*அரசியலுக்கு வருபவர்களுக்கு என்ன கல்வித் தகுதி இருக்கலாம்?
குறைந்த பட்சம் கல்லூரி பட்டம் அல்லது பட்டய கல்வி படித்திருப்பது நல்லது.(கல்வி தகுதி இல்லாதவர்களுக்கு அவர்களின் மக்கள் நலன் சார்ந்த அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் இந்த விதியை சற்று தளர்த்தலாம்)
*யார்,எப்போது அரசியலுக்கு வரலாம்?
அரசியலுக்கு வருபவர்கள், தங்கள் குடும்ப செலவுகளை,சுயமாக சமாளிக்கும் அளவுக்கு பொருளாதார பின்புலங்களை தயார் செய்த பிறகு பகுதி நேர அரசியலில் ஈடுபடலாம்.
நானும் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி கொண்டு, எந்த வேலைகளும் செய்யாமல், ஊர் பணத்தை தின்று கொழுக்கவோ,மக்கள் வரிப்பணத்தை களவாடவோ அரசியலுக்கு வருவதற்கு பதிலாக அரசியலுக்கு வராமலேயே இருக்கலாம்.மக்கள் பணத்தை கொள்ளையடித்து, என்ன மக்கள் நலன் சார்ந்த அரசியல் செய்ய போகிறார்கள்?
மக்கள் நலன் சார்ந்த அரசியல் என்பது,மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதற்கான தீர்வை பெற்று தர வேண்டும்.சம்மந்தப்பட்ட அதிகாரிகளை ,ஆட்சியாளர்களை சந்தித்து பிரச்சினை குறித்து பேசி தீர்வை எட்ட வேண்டும்.
இங்கே தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சியினர் செய்வது போல, எந்த வேலைக்கும் போகாமல், வெள்ளையும், சொள்ளையுமாய் காலையிலேயே நல்ல கரைவேட்டி கட்டிக்கொண்டு, மாநாட்டு பந்தல் போடுவதும், கோழி பிரியாணியும், மது பாட்டிலும் வாங்கி கொடுத்து மாநாட்டுக்கு ஆள் சேர்ப்பதும், கட்டப்பஞ்சாயத்து செய்வதும், அடியாள் வேலை பார்ப்பதும், ஊர் நிலங்களை அபகரிப்பதும்,ஒழுங்கீனமாக நடந்து கொள்ளுவதும்,மக்களை மிரட்டுவதும் இவற்றிற்கெல்லாம் பெயர் அரசியல் அல்ல.இது ஈனத்தனம். மொள்ளமாரித்தனம். திருட்டுத் தனம்.
அரசியல் தலைவர்கள், பதவிகளில் இருப்பவர்களின் நிலை வேறு. நான் சொல்வது சின்ன சின்ன ஊர்களிலும், பெரும் நகரங்களிலும் எந்த வேலை வெட்டியும் செய்யாமல், மக்கள் பிரச்சினைக்காக போராடமால் கரை வேட்டி கட்டி கொண்டு மைனர் மாப்பிள்ளை போல ஊருக்குள் வலம் வருபவர்களை சொல்கிறேன்.
அரசியல்வாதிகள் அன்றாடம் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன?
*முழு நேர அரசியல் செய்பவர்கள் தங்கள் சொந்த தொகுதி மக்களை ஒவ்வொரு மாதமும் சந்திக்கலாம். அவர்கள் பிரச்சினை குறித்து கேட்கலாம். தீர்வு என்ன என்பது குறித்து விவாதித்து ஆவன செய்யலாம்.
*தங்கள் பகுதிகளில் என்னென்ன தொழில் வளங்கள் செய்ய இயலும் என்பது குறித்து கள ஆய்வு செய்யலாம். அதற்கான திட்டங்களை தயார் படுத்தி விவாதிக்கலாம்.
*தங்கள் ஊர்களில் இருக்கும் பள்ளிகளில் உள்ள குறைகளை கேட்டறிந்து,முடிந்த அளவுக்கு என்னென்ன உதவிகளை சட்டப்ப்பூர்வமாய் செய்ய இயலும் என்பதை பார்க்கலாம். நல்ல விடயத்திற்கு உதவுவதற்காக அரசு மட்டும் அல்ல,எண்ணற்ற அரசு சாரா அமைப்புகள் இருக்கின்றன.
அரசு மூலம் செய்வதற்கு நாளாகும் என்றால் அரசு சாரா அமைப்புகள் மூலம் அந்த தேவைகளை நிறைவேற்றலாம்.
*உங்கள் தொகுதிகளில் , பஞ்சாயத்துக்களில் உள்ள சாலைகளை பார்வையிடலாம். சாலை மற்றும் சாலையில் உள்ள மின்விளக்குகளை கவனித்து சரி செய்ய வேண்டியவற்றை சரி செய்யலாம்.
*சுத்தமான குடிநீர் வழங்க என்ன செய்யலாம் என்பது குறித்து சிந்திக்கலாம்.
*அரசு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யம் குறையும் அளவுக்கு புகார் செய்யலாம். நடவடிக்கை இல்லை என்றால் மேல் முறையீடு செய்யலாம்.
*அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்ந்த என்ன செய்யலாம் என்று தலைமை ஆசிரியர்களை சந்தித்து பேசி நடவடிக்கை எடுக்கலாம்.
*அரசு மருத்துவமனைகளை பார்வையிட்டு, குறைகளை நிவர்த்தி செய்ய முனையலாம். மருத்துவமனைகளை சுத்தமாகவும், மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் இருக்கிறதா, மருந்து மற்றும் மருத்துவர் வசதிகள் எல்லாம் சரியாக் இருக்கிறதா என்பதை கண்காணிக்கலாம்.
*அரசு பேருந்துகளின் செயல்பாட்டை,பேருந்துகளின் நிலையை எல்லாம் கண்காணித்து புகார் தெரிவிக்கலாம்.
*ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக விநியோகம் செய்கிறார்களா அல்லது முறைகேடு எதுவும் நடக்கிறதா என்பதை எல்லாம் நேரில் பார்த்து விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம்.
*ஆதரவற்ற முதியோர்களுக்கான உதவித் தொகை கிடைக்க வழி வகை செய்யலாம்.
*காவல்துறை செய்யும் கட்டப்பஞ்சாயத்து, அடாவடித்தனங்களை எல்லாம் சரி செய்ய முயற்சிக்கலாம். அநியாயமாக் தண்டிக்கப்படுபவர்களுக்கு ஆதரவான போராட்டங்களை நடத்தலாம்.
*தொகுதிகளில் உள்ள நியாயமான மக்கள் போராட்டங்களில் உறுதுணையாக நிற்கலாம். தீர்வுகளுக்கு முயற்சி செய்யலாம்.
*தலைவர்களின் பிறந்த நாட்கள் மட்டுமல்லாது மற்ற நாட்களிலும் மரங்களை நடலாம்.
கட்சி தலைமைகள் ஒருநாள் இருநாள் செய்யும் போராட்டங்களை அந்தந்த பகுதி கட்சி தொண்டர்கள், மக்களையும் இணைத்துக் கொண்டு தொடர்ந்து செய்யலாம்.
இப்படி தினம் தோறும் சிந்திப்பதற்கும்,செயல்படுவதற்க
கட்சி தலைமைகள் செய்யும் போராட்ட அரசியலோடு, தொண்டர்களின் போராட்டங்களும் பெரும்பாலான தருணத்தில் முடிந்து போய் விடுகின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக