முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மலையாள இதழ் தேசாபிமாணியில் வெளிவந்த கவர் ஸ்டோரியின் தமிழாக்கம்




👌




பெரியாரின் தொடர்ச்சி..

தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணாவுக்குப் பின் வேறெந்த சமூக, அரசியல் தலைவனின் இறுதி அஞ்சலிக்கும் இத்தனை லட்சம் மக்கள் திரண்டதில்லை என அரசியல் விமர்சர்கள் கலைஞரின் இறுதி அஞ்சலி நிகழ்வை மதிப்பிடுகிறார்கள். கிட்டதட்ட தமிழ்நாட்டின் அத்தனை கிராமங்களும், நகரங்களும் தங்கள் இயல்பை அப்படியே நிறுத்திவிட்டு சென்னையை நோக்கி திரும்பியது. ஒரு மகத்தான தலைவனால் மட்டுமே எந்த புற உந்துதல்களுமின்றி மக்களை இப்படி உந்தித் தள்ள முடியும்.
கலைஞர் கருணாநிதி நம் ஒவ்வொருவரின் மதிப்பீடுகளையும் மீறி உலகம் முழுக்க வியாபித்திருக்கும் மக்கள் மனதில் உறைந்திருந்தார். நீதிக்கட்சி, திராவிடக்கழகம், திராவிடமுன்னேற்றக்கழகம் என ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பெயரில் அடையாளப்படுத்தப் பட்டாலும், சமூக நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கான நியாயம் கேட்கும் அந்த இயக்கத்தின் குரல் காலத்துக்கு காலம் உரத்தும், தேய்ந்தும் இப்போதும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன. கடந்த நூறாண்டுகளை சமமாக நாம் பிரித்துக் கொண்டால் முன் பாதிக்கான போராட்டத்தை பெரியாரும், அண்ணாவும் முன்னெடுக்கிறார்கள். அவர்களிடமிருந்து கொள்கையையும் போராடும் குணத்தையும் அப்படியே சுவீகரித்துக் கொண்ட கருணாநிதி அடுத்த ஐம்பதாண்டுகளை தன் தலைமையின் கீழ் முன்னெடுத்தார்.
அதில் நம் எதிர்பார்ப்புகளை மீறின சில சறுக்கல்கள் உண்டு. உலகம் முழுக்க தொடர்ந்து இயங்கும் அரசியல் இயக்கங்களில் இப்படியான சறுக்கல்கள் இல்லாத அரசியல் இயக்கம் எது? தன் முன்னத்தி தலைவர்களிடம் தான் பெற்ற தீயை இது நாள்வரை அணையவிடாமல் காத்ததுதான் கருணாநிதி என்ற ஆளுமையின் தனிப்பெரும் கம்பீரம். அதனாலேயே மக்கள் அவரை தன் நம்பிக்கைக்குரிய தலைவனாக தங்களுக்குள் அடைகாத்துக் கொண்டார்கள்.
திமுகவின் செயல் தலைவரும், கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் தன் தந்தையின் உயிரற்ற உடலுக்கு முன் நின்று ஒரு ட்விட் போட்டார். தமிழ் மக்களை ஒரு கணம் கலங்க வைத்த நான்கு வார்த்தைகள் அது.
“தலைவரே, இப்போதாவது ஒரு முறை
அப்பா என்று அழைத்துக் கொள்ளட்டுமா?”
கலைஞரும், ஸ்டாலினும் திமுக என்ற பேரியக்கத்தின் இரு மூத்த உறுப்பினர்களாகவே நடந்து கொண்டார்கள். எம்.எல்.ஏ.க்கான நேர்கர்ணலில் தலைவர் கலைஞர், பேராசியர் அன்பழகன் முன் ஒரு கல்லூரி மாணவனைப்போல ஸ்டாலின் நேர்காணலுக்காக அமர்ந்திருந்த ஒரு புகைப்படம் ஏனோ இன்னேரம் நினைவுக்கு வருகிறது.
நேர்காணல் இல்லாமல்கூட ஸ்டாலினால் அந்த இடத்தை சுலபமாக அடைந்துவிட முடியும். ஒரு ஜனநாயக இயக்கம் பொது வெளிகளில் அப்படி நடந்து கொள்ள முடியாது. அல்லது கூடாது என்பதை இருவரும், அக்கட்சித் தொண்டர்களைப் போலவே நன்கு அறிந்திருந்தனர்.
தன் பதினாங்காவது வயதில் ஒரு மாணவனாக தன் கையில் கொடியை ஏந்திக்கொள்கிறார் கருணாநிதி. தன் தொண்ணூற்றி நான்கில் தன் மரணத்தின் போதும் இடைவிடாத தன் போராட்டத்தை அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. ஆட்சியில் இல்லாதபோது வேறு மாதிரியும் ஆட்சியில் இருந்த போது ஆதிக்க சாதித் திமிரையும், துரோகங்களையும் எதிர்த்து அவர் போராட வேண்டியிருந்தது.

