முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோசடியில் ஈடுபட்டாரா ராம.செல்வராஜ் ?

தமிழ்நாட்டின் மிக மிகச் சிறந்த புலனாய்வு நிருபர் யாரென்றால் அது சன் டிவியின் ராம செல்வராஜ்தான். இவரைப்போல ஒரு அப்பாடக்கர் நிருபரை பார்க்கவே முடியாது.  தனக்குத் தெரியாத விஷயங்கள் உலகில் எதுவுமே இல்லை என்பது போலப் பேசுவார்.
IMG_5410
சென்னை நகரில் நடக்கும் அனைத்து பெரிய குற்றங்களிலும் நேரடியாக சம்பவ இடத்துக்கு சென்று இவர் கொடுக்கும் வர்ணனை இருக்கிறதே…. அப்பப்பா…  அப்படி ஒரு வர்ணனை.  சம்பவம் நடக்கையில் பக்கத்தில் இருந்து நேராகப் பார்த்தது போலவே வர்ணிப்பார். ஒரு சம்பவத்தை நேரடியாகப் பார்த்தது போலவே அப்படியே வர்ணிப்பது ஒரு செய்தியாளரின் திறமைதான்.  ஆனால் நடக்காத பொய்யை அப்படியே வர்ணிப்பது… ? அதற்குப் பெயர் அயோக்கியத்தனம்.  ராம.செல்வராஜ் இது போல பல குற்ற நிகழ்வுகளில் காவல்துறைக்கு ஆதரவாகவும், உண்மைக்குப் புறம்பாகவும் பல முறை செய்தி வழங்கியிருக்கிறார்.  வேளச்சேரி என்கவுன்டரில் 5 பேரை, காவல்துறையினர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் ஒரு உதாரணம்.   ஆனால் செல்வராஜ் செய்ததிலேயே மிகப்பெரிய அயோக்கியத்தனம், கூடங்குளம் போராட்ட சமயத்தில்தான்.
ஏதோ ஒரு காரணத்துக்காக கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கி, எப்படியாவது அணு உலையை திறந்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஜெயலலிதா செயல்பட்டு வந்த சமயம்.  கூடங்குளத்தில் அப்போது நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர் முகிலன், தோழர் சதீஷ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு ஆகியோரை காவல்துறையினர் பயங்கரமான நக்சலைட்டுகள் என்று செய்தியை பரப்பினார்கள்.  இந்தச் செய்தியை பொதுமக்கள் மத்தியில் பரப்புவதற்கு மத்திய உளவுத்துறை பயன்படுத்திய ஊடகம் சன் டிவி மற்றும் தினமலர்.
காவல்துறையின் தூண்டுதல் காரணமாக, ஒரு செய்தியை மிகைப்படுத்திச் சொல்வதைக் கூட மன்னித்து விடலாம்.  ஆனால் இல்லாத ஒரு பொய்யை உண்மையாக சித்தரிப்பதை மன்னிக்கவே முடியாது.  அதற்குப் பெயர் அயோக்கியத்தனம்.
கூடங்குளம் விவகாரத்தில் நடந்தது பச்சைப் பொய்.  தோழர் முகிலன் மற்றும் தோழர் சதீஷ் ஆகியோர் இதற்கு முன்னால் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்து கைதானவர்கள் என்பது உண்மையே.  ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக, இவர்கள் வெளிப்படையான முறையில் செயல்பட்டு வருகிறார்கள்.  பொதுப் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.  சமூகத்தை நேசிப்பவர்களான இவர்கள், கூடங்குளம் விவகாரத்தில் அம்மக்களுக்காக குரல் கொடுத்து போராட்டம் நடத்துவது இயல்பே.  அப்படி கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து நடந்து வந்த போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வந்த நிலையில்தான் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, கூடங்குளம் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல் என்ற செய்தி காவல்துறையால் பரப்பப்படுகிறது.
DSC_0940
தோழர் சதீஷ்
சதீஷ் கைது செய்யப்பட்டபோது அந்தச் செய்தியை சன்டிவிக்காக வெளியிட்ட ராம.செல்வராஜ் என்ன சொன்னார் தெரியுமா ?  “கூடங்குளம் போராட்டத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவியிருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.  இது தொடர்பாக காவல்துறையினர் சதீஷ் என்ற நக்லைட்டை கைது செய்துள்ளனர்.  கூடங்குளம் அணு உலையை தகர்ப்பதற்காக நக்சலைட்டுகள் ஊடுருவியுள்ளார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.  பெருவாரியான மக்கள் கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தொடர்ந்து இந்தப் போராட்டங்களை நடத்துவது நக்சலைட்டுகள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப் படுகிறது.  நக்சலைட்டுகள் ஊடுருவல் குறித்து எங்களுக்கு நீண்ட நாட்களாகவே தகவல் இருந்து வந்தது. இந்நிலையில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தோம்.  அந்தக் கண்காணிப்பின் விளைவாகவே சதீஷ், முகிலன் மற்றும் வன்னி அரசு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்” என்று செய்தி அளித்தார் ராம.செல்வராஜ்.
