முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Sun_TV_PK

இப்படி யாரையும் சபிப்பது வருத்தத்திற்குரிய விஷயம்.  அதிலும் சம்பந்தப்பட்ட நபரின் பிறந்தநாள் அன்று சபித்தால் ?   இவர் திருந்த மாட்டார், மனம் வருந்தமாட்டார் என்று நினைக்கும் ஒரு நபரை மட்டுமே இப்படிச் சபிக்க முடியும்.  அப்படி சபிக்கப்பட உள்ள நபர் யார் தெரியுமா ?   சன் டிவிதான்.   13 ஏப்ரல் 2013ம் ஆண்டோடு சன் டிவி தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.   சாதாரணமாக, ஒரு ஊழல் அரசியல்வாதியின் மகனாகப் பிறந்த கேடி சகோதரர்கள் இன்று ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டியமைத்திருக்கிறார்கள்.   இவர்களின் சாம்ராஜ்யம் அத்தனையும், தமிழனின் உழைப்பில், தமிழனின் வியர்வையில், தமிழனின் பணத்தில் விளைந்தது.
இன்று மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கும் கேடி சகோதரர்களின் சன் குழுமத்தின் உறுப்பினர்கள் யார் தெரியுமா ?
young_KD
மல்லிகா மாறன்  (கேடிகளைப் பெற்ற மகராசி)
கலாநிதி மாறன்
தயாநிதி மாறன்
அன்புக்கரசி மாறன் (கேடிகளின் தங்கை)
காவேரி கலாநிதி (பெரிய கேடியின் மனைவி)
காவ்யா கலாநிதி (மகள்)
நீனா பெல்லியப்பா (கலாநிதியின் மாமனார்)
செரினா பெல்லியப்பா (கலாநிதியின் மாமியார்)
இவர்கள்தான் இன்று தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஊடக மாஃபியாவாக வளர்ந்து நிற்கும் சன் குழுமத்தின் உரிமையாளர்கள்.
இந்த சன் குழுத்தின் தொடக்க கால வரலாற்றை சவுக்கு தளத்தில் கேடி சரித்திரம் என்ற கட்டுரையில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தக் கேடிகளின் வரலாறே பொய், புரட்டு, வஞ்சகம், சூது இன்னபிற.
தமிழர்களின் ரத்தத்தை உறிஞ்சி கோடிக்கணக்கான பணத்துக்கு அதிபதிகளாக இருக்கும் கேடி சகோதரர்களுக்கு சொந்தமாக இருக்கும் நிறுவனங்கள் என்னென்ன தெரியுமா ?
வேலூர் முரசு ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
கோவை முரசு ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
கே.எஸ் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
கல் பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி, ஆர்எம்அர் ரமேஷ்
சேலம் முரசு ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
கல் கேபிள்ஸ் ப்ரைவெட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன், கே.சண்முகம்
சன் அகாடமி ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் உதயநிதி, கலாநிதி மாறன், எஸ்.செல்வம், கே.சண்முகம்
ஜெமினி டிவி ப்ரைவெட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன், ஏ.மனோகர் ப்ரசாத், பி.கிரண், காவேரி கலாநிதி
கல் கம்யூனிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டேட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
கல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (மெட்றாஸ்) ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன், எஸ்.செல்வம் மற்றும் காவேரி கலாநிதி
கேபிகே பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
குங்குமம் நிதியகம் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி மற்றும் எஸ்.செல்வம்
உதயா டிவி ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி மற்றும் எஸ்.செல்வம்
குங்குமம் பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி மற்றும் எஸ்.செல்வம்
நெட்வொர்க் கேபிள் சொல்யூஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன்  மற்றும் கே.சண்முகம்
சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் மற்றும் எஸ்.செல்வம்
சன் டைரெக்ட் டிவி ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
டிஎம்எஸ் என்டர்டெய்ன்மென்ட் ப்ரைவேட் லிமிடெட்
இயக்குநர்கள் ப்ரியா தயாநிதி மற்றும் முகம்மது இஷ்ரத்
எச்.எஃப்.ஓ என்டர்டெய்ன்மென்ட் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் ப்ரியா தயாநிதி மற்றும் முகம்மது இஷ்ரத்
டிகே என்டர்ப்ரைசஸ் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் மற்றும் ப்ரியா தயாநிதி
சன் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட்
ட்ரஸ்டிகள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
எஸ் & எஸ் டெக்ஸ்டைல்ஸ்
செல்வி செல்வம், காவேரி கலாநிதி, ப்ரியா தயாநிதி
எம்எம்எஃப் ட்ரஸ்ட்
ட்ரஸ்டீஸ் கலாநிதி மாறன் மற்றும் மல்லிகா மாறன்
கல் ரேடியோஸ்
இயக்குநர்கள் கலாநிதி மாறன்
சவுத் ஏஷியா எப்.எம்.
