப பிடிக்குமா?" என்று கேட்கும் பசுபதியிடம், 
"அப்டில்லாம் இல்ல.. ஆனா அவரு எங்க அப்பா" எனும் போது கொடுக்கா புலியாக நடித்திருக்கும் மாஸ்டர் வசந்த் சொல்லும் போது அந்த நேசம் ஒருவழியாய் நமக்கு பிடிபடும்.

*சுப்பு - சப்பை
ஆரண்ய காண்டம்
சிங்கப் பெருமாளால் நடிகையாவோம் என்று ஏமாற்றப்பட்டு அவருக்கு மனைவியாக்கப்பட்ட பாவப்பட்ட பெண் , கதையின் ஆதாரப்புள்ளியாய் மாறும் தருணம் யாரோ  நம் தண்டுவடத்தில் தட்டியது போலிருக்கும். 

சப்பை சற்றே நளினமாக அந்த கொள்ளைக்கும்பலின் நடுவே "எல்லாமே பண்ணுவேன்" என்று சிணுங்கிக் கொண்டு, எப்போதும் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருப்பான்.ரவிகிருஷ்ணா நடித்திருக்கும் இந்த வேடம் விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோ கேமின் தீம் ஒரு ராணியை ,ஒரு சிறுவன் காப்பாற்றுவதைப் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். அது சுப்பு ,சப்பையை குறிக்கும் குறியீடு.


*கஜபதி - கஜேந்திரன்

குரூரத்தின் ஒட்டுமொத்த உருவமான அண்ணன் - தம்பி தாதாக்கள்.
சில வார்த்தைகளில் கதாப்பாத்திரங்களின் பின்னணியை விளக்கிவிடும் வசனங்களுக்கு இடையில் கஜேந்திரனுக்கு வைக்கப்பட்ட "விரல் கதை"  கதை சொல்லலின் வேறுபட்ட வடிவம்.

இப்படி அனைவரையும் இணைக்கும் திரைக்கதை எப்படி எல்லாம் சொல்லப்படுகிறது என்பது மிக முக்கியம். கதை மாந்தர்களின் வசனங்கள் , சுய விளக்கங்கள் , கதை சொல்லல்கள் ,பழக்கப்பட்டிருக்காத காட்சிகளுக்கு ,வித்தியாசமான பின்னணி இசை, ரிவர்ஸ் சீன்கள் . நாம் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என எதிர்பார்க்கிறோமோ அதெல்லாம் தப்பித் தவறியும் நடந்துவிடாத ஆச்சர்யம் தான் இதன் ப்ளஸ்.

பாடல்களே இல்லாத இத்திரைப்படத்திற்கு யுவனின் ஆல்டைம் பிஜிஎம் லிஸ்டில் கண்டிப்பாக இடம் உண்டு.

படத்தொகுப்புக்காக 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதினைப் பெற்ற ஆரண்ய காண்டத்தின் எடிட்டிங் சாம்பிளை அதன் டிரெய்லர்  மூலம் கண்டு கொள்ளலாம்.

இதற்கு முன் யாரிடமும் உதவி இயக்குனராய் பணியாற்றாத தியாகராஜன் குமாரராஜாவின் முதல் படமான இதில் எதிர்பார்க்காத கோணங்களில் வைக்கப்பட்டிருக்கும் கேமராவும் கதைசொல்லி. சைக்கிளுக்கு அடியில், வேலிகளுக்கு நடுவின் ,சுவர் துளையின் மத்தியில் என அந்த களத்தின் தன்மையை நமக்கு கடத்தும்.

படத்தின் தொடக்கத்தில் பகவத் கீதையின் வாசகம் வரும்.
"எது தர்மம்?"
"எது தேவையோ அதுவே தர்மம்"
முன்னெப்போதும் நாம் அறிந்திருக்காத மனிதர்களின் தேவைகளுக்கு அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை செயற்கை பூச்சு இல்லாமல் , கலாப்பூர்வமான ஒரு கதை வடிவத்தை வைத்ததற்காக தியாகராஜன்  குமாரராஜா தவிர்க்க முடியாத கலைஞன் ஆகிறார்.

 ஒன்றை உறுதியாய்க் கூறலாம். இதற்கு முன் நீங்கள் ஆரண்ய காண்டம் பார்க்காதிருந்தால், முன்னெப்போதும் ஏற்பட்டிருக்காத அனுபவம் உங்களுக்கு காத்திருக்கிறது..! 
அது உங்களை ஏமாற்றவும் செய்யலாம், ஆச்சர்யமும் படுத்தலாம் ! 

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...