தன் வாழ்நாளில் தான் அதிகம் நேசித்த தன் அண்ணன் அண்ணா சமாதிக்கு அருகே தானும் விதைக்கப்பட வேண்டுமென அவர் விருப்பம் ஆட்சியாளர்களால் சுலபமாக துடைத்தெறியப்பட எடுத்த எல்லா முயற்சிகளும் சுலபத்தில் முறியடிக்கப்பட்டு, அவருக்கு மெரினா கடற்கரையில் அண்ணாவுக்கு அருகிலேயே கல்லறை என்ற முடிவு எட்டப்பட்டபோது துக்கமே பெரும் ஆனந்தமாக மாறி, மு.க.ஸ்டாலின் தன் கண்ணீரை கைகள் கொண்டு அடைக்க முயன்றும், தன் கைகளை நீட்டி தன் கட்சியின் மூத்த தலைவர் துரை முருகன், தன் தங்கை கவிஞர் கனிமொழி இவர்களை தன் தோள்களில் அணைத்த காட்சிப்பதிவு அத்தனை சுலபமாக கடந்துவிட முடியாத ஒன்று. அது காலத்தின் உறைநிலை. சமூக நீதியை எட்டுவதற்கான ஐம்பதாண்டு கால உழைப்பு அக்கண்ணீருக்கு பின்னிருக்கிறது.
உலகின் மகத்தான தலைவர்கள் அனைவருமே, தங்கள் மக்களிடம் பேச ஏதாவதொரு முறையை தேர்தெடுத்துக் கொள்வார்கள். எம்.ஜி.ஆர் க்கு உடல்மொழியும் கையசைப்பும் மட்டுமே போதுமானதாக இருந்தது.
கலைஞர் முரசொலி என்ற தன் கட்சி பத்திரிக்கையில் ’ உடன்பிறப்பே ! ‘ என தன் தம்பிகளை அழைத்து தன் எல்லா கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். எழுதி எழுதித் தீராத தன் பேனாவை சில சமயங்களில் ஓய்வெடுக்க வைத்து விட்டு மேடைகளில் பேச ஆரம்பித்தார்.
அன்பார்ந்த என ஆரம்பித்து சற்று இடைவெளி விட்டு கூட்டத்தின் மொத்த மௌனத்தையும் உள்வாங்கி
‘என் உயிரினும் மேலான உடன்பிறப்பே’
என அந்த வாக்கியத்திற்கு அவர் கமா போடுகையில் எழுகிற கரவொலியை தமிழகத்தின் எல்லா நகரங்களும் கிராமங்களும் விழித்திருந்து கேட்டிருக்கின்றன.
காற்று அந்த கரவொலியின் வலிமையை டெல்லிவரை எடுத்துச் சென்று சேர்த்திருக்கிறது. அதனாலேயே பல பிரதமர்களின் உருவாக்கத்தில் இந்த எளிய ஆனால் வலுவான திராவிட மனிதனுக்கு மகத்தான பங்கிருந்தது.
தந்தை பெரியாருக்கும், பேரறிஞர் அண்ணாவிற்கும் பல சமூக கனவுகள் இருந்தன. தீண்டாமை ஒழிப்பு, விதவைமறுமணம் எனத் துவங்கும் அப்பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டேயிருந்தன. தான் முதல்வராக பணியாற்றிய 5 முறையும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை ஒவ்வொன்றாக நிறைவேற்றியவர் கருணாநிதி. அரசின் உள்ளிருந்து எழுந்த எதிர்ப்புகளை அநாவசியமாக புறந்தள்ளினார்.
தெருக்களின் பெயர்மாற்றம், சாதியின் பெயர்களால் அடையாளப்படுத்தப் பட்ட அத்தனையையும் அப்புறப்படுத்தியது, வரலாற்றில் நிலைக்கும் நினைவிடங்கள் உருவாக்கம். வள்ளுவர் கோட்டம் துவங்கி வள்ளுவனுக்கு குமரிக்கடலில் சிலை வைத்தது வரை வேறெந்த அரசியல் தலைவனின் மூளைக்குள்ளும் உதிக்காத சிந்தனைகள்.