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
இந்தப் பட்டியல் 2006 அன்று உள்ளபடி.  இதற்குப் பிறகு மேலும் பல நிறுவனங்களைத் தொடங்கியிருக்கிறார்கள் கேடி சகோதரர்கள்.  கடைசியாக அவர்கள் தொடங்கிய தொழில் நிறுவனம்தான் ஸ்பைஸ் –ஜெட் விமான சேவை.
கேடி சகோதரர்களின் தொடக்க காலம் முதல், இன்றைய வளர்ச்சி வரை, திமுக என்ற மாபெரும் கட்சியின் நிதியும், அதிகார பலமும் பின்புலத்தில் இருந்து இயக்குகிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  திமுகவால் வளர்ந்து இன்று தீட்டிய மரத்திலேயே பதம் பார்க்கிறார்கள் கேடிகள் என்பது வேறு விஷயம்.
ஆ.ராசாவை ஆறே மாதங்களில் கைது செய்த சிபிஐ, கேடி சகோதரர்கள் விஷயத்தில் இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் செயலற்று இருக்கிறது என்பது, கேடி சகோதரர்கள் எத்தனை பெரிய தீய சக்தியாக வளர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.  தொலைபேசி இணைப்பைத் திருடி கோடிக்கணக்கில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கு என்பது வெளிநாட்டில் ஆதாரங்களைத் தேட வேண்டிய வழக்கு அல்ல.   பத்தே நாட்களில் புலன் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கூடிய அளவுக்கு எளிதான வழக்கு.  இந்த வழக்கிலும் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதும் கேடிகளின் செல்வாக்குக்கு ஒரு சான்று.
இந்த கேடி சகோதரர்களுக்கு அம்பானிகள் போலவும், ரத்தன் டாடா போலவும், ஆதித்ய பிர்லா போலவும், பஜாஜ் போலவும், பெரும் பணக்காரர்கள் வரிசையில் வர வேண்டும் என்ற தணியாத கனவு உண்டு. இந்தக் கனவின் ஒரு பகுதியே சொந்தமாக ஐபிஎல் அணி.
1356065909_ipl-sunrisers-logo27
சொந்தமாக ஐபிஎல் அணி வாங்க நினைப்பதில் தவறில்லை…. ஆனால், இலங்கையின் தமிழினப்படுகொலை காரணமாக தமிழகமே சிங்களனுக்கு எதிராக கொதித்தெழுந்து எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் சிங்களனை தங்கள் அணியின் கேப்டனாக வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் எப்படிப்பட்ட இனத்துரோகிகள் என்பதை அடையாளம் காணுங்கள்.
தங்களது ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தை இலங்கைக்கு நடத்தி தொடர்ந்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறார்கள்.  பாலச்சந்திரன் புகைப்படம் வெளியாகி, தமிழகம் கொதிநிலையை எட்டியபோதும் கூட, இவர்கள் குறைந்தபட்சம் தங்கள் அணியில் உள்ள சிங்கள வீரர்களை நீக்குகிறோம் என்று அறிவிக்கவில்லை.
