முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பால் புதுமையினர்.. ! -

இது தான் நம் சமூகத்தில் இருக்கும் சிக்கல், ஆணும் பெண்ணும் கலவி கொள்ளுவதை இயற்கையென்றும், ஓர்பாலீர்ப்பு செயற்கையென்றும் நாம் புரிந்துக்கொள்வது ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள இனப்பெருக்க அம்சத்தினால் மட்டுமே.

"கந்தனுக்கு சவரம் செய்ய ஆரம்பித்தான், அவன் கரங்கள் முகத்திலும் கழுத்திலும் படும் போதும், உராயும் போதும் கந்தனுக்கு ஒரு ஆணுக்குரிய ஆசை ஏற்பட்டது. தொட்டும் தொடாததுமாய் வேலை செய்வதும், திடீரென உராய்வதும், பிறகு விலகி விடுவதும் கந்தனது ஆசையைப் பெருக்கின"
ஜி.நாகராஜனின் 'நாளை மற்றுமொரு நாளை' நாவலில் கந்தன் என்னும் கதாபாத்திரம் சவரக்கடையில் அனுபவித்த உணர்வை இப்படியாக விவரித்திருப்பார் கதாசிரியர். 
இதில் கந்தன் ஓர் பாலின ஈர்ப்பாளர் அல்ல, ஆனால் சவரக்கடையில் குறிப்பிட்ட உடற்பகுதியில் சீண்டப்படும் போது அவன் உடலில் உருவான கிளர்ச்சி ஒரு ஆணால் தூண்டப்பட்டவை. அந்தவொரு நொடி அவன் ஆணால் தூண்டப்பட்டிருப்பது அப்பட்டமான உண்மை, அவனுக்குள்ளும் ஓர்பாலின ஈர்ப்பு தன்மை இருந்திருக்கிறது, இருக்கிறது, எல்லோருக்கும் இருக்கிறது, அது எத்தனை சதவிகிதம் தலை தூக்கி பார்க்கிறது என்பதை பொறுத்துத் தான் ஒருவரின் பாலியல் ஈர்ப்பு தேர்வு Straight / Gay  / Lesbian  / Bisexual என்பது முடிவாகிறது.ஓர்பாலீர்ப்பை இயற்கைக்கு எதிரானதாக கட்டமைத்திருக்கும் சமூக நிலைப்பாட்டிலிருந்து இந்த உண்மையை ஒப்புக்கொள்வதில் சிக்கல் இருக்கத்தான் செய்யும், ஆனால் உண்மையென்பது முழுவுடல் மழிக்கப்பட்டு கத்திரி வெய்யலில் நிர்வாணமாய் நிற்பதை போன்றது, பொய் என்பது அதே காட்சியை நிலவெளியில் ரம்மியமாய் பார்ப்பதை போல. பொய்கள் கொஞ்சம் அழகூட்டும், அது கவிதையாய் புனைவாய் இருக்கும் பட்சத்தில் தொலைந்து போகட்டும் என்று விடலாம், ஆனால் அறிவியலிலும் வரலாறிலும் பொய்யென்பது அபத்தம். அப்படியானவொரு அபத்தம் தான் ஓர்பாலீர்ப்பை இயற்க்கைக்கு எதிரானது என்பதும்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து என் நண்பன் வந்திருந்தான், ஓர் பாலீர்ப்பு பற்றிய அவனுடனான விவாதத்தில் Gay வாக இருப்பது "இயற்கைக்கு எதிரானது இல்லையா?" என்று விவாதம் தொடர்ந்தது. 
நான் அவனிடம் கேட்டேன்
"நீ Gay கிடையாது தானே?"
"ஆமாம்"
"அப்போ உனக்கு ஆணுடனான ஈர்ப்போ, கவர்ச்சியா, சக ஆண் உன் உணர்வுகளை தூண்ட முடியாது என்று சொல்கிறாயா?"
"முடியாது"
"சரி, நான் உன் ஆணுறுப்பை தொட்டு தூண்டுவதற்கான வேலையை செய்தால், அது சலனமின்றி அப்படியே கிடக்கும் தானே..?" என்று கேட்டேன். 
வெடித்துச் சிரித்தான், "அது எப்படி?" என்று மழுப்பினான். இறுதியாக ஆணின் தூண்டுதலாலும் அங்கே பாலீர்ப்பு சாத்தியம் என்கிற அளவில் அவன் அடிப்படையை புரிந்துக்கொண்டான்.

