முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிய தலைமுறை August 24, 2012


புதிய தலைமுறை பிறந்து நேற்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. இன்று இரண்டாமாண்டு தொடக்கம்!
வாழ்த்தும் நெஞ்சங்களுக்கு நன்றி! இன்று முழுவதும் சுவாரஸ்மான பல நிகழ்ச்சிகள் வரிசைகட்டுகின்றன. ஒரு தகவல் எப்படிச் செய்தியாகிறது, செய்தியாளர்களின் அனுபவங்கள், ஓராண்டில் வந்த வரைகலைப் பதிவுகள், ஒவ்வொரு பிரிவிலும் என்னென்ன நடக்கிறது, செய்திசேகரிக்கச் செல்லுமிடங்களில் நிகழ்ந்த குறும்பு நிகழ்வுகள் அனைத்தும் ஒளிபரப்பாகின்றன. நீதிமன்றச் செய்தியாளர் சுப்பையாவின் சேட்டைகள் அமோகம்!!!

இப்படி அனைத்துமே வெளிப்படையாக ஒளிபரப்பாவதால் நானும் சற்று மனம் திறக்கிறேன் இங்கு! முகநூல் பக்கங்களில் என் இதயம் தேடும் நண்பர்களே ! வாழ்க்கையை எழுதிப்பார்க்கும் எண்ணம்வந்ததுண்டு பலநாள். இன்றுதான் எழுத்துக்களாய் உதிர்கின்றன! வார்த்தைகளை வடிவாக அளந்துவைக்கும் மனநிலையிலில்லை இப்போது. எழும் எண்ணங்கள் எழுத்துக்களாய் என்னிடம் சரிபார்த்துக்கொள்ளாமல் விரல்வழி இறங்கி இங்கு அமர்கின்றன. இருகண்களால் மட்டுமல்ல இதயத்தாலும் படித்துவிடுங்கள். புரிந்துவிடும். இல்லையெனில் உதிரிப்பூக்களாய்த்தானிருக்கும். தொடுத்த சரமாயிராது.
சிவகாசியில் தாமரை என்ற தொலைக்காட்சியில்தான் தொடங்கியது எனதிந்த வாழ்க்கை!.. மாவட்ட அளவில் அரசியல்வாதிகளைப் பேட்டியெடுக்கும் நிகழ்ச்சி. கண்கள் முதலில் கேமரா பார்த்தது இங்குதான். ஊதியமென்பதெல்லாம் இல்லை. பின்னர்,,,,,
சென்னைக்கு வெறும் பெட்டியோடு வந்தேன். மஞ்சள் பை காலம் முடியாமலிருந்திருந்தால் அதோடுதான் வந்திருப்பேன்! அறையில் என் உறவும் நட்புமான வெங்கடகிருஷ்ணன், ஸ்ரீதர் இருவருடன் சென்னை வாழ்க்கை தொடங்கியது. சோர்ந்துபோகும்போதெல்லாம் சிவகாசியிலிருந்து திராவிடர்கழகப் பெரியவர் மணியம் அவர்களின் தபாலட்டை வரும். அநேகமாக ஒருவரிதான் எழுதி அனுப்புவார். உதாரணமாக “ தலைநகரை விலைபேசு “ என்று இருக்கும். அறையில் நாங்கள் மூவரும் கணிப்பொறியியலாளர்கள். ஒருவன் வெரிசான், இன்னொருவன் டி.சி.எஸ். நான் மல்லாந்துபடுத்தபடி காப்மேயர், ஷிவ்கெரா, மனம்தரும் பணம் என்று படித்துக்கொண்டிருப்பேன். அவர்களுக்குப் புத்தி ஜெயித்தது. எனக்குத் தமிழாசிரியரின் இரத்தம். இரத்தம் ஜெயித்தது. அத்தனை தொலைக்காட்சிகளிலும் விண்ணப்பித்தேன். இரவெல்லாம் கண்டதும் படிப்பேன். கடன் வாங்கப் பிடிக்காது. இரண்டு வேளைதான் உண்பேன். ஆனால் மகிழ்ச்சியாகத்தான் இருந்தேன்.
விண் டிவியில் பேட்டியாளனாக வாய்ப்புகிடைத்தது. அப்போது பொறுப்பிலிருந்த பாக்கர் மற்றும் ஜைனுலாபுதீன் தோளில் தட்டிக்கொடுத்தனர். கொஞ்சம் வளர்ந்தேன். வாரமொரு நிகழ்ச்சி. ஊதியம் 200 ரூபாய். ஆறுமாதங்கள் கழித்து 250 ஆயிற்று! அதாவது மாதம் 1000 சம்பாதித்தேன். நண்பர்களின் அப்போதைய ஊதியம் மாதம் 20,000! ஓராண்டு அங்கிருந்தேன்.
