முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்வர்ணலதாவின் குரல், அது வலிகளின் அடையாளம்; மோகத்தின் வடிவம்..! #RememberingSwarnalatha

ஸ்வர்ணலதாவின் குரல், அது வலிகளின் அடையாளம்; மோகத்தின் வடிவம்..! #RememberingSwarnalatha
ஸ்வர்ணலதா எனும் பெயர் 90களின் போதே எனக்குப் பரிட்சையமானது. முகம் காணாத நேசம் என்பார்களே அதைப் போன்றதோர் உணர்வை எட்டியிருந்த காலத்தில் அவரின் பல பாடல்கள் முணுமுணுப்பைத் தாண்டி ரசனையின் அடுத்தகட்டத்துக்கென என்னை அழைத்துச் சென்றிருந்தது. அவருடன் இசை உலகுக்கு வந்த மற்ற அனைவரைக் காட்டிலும் தான் பாடிய எல்லாப் பாடல்களிலும் ஸ்வர்ணலதாவுக்கென ஒரு தனித்தன்மை வாய்ந்த குரல்வளம் இருந்தது. 
அக்கால கட்டத்தில் பாடலைக் கேட்ட இரண்டொரு நொடிகளில் இது ஸ்வர்ணலதாவின் குரலென அடையாளம் காண முடிந்திருந்தது என்னால். அவர் பாடிய பாடல்களை ரேடியோவிலோ இல்லை தொலைக்காட்சியிலோ எதேச்சையாகக் கேட்டால் கூட சற்று நின்று நிதானமாக அப்பாடல் முடியும் வரை காத்திருந்து கடப்பது எனப் புதிதாகச் சில எல்லைகளை வகுத்துக் கொள்ள ஆரம்பித்திருந்தேன்.  
ஸ்வர்ணலதா
மெல்லிசை மன்னரின் அறிமுகம் என்னும் அடையாளத்துடன் இசை உலகுக்கு வந்தவர் ஸ்வர்ணலதா. அதுவும் முதல் பாடலிலேயே கே. ஜே. யேசுதாஸ் அவர்களுடன் இணைந்து பாடியிருந்தார். அதற்கு பிறகு இளையராஜாவுடன் பணியாற்றிய அனைத்துப் பாடல்களிலும் தனக்கென ஒரு தனித்தன்மையைப் பிரதிபலிக்க அவர் ஒரு போதும் தவறியதில்லை. இளையராஜா இசையில் இவர் பாடிய ``மாலையில் யாரோ” தான் அவருக்கு மிகப்பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. இன்றளவும் அப்பாடலில் உருகும் தேனென அவரின் குரல் அத்தனை மென்மையாய் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது. 