இது தான் நம் சமூகத்தில் இருக்கும் சிக்கல், ஆணும் பெண்ணும் கலவி கொள்ளுவதை இயற்கையென்றும், ஓர்பாலீர்ப்பு செயற்கையென்றும் நாம் புரிந்துக்கொள்வது ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள  இனப்பெருக்க அம்சத்தினால் மட்டுமே. மனித இனத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதை தவிர்த்து அதற்கும் ஈர்ப்புக்கும் எந்தவொரு சம்மந்தமுமில்லை. மாட்டிடம் இருந்து நாம் பாலை கறப்பதற்கு முன் அது சுரப்பதற்கு, உற்பத்தியாவதற்கு எத்தனை விதமான இயற்கை வழிமுறைகள் உள்ளதோ, பால் உற்பத்தியான பின்பும் தயிர், நெய், வெண்ணை என்று அது எத்தனை கிளைகளாக ஒரே மூலப்பொருளில் இருந்து நமக்கு பல்வேறு வடிவங்கள் கிடைக்கிறதோ, அதை போன்றதொரு கிளை அமைப்பு தான் நம் மனித உடலும். பல்வேறு விதமான சங்கதிகள் நம் மரபணுக்களில் ஒளிந்து கிடக்கிறது, அவை ஒரே வடிவத்தை கொண்டவை அல்ல. ஏழு வண்ணத்தை ஒன்றோடு ஒன்று கலந்து புதுப்புது நிறங்களை உருவாக்குவதை போல, இன்றைய மனித உடல்  / உணர்வுகளுக்கு சில மூலக்கூறுகள் இருந்தாலும், அவை பல்வேறு வடிவங்களால் ஆனவை. இந்த அடிப்படையை புரிந்து கொண்டால், ஒரு ஆணுக்கும் ஆணுக்குமான ஈர்ப்பையும், பெண்ணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பையும் ஏலியன் தனமாக அணுக வேண்டியதில்லை. அதில் எந்த உணர்வு மேலோங்கி இருக்கிறதோ அதுவே நாம்.

மதம், நாகரீகம், கலாச்சாரம் என்று மனிதன் தத்தம் வசதிக்கு பின்னாளில் நிறுவிக்கொண்ட வாழ்க்கை முறையால், இயற்கையாய் மேலெழும் இத்தகைய உணர்வுகளை சாகடித்து இந்த உலகம் எதை சொல்கிறதோ, எதை அங்கீகரித்ததோ, அதையே ஏற்று வாழ்வது அறம் என்பது மனிதனின் இயல்பாகி போயிருக்கிறது. இயற்கையாய் தன்னிடம் வெளிப்படும் உணர்வை சாகடித்து, உலகத்திடம் தெரியப்படுத்தாமால் போலியான ஒரு வாழ்க்கையை வாழ்கின்றவர் பெரும்பான்மை கூட்டமாக இல்லாமல் போனாலும், இதனால் உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாகி வாழ்கிறவர்களை எண்ணிக்கைக்கு உட்படுத்த முடியாத அளவு மறைந்து  / மறைத்து வாழ வைத்திருக்கிறது இந்த சமூகம்.
அதை வெளிப்படுத்துகிறவர்கள் எத்தனை கேலிக்கும், கிண்டலுக்கும், தண்டனைக்கும் ஆளாகியிருக்கிறார்கள் என்பதை வரலாற்றிலும் நிகழ் காலத்திலும் நாம் பார்க்கிறோம். பெரும்பான்மை உலகத்தின் பார்வைக்கு எது சரியோ அதுவே சரி, எது தவறோ அதுவே தவறு என்னும் இலக்கணத்தை துச்சமென மதிக்காமல், இயற்கையாய் தன்னிடமிருந்து வெளிப்படும் உணர்வின் மூலம் நீயென்னை மதிப்பிடுவாய் என்றால், "உன் அந்த அங்கீகாரம், எனக்கு தேவையில்லை" என்று உலகம் முழுக்க இந்த குரல்கள் வலுப்பெற தொடங்கி இருப்பதின் வெளிப்பாடே LGBTQ +  அமைப்புகள் உருவாகியிருப்பதற்கான காரணம். குற்றவுணர்வோடு வாழும் மனிதர்களை உளவியல் ரீதியான சிக்கல்களில் இருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே வேளையில், இந்த பொது சமூகத்தோடு உரையாடவும், அது பற்றிய விழிப்புணர்வையும், அடுத்த கட்டத்திற்கு LGBTQ சமூகத்தை முன்நகர்த்தவும் பல நிகழ்வுகள் உலகம் முழுக்க அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அதில் ஒன்று தான் நான்  கடந்த சனிக்கிழமை  07. 07.2018 அன்று கலந்து கொண்ட சென்னையில் நடந்த 'குயர் இலக்கிய விழா'வும்.