பிறகு பொதிகைத் தொலைக்காட்சியில் நேர்காணல். என்னுடையதுதான் இறுதி விண்ணப்பம். 1200 பேர் வந்திருந்தனர். அடேயப்பா என்று மலைத்துப்போனேன் . இன்றும் திராவிடர் கழகத் தோழர் பிரின்ஸிடம் கேட்டால் கண்ணீர் வரச் சிரிப்பார். அவரும் உடனிருந்தார். எதிர்வரிசையில் ஓர் அழகான பெண். தந்தையோடு! முகம் பார்க்க வெட்கம். (எனக்குத்தான்!) எழுந்து நடந்தால் உள்ளே இருட்டில் பெரிய நடராஜர் தாண்டவச் சிலை. போய் உட்கார் என்று மிரட்டுவது போல் பிரம்மாண்டம்! திரும்பிவந்தேன். அவளது தந்தை மட்டும் எழுந்து எங்கோ நடந்தார். கொஞ்சம் பார்த்துக்கொண்டேன் அவளை! குதூகலமாயிருந்தது. மற்றவர்கள் “ தொழிலாளி” என்ற சொல்லைப் பலமுறை உச்சரித்துக்கொண்டிருந்தனர். உச்சரிக்கச்சொல்வார்கள் என்று யாரோ ஊதியிருக்கக்கூடும். அதில் 12 பேர் தேர்வானோம். அவளும்தான். நல்ல தமிழ். குறும்பு அதிகம். பிறகு ஆறு மாதங்கள் எங்களுக்குப் பயிற்சி! செய்தி இயக்குநரிலிருந்து பலரும் பலவற்றைத் திருத்தினர். ஒருவர் காஷ்மீரில் ஷ் ல் அரை மாத்திரை குறைந்துவிட்டதென்பார். கருணாநிதி என்பவர் அவரது பெயர் வரும்போதெல்லாம் அனைவருமே தவறாகவே உச்சரிப்பதாக உணர்ந்து உயிர் கொடுப்பார் எடுப்பார். பயிற்சியின்போது ஒருநாள் அப்பெண் எனது பேனாவை வாங்கினாள் இன்று வரை தரவேயில்லை. என் மனைவியான பின்னும்கூட!!!! அவள் பூங்குழலி! சிறு பெண்ணல்ல. தமிழில் முனைவர் பட்டத்திற்காகப் படிக்கிறவள், திருச்சியில் கல்லூரியில் விரிவுரையாளராயிருக்கிறாள்,மேடைப்பேச்சில் புலி என்பதெல்லாம் இந்த எலிக்குப் பலகாலத்திற்குப் பின் அவள் தெளிவாக அதட்டும்போதுதான் தெரிந்தது! ஓராண்டு அங்கிருந்தேன். செய்தி ஒன்றுக்கு 800 ரூபாய்! மாதம் 4 செய்திகள் வரும். 3200 மாதமொன்றுக்குச் சம்பாதித்தேன். 5 மாதங்கள் கழித்துத்தான் அதுவும் வரும்! ஒருநாள் செய்தி வாசித்துக்கொண்டிருந்தார் ஷோபனா ரவி. கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன் ஸ்டுடியோவில். அதே இருக்கையில் அடுத்த செய்தியை நான் வாசிக்கும்பொழுது உணர்ச்சிவசப்பட்டு உட்கார்ந்திருந்தேன். டொம்மென்று பின்னாலிருந்து சப்தம். ஒரு கட்டை கீழே விழுந்தது. அசையவில்லையே. அதுவும் அங்கு எங்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டிருந்தது. மறக்கமுடியுமா அதையெல்லாம். இல்லையென்றால் எங்கு சென்றாலும் இன்று வரை ” பொதிகைத் தயாரிப்பா” என்ற வரவேற்பைப் பெற்றிருக்கமுடியுமா?
குமுதத்திலிருந்து ஒரு நாள் அழைப்பு! நான் தான் ஒன்று விடாமல் விண்ணப்பித்துக்கொண்டே இருப்பேனே! நேர்காணலுக்கு எட்டிப்பார்த்த அறையில் என் கனவுநாயகன் ரபிபெர்னார்ட்! ரைட்டு சம்பளமே கேட்கக் கூடாது. இவரோடு பேசிக்கொண்டிருந்தாலே போதும்! என்றுதான் சேர்ந்தேன். இணையதளப் பொறுப்பாளனாக முழுநேர ஊழியனாக்கிக்கொண்டார்கள். 25,000 மாத ஊதியம். 2006ல். ஒவ்வொரு நாளும் அவரிடமிருந்து பாடங்கள் கற்றேன். நினைத்தபோது நினைத்ததைப் பேசுவார். சமயங்களில் கடிந்துகொள்வார். சிலநேரம் அடிமனத்து இரகசியங்களை மென்மையாகப் பகிர்வார். மனதளவில் ஒரு சேவகனாய் அவருக்கு நான் விருப்பத்தோடிருந்தேன். நிர்வாக ஆசிரியர் வரதராஜன் அவர்களும் என்மீது மிகுந்த அன்பு காட்டினார். குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன், நிர்வாகிகள் அனுராதா, சீனிவாச வரதன் என்று அனைவரும் தோள்தட்டிக்கொடுத்தனர். இன்னும் கொஞ்சம் வளர்ந்தேன். ஒன்பது பேர் வேலையை ஒருவன் பார்த்தேன். இணையத்தளம் குறித்த நடுப்பக்க விளம்பரம் வெளிநாடுகளுக்கு மட்டும் செல்லும். அதில் ரபிசார் போட்டோவை வைத்து லே அவுட் செய்திருப்பேன். அவர் அதை எடுத்துவிட்டு என் போட்டோவை வைத்து அழகுபார்ப்பார். (அவர் நாடாளுமன்ற உறுப்பினரானபோது நானடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவர் இனி என்ன ஆவார் என்பதும் எனக்குத் தெரியும்!) பிறகு ரபிசாரும் வெளியேறினார். நானும் அங்குள்ள அரசியலால் வெளியேறவேண்டியதாயிற்று மகிழ்ச்சியோடு! அறை நண்பர்கள் 25000 த்திலிருந்து 30000 த்தை நெருங்கிக்கொண்டிருந்தனர்.