இந்தத் தகவலை ராம.செல்வராஜுக்கு வழங்கியது ஒரு காவல்துறை அதிகாரியாக இருக்கக் கூடும்.  காவல்துறையினர் இது போல ஆயிரம் தகவல்களைத் தருவார்கள்.  அதில் உண்மையும் இருக்கும், பொய்யும் இருக்கும். ஒரு பத்திரிக்கையாளரின் பணி, காவல்துறையினர் அளிக்கும் தகவல்களில் உள்ள உண்மைத் தன்மையை விசாரித்த பிறகு அத்தகவலை மக்களுக்கு வழங்குவதே.  சதீஷைப் பற்றி எங்கே விசாரிப்பது என்பது எனக்குத் தெரியாது என்று ராம.செல்வராஜ் சொல்லுவாரேயானால், அவர் பத்திரிக்கையாளராக இருக்க லாயக்கே இல்லை.  ஏதாவது மளிகைக் கடையில் பொட்டலம் கட்டச் செல்லலாம்.  ஆனால், சதீஷைப் பற்றி எங்கே விசாரிப்பது என்று தெரிந்தும், அவ்வாறு விசாரிக்காமல் காவல்துறை சொன்னதை மட்டும் வெளியிட்டால் அது தெரிந்தே செய்த அயோக்கியத்தனமா இல்லையா ?
ராம.செல்வராஜ் இப்படி தெரிந்தே ஒரு அயோக்கியத்தனத்தை அந்தக் கைது விவகாரத்தில் செய்தார். சதீஷ் ஒரு பயங்கரமான நக்சலைட் என்று செய்தி வெளியிட்ட சன் டிவி, சதீஷின் புகைப்படத்தை காண்பித்தது. கூடங்குளம் போராட்டத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவல் என்ற செய்தி வெளியிட்ட ஒரு வாரத்துக்கு முன்பாக வெளியிடப்பட்ட நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டம் குறித்து, சவுக்கு இணைய தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையில் போடப்பட்டிருந்த சதீஷின் புகைப்படம், சன் டிவி செய்தி வாசிக்கையில் பயன்படுத்தப்பட்டது.  அந்த ஆர்ப்பாட்டம், தமிழக மக்கள் உரிமைக் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் என்பது சவுக்கு தளத்திலேயே உள்ளது.  தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலர் புகழேந்தியை, புலனாய்வுப் புலி ராம.செல்வராஜுக்கு நன்கு தெரியும்.  சதீஷ் யார், அவர் தற்போது மாவோயிஸ்ட் அமைப்பில் உள்ளாரா என்பதை விசாரிக்க எத்தனை நேரம் ஆகும் என்று நினைக்கிறீர்கள் ?
ஆனால் அவ்வாறு விசாரிக்காமல், விசாரிக்க எவ்வித முயற்சியும் எடுக்காமல், வெளிப்படையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நபரை, நக்சலைட் என்று கூசாமல் பொய்யை உண்மை போலவே அரங்கேற்றிய ராம.செல்வராஜ் ஒரு பத்திரிக்கையாளரா ?
இந்த யோக்கிய சிகாமணி செய்த சட்டவிரோத காரியம் என்னவென்று பார்ப்போமா ?
சன் டிவியின் தலைமை செய்தியாசிரியர் ராஜா பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் உள்ளார் என்பதை சவுக்கு வாசர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிவீர்கள்.  இந்த ராஜாவை, சனிக்கிழமையன்று காலை, புலனாய்வுப் புலி ராம.செல்வராஜ் மற்றும் சன் டிவி நிலைய வித்வான் மகாலட்சுமி ஆகியோர் சிறையில் சந்தித்துள்ளனர்.  புழல் சிறையைப் பொறுத்தவரை, வாரநாட்களில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பொதுமக்கள் கைதிகளை சந்திக்கலாம்.  சனிக்கிழமையைப் பொறுத்தவரை வழக்கறிஞர்கள் மட்டுமே சந்திக்க முடியும்.  மகாலட்சுமியைப் பொறுத்தவரை அவர் சன் டிவியில் பகுதி நேர நிகழ்ச்சி வழங்கினாலும், பதிவு பெற்ற வழக்கறிஞர்.  நீதிமன்றங்களில் பணியாற்றுபவர்.   ஆனால் ராம.செல்வராஜ் சட்டம் படித்துள்ளார்.  வழக்கறிஞர் அல்ல.