பொதுவாக அவரின் குரல் வழி இசையை அறிந்தோர் எவருக்கும் அவரின் தாய் மொழி தமிழில்லை என்று தெரிய வாய்ப்பே இல்லை. உச்சரிப்புக்கெனத் தனி அகராதி ஏதும் உண்டெனில் அதில் ஸ்வர்ணலதாவுக்கும் ஓர் இடமிருக்கும். அப்படியொரு தெளிவான உச்சரிப்பை இந்த இன்னிசைக் குயிலுக்கு எவர் கற்றுக்கொடுத்திருப்பார் என்று யோசித்ததுண்டு. அதுவும் தெம்மாங்குப் பாடல்களில் நாட்டுப் புற கலைஞர்களுக்கு நிகரான உச்சரிப்பும், தொனியும் கொண்டவர் ஸ்வர்ணலதா. 
இசையமைப்பாளர் சௌந்தர்யனின் முதல் படமான `சேரன் பாண்டிய’னில் ஸ்வர்ணலதா இரண்டு பாடல்களைப் பாடியிருந்தார். அதில் `சம்பா நாத்து” பாடலில் அவரின் உச்சரிப்பை எத்தனை முறை ரசித்தாலும் தகும். சாதாரண வார்த்தைகள்தாம் என்றாலும் தெம்மாங்கு கலந்த உச்சரிப்பு சற்றுத் தனித்து தெரிவதுண்டு. ``உனக்காக மச்சான் காத்திருந்தேன் உறங்காம கண்ணு முழிச்சிருந்தேன்” என்பதுதான் பாடல் வரிகள். ஆனால் ஸ்வர்ணலதா பாடும் போது அந்தத் தொனியைக் கவனித்துப் பாருங்கள் ``உறங்காமே” என்று பாடியிருப்பார். பெரும்பாலான தெம்மாங்குப் பாடல்களில் இந்த உச்சரிப்பைக் காண்பதரிது. 
ஸ்வர்ணலதா
``போவோமா ஊர்கோலம்”, ``நீ எங்கே என் அன்பே”, ``குயில் பாட்டு” என 90களின் ஆரம்பங்களிலேயே இளையராஜாவின் தனிக் கவனத்தைப் பெற்றிருந்தார் ஸ்வர்ணலதா. இதில் `கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வந்த ``ஆட்டமா தேரோட்டமா” பாடல்தான் ஸ்வரண்லதாவுக்குக் கிடைத்த முற்றிலும் மாறுபட்ட பாடல். அதற்கு முன் பாடிய எல்லாப் பாடல்களும் மெலடி வகையறாக்கள். ஆனால் இப்பாடல் அவரின் குரலின் மாறுபட்ட பரிமாணம். பாடல் முழுவதும் அவர் குரலின் வழி பரவும் குதூகலம் நம்மையும் ஒட்டிக் கொள்ளும். 
``மாசி மாசம்”, ``வெண்ணிலவு கொதிப்பதென்ன” போன்ற பாடல்களை இளையராஜாவின் இசையில் பாடியிருந்தாலும் ``என்னுள்ளே என்னுள்ளே”பாடல் இன்றளவும் ஒரு மைல்கல்தான். மோகத்துக்கென ஒரு வடிவமிருக்குமெனில் அது ஸ்வர்ணலதாவின் குரலாகத்தான் இருக்கும். ``மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன” என்று அவர் உச்சஸ்தாயில் பாடும் அக்குரலைக் கேட்கையில் கால்கள் இரண்டும் தரையில் இல்லாது மிதந்துகொண்டிருக்கும். இப்போதிருக்கும் தலைமுறைப் பாடகர்கள் கூட அப்பாடலை வெவ்வேறு விதமாக பாட முயற்சி செய்தாலும் ஸ்வர்ணலதாவின் குரலில் வெளிப்படும் மோகத்தின் சிறு அளவைக் கூட யாராலும் நெருங்க முடியவதில்லை.
இளையராஜா 90 களின் பிற்பகுதிகளில் ஒரே பாடகியை வைத்து அனைத்துப் பாடல்களையும் பாட வைத்ததென்பது சற்று அரிதானது. ஆனால் `கும்மிப்பாட்டு’ படத்தின் 6 பாடல்களையும் ஸ்வர்ணலதா பாடியிருந்தார். பேருக்கேற்றார் போல் படத்தின் எல்லாப் பாடல்களும் மண் வாசனை நிறைந்த தெம்மாங்கு மெட்டுகளாகவே இருந்தன.
ரஹ்மானுடனான ஸ்வர்ணலதாவின் இசைப்பயணம் ``உசிலம்பட்டி பெண்குட்டி” யில் தொடங்கியது. அதன் பிறகான பல படங்களில் ஸ்வர்ணலதாவுக்கெனத் தனி இடத்தை ஒதுக்கியிருந்தார் ரஹ்மான். பெரும்பாலும் ரஹ்மான் பாடல்கள் எல்லாவற்றிலுமே ஸ்வர்ணலதா கலக்கிக் கொண்டிருந்தார். ``முக்காலா முக்காபுலா”, ``குச்சி குச்சி ராக்கம்மா” , ``மெட்ராஸ சுத்திப் பாக்கப் போறேன்” என்று எல்லா வகையான பாடல்களிலும் பயன்படுத்திக் கொண்டிருந்த ரஹ்மான் `உழவன்’ படத்தில் வரும் ``ராக்கோழி” பாடலின் மூலம் திரும்பவும் மோகத்தின் குரலுக்கென ஸ்வர்ணலதாவைப் பாட வைத்தார். 
ஸ்வர்ணலதா
