கூகுளின் "ஆண்ட்ராய்டு' பிரிவு தலைவராக சுந்தர் பிச்சை : (One more proud moment for tamilans)
**Sundar Pichai (சுந்தர் பிச்சை), a Google veteran fond of fast browsers and computers, will have to move quickly himself as the newly named head of Android.
**Pichai was born & raised in Chennai. He received a B.Tech from the Indian Institute of Technology Kharagpur and was awarded an Institute Silver Medal.
**அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் கூகுள் கம்பெனியின் ஒரு பிரிவுதான் விற்பனை உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஆண்டிராய்டு மொபைல் போன்கள்.
**இந்த வகை போன்களை வடிவமைத்தவர் என்று புகழப்படும் ஆண்டி ரூபின் என்ற அமெரிக்கர் இதன் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தார்.
**.இதையடுத்து அந்தப் பொறுப்புக்கு தமிழரான சுந்தர் பிச்சை வருகிறார். இவர் தற்போது கூகுளின் குரோம் வெப் பிரவுசரைக் கவனித்து வருபவர் ஆவார். மேலும் குரோம் ஆபரேட்டிங் சிஸ்டமும் இவர் வசம்தான் இருக்கிறது.
**இனிமேல் ஆண்ட்ராய்டையும் இவரே சேர்த்துப் பார்க்கப் போவதால் கூகுளுக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கப் போகிறது.
**சுந்தர் பிச்சையின் வழிகாட்டுதலில், கூகுள், குரோம் சிஸ்டம் பயன்பாட்டில் பல கம்ப்யூட்டர் வெளியீடுகளை அளித்துள்ளது. சென்ற மாதம் இவர், குரோம் புக் பிக்சல் என்று பெயரிடப்பட்ட குரோம் கணினிப் பயன்பாட்டுடனும், தொடுதிரையுடனும் கூடிய ஒரு லேப்-டாப்பை வெளியிட்டார்.
**சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, காரக்பூரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் பி.டெக்., படித்தவர். அமெரிக்காவின், "ஸ்டேன்போர்டு' பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்ற இவர், "வார்ட்டன் பிசினஸ்' கல்லூரியில் எம்.பி.ஏ., பட்டமும் பெற்றுள்ளார்.
**ஒரு கையில் ஆண்ட்ராய்ட் இன்னொரு கையில் குரோம் என்று தாங்கிப் பிடிக்கப் போகும் அவர் இரண்டையும் ஒரே கைக்குள் அடக்கி மொபைல் உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.
Hats off you sir..We wish all the very best to you..Proud to be tamilan :)
கருத்துகள்
கருத்துரையிடுக