சட்டம் படிப்பதற்கும், வழக்கறிஞராக இருப்பதற்கும் வேறுபாடு உள்ளது.  ஒருவர் சட்டம் படித்து விட்டதாலேயே வழக்கறிஞராகிவிட முடியாது.  சட்டம் முடித்து, அந்தந்த மாநில வழக்கறிஞர் சங்கத்தில் (Bar Council) பதிவு செய்தால் மட்டுமே வழக்கறிஞராக முடியும்.  அப்படி வழக்கறிஞராக பதிவு செய்த பிறகு, நிரந்தரமான வேறு வேலைகளுக்கு போகக் கூடாது.  அப்படி வேலைக்குச் சென்றால், அந்த வேலையில் இருக்கும் வரை, தங்களின் வழக்கறிஞர் பதிவை தற்காலிகமாக ரத்து செய்த பிறகுதான் வேலைக்குப் போக இயலும்.  எளிமையாக, சவுக்கு வாசகர்கள் கருத்துக்களை கச்சிதமாக கவ்விக்கொள்ளும் வகையில் சொல்லுவதென்றால், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த வாதப்புலி வண்டுமுருகன் சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.   இவர் ஐந்து ஆண்டுகளுக்கு அந்தப் பணியில் இருக்க வேண்டும்.  இப்படி நியமிக்கப்பட்டதும் வண்டு முருகன், தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு ஒரு கடிதம் கொடுக்க வேண்டும். நான் இது போன்ற ஒரு பதவியில் நியமிக்கப்பட்டுள்ளேன், அல்லது ஒரு வேலையில் சேர்ந்துள்ளேன்.  ஆகையால் எனது வழக்கறிஞர் பதிவை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள் என்று கடிதம் அளித்தன் அடிப்படையில் அவரின் பதிவை பார் கவுன்சில் தற்காலிகமாக ரத்து செய்யும்.  டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக் காலம் முடிவடைந்ததும், மீண்டும் பதிவை புதுப்பித்து வழக்கறிஞராக தொழில் செய்யலாம்.
ராம.செல்வராஜ் சன் டிவியின் க்ரைம் பீட் பார்க்கும் செய்தியாளர்.  முழு நேர ஊழியர்.   இவர் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை.  அப்படியே செய்திருந்தாலும் முழு நேர ஊழியராக இருப்பதால், அது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தநிலையில் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே உள்ள சலுகையான சனிக்கிழமை கைதிகளை பார்க்கும் சலுகையை அனுபவித்துள்ளார்.  சனிக்கிழமை கைதிகளை பார்க்க விரும்பும் வழக்கறிஞர்கள் பார்க் கவுன்சில் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும்.  அப்படிக் காண்பித்த பிறகே, கைதிகளைப் பார்க்க வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.  அப்படி இருக்கையில் புலனாய்வுப் புலி ராம.செல்வராஜ் எப்படி சிறைக்குள் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார் ?
இதற்குக் காரணம், கல்லாப்பெட்டி கருப்பண்ணன் என்று கைதிகளால் அன்போடு அழைக்கப்படும் புழல் சிறைக் கண்காணிப்பாளர் கருப்பண்ணன்.  சனிக்கிழமை அன்று ராம.செல்வராஜும், மகாலட்சுமியும் ராஜாவைப் பார்ப்பதற்கு முன் நேராக கல்லாப்பெட்டி கருப்பண்ணன் அறைக்குச் சென்றுள்ளனர்.  அவர் அறைக்குச் சென்று விவாதித்த பிறகு, கீழே இறங்கி ராஜாவைப் பார்த்துள்ளனர். இந்த கல்லாப்பெட்டி கருப்பண்ணன் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ளன.  இது தவிரவும், சிறையில் சமைப்பதற்கான வரும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கள்ளத்தனமாக ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.  ஆனால், இந்த கருப்பண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய “சரிபாதி கேட்கும் திரிபாதி” கண்டும் காணாமலும் இருக்கிறார்.  இவரும் சிலிண்டர் விற்பனையில் பங்குதாரரா என்பது குறித்து  நமக்கு தவல்கள் இல்லை. ராம.செல்வராஜ் சனிக்கிழமை புழல் சிறை சென்று ராஜாவை பார்த்த வீடியோ பதிவுகள் சிறையில் இன்னும் இருக்கும். திரிபாதி அவற்றை வாங்கிப் பார்த்துவிட்டு உடனே நடவடிக்கை எடுக்க முடியும்.  பார்ப்போம் செய்கிறாரா என்று.
