முத்துவேலர் கருணாநிதி
தமிழ்க வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் காலத்தின் கைவிரல்களால் மறைக்க முடியாத நீண்ட நெடும் தனிமனிதரின் 90 வது பிறந்தநாள் இன்று.
மேடைப் பேச்சாற்றல்,அடுக்கடுக்கான வாதங்கள்,வார்த்தை விளையாட்டு,உடனடி பதிலுக்கான சிந்தனை வேகம் இவையெல்லாம் அவருடைய திறமையின் அடையாளங்கள்.
அண்ணாவைப் போல ஆங்கிலப் புலமையும்,ஜெயலலிதாவைப் போல ஹிந்திப் புலமையும் அடைந்திருந்தால் 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியப் பிரதமராகியிருக்கக் கூடியவர்.ஆனால் பிரதமரை தேர்வு செய்யும் தகுதி படைத்தவராக இருந்திருக்கிறார்.
புதிதாக உருவாகி வரக்கூடிய அரசியல் கட்சிகள் எல்லாம் அவர் பாணியைப் பின்பற்றும் குளோன்களாக இருக்க வேண்டிய கட்டாயத்தை அவரது அரசியல் வழிமுறை ஏற்படுத்தி விட்டது.
சுமார் 55 ஆண்டுகாலம் தமிழக அரசியலைத் தன்னைச் சுற்றி மட்டுமே இயங்கச் செய்திருப்பது கலைஞர் கருணாநிதியின் சாதனை.சமூகத்தின் அடித்தாள்த்திலிருந்து அதிக கல்வி வாய்ப்புகள் ஏதுவும் இல்லாத குடும்பப் பின்னனியிலிருந்து வந்த ஒருவரான அவர் இதை சாதித்திருப்பது அவருடைய புத்திசாலித்தனத்தினால்தான்.அவருடைய அத்தனை
பலவீனங்களையும்,குறைகளையும் மக்கள் பார்க்க விடாமல் மறைக்கும் கேடயமாக இருந்து இன்றளவும் அவரை காப்பாற்றி வருவது அவ்ரின் புத்திசாலித்தனம் மட்டுமே.மொத்தத்தில் தமிழகத்தின் புத்திசாலி அரசியல்வாதி
மு.கருணாநிதி
புகைப்படம்: அம்பி அர்க்ஃவ்ஸ் 2012
கருத்துகள்
கருத்துரையிடுக