மக்கள் இவைகளை மறந்துவிடக்கூடாது என நினைக்கும்போதெல்லாம் மாநாடுகள், கவியரங்குகள் என தன் பகுத்தறிவு கொள்கைகளை காலத்தின் முன் விதைத்துக் கொண்டே இருந்த மகத்தான தலைவர் அவர் மறந்து கொண்டேயிருப்பது மக்களின் இயல்பு, நினைவுப்படுத்திக் கொண்டுயிருப்பது கலைஞனின் கடமை என்ற வாக்கியத்திற்கு ஒரு வாழும் உதாரணமாக நாம் கலைஞரின் பொது வாழ்வை மதிப்பிடலாம். .
தொண்ணூற்றி நான்கு வயது மரணம் ஒரு மூப்பனின் மரணம், ஒரு வயோதிக மரணத்திற்க்கான காத்திருப்பு என எம் தமிழ்மக்கள் யாரும் உதாசீனபடுத்த முடியாத மகத்தான மரணம் அது. வயோதிகர்கள், பெண்கள், குழந்தைகள் என கூட்டம் கூட்டமாய் தன் தலைவனின் முகத்தை கடைசியாய் ஒருமுறை தரிசிக்க வேண்டி தமிழகத்தின் எல்லா திசைகளிலிருந்தும் வந்து குவிந்தார்கள். திராவிடத்தின் பலம் தாங்காமல் சென்னை ஒரு நிமிடம் திணறிய காட்சியை உலகமே வியர்ந்து பார்த்தது.
கூவம் கரையோரங்களில் எந்த பாதுகாப்பும், சுகாதாரமுமின்றி குடிசை வீடுகளில் வாழ்ந்து தீர்த்த பல ஆயிரம் குடும்பகளை பல மாடி ஹவுசிங் போர்டு வீடுகள் கட்டி குடியமர்த்திய தன் தலைவனுக்கு அவர் ஒவ்வொரு முறையும் ஓட்டு கேட்க வரும் போது தங்கள் குழந்தைகளின் கையில் மலர்களை தந்து அவர் மீது தூவ வைத்து அழகு பார்த்த எளிய மக்களின் பேரன்புதான் இத்தனை லட்சம் மக்களை தன் தலைவனை வழி அனுப்ப கூட்டி வந்தது.
பலமுறை கட்சி உடைந்திருக்கிறது. தனக்கு நெருங்கிய பலரே துரோகத்தால் அம்மனிதனின் முதுகில் கூரிய கத்திகளை செருகியிருக்கிறார்கள். இனி அவ்வளவுதான் ‘திமுக’ என்ற சொல் தொடர்ந்து அவரின் எதிரிகளால் ஒரு இயந்திர தொழிற்சாலையின் உற்பத்தி போல நிகழ்ந்திருக்கிறது. அவைகளை ஒரு முற்றிய மரத்தின் உறுதியோடு தனக்குள்ளேயே ஏற்றுக் கொண்டு,
“என் உயிரிலும் மேலான உடன்பிறப்பே”
என பல லட்சம் மக்களின் ஆரவார வரவேற்பில் அந்த வலியை கரைந்திருக்கிறார்.
பெரியாரும் அண்ணாவும் கூட கலைஞர் அளவுக்கு களப்பணியையும், மக்கள் செல்வாக்கையும் பெற்றவர்கள் அல்ல.
பெரியார், தன் தொடர் பிரச்சாரம் மூலம் மக்கள் மனங்களை மெல்ல மெல்ல வென்றுவிட முடியும் என நம்பினார்.
சட்டத்தை இயற்றுகிற கைகள் தனதாயின் இச்சமூக அவலங்களை ஏன் நிறுத்திவிட முடியாது? என அண்ணா நினைத்தார் ஆனால் அதற்கு வாய்ப்பளிக்காமல் காலம் அவரைத் தின்று தீர்த்தது.
இவர்களிலிருந்து எழுந்து வந்த கலைஞர், எழுத்து, பேச்சு, செயல், கலை, இலக்கியம், ஆட்சி, அதிகாரம், என சகல துறைகளிலும் நின்றெழுந்து மக்களை தன் தொடர் செயல்பாட்டினால் மக்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டேயிருந்தார்.
