நான் ஒரு இன்சினியரிங்முடித்தமாணவன். தேர்வில் பாஸ் ஆவதற்காக உப தலைப்பிட்டு , பாயின்ட் பை பாயின்டாக எழுதி அதற்கு முன் ஒரு புல்லட் குறியீடு இட்டு, சம்மந்தமே இல்லாத கருத்துக்களை அடிக்கோடிட்டு விடைகள் சரியானவை என்று திருத்துபவர்களை நம்பவைத்துப் பழக்கப்பட்டவன் என்பதால் இந்தக் கட்டுரையும் அதே வடிவத்தில் வந்துவிட்டது தயவுகூர்ந்து பொருத்தருளவும். இஞ்சினியரிங்க் படிப்பதற்கான காரணங்கள் : இஞ்சினியரிங்க் படிப்பதற்கு பல்வேறு காரனங்கள் (காரணங்களுக்கு ரெண்டு சுழி ந வா இல்லை மூன்று சுழி ந வா எனத் தெரியாத காரனத்தால் ஒரு இடத்தில் ரெண்டு சுழியும் இன்னொரு இடத்தில் மூன்று சுழியும் பயன்படுத்தப்படுகிறது.) உள்ளன அவை யாவை எனில் "இஞ்சினியரிங்க் படிக்கவைங்க பய நல்லா வருவான்" ஒன்னறை லட்சம் இஞ்சினியரிங்க் அப்ளிகேசன் விற்க இது போல யாரோ ஒரு புண்ணியவான் ஏதோ ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் போடுவதைப் போல பொறுப்பில்லாமல் அப்பாவின் காதில் போட்டுவிடுவதுதான் காரணம். "எங்க நாத்தனார் பையன் இஞ்சினியரிங்க் த...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்