தமிழனின் வியர்வையிலும், தமிழனின் உழைப்பிலும், தமிழனின் பணத்தை உறிஞ்சிய இவர்கள், தமிழினத்துக்கே விரோதிகளாக தொடர்ந்து இருந்து வருகிறார்கள்.   இவர்கள்தான் தமிழினத்தின் உண்மையான எதிரிகள்.  எந்த திமுகவின் பலத்தில் வளர்ந்து எந்த திமுகவின் பலத்தில் இயங்கி வருகிறார்களோ, அந்த திமுகவே தீவிர சிங்கள எதிர்ப்பில் இறங்கியுள்ள நிலையில், வெளிப்படையாக சிங்களனோடு உறவாடி, சிங்களனோடு கொஞ்சி குலாவி, சிங்களனோடு தொழில் செய்து வரும் இவர்கள் தமிழின விரோதிகளா இல்லையா… இவர்களின் சன் டிவி பிறந்தநாளன்று இவர்களை சபிக்காமல் என்ன செய்வது ?'
கேடி சகோதரர்களை முழுமையான தீவிரத்தோடு எதிர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.   இந்தக் கடமையை ஆற்ற வேண்டிய பெரும் பொறுப்பு மாணவ சமுதாயத்திடம் உள்ளது.
அன்பார்ந்த மாணவர்களே.  கடந்த ஒரு மாத காலமாக, தமிழகத்தை ஏறக்குறைய புரட்டிப் போட்டு விட்டீர்கள். பாலச்சந்திரனின் கொலைக்கான ஆதாரங்கள் வெளியானதும் நீங்கள் தொடங்கிய போராட்டம் தமிழகத்தையே பற்றி எரியச் செய்தது.  அரசியல் கட்சிகள் நடுநடுங்கின. மத்திய அரசு அதிர்ச்சியோடு வேடிக்கை பார்த்தது.  அரசியல் கட்சிகள் எப்படி இந்த மாணவர்களை தாஜா செய்வது என்று ஆருடம் பார்த்தன.  தமிழினத்தின் ப்ரூட்டஸ் டெசோவின் மார்க்கெட் போய் விட்டதே என்று கவலைப்பட்டார்.  சிறிது காலம் தலைமறைவாக இருந்த போலிப்பாதிரி மீண்டும் ஈழ விவகாரத்தை கையில் எடுக்கும் சூழல் உருவானது.  தமிழின ப்ரூட்டஸின் அன்புத் தளபதி திருமாவளவன் கூட, முதலில் போராட்டத்தைத் தொடங்கிய லயோலா கல்லூரி மாணவர்களைச் சந்தித்துப் பேசினார்.
DSC_0419
DSC_0424
DSC_0429
இந்தப் போராட்டத்தின் மிகப்பெரிய திருப்பமாக, எட்டி உதைத்தால் கூட வெளியேற மாட்டேன் என்று பிடிவாதமாக ஒட்டிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார் கருணா. மாணவர்களின் போராட்டங்களுக்கு மக்களிடையே இருந்த தீவிர ஆதரவை நன்கு உணர்ந்த ஜெயலலிதா, மாணவர்களின் போராட்டத்துக்கு முழு ஆதரவு வழங்கினார்.  தொடக்கத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு தவறான முடிவை எடுத்த ஜெயலலிதா, சுதாரித்துக் கொண்டு, மாணவர் போராட்டத்துக்கு மறைமுக ஆதரவ அளித்தார்.
ஐக்கிய நாடுகள் அவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக  இந்திய அரசு நிலைபாடு எடுக்க வேண்டும் என்ற ஒற்றை முழக்கத்தோடு சில மாணவர்கள் போராடினர். அமெரிக்கத் தீர்மானமே ஒரு கண் துடைப்பு என்ற ரீதியில் சில மாணவர்கள் போராடினர். ஆனால் இந்த இரு தரப்பையும், சிங்கள எதிர்ப்பு என்ற ஒற்றை நூல் இணைத்தே வைத்திருந்தது.  மாணவர்களின் போராட்டம் ஐநா தீர்மானத்துக்குப் பிறகும், தனி ஈழம் கோரி ஜெயலலிதா எடுத்து வந்த தீர்மானத்துக்குப் பிறகும் சற்றே தளர்ச்சியைச் சந்தித்திருக்கிறது.
