முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சில நிதர்சனங்கள்:நான் ஏன் இஞ்சினியரிங் எடுத்தேன்?


நான் ஒரு இன்சினிய‌ரிங்முடித்த‌மாணவன்.  தேர்வில் பாஸ் ஆவதற்காக உப தலைப்பிட்டு , பாயின்ட் பை பாயின்டாக எழுதி அதற்கு முன் ஒரு புல்லட் குறியீடு இட்டு, சம்மந்தமே இல்லாத கருத்துக்களை அடிக்கோடிட்டு விடைகள் சரியானவை என்று திருத்துபவர்களை நம்பவைத்துப் பழக்கப்பட்டவன் என்பதால் இந்தக் கட்டுரையும் அதே வடிவத்தில் வந்துவிட்டது தயவுகூர்ந்து பொருத்தருளவும்.

இஞ்சினியரிங்க் படிப்பதற்கான காரணங்கள்:







இஞ்சினியரிங்க் படிப்பதற்கு பல்வேறு காரனங்கள் (காரணங்களுக்கு ரெண்டு சுழி ந வா இல்லை மூன்று சுழி ந வா எனத் தெரியாத காரனத்தால் ஒரு இடத்தில் ரெண்டு சுழியும் இன்னொரு இடத்தில் மூன்று சுழியும்பயன்படுத்தப்படுகிறது.) உள்ளன அவை யாவை எனில்
  •  "இஞ்சினியரிங்க் படிக்கவைங்க பய நல்லா வருவான்" ஒன்னறை லட்சம் இஞ்சினியரிங்க் அப்ளிகேசன் விற்க  இது போல யாரோ ஒரு புண்ணியவான் ஏதோ            ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் போடுவதைப் போல பொறுப்பில்லாமல் அப்பாவின் காதில் போட்டுவிடுவதுதான் காரணம். 
  • "எங்க நாத்தனார் பையன் இஞ்சினியரிங்க் தான் படிச்சான் உடனே வேலை கிடைச்சிடுச்சு இப்ப காரு வீடுனு செழும்பா இருக்கான்" என்று அம்மாவை ஏத்திவிடும்  எதிர்வீட்டு ஆன்டிகளின் நாத்தனாரின் மகனுக்கு வயது 40 இருக்கும்.
  •  "என் பையன் ELECTRICAL இஞ்சினியர் உங்க பையனையும் இஞ்சினியர் ஆக்கிட்டோம்னா அண்ணனே வேலை வாங்கி கொடுத்திருவான்" எனச் சொல்லும் பெரியப்பா சித்தப்பாக்களுக்குத் தெரியாது  தம்பி படிச்சு முடிக்கும் போது ரெசசன்ல (பொருளாதார நெருக்கடி) அண்ணனுக்கே வேலை போய்டும் என்று..
  • +2 லீவில் இருந்தே கேட் எக்சாம்,வின்டோ எக்சாம் போன்றவைகளுக்கு பயிற்சி எடுத்து இஞ்சினியரிங்க் முடித்து எம்.எஸ் பண்ண யு.எஸ் போகும் உயர்குடிப் பொதுமக்களும் இஞ்சினியரிங்க் வருகிறார்கள்.

  • கல்யாணப்பத்திரிக்கையில் பேருக்குப் பக்கத்தில் பி.இ என்று போட்டால் பெருமையாக இருக்கும் என்று எண்ணி வருடத்திற்கு இரண்டு இலட்சம் செலவு பண்ணி மேனேஜ்மென்ட் சீட்டில் சேரும் பண்ணையார் மகன்களும் தொழிலதிபர் மகள்களும் வந்து இருக்கிறார்கள். 

  • இது தவிர்த்து பாயின்ட் செவன் ஃபைவில் கட் ஆஃப் மார்க் மிஸ் ஆகி மருத்துவப்படிப்பைத் தவரவிட்டவர்களும் வருகிறார்கள்
"நீ ஏம்பா இஞ்சினியர் சேர்ந்த?"  கல்லூரியில் அன்பழகன் சார் கேட்ட‌ கேள்விக்கு நான் சொன்ன பதில் "இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் மிடில்கிளாசில் இரண்டாவது தலைமுறையாக படிக்கவரும் ஒருவன் இஞ்சினியரிங்கை விட்டு வேறென்ன படிக்கமுடியும்"

இஞ்சினியரிங்க் படிப்பவர் என்னவாக முடியும்?

ஒவ்வொரு செமஸ்டரிலும் குறைந்தது மூன்று அரியர் வைத்துவிட்டு "அரியர் வைக்காத படிப்பு அரைப் படிப்பு" என்று மார் தட்டும் அறிவாளிகளைப் பற்றி இங்கு பேசப்போவதில்லை. (மன்னிக்கவும் நானும் மதுரைக்காரன் தான் டா மாதுரி ,நானும் அரியர் வைச்சவன் தான்பா)மற்றவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்

   1)இஞ்சினியரிங்கை தனது பேசனாக வைத்திருக்கும் , தனது பள்ளி நோட்டில் தனது பெயருக்குப் பக்கத்தில் இஞ்சினியர் என்றெழுதி பெருமிதம் அடையும் நபர்கள் முதல் வகையினர். இவர்கள் நிலைமை தான் மிகவும் பாவம். நன்றாய் படித்து  எயிட் பாயின்ட் ஃபைவ்  நைன் பாயின்டுகு மேல் சி.ஜி.பி.ஏ வைத்திருக்கும் இவர்கள் வேலைக்கு என்று போய் உட்கார்ந்தால் இதுவரை அவர்கள் பள்ளியில் இருந்து கல்லூரி வரை படித்திராத ஆப்டிடியூட் கேள்விகளை முதல் ரவுண்டில் பார்த்து,  கரண்ட்டு கம்பியில் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென கரண்ட் வந்தைப் போல ஷாக்காகி விடுவார்கள். 