திராவிட இயக்கங்கள் அதுவரை கட்டிக்காத்த மதச்சார்பின்மையை என்ன காரணத்தாலோ வாஜ்பாயின் அரசில் பங்கெடுத்ததின் மூலம் பலிகொடுத்தார் கலைஞர். ஆனால் நீண்ட வரலாற்றில் எந்த மகத்தான தலைவனுக்கும் அப்படி சில சறுக்கல்கள் இருக்குமென, அதை வரலாற்றின் பக்கங்களிலிருந்து நீக்கிவிடலாம்.
75 திரைப்படங்களின் உருவாக்கத்தில் பங்கெடுப்பு, பல நூறு நாடகங்கள், குறளோவியம், சங்கத்தமிழ், தொல்காப்பிய பூங்கா என இடைவிடாத எழுத்துச் செயல்பாடு. கைகள் அனுமதித்த வரை எழுத்து, சொல் சிதறாதவரை உரை, என கடைசிவரை இயங்கிய ஒரு சமூக செயற்பாட்டாளனாக தமிழ் சமூகத்தின் முன் உயர்ந்து நின்றவர் கருணாநிதி.
இதுவரை சுமார் 2 லட்சம் பக்கங்கள் அவரால் எழுதப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. சலிப்பின்றி இயங்கும் ஒரு படைப்பு மனத்திற்கே இதுவெல்லாம் சாத்தியம்.
ஆட்சியிழப்பு, குடும்ப சண்டைகள், முதுமை, நோய்மை, தனிமை, புறக்கணிப்பு இவைகளின் முதல் கோரிக்கை பலியே எழுத்தும், பேச்சும் தான். எச்சூழலிலும் கலைஞர் அதை மட்டும் தன் இன்னொரு கண் போல் காத்துக் கொண்டார்.
பல உச்சங்களை தொட்ட அடுத்த நாளே பள்ளத்தில் வீழ்ந்திருக்கிறார். இந்தியாவிற்கு ஒரு பிரதமரை உருவாக்கிக் கொடுத்தக் கணத்தில் அவர் லோக்கல் போலீஸ்காரர்களால் ஒரு கிரிமினலைப் போல நடு இரவில் இழுத்து செல்லப்பட்ட காட்சி, அவர் எழுப்பிய மரண ஓலம், தமிழகமெங்கும் இருந்த மக்களை அச்சப்பட வைத்தது. உள்ளுக்குள் ஆத்திரப்பட வைத்தது. லுங்கி கட்டிக் கொண்டு சென்னை சிறை வாசலில் அவர் நடத்தியப் போராட்ட காட்சி எளிய மக்களின் மனங்களில் பனி போல உறைந்திருந்தது.
அடுத்த தேர்தலில் அவரையே தங்கள் முதல்வராக பார்த்த பின்பே அந்த பனி உருகியது எனலாம்.
வரலாறு நெடுக போராட்டங்களையே தன் வாழ்வு பக்கங்களில் குறித்துக் கொண்டார் கலைஞர். அவர் இறந்த பின்பும் அதன் ஒரு நாள் மிச்சமிருந்தது.
அது தான், தான் மரணித்து தன் புதையலுக்காக அவர் நடத்தியப் போராட்டம். அதிலும் அவர்தான் இறுதியில் வென்றார்.
உலகமே வாயடைத்த நின்ற அந்த கணம்தான், போராட்டங்களால் நிறைவு பெறுகிற வாழ்வு அத்தனை எளிதானது அல்ல என்றும், கனி அழுகி வீரிய விதையாக முளை எழுப்பி, விருட்சமாகி, ஆயிரம் ஆயிரம் பறவைகளை தன் தோள் மீது அமர்த்தி வைத்து ஒரு போரட்ட ஆசிரியனைப் போல தன் நீண்ட நெடிய வாழ்வை பறவைகளுக்கும் கற்றுத் தரும். அப்படித்தான் கலைஞர் நம்முன்னே கம்பீரமாய் முன்செல்கிறார்.

