
கமல்ஹாசனுடன்... நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி.
கமல் தன் படங்களில் தான் யாரையும் குறை சொல்லவில்லை.. அவர்களின் தவறைத்தான் கிண்டல் செய்கிறேன் என்றார்.
இவர் செய்யும் தவறுகளை நாம் கிண்டல் செய்யலாமா.. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நான் கண்டிப்பாக அவரைக் கிண்டல் செய்வேன்..
அவருடைய கம்பானியன் என்ற அறிமுகத்துடன்
கௌதமி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்..
இதில் என்ன தவறு என்று ஒரு சிலர் கேட்கலாம்..
கமல் பயன்படுத்திய சில வார்த்தைகள்
அந்த தவறை ஊர்ஜிதப்படுத்தியது..
கமலும் கௌதமியும் திருமணமானவர்கள்
(வெவ்வேறு துணையுடன்)..
இன்று இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள்..
ஆனால் இவர்களுக்குள் திருமணம் செய்துகொள்ளவில்லை..
என்ன உறவுமுறை என்று தெரியவில்லை..
கமல் சொல்கிறார்..
உடலுறவுக்கு மட்டுமல்ல இந்த உறவு என்கிறார்..
ஒரு பிரபலமானவர் இதுபோல் செய்தால் அது சரி ஆகிவிடுமா..
மேலும், விஜய் டிவியின் மற்ற நிகழ்ச்சியாளர்கள்
கமலுடன் சிறு உரையாடல் வேறு..
அவர்களில் பிரியா என்பவர் சொன்னது
நமது தமிழ் கலாச்சாரத்திற்கு புதியது..
அவர் சொல்கிறார்..
"என் மகனிடம் சொன்னேன்,
உன் அப்பாவை போகச்சொல்..
நான் கமலுடன் வாழ்ந்துகொள்வேன்" என்று..
அருமை..
மற்றுமொரு நிகழ்ச்சியாளர்..
டி டி என்று அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி..
இவருடைய விருப்பம்,
கமல் தன்னைக் கட்டிபிடித்து
ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்பது..
இந்த செயல்களை எல்லோரும் கைதட்டி கொண்டாடுகிறார்கள்..
நாடும் மக்களும் நாசமாய்ப் போகிறார்கள் என்பதன்
அறிகுறியோ இது???
மேலும் கமல் புற்றுநோய் தாக்கபட்டவர்களைப்பற்றி சொல்லும்பொழுது
"பூட்ட கேசு" "தேறாது" போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்...
இந்த வார்த்தைகள் அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின் உறவினர்களையும்
எப்படி பாதிக்கும் என்று அறியாமல் சொல்கிறாரா?
அவர் எத்தனை புத்தகங்கள் படித்தாலும்
அதற்கு பயன் ஏதும் இல்லை..
கங்கையில் சாக்கடை கலந்தால்,
சாக்கடையும் கங்கையாக கருதப்படும்..
அதே சாக்கடையில் கங்கைநீர் கலக்கபட்டால்,
கங்கையும் சாக்கடையாக கருதப்படும்..
என்னைப் பொறுத்தவரை கமல் எவ்வளவுதான் அறிவுடையவராக இருந்தாலும்,
அது சாக்கடையில் கலக்கப்பட்ட கங்கைநீர் போன்றதே..
முக்கிய குறிப்பு
*************
இது கருத்தல்ல
ஒரு விவாதப் பார்வையில்தான் பதிவு
இங்கே வைக்கப்பட்டுள்ளது
கருத்துகள்
கருத்துரையிடுக