விடைபெற்ற நாளன்று நேராக ஒரு சலூனுக்கு சென்றேன். அடுத்த மூன்று மாதங்களில் என் வாழ்நாள் நண்பர்கள் பிரபாகரன், மணிவண்ணன், நாரயணசாமி, எத்திராஜ் ஆகியோரோடு சேர்ந்து 20 இலட்சம் ரூபாய் செலவில் ஒரு பார்லர் வைத்தேன். உறவுகள் மிரண்டன. உற்றவர்கள் தலையில் கைவைப்பதா மூக்கில் விரல் வைப்பதா என்று குழம்பினர். என் தாய் தந்தையர் எப்போதும் என்மீதான நம்பிக்கையை விடவில்லை. ஒருவேளை நீ ஏராளமாய்த் தொலைத்தாலும் இறுதிவரை சாப்பாடு போட நானிருக்கிறேன் என்றார் ஒருநாள். அவர் எப்போதாவதுதான் அப்படிப் பேசுவார். மற்றபடி கலாய்த்துக்கொண்டே இருப்பார். அந்த ஒருநாளைக் கெட்டியாக மனதில் வைத்துப் பல சோதனைகளைக் கடந்துவிடுவேன். பார்லர் எனக்குச் சாப்பாடு போடத்தொடங்கிற்று. ஆனால் இலாபமில்லை. நண்பர்கள் ஒரு கேள்வியும் கேட்காதவர்கள்.
மீடியா4யூ என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கினேன். நண்பர் ஒருவர் நிர்வாகம். எனது பணம். என் மனம் கவர்ந்த அழகன் கிருஷ்ணா டா வின்ஸி கிரியேட்டிவ் பார்ட்னர்! விஜய் தொலைக்காட்சியில் ஒரு சுதந்திரதினத்தன்று ஏழரை இலட்ச ரூபாய் செலவில் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாயிற்று! கிருஷ்ணாவின் வசீகர எழுத்து. போட்டிபோட்டுக்கொண்டு எழுதினேன். பஞ்ச் டயலாக்குகள் மட்டும் என்னுடையவை! நம்மாழ்வார்: நம்மை ஆள்வோர் நம்மீது காட்டும் கரிசனத்தை விட நம்மாழ்வார் நம்மீது காட்டும் கரிசனம் அதிகம். கேரம் இளவழகி: சிவப்புக் காய்கள் கண்டு நடுங்கும் கருப்பு விரல்களுக்குச் சொந்தக்காரி அல்போன்ஸ்ராய் காட்டுயிர் ஒளிப்பதிவாளர்: இவரும் வேட்டைக்காரர்தான் தூக்குவது துப்பாக்கியல்ல கேமரா என்று எழுதியதெல்லாம் ஹிட்! நானே திரையில் தோன்றியிருக்கலாமென்றாலும் கோபிநாத்தை வைத்துச் செய்தோம். யார் எழுதியது நன்றாக இருக்கிறதென்று அவர் சொன்னதை வந்து சொன்னார்கள். ஒளிபரப்பாயிற்று. தலைநிமிர்ந்த தமிழர்கள் என்பது தலைப்பு. அறையில் நண்பர்கள் விசிலடித்தார்கள். பிறகு நிறுவனம் வீணாய்ப் போயிற்று. என் பணம் 5 இலட்சம் போயிற்று. காரணமொன்றுமில்லை. குடி குடியைக் கெடுக்கும். குடும்பத்தில் ஒருவர் குடித்தாலே போதுமே. பார்ட்னர்ஷிப்பும் குடும்பம்தானே! காயம் பட்ட வேதனையில் ரவுடி போல் திரிந்தேன். சீண்டியவர்களையெல்லாம் அடிக்கக் கைகள் ஓங்கின. கண்கள் சிவந்தன. தலை சூடாயிற்று. தூக்கமற்றுப் போனேன். வறண்டே கிடந்தது தொண்டை. காவல்நிலையம் சென்று போராடினேன். லஞ்சம் கேட்ட சப்.இன்ஸ்பெக்டரோடு மோதினேன். கமிஷனரிடம் போனேன். மடக்கி டி.எஸ்.பி.யைச் சந்திக்க அனுப்பப்பட்டேன். தேநீர் கொடுத்து உபசரித்தார். எதிர்த்தரப்பின் வேலையெனப் புரிந்தது. மனித உரிமை ஆணையம் வரை சென்றேன். நாளாகும்போல் தெரிந்தது. சென்னைக்கு வந்ததிலிருந்து நடந்தவற்றையெல்லாம் நினைத்துப்பார்த்தேன். தலை கவிழ்ந்தேன். சரி! சான்றிதழ் கிடைக்காத இந்த அனுபவப்படிப்பிற்கு 5 இலட்சம் விலையென நினைத்துகொண்டேன். இதற்குப் பதிலாகப் பின்னாலிருந்த லிபாவில் சேர்ந்து எம்.பி.ஏ.வாவது படித்திருக்கலாம்.
