பொதுவா இரண்டு க்ரூப்ஸ் இருக்கும். கெட்ட வார்த்தை பேசக்கூடாது,அது ரொம்ப டப்பு.பலவீனமானவங்க தான் கெட்ட வார்த்தை பேசுவாங்க... இது பூ பாதையை தேர்ந்தெடுத்த க்ரூப்ஸ் எனக்கொள்க.
இன்னொரு க்ரூப்ஸ் தயவுதாட்சணயம்,பாவ புண்யம்,மட்டு மசுரு எதுவும் பாக்கமாட்டாங்க கோவம் வந்துட்டா.. நாக்கை துறுத்திட்டு கெட்ட வார்த்தையா பொறிஞ்சு தள்ளிடுவாங்க.. கெட்ட வார்த்தை யூஸ் பண்ணாதீகன்னு சொல்லும் க்ரூப்ஸ்ஸையும் காறிமொழிவதை நிறுத்தமாட்டாங்க.. இது சிங்கப்பாதை க்ரூப்ஸ் எனக்கொள்க.
இப்பத்தான் கெட்டவார்த்தை பொறந்தது.. கழுத ருதுவானது,கழுத குடும்பம் நடத்துனது,கழுத குட்டிப் போட்ட கதைகளை வாசிச்சேன். இதுக்கும் அறிவியல்,உளவியல்,வரலாறுலாம் இருக்கு. அதை அறிய "Etymology" என்கிற "சொற்பிறப்பியல்" பற்றிய கட்டுரைகளை வாசியுங்கள். Profanity language,Swear language உள்ளிட்ட கட்டுரைகள் உளவியல் ரீதியாக அறிய உதவும். கெட்ட வார்த்தையை "ஸ்ட்ராங் லேங்குவேஜ்" என்று கூறுகிறார்கள். கெட்ட வார்த்தை என்பது நமது மூளையின் "மொழியியல்"பகுதியை சேர்வதில்லையாம். மாறாக உணர்ச்சிகளை தூண்டும் பகுதியில் சேர்கிறதாம். அதாவது எதிர்வினை ஆற்ற தூண்டும் உணர்ச்சிகள் அவை..
கெட்ட வார்த்தையை கேட்பவர்களுக்கு,அவை மன உளைச்சலை ஏற்படுத்தும். கெட்ட வார்த்தை பேசுவது ஒரு "pain reliever"ஆக இருக்குன்னு சொல்றாங்க.
கெட்ட வார்த்தைங்குறது என்னன்னா.. £@€|<,0+#@ இதற்கான இயல்பான வார்த்தை "கலவி"ன்னும்,இதேபோல் பிற உறுப்பு குறித்த வார்த்தைகளை யோனி,ஆண்குறி என்று சொன்னால் மூளையின் மொழியியல் பகுதிகளை சென்றடைந்துவிடும்.. உரைக்கும்படி சொல்ல உணர்வுரீதியில் அனுகவே கெட்ட வார்த்தை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.கெட்ட வார்த்தைக்கு கூட வரலாறு இருக்குய்யா...
அப்புறம் இந்த இளகுன மனசுக்காரங்களுக்காகவே "கெட்ட வார்த்தை பிரியர்கள்" பல பரிணாம கெட்ட வார்த்தைகளை தோற்றுவித்திருக்கிறார்கள்.. அதாவது ஷார்ட் பார்மேஷனில் "ஓத்தா,முண்டா.கூதி,கேன.புண்டை,ங்கொத்தோ" என்பன நாகரிக கெட்ட வார்த்தைகளாகும்.. இன்னும் உன்னதமான ஒளிவட்டம் மின்னக்கூடிய பரிணாம கெட்ட வார்த்தைகள் தான் தக்காளி,புடலங்கா,மசுரு போன்றவைகள்... ஆங்...
நிறைய பேருக்கு பலகீனத்தின் வெளிப்பாடுதான் கெட்ட வார்த்தைன்னு உளவியல் சொல்லுதேங்குற ஐயப்பாடுகள் எழக்கூடும். ஆரு இல்லைன்னது.. சில புலாசுலாக்கிகள் காரணகாரியமே இல்லாமல் வார்த்தை வன்மத்தை உபயோகிச்சிட்டு வரும்.. அதுங்களுக்கு எதிர்வினையாற்றுவதை தவிர ஒரு மண்ணும் வராது..இதுங்கள் மட்டுமே பலகீனமானவர்களாக உளவியல் கூறுகிறது...
இதனால் சகலமானவங்களுக்கு நான் கூறிக் கொல்வது என்னவென்றால்.. மன உளைச்சலை போக்க "லாபிங் தெரபி" எப்படி காமெடியா தெரிஞ்சாலும் உண்மையோ.. அதை போல நியாயமான கோபத்தை உள்ளடக்காமல் வெளிக்காட்டும் வலிமை மொழியான கெட்ட வார்த்தையும் வலி நிவாரணியே...
இன்னும் பெண்ணுறுப்புகள் வைத்தே நிறைய கெட்டவார்த்தைகள் இருக்குன்னு பேசும்போது.. நாமளும் பெண் புனிதத்தை நோக்கி இலை மறை காயாக கலாச்சார,மதவாத சிந்தனைக்குள் சிக்குகிறோமோன்னு தோனுது.. நிச்சயம் பெண்ணிற்கு மட்டுமே இயற்கை தந்திருக்கும் படைப்பாற்றலால் உண்டான பொறாமையில் தோன்றிய வார்த்தைகளாக இதை நினைக்கலாம் தானே... 😏 சோ பெண் குறித்து நாமும் எதையோ கொண்டாட வேண்டுமா... அதை விடுத்து ஆணுறுப்புகளை குறிக்கும் கெட்டவார்த்தைகளை உருவாக்கலாம்.. 😂 😂 😂
இறுதியாக அறிவியல் கூறுவது இதுதான்.. "தானா போயி சண்ட போடாத... வந்த சண்டைய விடாத.."
குறிப்பு :
பூ பாதையோ,சிங்க பாதையோ அவரவர் விருப்பம்.. நான் டகவலுக்காக மட்டுமே பதிவிட்டிருக்கிறேன்.. என்னைய்ய யாரும் வலிநிவாரணின்னு வய்யாதீக..
வேணும்னா பாத்ரூமில் பாடல் ஹம் செய்வதை நிறுத்திவிட்டு வண்டை வண்டையாக பேசி ப்ராக்டிஸ் பண்ணும்படி பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்
கருத்துகள்
கருத்துரையிடுக