திட்டமிடாமல் எதேச்சையாக கலந்துக்கொண்ட அந்த முழு நாள் நிகழ்வின் இறுதியில் பங்குபெறாமல் போயிருந்தால் 'கிரேட் மிஸ்' ஆகியிருக்கும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டது. குயர் இலக்கிய விழாவின் அமர்வுகளில் கலந்தாலோசிக்கப்பட்ட எதிலும் ஓர் இடத்தில் கூட இந்த சமூகத்திடம் மன்றாடும் கருத்துக்கள் இல்லை, "எங்களையும் புரிந்துகொள்ளுங்கள்" என்னும் தொனி இல்லை. விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கோபிநாத் நடிகர் விஜய் சேதுபதியிடம் "நீங்க எப்போதும் சிம்பிளா இருக்கீங்களே?" என்று கேட்பார், அதற்கு விஜய் சேதுபதி "நான் எப்போதும் கெத்தா தான் இருக்கேன், உங்களுக்கு அப்படி தெரியுது" என்பார். அது போல, குறை என்னிடம் இல்லை, அது பார்ப்பவரிடம் உள்ளது என்பதாக தான் முழு நிகழ்வின் உணர்வும் எனக்கு கொடுத்தது.
நிகழ்வின் இறுதியில், ஓர் பாலீர்ப்பாளராக இருந்து தம் பால்ய வயது வரை சந்தித்த வந்த அனுபவங்களின் அடிப்படையில்  "மோஹனஸ்வாமி" என்னும் நாவலை எழுதிய கன்னட எழுத்தாளர் வசுதேந்திரா பேசும் போது 'நான் அடுத்த ஜென்மத்திலும் Gay வாக பிறக்க ஆசைப்படுகிறேன், ஏனினில் ஒரு Gay வாக இருந்து இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்வது என்னும் அனுபவத்தை நான் பெற்று விட்டேன், இந்த அனுபவ நினைவுகள் என்னோடு இருந்தால், என்னால் இந்த உலகை எதிர்க்கொள்ள முடியும்" என்றார்.  

தன வாழ்வின் பெரும்பகுதியை இந்த சமூகத்தின் பார்வைகளுக்கு தீக்கிரையாக்கி, அடிகளை சுமந்து இன்று தங்கமாய் மின்னுகிறவர்களின் கடந்த கால வலிகளுக்கு நியாயம் சேர்க்க வேண்டுமானால், அதன் பலனாக எதிர்கால சந்ததியினர் தம் வாழ்க்கையை தொடங்குவதிலிருந்தே சமத்துவ சமூகத்தை நுகர்ந்திட வேண்டும், ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் பார்வையை எதிர்க்கொள்ள நாற்பது ஐம்பது வருடம் காத்திருக்க வேண்டுமானால், எந்த சமூகம் வாழத்தொடங்கப் போகிறது?
சமூகத்தில் கருத்து மாற்றங்கள் இரண்டு வழியில் நிகழும்,
1. சமூகம் தாங்கி வந்த பிற்போக்குத்தனங்களை அதன் வேரிலிருந்தே கண்டறிந்து உண்மையை, சமத்துவத்தை உள்ளிருந்து உணர்தல்
2. பெரும்பான்மை சமூகம் ஒரு கருத்தை ஏற்கும் போது மறுப்பேதும் சொல்ல முடியாமல் நாமும் அதன் நெருக்கடியால் அதை ஏற்பதை போல நடித்தல்
LGBTQ + சம்மந்தப்பட்ட புரிதலிலும் மாற்றங்களிலும் பெரும்பாலும் இரண்டாவது நிலையோடு தான் நிற்கிறது. கரிசனத்திற்காக ஏற்பது, பாவப்படுவது, பெயரளவில் அங்கீகரிப்பது என்பது சமூகத்தின் உண்மையான மாற்றமல்ல. இதன் மூலம் பொது சமூகத்தில் பகிரங்கமாக நிலவும் சில பிற்போக்குத்தன மலங்களை வேண்டுமானால் மலர்களால் தற்காலிகமாக மூடலாம், ஆனால் மாற்றம் என்பது நியாயத்தை அதன் பிடியிலிருந்தே அணுகுவது. இரக்கத்திற்கு இரையாவதை விட இந்த மண்ணுக்கு இரையாகி போகலாம்.