எல்லாவற்றையும் விட ஸ்வர்ணலதா தன் ஆலாபனைகளாலும், ஹம்மிங்கு(ரீங்காரம்)களாலும் நம்மைக் கட்டிப் போடுபவர். ``என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட” பாடலின் ஆலாபனையை மட்டும் ஆயுசு முழுவதுக்கும் வைத்து கொண்டாடுமளவுக்கான அற்புதத்தைத் நிகழ்த்தித் தந்தவர். 
ரஹ்மானின் முதல் இந்தித் திரைப்படமான ``ரங்கீலா” வில் ஸ்வர்ணலதாவைப் பாட வைத்திருந்தார். ``ஹை ராமா” பாடல் வரிகளைக் கூர்ந்து கவனித்தால் தெரியும் ஸ்வர்ணலதாவுக்கு வேற்று மொழிகள் அப்படி ஒன்றும் சிரமத்தை எல்லாம் தரக்கூடியதல்ல என்று. இசைக்கு மொழி அவசியமற்றது. தொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னடம் என 12 மொழிகளில் 7000 பாடல்களைப் பாடியிருக்கிறார். 
அவ்வகையில் ரஹ்மான் ஸ்வர்ணலதாவின் ஹம்மிங்கை மிக அழகாக தனக்கு முதல் கிராமியப் படமென பெயர் வாங்கித் தந்த ``கிழக்குச் சீமையிலே”படத்தில் பயன்படுத்திக்கொண்டார். படம் நெடுக அம்மண்ணின் வாசனையோடும், அம்மக்களின் கண்ணீரோடும் ஸ்வர்ணலதாவின் குரலும் பயணிக்கும். பாசத்துக்கும், கௌரவத்துக்கும் நடக்கும் போராட்டத்துக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் விருமாயியின் வாழ்க்கைக் கனவை குரல் வழி கடத்தியவர் ஸ்வர்ணலதா. 
ரஹ்மானின் ஆஸ்தான பாடகியென மாறியிருந்த ஸ்வர்ணலதாவுக்கு ``கருத்தம்மா” படத்தின் ``போறாளே பொன்னுத்தாயி” பாடல் தேசிய விருதை வாங்கித் தந்தது. பாடலைப் பாடி முடித்த போது கண் கலங்கிப் போனாராம் ஸ்வர்ணலதா. சோகமும், வலியும் , கடந்து வந்த பாதையுமென அக்குரலில் அத்தனை ரணத்தையும் கொட்டித் தீர்த்திருப்பார். ``எவனோ ஒருவன்” பாடலிலும் இதே போன்றதொரு வலியை நமக்குக் கடத்தியிருப்பார். ``இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்” என்று ஸ்வர்ணலதா பாடி முடிக்கும் பொழுது மனதெல்லாம் பாரமாக அந்த இசைக் குயிலின் முகத்தை இனி ஒரு போதும் காண முடியாது என்ற வலி நெருடிக் கொண்டே இருக்கிறது. 
ஸ்வர்ணலதா
இளையராஜா, ரஹ்மான் மட்டுமல்லாது தேவாவுக்கும், எஸ்.ஏ. ராஜ்குமாருக்கும் ஸ்வர்ணலதா ஆஸ்தான பாடகிதான். யுவன், கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், சிற்பி வரை எல்லா இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியிருக்கிறார்.
ஸ்வர்ணலதா பாடிய பாடல்களைப் பற்றிய சரியான புள்ளி விவரங்களோ, நிலைத் தகவல்களோ இணையத்தில் இல்லை. கிடைத்தவரைக்குமா பொக்கிஷங்களெனப் பாடல்களை சேகரித்துக்கொண்டதுதான். 
ஆயிரமாயிரம் பாடல்களைப் பாடி நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் குரலுக்கு உருவமென ஒன்றை இனி காணப் போவதில்லை. ஸ்வர்ணலதாவின் குரல் வெறும் குரல் மட்டுமல்ல... அது,
 ``வலிகளின் அடையாளம்” 
``சோகங்களின் மூச்சுக் காற்று”
``ரசனைகளின் பிரதி” 
``உள்மன பிரதிபலிப்பு” 
``மோகத்தின் வடிவம்” 
``மகிழ்ச்சியின் எல்லை”. 
குரலின் மூலம் இத்தனை உணர்வுகளையும் எப்படிக் கடத்த முடிகிறது. இது சாத்தியப்படுமெனில் அதற்கு ``ஸ்வர்ணலதா’ என்று பெயர். 
இன்றோடு அவர் பிரிந்து 8 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆத்மாக்களின் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், இக்குரலின் வழியிலும் அது தரும் உணர்வுகளின் வழியிலும் இன்னும் நூறாண்டு காலமும் அது கடந்தும் ``ஸ்வர்ணலதாவின்” பெயர் சொல்லும்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