வயிறு பசித்தது!
மீண்டும் எங்காவது வேலையில் சேரவேண்டிய நிலை! ஒருநாள் பூங்குழலி வீட்டிற்கு வந்தாள். பின்னாலேயே ஜீதமிழ் தொலைக்காட்சியிலிருந்து அழைப்பு. நீ வந்த நேரம் என்று சொன்னேன் கிண்டலுக்கு. இப்படியொரு பெண் கிடைத்தால் நன்றாக இருக்குமென்று கூறினார் அம்மா என்னிடம் தனியாக! இரண்டாண்டுகாலம் ஜீதமிழில். மாநகரத்தந்தை மா. சுப்பிரமணியன் அவர்களோடு நேரலை நிகழ்ச்சி! அவரது படுக்கையறையில் வைத்து நட்போடு பேசுமளவிற்கு நீண்டது உறவு. செய்தி வாசிப்பும், பேட்டியும் இரு கண்களாயின.
பொதிகையில் அன்பு நண்பர் எனது முதல் தர ரசிகர் தொல்காப்பியன் அவர்களுக்காகவும் தொடர்ந்து பிரபலங்களை நேர்காணல் செய்துகொண்டே இருந்தேன்.
கார் அதுஇதுவென்று செலவுக்கான பொருட்களாகச் சேர்த்திருந்தேன். பணம் வந்து நின்று சென்றுவிடும் ஓரிடமாகத்தான் என் உள்ளங்கைகளிருந்தன. ஐயோ இன்னொருமாதம் காத்திருக்க வேண்டியிருக்குமே என்றிருக்கும். அப்போதெல்லாம் என் கவலைகள் மறக்கக் கைகொடுத்தது என் நட்புதான்.
நட்பென்றால் இலேசுபாசான நட்பல்ல. மணிக்கணக்கில் பேசும் காதல் போன்ற நட்பு. தமிழருவி மணியன் ஐயா (தந்தையின் மரணம் பற்றி அவர் கூறி முடிக்கும்போது என் தொலைபேசி நனைந்திருந்தது!) அன்போடு தான் சொன்ன புத்தகங்களைப் படித்துவிட்டேனா என்று அதட்டுவார்.
சபாநாயகர் காளிமுத்து இரயில்வே ஸ்டேசனில்பார்த்து கடிதம் மட்டும்தான் எழுதுவீர்களா வீட்டிற்கு வரமாட்டீர்களா….வாருங்கள் என்பார். ” நல்ல படிப்பாளிதான் நல்ல படைப்பாளியாக முடியும்” என்று அவர் பேசியது எங்கோ ஒலிபெருக்கியில் ஒருநாள் கேட்டேன். சீக்கிரம் ஒரு நாள் பார்த்துவிட்டு வரவேண்டுமென நினைத்தேன். ஆனால் திடீரென ஒருநாள் அவர் இறந்ததுக்கு நீங்க போகலயா என்றார் ரபிசார். அதிர்ந்துபோய் இல்ல சார் என்றேன். ஆனால் மனதிற்குள் “அவரோட ஒடம்ப நா பாத்தாத்தான அவரு செத்ததாக் கணக்கு? அவர சாகவிடமாட்டேன் சார் ! என்றேன்.
ரபி சார் அவர் விரும்பும்போது மட்டுமே என்னை அழைப்பதை நானும் ரசிப்பேன். அவரது காரின் பின்புறக் கண்ணாடியை ஒருலாரி அப்பளம்போல் நொறுக்கியபொது “வெங்கடப்பிரகாஷை வரச்சொல்லுங்க” என்று நடுரோட்டிலிருந்து சொல்லியனுப்பியபொழுது அவர் மனதில் நான் எங்கிருக்கிறேன் என்பது புரிந்தது. திடீரென ஒருநாள் தொலைபேசியில் அழைத்தார். இதழ்களில் இதழ்களே நிரம்பிக்கிடந்த ஆபாசத்தைச் சொல்லிக்கசந்தவர் “ ஒரு நாள் சொன்னீங்க வெங்கடப்பிரகாஷ். நாம எல்லாம் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் சார். பள்ளி ஆசிரியர்களுக்கும் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கும் வித்தியாசம் ரொம்ப சார்” ன்னு! வெல் செட் வெல்செட் “ என்றபோது இவரைப் புரிந்துகொள்ளாமலிருப்பவர்கள் அதிகம் என்று உணர்ந்தேன்.