"பால்புதுமையினர்" என்னும் அழகான வார்த்தையை இந்நிகழ்வில் நான் அறிந்துக்கொண்டேன், அதன் தன்மை உங்களுக்குள்ளும் எட்டிப்பார்க்கும், எனக்குள்ளும் எட்டிப்பார்க்கும், அது மேலெழும் சதவிகிதமே நம் விருப்பத்தேர்வு. அதில், விந்தையும் இல்லை வியப்பும் இல்லை என்னும் உண்மை உரைத்தால், இந்த கட்டுரை எழுதும் "என் தேர்வென்ன?" என்னும் கேள்வி உங்களை உறுத்தாது, அது என்னையும் உறுத்தாது.
மனம், மனசாட்சி, இதயம் போன்ற வார்த்தைகளை பல்வேறு வடிவத்தில் இந்த இலக்கிய உலகம் நூறு கோடி முறையாவது பயன்படுத்தியிருக்கும். அப்படியொன்று உண்மையிலேயே இருக்குமென்றால், அதற்கு கொஞ்சமும் துரோகமிழைக்காமல் மனசாட்சிக்கு உண்மையாய் கட்டுப்பட்டு வாழ்கிறவர்கள் தனது பாலின தேர்வை வெளிப்படையாய் சொல்லி வாழும் LGBTQ + தோழர்கள் தான்.
சமத்துவத்தை எந்த வடிவத்தில் பேசினாலும் அது இறங்கி வருவதல்ல, வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதல்ல, அதன் இருப்பிடத்திற்கு நாம் போய்ச் சேருவது.
-வாசுகி பாஸ்கர்

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

Politics is a dangerous game: Rajinikanth

In an in-depth interview at his home in Poes Garden, Rajinikanth spoke candidly to India Today not only about his life and films but also his political vision for Tamil Nadu, and a range of burning public issues. Raj Chengappa  Amarnath K. Menon  New Delhi  November 30, 2018 ISSUE DATE: December 10, 2018 UPDATED: December 1, 2018 10:26 IST Photographs by Bandeep Singh Will he, won't he? Southern superstar Rajinikanth has exhibited Hamletian indecision about pursuing a political career ever since he announced he was joining the fray in December 2017. So far, he has not even announced the name of his political party, choosing instead to deploy his massive fan following under the umbrella of his Rajini Makkal Mandrams and using them to build a cadre of party workers across Tamil Nadu. Meanwhile, the ageing star (he is 67) continues to do what he knows best-make iconic films. His latest-2.0, releasin...

உடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்!

எ வ்வளவுதான் உடற்பயிற்சி, டயட்னு இருந்தாலும் நாம நினைக்கிற உடலமைப்பு வர மாட்டேங்குதே!’ என்பதுதான் நவீனகாலத்துப் பெண்களின் பெரும் ஏக்கம். இவர்களுக்காக மார்க்கெட்டில் பல்வேறு வகையான `ஷேப்வேர்கள்’ (Shapewear) உலா வந்துகொண்டிருக்கின்றன.  சரியான உடல் வடிவம் என்பது முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளின் மூலம் அது சாத்தியமா? ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் அந்த உடையில் இருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது? - நிபுணர்கள் விளக்குகிறார்கள். ஷேப்வேர்களின் வரலாற்றுடன் பேச ஆரம்பிக்கிறார், `விஸ்வரூபம்’ பூஜா குமாரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி. கார்செட், ஷேப்வேராக மாறியது எப்படி? ``உடைகள் உடுத்துவது அவசியம் என்கிற நிலையைத் தாண்டி, ஃபேஷன் கான்செப்ட் வந்தபோதே ஷேப்வேர்களும் வந்துவிட்டன. 1730-களில் ஷேப்வேர்களின் முன்னோடியாக `கார்செட்’ (Corset) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கிரேக்கர்களால் ஓவன், லெதர், லினன் போன்ற துணி வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட `Griddles’ பயன்பாட்டுக்கு வந்தது. மேலாடைக்குள் அணியக்கூடிய இந...