( நன்றி - Bava Chelladurai Bava ) 

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

ஜெயலலிதா- துயரம் நிரம்பிய சகாப்தம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் டிசம்பர் 5ம் தேதியன்று இரவு 11.30 மணிக்குப் பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவமனையின் செய்திக்குறிப்பு கூறியது. அவரைப் போலவே, அவருடைய ஆட்சிக்காலத்தைப் போலவே அவருடைய மரணமும் கேள்விக்குரியதாய் ஆகியிருக்கிறது.  72 நாட்கள் மருத்துவமனை வாசம், எவராலும் பார்க்க முடியாமல் அவரை வைத்திருந்தது என்று எல்லாமே மர்மமுடிச்சுகளாய் இன்று தமிழக மக்கள் முன் கேள்விகளாய் நிற்கின்றன. ஜெயலலிதாவை இரும்பு மனுஷி என்று அவருக்கான அஞ்சலிக் குறிப்புகளில் பலர் எழுதியதைக் காண முடிந்தது. உண்மையில் ஜெயலலிதா இரும்பு மனுஷியா?  ஆம்! அவர் இரும்பு மனுஷிதான். எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில் ராணுவ வண்டியிலிருந்து ஜானகியின் உறவினர் நடிகர் தீபனால் இறக்கிவிடப்பட்ட ஜெயலலிதா பின்னாளில் எம்.ஜி.ஆரின் கட்சிக்குப் பொதுச் செயலாளரானார். எவரைப் பற்றியும் கவலைப்படாமல் தான் நினைத்ததை செய்து முடிக்கும் துணிச்சல் அவருக்கு இருந்தது. அதனால்தான் இரும்பு மனுஷி என்று பெயர் பெற்றிருக்கிறார்.  ஆனால், அவர் எதையெல்லாம் நினைத்தார், செயல்படுத்தினார். அந்த இரும்பு மனம் கொண்டு அவர் எப்படிச் செயலாற்றினார் என்பதை...

வெளிவராத புத்தகங்கள்-2016

 

பெண் பெரியார்.