விஜய் டிவியில் வெளிநடப்பு செய்திருப்பார். மாலையில் குளிர்ச்சியாக அறையில் வெங்கடேசு அல்வா சாப்பிடுலே என்பார் நெல்லைக்கண்ணன் ஐயா. நான் அனுப்பிய சி.டி.யெல்லாம் கேட்டுட்டியாலே ? என்பார்.
நாடறிந்த நாஞ்சில் சம்பத் என்னறையில் கரண்டியைக் கையில் வாங்கி “ என்ன வெங்காயமா வெட்டுறே? வெங்காயம்! வெங்காயம்! தள்ளு இப்பிடிப் பொடியா நறுக்குனாத்தான் நல்லாயிருக்கும். நீ செஞ்சத மனுஷம் திம்பாம்? என்பார். அன்று மாலையே ஏழுகிணறு பொதுக்கூட்டத்தில் ” என் ஆருயிர்த் தோழன் வெங்கடேசப்பிரகாஷ் “ அவர்களே என்று முழங்கிக்கொண்டிருப்பார். முன்னாலிருக்கும் அதிமுக முக்கியஸ்தர்கள்கூடக் கும்பிட்டார்கள். கொடுமை! எம்பேர இப்ப்டித் தப்பாச் சொன்னதுக்கு நா வெங்காயம் வெட்டுனதே தேவல என்று முணங்கிக்கொண்டிருப்பேன். திடீரென உச்சஸ்தாயியில் ” என் பேச்சை என் மூச்சை என் காலடித்தடங்களைப் படம் பிடித்து அந்தச் சக்கர நாற்காலிச் சண்டாளனுக்குத் தூது சொல்லும் ஒற்றர்படைக் காவலர்களே ” என்று சொல்லிவிடுவார். எனக்கு வியர்க்க ஆரம்பித்திருக்கும்.

இத்தனை பேரும் வந்திருந்து வாழ்த்தினார்கள் என் திருமணத்தை! ரபி சாரைத்தவிர. வேறு யாரும் வரவில்லையென்றால் வெறுத்திருப்பேன். ஆனால் இவர் மீது அன்பு கூடுகிறது. ஏனென்று தெரியவில்லை. சிவகாசியில் என் திருமணத்திற்கு இரவெல்லாம் கொடி கட்டும் வேலையைக் கூடத் தன் கண்காணிப்பிலேயே செய்தார் அண்ணன் சம்பத்! காலையில் தலைவர் வை.கோ.வந்தார். என்னைப் பற்றி இப்படியும் சொல்லிக்கொள்ள முடியுமா?! என்று நானே வியக்குமளவிற்குப் பேசினார். என் ஆயுளுக்கும் இனி மனச்சோர்வே வராது எனக்கு! தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன் முதல்நாள் வந்தார். தமிழறிஞர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் வந்தார். சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பஞ்சமில்லை. கழுத்தில் மாலையோடு வரவேற்புரை நிகழ்த்தினேன். என் உறவுகள் ” பூன மாதிரி இருந்தானே இப்பிடிப் பேசுறானே” என்று சாமி வந்த பெண்டாட்டியைப் பார்ப்பதுபோல் பார்த்தார்கள்! “ அன்றொரு நாள் சென்னைக் கடற்கரையில் குளிர்மணலைச் சுடுமணலாக்கிய வார்த்தைச் சித்தர் வலம்புரியாரின் வாக்கைச் சொல்லி முடிக்கிறேன். நாளைய தமிழகம் நம் தலைவரின் கரங்களில் பத்திரமாக இருக்கும்” என்றுமுடித்தேன்! இன்றும் ஒவ்வோரிடத்திலும் மக்கள் பிரச்னைக்காகத் தன்னலம் பாராமல் அவர் முன்னிற்கும்போது இதோ ஒரு கதாநாயகனின் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்று தோன்றிக்கொண்டேயிருக்கிறது. வரவேற்பு வைபவங்களும் சிறப்புர அரங்கேறின. பாலபாரதி எம்.எல்.ஏ. வந்தார். திருவுடையான் அரங்கமதிரப் பாடினார். காற்றுவெளியிடைக்கண்ணம்மா கூட எனக்காகப் பாடினார். செட்டிநாட்டுக் குமாரராணி மீனா முத்தையா , மாநகரத்தந்தை,காவல்துறை நண்பர்கள், ஊடக நண்பர்கள் குவிந்தனர். ஒரு பொருளாதரத் தோல்வியாளனின் திருமணம் இந்த அளவிற்குச் சிறப்பாக நடந்தேறியதென்றால் அது எனக்காகத்தானிருக்கும். பேட்ரிக் ஜெமினி கணேசன் பாடல்களாக வாசித்து அசத்தினார். எல்லாம் நல்லபடியாக நடந்தது. மறுநாள் காலையில் ஜீதமிழில் மாநகரத்தந்தையோடு இறுதி நிகழ்ச்சி! அதற்கு ஒரு பத்துநாட்கள் முன்பே புதியதலைமுறையில் பணியாணை வாங்கியிருந்தாலும் அதை முடித்துவிட்டுத்தான் வருவேன் என்று சொன்னேன். சொன்னதும் கணக்கில் எடுக்கப்பட்டது நல்லவிதமாக! எடிட்டர் ராம் சாரின் அழைப்பு , எனக்கான திருமணப்பரிசாக அமைந்தது!!! மனைவி மட்டுமல்ல உயரதிகாரிகள் அமைவதும் இயற்கையின் வரம்தானோ!