ஐக்கிய நாடுகள் அவைத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்க வைக்க நிர்பந்தித்தது மாணவர்களின் போராட்டம் மட்டுமே என்றால் அது மிகையல்ல.  அது நீர்த்துப் போன தீர்மானமாக இருந்தாலும், இலங்கையை மடியில் போட்டுக் கொஞ்சிக் கொண்டிருக்கும் மத்திய அரசு அப்படி ஒரு நிலைபாட்டை எடுக்க வைத்ததில் மாணவர்களின் பங்கு மகத்தானது.
தமிழினத்தைக் கருவறுத்த சிங்களனோடு கூட்டு சேர்ந்து, அதில் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டத்துக்கு எதிராக போராட வேண்டிய கடமை இன்னும் இருக்கிறது.  மாணவர்களின் எழுச்சிக்குப் பிறகு, ஐபிஎல் என்ற கேளிக்கை விளையாட்டில் சிங்களனோடு கூட்டு சேர்ந்து, சிங்கள வீரர்களை தங்கள் அணியில் சேர்ந்து லாபம் சம்பாதிக்கத் துடிக்கும் துரோகிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பு சம்பிரதாயமாக தொடங்கி அடங்கி விட்டது.   உண்மையில் மாணவர்கள் தங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டியது, இந்த கோடரிக் காம்புகளுக்கு எதிராகவே.
இந்தக் கோடரிக் காம்புகளில் முதன்மையான காம்பு தமிழகத்தைப் பீடித்திருக்கும் தீய சக்திகளான கேடி சகோதரர்கள்.   தமிழனின் உழைப்பில் விளைந்த பணத்தை சம்பாதித்து, தமிழ்நாட்டில் தொழில் நடத்தி, தமிழனின் பணத்தில் தொடர்ந்து திளைத்துக் கொண்டிருக்கும் கலாநிதி மற்றும் தயாநிதி ஆகிய கேடி சகோதரர்கள் ஒழிக்கப்பட வேண்டிய தீயசக்திகள்.
மாணவர்கள் சிங்கள எதிர்ப்போடு சேர்த்து செய்ய வேண்டியது, துரோகிகளை அம்பலப்படுத்தி ஒழிக்க வேண்டியதும் ஆகும்.  அன்பான மாணவச் செல்வங்கள் தங்கள் சக்தியை சன் குழுமத்துக்கு எதிராக திருப்ப வேண்டும் என்று சவுக்கு அன்போடு கேட்டுக் கொள்கிறது.   தமிழின விரோதிகளைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.
எங்கெங்கெல்லாம் எஸ்சிவி கேபிள் இணைப்பு இருக்கிறதோ, அந்த இடங்களின் கேபிள் ஆபரேட்டர்களை வேறு ஆபரேட்டர்களுக்கு மாற்றச் சொல்லுங்கள்.
எங்கெல்லாம் சன் டிடிஎச் இணைப்பு இருக்கிறதோ அங்கே வேறு இணைப்புக்கு மாற்றச் சொல்லி வேண்டுகோள் வையுங்கள்.
யாரெல்லாம் தினகரன் வாங்குகிறார்களோ, அவர்களை வேறு செய்தித்தாள் வாங்கச் செய்யுங்கள்.
தமிழ் முரசு வாங்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்யுங்கள்.
சன் டிவி பார்க்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்யுங்கள்.
சூரியன் எப்எம் கேட்காதீர்கள் என்று பரப்புரை செய்யுங்கள்.
தயாநிதி மாறன் எந்தத் தொகுதியின் போட்டியிட்டாலும், அந்தத் தொகுதியில் கூட்டமாகச் சென்று தயாநிதிக்கு எதிராக பிரச்சாரம் செய்யுங்கள்.  தயாநிதியைத் தோற்கடிப்பதையே உங்கள் ஒரே லட்சியமாகக் கொள்ளுங்கள்.
தமிழின விரோதிகள் கேடி சகோதரர்கள் மீதான உங்கள் எதிர்ப்பைத் தீவிரப்படுத்துங்கள்.    கேடி சகோதரர்களுக்கு நீங்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு, தமிழினத்துக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவை.
 

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...