பின்பு ஆறு மாதம் ஆப்டிடியூட் கோச்சிங்க் போய் முதல் ரவுண்டை கடந்து இரண்டாவது ரவுண்டான க்ரூப் டிஸ்கஸன் சுருக்கமாக ஜி.டி க்கு வருவார்கள். அதிகபட்சம் ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருப்பதால் (இல்லை என்றால் முதல் வருடமே வீட்டாவில் இங்கிலீஷ் கோர்ஸ் படித்து தெரிந்திருப்பார்கள்) எளிதாய்க் கடந்துவிடலாம் என்று வந்து உட்கார்ந்தால் அமெரிக்க பொருளாதர மந்தநிலைக்கு என்ன காரணம்? என்று கேட்பார்கள்.  ஃப்ரீ டைமில் லைப்ரேரி பக்கம் போனால் கூட விரட்டிவிடும் வாத்தியார்களிடம் படித்தவர்களுக்கு அது எப்படித் தெரியும்?. ஜி.டி.யில் பேசுவது எப்படி என்று ஒரு மாத க்ளாஸ் போய்விட்டு அந்த ரவுண்டையும் க்ளியர் பண்ணினால் டெக்னிகள் ரவுண்ட் என்று ஒன்று வைக்கப் படும் தத்திபுத்தி தெரிந்ததை எல்லாம் ப்ரொகிராம் என்று எழுதிவைத்து அந்த ரவுண்டைக் கடந்து போனால் டெக்னிகள் எச்.ஆர் "சர்டிஃபிகேட் கோர்ஸ் எதாவது முடிச்சிருக்கீங்களா?" என்று கேட்பார்.அதையும் மூன்று மாதத்தில் முக்கிப் முடித்துப் போகும் போது அடுத்த பேட்ச் ஸ்டுடன்டஸ் பாஸ் அவுட் ஆகி வந்திருப்பார்கள். 

முன் அனுபவங்களின் மூலம் எல்லா ரவுண்டையும் காலி பண்ணினால் ஃபைனல் எச்.ஆர் கேட்பாரு "கோர்ஸ் முடிஞ்ச ஒரு வருசமா ஏன் வேலை கிடைக்கல" ஆனால் இந்த வகையினருக்குகோவமே வராது. ஏனென்றால் எச்.ஆரிடம் கோவப்படக்கூடாது என்பதை எந்த கோர்ஸ் படித்தாலும் சொல்லித் தருவார்கள் அதற்கு ஒரு ஸ்மால் கதை ஒன்று சொல்வார்கள். ஒரு இன்டர்வியூவில் எச்.ஆர் கேட்டாராம் "உங்கள் அம்மா ஒரு ’ப்ராஸ்ட்டிட்யூட்’ என்று நான் சொன்னால் நீங்க என்ன சொல்விங்க?" அந்தப் பையன் சொன்னானாம் "ஆனால் எங்க அப்பா தான் ஒரே கஸ்டமர் என்று சொல்வேன்" .. அவனுக்கு வேலை கிடைத்துவிட்டது.

சில சமயம் படித்துக் கொண்டிருக்கும் போதே மேற்சொன்னவை எல்லாம் நடக்கும்.. மேற்கண்ட கோர்ஸ்களை கல்லூரி நிர்வாகமே ஒரு நிறுவனத்தைப் பிடித்து எக்ஸ்ற்றா க்ளாஸ் என்று சொல்லி எக்ஸ்ற்றாடினரி ஃபீஸ் புடுங்குவார்கள்.பிறகு படித்துக் கொண்டிருக்கும் போதே கேம்பசில் செலக்டாகி 'அப்பாடா' என்று உட்கார்ந்து தினத்தந்தியை எடுத்துப்படித்தால் "மூன்று வருடங்களுக்கு முன்பு கேம்பசில் செலக்டான மாணவர்களை இன்னும் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளாத்தால் கம்பேனி முன்பு போராட்டம் நடத்தினர் " என்று இருக்கும்.. "கடன் பட்டார் நெஞ்சம் போல்" என்பது எல்லாம் அவர்களது மனநிலைக்கு அருகில் கூட நிற்காது...

            2) இரண்டாம் வகையினர் தத்திதத்தி இஞ்சினியரிங்க் சேர்ந்துவிட்டோமே என பாஸ் ஆனவர்கள்.. ஆரம்பத்தில் வேலைக்காக அலைந்து முன்னவர்களோடு போட்டி போடமுடியாததால் பி.பி.ஓ வில் செட்டில் ஆகிவிடுவர் சிலர்.. சிலர் ப்ளேஸ்மென்ட் ட்ரெயினிங்க் சென்டரில் சேர்ந்து முதல் வகையினருக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருப்பர்.. கொஞ்சம் காசு இருந்தால் எம்.இ சேர்ந்து அதை முடித்து இஞ்சினியரிங்க் கல்லூரியில் வாத்தியாராகி இந்த இரண்டு வகையினரை உருவாக்கிக் கொண்டிருப்பர்.

(எட்டு மார்க்குக்குத் தேவையான அளவு எழுதிவிட்டதால் கட்டுரை இத்துடன் முடிகிறது. போங்க போய் புள்ளக்குட்டிகளை இஞ்சினியரிங் படிக்க வைங்க) 

#மகேஸ்வரன்

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...