அந்த இறுதி நிகழ்ச்சியை இன்றைய புதிய தலைமுறைச் செய்தித் தலைவர் சீனிவாசன் பார்த்திருந்தாரென்பது எனக்குத் தெரியாது. பணியில் சேர்ந்த முதல்நாள் அறையில் பாராட்டினார். உங்கள் நிகழ்ச்சி பார்த்தேன். மிக இனிமையாக இருந்தது. ஆனால் இனிமையாக மட்டுமே இருந்தது. அது மட்டுமே போதுமா? என்று தொடங்கினார். எனக்கு அப்போதுதான் முதன் முதலாகப் பெட்டியோடு சென்னைக்கு வந்திறங்கியது போன்றிருந்தது. குமாரராணி மீனாமுத்தையா அவர்களிடம் பேட்டியெடுத்தபோது “ ராஜா போயிட்டாரு. இனி என்ன செய்யிறது. ஸ்கூல் ஆரம்பிச்சா என்ன நம்பி குழந்தைகள யார் விடுவான்னு வருத்தமா இருந்துச்சு “ என்று சொல்லும்போது தாங்கமுடியாமல் அம்மா அப்படிச் சொல்லாதீர்கள். இந்த நாட்டில் பிள்ளைகளில்லாத பெரியார்தான் தந்தை ஆனார். பிள்ளைகளில்லாத தெரசாதான் அன்னை ஆனார் என்று சொன்னேன். பேஸ்புக்கில் ப்ரியா கல்யாணராமன் நெகிழ்ந்து பகிர்ந்திருந்தார். ரபிசாரிடமிருந்தும் பழகிய அறிஞர்களிடமிருந்தும் ஓரளவிற்குக்கற்றுவிட்டதாய் நினைத்திருந்த வேளையில் அவர் சொன்னது இடியாயிறங்கியது! ஆஹா ! இவரிடம் நாம் வாழ்நாளில் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது சம்பளமே இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று! நான் எங்கெல்லாம் இப்படி நினைக்கிறேனோ அங்கெல்லாம் சம்பளத்திற்குக் குறைவேயிருக்காது. இதற்குள் வெளிநாடுகளுக்கு என் பழைய அறைத்தோழர்கள் சென்று செட்டிலாகியிருந்தனர். ஊதியத்தை புதிய தலைமுறை நேர்செய்துவிட்டது. இன்று அவர்கள் வரிசையில் நானும் சேர்ந்துவிட்டேன் இங்கிருந்தபடியே! சாலையிலிருந்து கீழறிங்கிவிட்ட வண்டியைத் தட்டுத்தடுமாறி மீண்டும் மேலேற்றியதைப் போல! இந்த சாகசம் எனக்குப் பிடித்திருந்தது.

புதிய தலைமுறையில் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இன்று வரை எங்கள் தலைவரும் விடாப்பிடியாய் உற்சாகத்தோடு கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறார். நாங்களும் கற்றுக்கொண்டே இருக்கிறோம். நண்பர் தலைவராயிருப்பதுபோலிருக்கிறது. என்னைப் பற்றி ப்ளாக்கில் எழுதியிருக்கிறார்களாமே வெங்கட்? என்று குழந்தைபோல் சிரிப்பார். பிறகு சரி தமிழகச்சூழல்குறித்து எனக்குத் தெரிந்ததைவிட உங்களுக்கு அதிகம் தெரியும் அதனால் இந்த விவாதத்தைப் பொறுத்தமட்டில் நீங்களே முடிவெடுங்கள் எப்படிக் கொண்டுசெல்வதென்று ? என்று என் கண்களைத் திறந்துவிடுவார். அடுத்தவர் ராம் சார் இன்னும் நுணுக்கமானவர். அன்பானவராகவும் அனைவருக்கும் நல்லவராகவும் இருப்பதற்காக அவர் அனுபவிக்கும் சோதனைகள் நல்லதங்காளுக்கு நிகரானவை! இப்படி எழுதும் சுதந்திரமெல்லாம் இவர்கள் கொடுத்ததுதான்!
