முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கலைஞர் முத்துவேல் கருணாநிதி என்கிற பெருமர நிழல்


திராவிட அரசியல் சித்தாந்தங்களால் கவரப்பட வில்லையென்றால் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன் என்று கலைஞர் கருணாநிதி ஒரு பேட்டியில் குறிப்பிட்டு சொல்லியிருப்பதை வாசித்திருக்கிறேன்.

கலைஞர் முத்துவேல் கருணாநிதி என்கிற பெருமர நிழல்
-லீனா மணிமேகலை
முதன்முதலில் கலைஞர் மு.கருணாநிதியின் பெயர் என் மனதில் பதிந்தது எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது. மறைந்த எனது தந்தை தமிழ்ப் பேராசிரியர் இரகுபதி, சிறுமியான என் மழலைத் தமிழைத் திருத்தி பிழையில்லாமல் தமிழ்த் தாய் வாழ்த்தைப் பாட கற்றுக் கொடுத்த போது, இரண்டு கேள்விகள் கேட்பார். அந்தக் கேள்விகளுக்கு பதில்களையும் அவரே சொல்லி, என்னை மீண்டும் மீண்டும் ஒப்புவிக்க சொல்வார். ‘தமிழ்த் தாய் வாழ்த்தை எழுதியவர் யார்? மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை’. ‘அதை தமிழ் நாட்டின் தேசிய கீதமாக மாற்றியவர் யார்? கலைஞர் மு. கருணாநிதி’. நானும் கேள்வி பதிலை அப்படியே ஒப்புவிப்பேன். தொலைக்காட்சியில் கரகர குரலும் கறுப்புக் கண்ணாடியுமாய் அவர் தோன்றி பேசும்போதெல்லாம் அப்பா அவரைக் காட்டி "யார் இவரு?" என்று கேடடால் "நீராடும் கடலுடுத்த" பாடலை ராகமெடுத்து நான் பாடிய ஞாபகங்கள் நிழலாடுகின்றன.  
திராவிட அரசியல் சித்தாந்தங்களால் கவரப்பட வில்லையென்றால் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன் என்று கலைஞர் கருணாநிதி ஒரு பேட்டியில் குறிப்பிட்டு சொல்லியிருப்பதை வாசித்திருக்கிறேன். இடதுசாரி குடும்பத்தில் பிறந்திருந்தாலும் என்னைப் பெரிதும் ஈர்த்த - பாதித்த சிந்தனையாளராக  தந்தை பெரியார் தான் இருந்தார் . இளவயதில், கம்யூனிஸ்ட் புத்தகங்களை விட திராவிட இயக்கத்தின் புத்தகங்கள் தான் எனக்கு இலகுவாகவும் புரியும்படியாகவும் இருந்தன. ஒரு சூத்திர கருப்பு தமிழ்ப் பெண்ணாக இந்த உலகத்தை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளும் தைரியத்தை திராவிட இயக்கப் போராட்ட வரலாற்றை வாசித்து தான் பெற்றுக்கொண்டேன். இடதுசாரி திராவிடம் என்ற எனக்கான ஒரு வெளிச்சத்தை தேடிக் கொண்டேன். தந்தை பெரியார் தன் தம்பிகளாக அரவணைத்துக் கொண்ட அண்ணாவும் கலைஞரும் அந்த வெளிச்சத்தை விசாலப் படுத்த உதவினார்களா என்று யோசித்துப் பார்க்கிறேன்.  திராவிட இயக்கம் விதைத்ததை யெல்லாம் அரசியல் விளைச்சல் நிலமாக மாற்றியதில் இருவரும் ஓரளவு வெற்றியடைந்தார்கள் என்பது தான் வரலாறு. 
சூத்திரர், மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர், நாத்திகர், பகுத்தறிவாளர், "அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்" என்று சினிமாவுக்கு கதை வசனம் எழுதுபவர், வீதிதோறும் அரசியல் நாடகம் போடுபவர், பத்திரிகையாளர் என்ற அடையாளங்களோடு "பார்ப்பனிய ஹிந்தியாவில்" அறுபதாண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராகவும், ஐம்பதாண்டு காலம் கட்சித் தலைவராகவும், ஐந்து முறை தமிழ்நாட்டு முதல்வராகவும் அரசியல் செய்த சாணக்கியம் என்பது அசுர சாதனை. நான் பேசும்- எழுதும்- சிந்திக்கும் தமிழிலும், கற்ற கல்வியிலும், சமூகத்தில் பெண்ணாக எனக்கு கிடைத்திருக்கும் இடத்திலும், நம்பும் கடவுள் மறுப்பு கொள்கைகளிலும், பங்கெடுக்கும் சமூக நீதி போராட்டங்களிலும், எடுக்கும் சினிமாவிலும் கலைஞர் கருணாநிதியின் வியர்வை வாசம் அடிப்பது அந்த சாதனையின் விளைவு தான். அதனால் தான் அவருடைய சமரசங்களும் என்னை மிகவும் காயப்படுத்தியிருக்கின்றன. பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில் தி.