யார் இந்த பெண் பெரியார் என்று உங்களுக்கு வியப்பு ஏற்படக் கூடும். ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்க உள்ள சசிகலாவைத்தான் பெண் பெரியாராக உருவாக்க ஊடகங்கள் முயன்று வருகின்றன.   இப்படி இவரை பெண் பெரியாராக்க உருவாக்குவதில் பார்ப்பன ஊடகங்களும் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன என்பதுதான் விசித்திரமான செய்தி. தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பை மீண்டும் கிளப்ப ஒரு பெருங்கூட்டமே போராடி வருகிறது.   ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அவர் இறுதி அஞ்சலி வரை, பூலான் தேவி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் எப்படி இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை ஜெயாவின் அண்ணன் மகள் தீபாவைக் கூட உள்ளே விடாமல் ஆக்ரமித்தனர் என்பதை நாம் அனைவருமே பார்த்தோம். இப்போது அடுத்த கட்டமாக அதிமுகவுக்கு சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கி அவரை முதல்வராக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் அவர் கணவர் நடராஜன் எடுத்து வருகிறார். சசிகலா தலைமையிலான மன்னார்குடி கும்பல் தொண்ணூறுகள் முதல் அடித்து வந்த கொள்ளை என்ன என்பதை நாடே அறியும்.  சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட பெரும்பாலான வேட்பாளர்களி...

ஒண்டிக்கட்டை இதிகாசம்

சிபி கே. சால‌மனின் ஒண்டிக்கட்டை உலகம். "லட்சோப லட்ச ஒண்டிக்கட்டைகளுக்கு இந்தப்புத்தகம் தண்ணீர் தெளித்து விடப்படுகிறது" என்று சமர்ப்பணத்திலிருந்தே களைகட்டத் தொடங்கி விடுகிறது புத்தகம் ("A COMPLETE GUIDE FOR BACHELORS" என்று தமிழ் சினிமா ஸ்டைலில் என்று சப்டைட்டில் வேறு). ஒரு நல்ல சிறுகதையின் முதல் காட்சி போல் ஒரு மாதிரி பேச்சிலர் அறையின் நிழற்படத்துடன் (புதூர் சரவணன்) அட்டைப்படத்திலேயே தொடங்கும் இந்த‌புத்தகம் தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் ஆவுடையப்பன் என்கிற பாத்திரம் நகரத்தில் சந்திக்கும் பேச்சிலர் வாழ்க்கையின் சிக்கல்களின் தொகுப்பாய் ஒரு சுவாரசியாமான நாவல் போல் விரிந்து பின் ஒரு அழகான கவிதையின் கடைசி வரி போல் கதாநாயகர்களான பேச்சிலர்களுக்கு வரப்போகும் மனைவிக்கு சமைப்பதற்கு "ஆல் த‌ பெஸ்ட்" சொல்வதுடன் முடிகிறது. ஒரு சிற‌ந்த திரைக்கதைக்கு இணையான சுவாரசியத்துடன் சொல்லப்பட்டிருப்பது இப்புத்தகத்தை தனித்தன்மையுடன் நிற்கச்செய்கிறது. அடிப்படையில் இப்புத்தகம் பேச்சிலர் வாழ்க்கையின் சில்லறைத் தொந்தரவுகளுக்கு தீர்வு சொல்லும் வழிகாட்டியாகவே எழுதப்பட்டுருந்...

The Sasikala web: how a maze of shell companies link up to her, her family and friends

V.K. Sasikala.   These shell companies have fake addresses, no business activity and large transactions Sandhya Ravishankar Midas and Jazz Signet Exports Sri Jaya Finance and Investments Fancy Steels Jazz Cinemas Missing People, Fake Addresses In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two. A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman. The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier H...