என் மனதில் எத்தகைய ஒரு நிறுவனத்தில் பணிபுரிய நினைத்தேனோ அதை அடைந்துவிட்டேன். ஆனால் இதை அடைவதற்கு என் வாழ்நாளில் பத்தாண்டுகாலக் காத்திருப்பு தேவைப்பட்டதே! எந்த நிறுவனத்திலிருந்தாலும் பலரையும் பணியில்சேர்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும். அவர்களில் சிலரால் எனக்குப் பிணி நேர்ந்தும்கூட இன்று வரை அதை விடவில்லை நான். வருத்தமும் படுவதில்லை. ஆனால் சில நேரங்களில் யாராவது
“ எங்க அக்கா பொண்ணுதான். அழகா இருப்பா. தமிழ் நல்லா படிப்பா…தமிழ் சீரியல்லாம் கூடப்புரிஞ்சு பாப்பா. இஸ்கோல்ல கலாச்சாரங்கள்ளயெல்லாம் கலந்துட்ருக்கா.. பேங்க்லதான் வேலபாக்குறா. கல்யாணம் வரைக்கும்தான். இப்போ அவளுக்கு அது பிடிக்கல,.அதான் நியூஸ் கியூஸ் வாசிக்கலாமேன்னு நினைக்கிறா. புதிய தலைமுறைல சொல்லிவிட்றீங்களா? நீங்க நல்லா நியூஸ் படிக்கிறீங்க. எப்ப வரச்சொல்லட்டும் எங்கக்கா பொண்ண?” என்று கேட்கும்போது “ நா செத்ததுக்கப்புறம் ” என்றுதான் சொல்லத்தோன்றுகிறது நண்பர்களே……. ஆனால் எங்கள் தலைவர் சீனிவாசன் ஒருநாள் அப்படி வந்த ஒரு பிஸியோதெரபிஸ்ட் பெண் ஒருவரிடம் சிரித்துக்கொண்டே “ உங்களை இன்றே நான் வேலைக்கு எடுத்துக்கொள்கிறேன். எங்கள் செய்தியாளர் ஒருவரை உங்களுடன் அனுப்புகிறேன். அவரை பிஸியோதெரபிஸ்ட்டாக உங்கள் மருத்துவரிடம் உடனே சேர்த்துவிட்டுவிடுங்கள் “ என்றார். அந்தப் பெண் லிப்டைக்கூடத் தேடவில்லை. படிவழியாகவே இறங்கிப்போய்விட்டாள். அதனால்தான் அவர் தலைவராயிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.
இத்தனை இருந்தும் கோபதாபங்கள் சலசலப்புகள் எழாமலில்லை. ஆனால் அத்தனையும் குடும்பத்திற்குள் நடப்பவை போல்தான். புரிந்துகொள்ளாமல் வெளியேறிய நண்பர்களும் உண்டு. மேலுள்ளவர்களின் பாரத்தையும் புரிந்துகொண்டு தோள்கொடுப்பவர்களாக விரைவில் அனைவரும் மாறிக்கொண்டிருக்கிறார்கள்.தமிழ் ஊடக வரலாற்றில் இப்படியொரு மாற்றத்திற்காகத்தானே காத்திருந்தோம்.

மனம் நிறைவாக இருக்கிறது. பத்தாண்டுகள் அனுபவமிருந்தாலும் என் மனைவியாயிருந்தாலும் ஆறு மாதங்கள் ஆறப்போட்டு சோதித்து சன் டிவியில் அவள் வாசித்ததன் நிறை குறைகளை விரிவாக அவர் சொல்லி பிறகு பணியில் சேர்த்துக்கொண்டார். நண்பர்களுக்கெல்லாம் சிபாரிசு செய்யும் எனக்கு என் மனைவிக்கு சிபாரிசு செய்ய நா எழாமல் போனபொழுதுதான் நான் நேர்மையாகத்தானிருக்கிறேன் எனபதை அழுத்தமாக உணர்ந்தேன்.
இப்பொழுதுதான் நானே சேர்ந்த உணர்வு . அதற்குள் ஓராண்டாகிவிட்டது. எத்தனை எத்தனை அனுபவங்கள் இந்த ஓராண்டில் . எவ்வளவு தலைவர்கள்! சமூக ஆர்வலர்கள்! எத்தனை விதமான மனிதர்கள் என் பாதையில் …….. சந்தித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
அத்தனைக்கும் மேலாக நண்பர் சத்தியநாராயணன். நண்பர் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. தொலைக்காட்சி நிறுவனர். நினைத்தால் உல்லாச புரியில் நீந்த வாய்ப்பிருப்பவர் எங்களோடு சேர்ந்து நெருப்பாற்றில் நீந்திக்கொண்டிருக்கிறார். இவருக்காக உயிரும் கொடுக்கலாம். அவ்வளவுதான் சொல்லமுடியும். இது அவர் தரும் ஊதியத்திற்காக அல்ல. அவர் காட்டும் அளவற்ற அன்பிற்கும், மரியாதைக்காகவும்!!!
சென்னையில் ஒளிபரப்பில் சற்றே முடக்கப்பட்டிருக்கிறோம் என்ற ஒன்றுதான் இந்நேரத்தில் மனதில் வலிதரும் ஒன்று! நேரலையில் நான் சொன்னது போல் நெருப்பைக் கரையான்கள் அரிக்கமுடியாது நண்பர்களே! தெரிந்தோ தெரியாமலோ நல்லது செய்திருக்கிறார்கள்!


உண்மையில் ஒரு செய்தியாளனாக இன்னும் என் பணியைத் தொடங்கவில்லை. இனிதான் தொடங்கப்போகிறேன்.