மு.க. பங்கேற்றதை, வெறும் அரசதிகாரத்தில் நிறுவனமயமாதலால் நடந்த வீழ்ச்சியென என்னால் கடந்துப் போக முடிந்ததில்லை. தவிர, கட்சியிலும் ஆட்சியிலும் தன் குடும்பத்தினருக்கு அவர் அளித்த முக்கியத்துவமும், தொடரும் ஊழல் குற்றச்சாட்டுகளும் ஆகப்பெரும் சனநாயகவாதியாக கொண்டாடப்படும் அரசியல் தலைவர் அனுமதித்திருக்க கூடாதவை. இலங்கையில் இனஅழிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த சமயத்தில் தமிழக முதல்வராக இருந்தபோதும், தன் நாற்காலியைப் பிடித்துக் கொண்டு நின்ற பிழைப்புவாத அரசியல், அவர் என்னுள் உரம்போட்டு வளர்த்த இன உணர்வையும், மொழி உணர்வையும் வஞ்சித்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுள் ஒருவராக, சாகும்வரை விருதுநகர் மாவட்ட செயலாளராக இருந்து காலம் தவறிய என் தாத்தா வெங்கடசாமி தோழரிடம் 'எமர்ஜென்சிக்கு ஆதரவாக உங்கள் கட்சி இருந்ததற்காக எங்கள் தலைமுறையிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று தகராறு செய்வேன். அரசியல் கட்டமைப்புக்குள் இலட்சியங்களுக்கு நடக்கும் சித்ரவதைகளை சொல்லி ஆதங்கப்படுவார். பதின்ம வயதில் சிவப்புத் துண்டு தாத்தாவை புரிந்துகொள்ள சிரமப் பட்டேன். "உயிரினும் மேலான உடன்பிறப்புகளே" என்று மஞ்சள் துண்டு கலைஞர் பேசும்போது, பாசமும் எரிச்சலுமாக மனம் பொங்குவதையும் புண்படுவதையும் புரிந்துக் கொள்வதற்கு முப்பதுகளின் இறுதியிலும் சிரமப்படுகிறேன். 
ஆனாலும் மீண்டும் மீண்டும், தமிழ்த்தாய் வாழ்த்தைக் கேட்கும்போதும், பார்ப்பனிய இந்து இந்தியாவுக்கு எதிராக குமரியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் திருவள்ளுவரைக் காணும்போதும், தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் பெரியார் சமத்துவபுரங்களைக் கடந்து செல்லும்போதும், அண்ணா நூலகத்தில் அமர்ந்திருக்கும்போதும் அவரிலிருந்து துண்டித்துக் கொள்வது முடியாது என்பதை உணர்கிறேன். அரசாங்க வேலைகளில் இருப்பவர்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் தலைவராக கலைஞர் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறார். ஆனால் விளிம்புநிலை மக்களோடு தொடர்ந்து வேலை செய்பவளாக, திரைப்படங்கள் இயக்குபவளாக எனக்கு கிடைத்த அனுபவத்தில், அவரை உழைக்கும் பெண்கள், திருநங்கைகள், அருந்ததியர்கள், குறவர்கள், புதிரை வண்ணார்கள், ஊனமுற்றவர்கள், குடிசை வாழ்மக்கள் போன்ற புறக்கணிக்கப்படட மக்கள் கூட்டங்களின் தோழராக, அவர்களின் சமூக அங்கீகாரத்திற்கான போராட்ட்ங்களுக்கு நெருக்கமானவராகப்  பார்க்கிறேன். விவசாயத்திற்கு இலவச மின்சாரத்தை அமுல்படுத்தியதற்காக விவசாயியான என் தாயார் ரமாவும், "திருநங்கை" என்ற கம்பீர அடையாளத்தை தந்ததற்காக மாநிலத்தின் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரி தோழி கிரேஸ் பானுவும், அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை சாத்தியப்படுத்தியதற்காக அருமை நண்பன் கவிஞர் மதிவண்ணனும், "ஆதி திராவிடர் புதிரை வண்ணார் நல வாரியம் அமைத்ததற்காக"- பார்த்தாலே தீட்டு என்ற ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும் சமூகத்தில் பிறந்து முதல் தலைமுறையாக படித்து தாசில்தாராக ஒய்வு பெற்றிருக்கும் என் குடும்ப நண்பர் மூர்த்தி அய்யாவும், குடிசை மாற்று வாரியம் அமைத்ததற்காக நண்பன் பத்திரிகையாளர் தமிழ்ப்பிரபாவும், கலைஞருக்கு தெரிவிக்கும் நன்றிகள், உதிரி மக்களின் நலனுக்காக அவர் உண்மையான பரிவுடன் செய்த பணிக்கு கிடைத்த சான்றுகள். 
“கருணாநிதி நமக்கு கிடைத்தற்கரிய வாய்ப்பு” என்று வாழ்த்தினாராம் தந்தை பெரியார். திராவிட அரசியல் அரசியல் வாய்த்திருக்காவிட்டால் இந்தியா என்ற காலனிய உருவாக்கத்தில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமகன்களாக நசுக்கப்பட்டிருப்போம். விடுதலைக்கு முன் பிறந்து, உலகமயமான இந்தியா வரை ஏறக்குறைய எண்பது ஆண்டுகள் அசராமல் அரசியல் செய்த கலைஞர் தன்னையே பரிசோதனைக் களனாக மாற்றிக்கொண்டதால் தான் தொடர்ந்து இயங்க முடிந்திருக்கிறது. முரண்களின் தொகுப்பாக அவர் நமக்கு தெரிவதையும் அந்தப் புள்ளியிலிருந்தே அவதானிக்க முயற்சிக்கிறேன். அவசர நிலையை எதிர்த்த கருணாநிதி, "மாநிலங்கள் என்ன உள்நாட்டு காலனியா" என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, ஈழப் பெண்களை சூறையாடிய இந்திய அமைதிப்படை எனும் ஆக்கிரமிப்புப் படையை வரவேற்க மறுத்த கருணாநிதி, "ராமன் என்ன எஞ்சினீயரா" என்று சேது சமுத்திர திட்டம் குறித்த விவாதத்தில் சடடமன்றத்திலேயே கிண்டலடித்த கருணாநிதி என அவரைத் தமிழினத் தலைவராக நினைத்துப் பெருமை கொள்ள, அழியாத வரலாற்று தடயங்களை விட்டு சென்றிருப்பதோடு ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார். "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்று பேசும் தமிழ் பாசிஸ்டுகளும், "திராவிட இயக்கங்களின் ஆட்சி தமிழகத்தை குட்டிச்சுவராக்கி விட்டது" என்று பேசும் பார்ப்பன தேசியவாதிகளும் புற்றீசல் போல பெருகியிருக்கும் இந்த கால கட்டம் அவரைப் போன்ற அசைக்க முடியாத தலைவரைக் கேட்டு நிற்கிறது. இந்துத்துவப் பாசிசமும், மாநிலங்களை அடிமைப்படுத்தும் மத்திய எதேச்சதிகாரமும், இந்தி திணிப்பும், மத துவேஷங்களும் தலையெடுத்திருக்கும் சூழல் அவர் விட்டு சென்றிருக்கும் போராட்டப் பாதையை விடாமல் தொடரப் பணிக்கிறது. இரங்கலைக் கூட "எழுந்து வா தலைவா" என்று முழக்கங்களாக கோஷமிடும் திராவிட முன்னேற்ற கழகத் தொண்டர்கள் சூரியனை அஸ்தமிக்கவிடக் கூடாது. ”தலைவர் கலைஞர் தொடர்ந்து 14வது முறையாக வெற்றி; தொகுதி-மெரினா; பெற்ற வாக்குகள்-ஏழரை கோடி; 'என் ஆறடி நிலம்கூட நீ தந்ததாக இருக்க கூடாது , நான் போராடி வென்றதாக இருக்க வேண்டும்' - கலைஞர்” என்றொரு ட்வீட்டை மிகவும் ரசித்துப் படித்தேன். பேரியக்கங்கள் எப்போதும் யாருக்காகவும் நிற்பதில்லை. இன்னும் செய்வதற்கும், தொடர்வதற்கும் போராடடக் களன் கொதி விடாது காத்துக் கிடக்க, வரலாறு கண்கொத்திப் பாம்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

வசீகர எழுத்துக்காரன்

சரவணன் சந்திரன்(எழுத்தாளர்) சென்ற ஆண்டுதான்(2016) முதல் நாவலான 'ஐந்து முதலைகளின் கதை" வெளிவந்தது.அதற்குள் அடுத்தடுத்து மூன்று நாவல்கள்.சமீபத்தில் இவரது"அஜ்வா" நாவல்,அதிர்வு நரம்புகளை மீட்டியது.சம கால இலக்கிய தளத்தில் தவிர்க்கமுடியாத குரல் சரவணனுடையது.எளிமையும் அழமான எழுத்துக்கள் ஈர்க்கின்றன.நாம் வாழ்வின் துயரங்களை,பிரச்சனைகளைப் பேசும் விரல்.ஒரு பக்கம் காட்சி ஊடகப் பணிகள், இன்னொரு பக்கம் மீன் வியாபாரம் என மக்களோடு புழங்கும் வாழ்க்கை...இந்த இளைஞனின் எழுத்துக்களைத் தனித்து அடையாளப்படுத்துகிறது சரவண சந்திரனின் பன்முக படைப்புகள் தமிழ் சமகால இலக்கியம் அதிக அளவில் நவீன வாழ்க்கையை பிரதிபலிப்பதில்லை.அந்த சூழலில் வந்திருக்கும் மாறுபட்ட எழுத்தாளர்களில் ஒருவர் சரவணன் சந்திரன். 12 மாதங்களில் அவர் நான்கு நாவல்களை எழுதிவிட்டார். ஐந்து முதலைகளின் கதை,ரோலக்ஸ் வாட்ச்.வெண்ணிற ஆடை,அஜ்வா நான்கும் உயிர்மை வெளியீடு. இதில் எதுவும் வரலாறு சார்ந்த புதினம் இல்லை.அல்லது வரலாற்றை பின்புலமாக வைத்துக்கொண்டு சமகாலத்தைப் பேசும் புனைவும் அல்ல."நான்கும் நான்கு வேறுபட்ட உலகங்களை  ...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

