உன்னைப் பிடிக்கும் என்று
நான் சொன்ன பின்
நீ என்னோடு பேசவில்லை
பேச நினைத்தால்
மண்டப வெளியில் நழுவிக்
கூட்டத்தில் ஒளிந்தாய்
உன் மௌனப் பார்வைகள்
என் வயதுக்கெட்டாத அர்த்தங்களைச்
சொல்லி விழலுக்கிறைந்தன
உன் தோழிகளுடன் மட்டும்
உள்ளங்கையில் முகம் வைத்து
ஆர்வமாய் அமர்ந்து கேட்டாய்
என்னோடு மட்டும் ஏனோ
பேச முயற்சிக்கவில்லை.
தொடர்ந்து உன் பின்னால் வரும்போது
கெட்ட வார்த்தையில் உன் தோழியை திட்டுவாய்
உனக்குத்தான் அது கெட்ட வார்த்தை..
ஒரு முறை என்னிடம்
முகநூல் பக்கத்தில் நான் இருப்பதை பற்றி சந்தேகம் கேட்டாயே
அப்படியே எனக்கும்
ஒரு வழி சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.
அந்த வகுப்பின் நுழைவு வாயில் வரிசையில்
நீ எங்கிருக்கிறாய் என்பதை
கூப்பிட்டுச் சொன்னது
உன் மெரூன் கலர் துப்பட்டா.
என் முதல் இரு நாட்கள் இலக்கின்றிக் கழிந்தன
பிரியும் நேரம்
வந்த பின் உன்னிடம்
விடைபெறத் தேடிய எனக்கு
உன்னைக் காணவில்லை
இனி எப்போதும் ஒருபோதும்
நீ வேண்டாம் எனக்கு
என அன்று முடிவு செய்தேன்
இன்றைக்கு நான் இங்கே
இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்
நீ என்றைக்கு
என்ன செய்துகொண்டிருக்கிறாயோ.
அடுத்த ஜென்மத்தில்
நீ ஆணாக பிறந்திருந்தால்
என்ன செய்வாய்?
நான் பெண்ணாய்
பிறந்திருக்கிறேனா என்று
தேடிப் பார்ப்பாயா?
#மகேஸ்வரன்
கருத்துகள்
கருத்துரையிடுக