சொந்த வீடு மட்டுமே சொர்க்கமென்றிருந்த நான், எனக்குப் பிடித்த புத்தகங்களை எடுத்துப்போய் திருமணமான புதிதில் என் மாமனார் வீட்டில் ஒவ்வோர் அறையிலும் வைத்துப் படித்திருக்கிறேன். அதன்மூலமாய் அந்த வீடும் விருப்பமானதாக அமைய ஒரு இனிய தொடக்கமாய் அமையட்டும் என்று! அது நடந்தது.
அதேபோல் இந்த ஓராண்டும் என் விருப்பத்திற்கேற்றார்போலவே புதிய தலைமுறையில் வளையவந்திருக்கிறேன். ஆசிரியர், துறைத்தலைவரிலிருந்து நிறுவனர் வரை அன்பு முகம் மட்டுமே என்னிடம் காட்டியிருக்கின்றனர். என் நிகழ்ச்சி குறித்து ஒரு வார்த்தை கூட இம்மூவரும் கடிந்துகொண்டதோ ஏன் கொஞ்சம் சூடாகவோகூட விமர்சித்ததே கிடையாது. தந்திரங்கள் எதுவும் நான் செய்வதில்லை என்பதனாலேயே என்னை சுதந்திரமாக விட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன்.

முதல் ஆண்டில் முதல் செய்தியை வாசிக்க வாய்ப்பளித்து என்னைப் பெருமைப்படுத்தினர். இரண்டாமாண்டு முதல் செய்தியை என் துணைவியும் தோழியுமான பூங்குழலி இன்று வாசிக்கிறார். இதுவரை நாங்கள் பணியாற்றிய நிறுவனங்களிலேயே எங்களை மிகவும் மரியாதையோடு நடத்தி உச்சத்தில் வைத்து அழகுபார்ப்பது புதியதலைமுறைதான். ஏதோ கனவுலகிலிருப்பதுபோல்தான் இருக்கிறது இன்னும்! இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!!!!!!!!!



Engineering படித்து விட்டு இந்த ஊடக துறையை எவ்வாறு தேர்வு செய்தீர்கள்?????நானும் வேறு ஒரு துறை மாற விரும்புகிறேன்...உங்களின் பதில் எனக்கு சிறிதேனும் உதவும் என்று நெனைக்கிறேன்...ஏனென்றால் நானும் ஒரு engineer...

2:10am
Venkada Prakash
பிடிக்காமல் படித்தது அது! நம் கல்வி முறையும் அதைக் கற்றுத்தருகிறவர்களும்.......மண்ணாங்கட்டிகள்....நினைத்தாலே வயிறு எரிகிறது! என்னுடன் பயின்ற மாணவர்கள் அறிவாளிகள் அநியாயத்திற்கு வருந்திப்படித்தவர்கள். நான் அப்படியல்ல. ஒரு தமிழ்மீடியத்திலிருந்து வரும் மாணவனுக்கும் சேர்த்ததாக ஆசிரியரின் கற்பிப்பு அமைய வேண்டியது நியாயமென்று ஏங்கினேன். ஆகக் கடைசிப் புரிதல் உள்ள மாணவன் பக்கமிருந்து கற்பித்தல் தொடங்க வேண்டுமென நினைத்தேன். அதற்காக அவர்கள் தியாகமொன்றும் செய்திருக்க வேண்டாம். அன்போடு ஒத்துழைத்தாலே போதுமானதாயிருந்திருக்கும். ஏன் சொல்கிறேனென்றால் பள்ளியில் முதல்தர மாணவனாகத் தேறிவந்த எனக்குக் கடும் வெறுப்பு தட்டும்படியாகக் கல்லூரி அமைந்துவிட்டது. ஒருவகையில் கல்லூரிச்சூழல் என்னை அவமதித்தது. ஏமாற்றியது. காப்பியடிக்குமளவிற்கு என்னைக் கொண்டுசென்றது. நல்லவேளை எப்படியோ பாஸான நான் அந்தச் சான்றிதழ்கொண்டு எந்தப் பணிக்கும் செல்லவில்லை. அது நியாயமாகவும் இருக்காது. ஒன்றும் மோசமாகவும் போய்விடவில்லை. பிடித்த துறைக்கு வந்தேன். இடைப்பட்ட காலத்தில் நண்பர்கள் மிச்சம்பிடித்த ஊதியத்தை நான் பெற்றிருக்கவில்லை. அவ்வளவுதான். அதையும் காலவோட்டத்தில் சேர்த்துப்பெற்றுவிடலாம் பிடித்த துறையென்பதால்! ஆனால் இதில் உள்ள மகிழ்ச்சி இருக்கிறதே ! அடடா! மனதில் நின்ற காதலியே மனைவியாக வருவதைப் போல! சுகம்யா! இந்தச் சுகத்துக்காக எந்தப் படிப்பையும் விட்டுட்டு வரலாம்யா! ஆனா வந்துட்டு திரும்பிப் பாத்தோம்ம்ம்ம்ம் செத்தோம் தோம்தோம் தோம்!

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...