ஒண்டிக்கட்டை இதிகாசம்

சிபி கே. சால‌மனின் ஒண்டிக்கட்டை உலகம். "லட்சோப லட்ச ஒண்டிக்கட்டைகளுக்கு இந்தப்புத்தகம் தண்ணீர் தெளித்து விடப்படுகிறது" என்று சமர்ப்பணத்திலிருந்தே களைகட்டத் தொடங்கி விடுகிறது புத்தகம் ("A COMPLETE GUIDE FOR BACHELORS" என்று தமிழ் சினிமா ஸ்டைலில் என்று சப்டைட்டில் வேறு). ஒரு நல்ல சிறுகதையின் முதல் காட்சி போல் ஒரு மாதிரி பேச்சிலர் அறையின் நிழற்படத்துடன் (புதூர் சரவணன்) அட்டைப்படத்திலேயே தொடங்கும் இந்த‌புத்தகம் தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் ஆவுடையப்பன் என்கிற பாத்திரம் நகரத்தில் சந்திக்கும் பேச்சிலர் வாழ்க்கையின் சிக்கல்களின் தொகுப்பாய் ஒரு சுவாரசியாமான நாவல் போல் விரிந்து பின் ஒரு அழகான கவிதையின் கடைசி வரி போல் கதாநாயகர்களான பேச்சிலர்களுக்கு வரப்போகும் மனைவிக்கு சமைப்பதற்கு "ஆல் த‌ பெஸ்ட்" சொல்வதுடன் முடிகிறது. ஒரு சிற‌ந்த திரைக்கதைக்கு இணையான சுவாரசியத்துடன் சொல்லப்பட்டிருப்பது இப்புத்தகத்தை தனித்தன்மையுடன் நிற்கச்செய்கிறது. அடிப்படையில் இப்புத்தகம் பேச்சிலர் வாழ்க்கையின் சில்லறைத் தொந்தரவுகளுக்கு தீர்வு சொல்லும் வழிகாட்டியாகவே எழுதப்பட்டுருந்...

பெண் பெரியார்.

யார் இந்த பெண் பெரியார் என்று உங்களுக்கு வியப்பு ஏற்படக் கூடும். ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்க உள்ள சசிகலாவைத்தான் பெண் பெரியாராக உருவாக்க ஊடகங்கள் முயன்று வருகின்றன.   இப்படி இவரை பெண் பெரியாராக்க உருவாக்குவதில் பார்ப்பன ஊடகங்களும் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன என்பதுதான் விசித்திரமான செய்தி. தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பை மீண்டும் கிளப்ப ஒரு பெருங்கூட்டமே போராடி வருகிறது.   ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அவர் இறுதி அஞ்சலி வரை, பூலான் தேவி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் எப்படி இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை ஜெயாவின் அண்ணன் மகள் தீபாவைக் கூட உள்ளே விடாமல் ஆக்ரமித்தனர் என்பதை நாம் அனைவருமே பார்த்தோம். இப்போது அடுத்த கட்டமாக அதிமுகவுக்கு சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கி அவரை முதல்வராக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் அவர் கணவர் நடராஜன் எடுத்து வருகிறார். சசிகலா தலைமையிலான மன்னார்குடி கும்பல் தொண்ணூறுகள் முதல் அடித்து வந்த கொள்ளை என்ன என்பதை நாடே அறியும்.  சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட பெரும்பாலான வேட்பாளர்களி...

The Sasikala web: how a maze of shell companies link up to her, her family and friends

V.K. Sasikala.   These shell companies have fake addresses, no business activity and large transactions Sandhya Ravishankar Midas and Jazz Signet Exports Sri Jaya Finance and Investments Fancy Steels Jazz Cinemas Missing People, Fake Addresses In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two. A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman. The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier H...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

NO BRA DAY

ட்விட்டரில் எப்போதும் எலியும், பூனையுமாக அடித்துக் கொள்ளும் செக்ஸ் குயீன்களான பூனம் பாண்டேவும், ஷெர்லின் சோப்ராவும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக‌  ‘கேப்டன்  –  அம்மா’ மாதிரி திடீர் கூட்டணி அமைத்து ஆச்சரியப் படுத்தினார்கள். விஷயம் என்னவென்றால் அக்டோபர் 13, ‘மார்புக்கச்சை இல்லாத நாளாம்’. அதாவது  தமிழில்   மொழிபெயர்த்தால்  ‘ நோ   ப்ரா   டே ’.  இருவரும் மார்புக்கச்சை   அணியாமல்   ஏகப்பட்ட   போட்டோக்கள்   எடுத்து ,  ட்விட்டரில்   பகிர்ந்து   தங்களது ஃபாலோயர்களை   ஏகத்துக்கும்   குஷிப்படுத்தினார்கள் .   எலிசபெத்   மகாராணி   கூட  ’ நோ   ப்ரா   டே ’ குறித்து   ஏதோ   ட்விட்   போட்டிருக்கிறார்களாம் . இணையத்தில் மேலதிகமாக இதுகுறித்து தேடி வாசித்தபோது, நிறைய பெண்கள் ‘ப்ரா’ என்பதை அடிமைச் சின்னமாக பார்க்கிறார்கள் என்கிற அவசியத் தகவலை அறிந்துகொள்ள முடிந்தது. அது எவ்வாறு அவர்களை அடிமைப்படுத்துகிறது என்பதை ஒரு ஆணாக உணரமுடியவில்லை. கடந்த அக்.13 அன்று பெண்க...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