NO BRA DAY

ட்விட்டரில் எப்போதும் எலியும், பூனையுமாக அடித்துக் கொள்ளும் செக்ஸ் குயீன்களான பூனம் பாண்டேவும், ஷெர்லின் சோப்ராவும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக‌  ‘கேப்டன்  –  அம்மா’ மாதிரி திடீர் கூட்டணி அமைத்து ஆச்சரியப் படுத்தினார்கள். விஷயம் என்னவென்றால் அக்டோபர் 13, ‘மார்புக்கச்சை இல்லாத நாளாம்’. அதாவது  தமிழில்   மொழிபெயர்த்தால்  ‘ நோ   ப்ரா   டே ’.  இருவரும் மார்புக்கச்சை   அணியாமல்   ஏகப்பட்ட   போட்டோக்கள்   எடுத்து ,  ட்விட்டரில்   பகிர்ந்து   தங்களது ஃபாலோயர்களை   ஏகத்துக்கும்   குஷிப்படுத்தினார்கள் .   எலிசபெத்   மகாராணி   கூட  ’ நோ   ப்ரா   டே ’ குறித்து   ஏதோ   ட்விட்   போட்டிருக்கிறார்களாம் . இணையத்தில் மேலதிகமாக இதுகுறித்து தேடி வாசித்தபோது, நிறைய பெண்கள் ‘ப்ரா’ என்பதை அடிமைச் சின்னமாக பார்க்கிறார்கள் என்கிற அவசியத் தகவலை அறிந்துகொள்ள முடிந்தது. அது எவ்வாறு அவர்களை அடிமைப்படுத்துகிறது என்பதை ஒரு ஆணாக உணரமுடியவில்லை. கடந்த அக்.13 அன்று பெண்க...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

The Amma I knew

Lakshmi Subramanian and J. Jayalalithaa with the Jaya TV team in 2001 in Chennai I was waiting outside the gates of the Apollo Hospital in Chennai talking to my sources and media friends on the night of December 5 when the hospital issued a statement announcing the demise of chief minister Jayalalithaa Jayaram. Even though I had been expecting the announcement, when I actually received it, it shook me for a second from head to foot. My blood pressure shot up, and I felt sad for her as a woman. I had seen her at close quarters early in my career and I had experienced her charm as well as her ruthlessness. I had started my career in 1999 as a cub reporter at a regional TV channel that was on air for just three months. One day I accompanied a senior reporter to Kundrathur on the outskirts of Chennai, where Jayalalithaa’s auditor K. Rajashekaran lay in a bed in a small room. His hands and an eye were swathed in bandages and there were bruises and swellings all over his body. He...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

முதல்வர் ஓபிஎஸ்

.மகேஷ் இடது: டீக்கடை | வலது: ஓபிஎஸ் பூர்வீக வீடு தமிழ்நாட்டைத் தாண்டியும், “அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும்? சவால்களைச் சமாளிப்பாரா ஓபிஎஸ்?” என்று பேசிக்கொண்டிருக்கும் நிலையில், ஓபிஎஸ்ஸை வளர்த்தெடுத்த ஊர்க் காரர்கள் ‘இதுபற்றியெல்லாம் என்ன நினைக்கிறார்கள்?’ என்ற கேள்வியோடு பெரியகுளம் புறப்பட்டேன். பெரியகுளத்துக்காரர்கள் பேசப் பேச… ஓபிஎஸ் உருவம் பிரம்மாண்டம் ஆகிறது! பெரியகுளம் மக்களிடமும், பன்னீர்செல்வத் தின் முன்னாள், இந்நாள் நண்பர்களிடமும் நான் பேசியதில் தெரிந்துகொண்ட மிக முக்கியமான முதல் விஷயம், பொதுச் சமூகம் நம்பிக்கொண்டிருக்கிறபடி ஓபிஎஸ்ஸின் இன்றைய வளர்ச்சிக்கு அவருடைய விசுவாசம் மட்டும் காரணமல்ல; தன்னை நம்பி வேலையை ஒப்படைப்பவர்களிடம், அதைக் கச்சிதமாக முடித்துக்கொடுக்கும் திறனும் பெற்றவர் அவர் என்பது. அடுத்த முக்கியமான புரிதல், தன் வாழ்க்கைப் பாதையின் குறுக்கே சிக்கலான சாலைச் சந்திப்புகள் தென்படும்போதெல்லாம் எந்தச் சாலையில் செல்வது வளர்ச்சிக்கு நல்லது என்பதைத் தேர்ந்தெடுப்பதிலும் அவர் புத்திசாலி என்பது. இதயத்தில் இடம்பிடித்த பன்னீர் ஓபிஎஸ் வளர்ச்சிக் ...