ராம.செல்வராஜும், மற்றொரு வழக்கறிஞரான மகாலட்சுமியும், நாள் தவறாமல், ராஜாவை புழல் சிறையில் சந்தித்து வருகின்றனர். ராம.செல்வராஜ் குறித்து பார்த்து விட்டோம்.  யார் இந்த  மகாலட்சுமி ?
மகாலட்சுமி ராஜகோபால். இவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர். சன் டிவியின் நிலைய வித்வான் வழக்கறிஞர். அப்படியென்றால், சன் நியூஸ் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் வரும் ஆலோசனை நேரம் நிகழ்ச்சியில் உள்ளுர் சட்டம் முதல் சர்வதேச சட்டம் வரை விலாவாரியாக அலசுவார். தற்போது அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு, இவர் செய்தி வாசிப்பாளராக, சன் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசித்து வருகிறார்.
217009_216938881654467_1571989_n
வழக்கறிஞர் மகாலட்சுமி
தற்போது, சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர்கள், மற்றும் முன்னாள் செய்தி ஆசிரியர் ராஜா மீதான புகாரில் அவருக்கு எதிராக சாட்சியம் அளிக்கக் கூடியவர்களிடம், "போலீசார் உங்களை ஏதாவது கேட்டால் எனக்குத் தெரியாது என்று சொல்லுங்கள். நாளைக்கு கோர்ட்டு, கேசு என்று அலைய வேண்டி வரும்... நான் வக்கீல், எத்தனையோ பேரை நானே குறுக்கு விசாரணை செய்திருக்கிறேன். சமயங்களில் குறுக்கு விசாரணை ஒரு வாரம் கூட தோடர்ந்து நடைபெறும்" என்று பேசி வருகிறார். ஒரு வழக்கின் புலன் விசாரணை நடைபெற்று வரும் நேரத்தில், சாட்சிகளிடம் இது போலப் பேசுவது, இந்திய தண்டனைச் சட்டம் 202 மற்றும் 203 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டிக்கக் கூடிய குற்ம் என்பது சட்டம் படித்த மகாலட்சுமிக்கு எப்படித் தெரியாமல் போனது.
இது தவிரவும், இவ்வாறு சாட்சிகளைக் கலைக்கும் பணியில் ஈடுபடுவதால் இவரை இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 109ன் கீழ், ராஜாவுக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக, இதே வழக்கில் குற்றவாளியாகவும் சேர்க்க முடியும்.
வழக்கறிஞர் என்று சனிக்கிழமை அன்று புழல் சிறையில் கைதியைப் பார்த்த குற்றத்துக்காக ராம.செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்ய, இந்திய தண்டனைச் சட்டத்தில் வழி உண்டு.  இது தவிரவும், சன் டிவியின் முழு நேர ஊழியராக உள்ள ஒருவரை சனிக்கிழமை அன்று கைதியைப் பார்க்க அனுமதித்ததோடு,  அவரை சந்தித்து அரை மணி நேரம் விவாதித்து, ஒரு சட்டவிரோத நடவடிக்கைக்கு அங்கீகாரம் கொடுத்த குற்றத்துக்காக கல்லாப்பெட்டி கருப்பண்ணன் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உளவுத்துறை டிஜிபியான ராமானுஜத்தைத் தவிர ஒரு அதிகாரி கூட ஜெயலலிதாவுக்கு உண்மையாக செயல்படுவதாகத் தெரியவில்லை.  ராமானுஜம் அவர்கள்தான் முன்முயற்சி எடுத்து இந்தத் தகவல்களை ஜெயலலிதாவின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.  ராஜாவின் மீதான வழக்கை உடைத்து, ராஜாவை மீண்டும் சன்டிவியின் செய்தி ஆசிரியராக நியமிப்பதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  சாட்சிகளும் மிரட்டப்பட்டு வருகிறார்கள்.  ராமானுஜம் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவோம்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

கெட்ட வார்த்தைகள் தெரியுமா? ஒன்றிரண்டு தெரியாது இது மனச்சாட்சியின்படி ஆண் பெண் இருபாலரது நேர்மையான பதில்

அன்புள்ள ஜெ.  வணக்கம் …                   பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி மாவட்டம். இந்த கால கட்டத்தில் தான் நிறைய கெட்ட வார்த்தைகள் எனக்கு அறிமுகம்..                 இன்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் எல்லா பகுதி சொல்வழக்கையும் நான் கேட்டதுண்டு. நான் கேட்டவரையில் எங்கும் தாயைப் பழிக்கும் சொல்லால் ஒருவரை ஏசினால் கண்டிப்பாக கைகலப்பில்தான் முடியும். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் நான் படி...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....