ஜெயலலிதா- துயரம் நிரம்பிய சகாப்தம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் டிசம்பர் 5ம் தேதியன்று இரவு 11.30 மணிக்குப் பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவமனையின் செய்திக்குறிப்பு கூறியது. அவரைப் போலவே, அவருடைய ஆட்சிக்காலத்தைப் போலவே அவருடைய மரணமும் கேள்விக்குரியதாய் ஆகியிருக்கிறது.  72 நாட்கள் மருத்துவமனை வாசம், எவராலும் பார்க்க முடியாமல் அவரை வைத்திருந்தது என்று எல்லாமே மர்மமுடிச்சுகளாய் இன்று தமிழக மக்கள் முன் கேள்விகளாய் நிற்கின்றன. ஜெயலலிதாவை இரும்பு மனுஷி என்று அவருக்கான அஞ்சலிக் குறிப்புகளில் பலர் எழுதியதைக் காண முடிந்தது. உண்மையில் ஜெயலலிதா இரும்பு மனுஷியா?  ஆம்! அவர் இரும்பு மனுஷிதான். எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில் ராணுவ வண்டியிலிருந்து ஜானகியின் உறவினர் நடிகர் தீபனால் இறக்கிவிடப்பட்ட ஜெயலலிதா பின்னாளில் எம்.ஜி.ஆரின் கட்சிக்குப் பொதுச் செயலாளரானார். எவரைப் பற்றியும் கவலைப்படாமல் தான் நினைத்ததை செய்து முடிக்கும் துணிச்சல் அவருக்கு இருந்தது. அதனால்தான் இரும்பு மனுஷி என்று பெயர் பெற்றிருக்கிறார்.  ஆனால், அவர் எதையெல்லாம் நினைத்தார், செயல்படுத்தினார். அந்த இரும்பு மனம் கொண்டு அவர் எப்படிச் செயலாற்றினார் என்பதை...

வெளிவராத புத்தகங்கள்-2016

 

வசீகர எழுத்துக்காரன்

சரவணன் சந்திரன்(எழுத்தாளர்) சென்ற ஆண்டுதான்(2016) முதல் நாவலான 'ஐந்து முதலைகளின் கதை" வெளிவந்தது.அதற்குள் அடுத்தடுத்து மூன்று நாவல்கள்.சமீபத்தில் இவரது"அஜ்வா" நாவல்,அதிர்வு நரம்புகளை மீட்டியது.சம கால இலக்கிய தளத்தில் தவிர்க்கமுடியாத குரல் சரவணனுடையது.எளிமையும் அழமான எழுத்துக்கள் ஈர்க்கின்றன.நாம் வாழ்வின் துயரங்களை,பிரச்சனைகளைப் பேசும் விரல்.ஒரு பக்கம் காட்சி ஊடகப் பணிகள், இன்னொரு பக்கம் மீன் வியாபாரம் என மக்களோடு புழங்கும் வாழ்க்கை...இந்த இளைஞனின் எழுத்துக்களைத் தனித்து அடையாளப்படுத்துகிறது சரவண சந்திரனின் பன்முக படைப்புகள் தமிழ் சமகால இலக்கியம் அதிக அளவில் நவீன வாழ்க்கையை பிரதிபலிப்பதில்லை.அந்த சூழலில் வந்திருக்கும் மாறுபட்ட எழுத்தாளர்களில் ஒருவர் சரவணன் சந்திரன். 12 மாதங்களில் அவர் நான்கு நாவல்களை எழுதிவிட்டார். ஐந்து முதலைகளின் கதை,ரோலக்ஸ் வாட்ச்.வெண்ணிற ஆடை,அஜ்வா நான்கும் உயிர்மை வெளியீடு. இதில் எதுவும் வரலாறு சார்ந்த புதினம் இல்லை.அல்லது வரலாற்றை பின்புலமாக வைத்துக்கொண்டு சமகாலத்தைப் பேசும் புனைவும் அல்ல."நான்கும் நான்கு வேறுபட்ட உலகங்களை  ...