தலைப்பு இல்லை

பெண்கள் தினம் என்பதால் துப்பட்டா என்று தலைப்பு வைக்க நினைத்தேன்; தலைப்பிலாவது துப்பட்டா இருக்கட்டும் என்று chennai pasanga da நினைக்கக் கூடும். சுச்சி அக்கா என்று தலைப்பு வைக்க ஆசைப்பட்டேன்; twitter பசங்கடாவ் கோபித்துக் கொள்வார்கள். Screenshotஐ ஏதோ love letter போல பகிர்ந்து "பாத்தீங்களா பாத்தீங்களா" என்று feel செய்து கொள்கின்றனர். Twitterஇல் நான் activeஆக இல்லாததுக்கு காரணம் நான் செய்ய வேண்டிய shares updatesஐ அவர்களே screenshot செய்து followers கிடைக ்கச் செய்து விடுகின்றனர். எனவே இதற்கும் promotion தேவையில்லை என்பதால் தலைப்பு இல்லை என்பதையே தலைப்பாக வைத்துவிட்டேன். Suchi சகோதரியின் சேவையினால் scandals சுவாரசியமற்றதாகிவிட்டது. ஆக அவருக்குப் பெண்கள் தின வாழ்த்து தெரிவித்துவிடலாம். இருந்தாலும் நான் ஆண்களின் குளியல் videoகள், masturbating videos எதிர்பார்த்தேன். இந்த scandalsஐ ஆராய்ந்ததில் ஒரு சிறப்பான தகவலைக் கண்டறிந்தேன். அதாவது ஆண்களுக்கு mobile selfie camera handle செய்யத் தெரியாது போலும். அல்லது கை நடுக்கமாகவும் இருக்கலாம். ஆண்களின் scandals வராததற்கு இந்த இயலாமை ம...

இட ஒதுக்கீடு Reservation

இட ஒதுக்கீடு பற்றிய விவாதம் வரும்போதெல்லாம் 80 வருடமா இருக்கே..இன்னும் எதுக்கு.. இன்னும் எத்தனை வருடங்களுக்கு பழைய கதையைச் சொல்லியே இட ஒதுக்கீடு கேட்பீர்கள்-னு கும்பலாச் சேர்ந்து குரல் எழுப்புவாங்க. இட ஒதுக்கீடு என்றதும் அம்பேத்கார் கொண்டு வந்தார் என்ற புரிதலும், அட்டவணை & பழங்குடியினத்தவர்க்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்ற புரிதலுமே பெரும்பான்மையோரிடம் உள்ளது ! இரண்டு புரிதலுமே தவறு ! இட ஒதுக்கீடு வறுமை அழிப்புத் திட்டமும் இல்லை ;வேலை வாய்ப்பை உண்டாக்கித் தருகிறத் திட்டமும் இல்லை ; என்ற புரிதல் முதலில் வேண்டும். இந்தியாவிலுள்ள இட ஒதுக்கீட்டுக்கு நீண்ட வரலாறு உண்டு. இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியதிலும், நடைமுறை ப்படுத்தியதிலும் தமிழகமே முன்னோடி. ஒவ்வொருக் கட்டத்திலும் கடுங் சோதனைகளைச் சந்தித்துள்ளது. இன்று இடைச் சாதியாராய் இருந்து கொண்டு இட ஒதுக்கீட்டின் பலனை நன்கு அனுபவித்துக் கொண்டே, அட்டவணை/பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீடைக் குறை சொல்பவர்களுக்கு இட ஒதுக்கீட்டை ஒரு வரலாற்றுப் பார்வையில் காட்டி,  பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டே மிகுதியான சிக்...

The Audacity of abuse !!!

Be you ever so high, the law is above you, said Lord Denning. But Jayalalitha and her coterie appear to think different. While small-time offenders are nabbed promptly, the sharks get away with murder and worse. Take this Govindaraj who was working as a Village Administrative Officer in a nondescript village in Salem District. He was trapped and arrested by the sleuths of Vigilance and Anti-Corruption in 2006 for demanding and accepting Rs.500/- from a villager for a solvency certificate. The case against the VAO was investigated swiftly. Sanction to prosecute him was obtained, charge-sheet was filed in the competent court, and trial was commenced and the case against Govindaraj ended up in his conviction in 2008, within two years from the date of registration of the case against him. Justice was thus swiftly served. Gratifying indeed, but then some are always more equal. For the case against Jayalalitha Jayaram for possession of assets disproportionate to her known sources of i...