ஒண்டிக்கட்டை இதிகாசம்

சிபி கே. சால‌மனின் ஒண்டிக்கட்டை உலகம். "லட்சோப லட்ச ஒண்டிக்கட்டைகளுக்கு இந்தப்புத்தகம் தண்ணீர் தெளித்து விடப்படுகிறது" என்று சமர்ப்பணத்திலிருந்தே களைகட்டத் தொடங்கி விடுகிறது புத்தகம் ("A COMPLETE GUIDE FOR BACHELORS" என்று தமிழ் சினிமா ஸ்டைலில் என்று சப்டைட்டில் வேறு). ஒரு நல்ல சிறுகதையின் முதல் காட்சி போல் ஒரு மாதிரி பேச்சிலர் அறையின் நிழற்படத்துடன் (புதூர் சரவணன்) அட்டைப்படத்திலேயே தொடங்கும் இந்த‌புத்தகம் தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் ஆவுடையப்பன் என்கிற பாத்திரம் நகரத்தில் சந்திக்கும் பேச்சிலர் வாழ்க்கையின் சிக்கல்களின் தொகுப்பாய் ஒரு சுவாரசியாமான நாவல் போல் விரிந்து பின் ஒரு அழகான கவிதையின் கடைசி வரி போல் கதாநாயகர்களான பேச்சிலர்களுக்கு வரப்போகும் மனைவிக்கு சமைப்பதற்கு "ஆல் த‌ பெஸ்ட்" சொல்வதுடன் முடிகிறது. ஒரு சிற‌ந்த திரைக்கதைக்கு இணையான சுவாரசியத்துடன் சொல்லப்பட்டிருப்பது இப்புத்தகத்தை தனித்தன்மையுடன் நிற்கச்செய்கிறது. அடிப்படையில் இப்புத்தகம் பேச்சிலர் வாழ்க்கையின் சில்லறைத் தொந்தரவுகளுக்கு தீர்வு சொல்லும் வழிகாட்டியாகவே எழுதப்பட்டுருந்...

NO BRA DAY

ட்விட்டரில் எப்போதும் எலியும், பூனையுமாக அடித்துக் கொள்ளும் செக்ஸ் குயீன்களான பூனம் பாண்டேவும், ஷெர்லின் சோப்ராவும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக‌  ‘கேப்டன்  –  அம்மா’ மாதிரி திடீர் கூட்டணி அமைத்து ஆச்சரியப் படுத்தினார்கள். விஷயம் என்னவென்றால் அக்டோபர் 13, ‘மார்புக்கச்சை இல்லாத நாளாம்’. அதாவது  தமிழில்   மொழிபெயர்த்தால்  ‘ நோ   ப்ரா   டே ’.  இருவரும் மார்புக்கச்சை   அணியாமல்   ஏகப்பட்ட   போட்டோக்கள்   எடுத்து ,  ட்விட்டரில்   பகிர்ந்து   தங்களது ஃபாலோயர்களை   ஏகத்துக்கும்   குஷிப்படுத்தினார்கள் .   எலிசபெத்   மகாராணி   கூட  ’ நோ   ப்ரா   டே ’ குறித்து   ஏதோ   ட்விட்   போட்டிருக்கிறார்களாம் . இணையத்தில் மேலதிகமாக இதுகுறித்து தேடி வாசித்தபோது, நிறைய பெண்கள் ‘ப்ரா’ என்பதை அடிமைச் சின்னமாக பார்க்கிறார்கள் என்கிற அவசியத் தகவலை அறிந்துகொள்ள முடிந்தது. அது எவ்வாறு அவர்களை அடிமைப்படுத்துகிறது என்பதை ஒரு ஆணாக உணரமுடியவில்லை. கடந்த அக்.13 அன்று பெண்க...

The Sasikala web: how a maze of shell companies link up to her, her family and friends

V.K. Sasikala.   These shell companies have fake addresses, no business activity and large transactions Sandhya Ravishankar Midas and Jazz Signet Exports Sri Jaya Finance and Investments Fancy Steels Jazz Cinemas Missing People, Fake Addresses In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two. A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman. The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier H...