”ஹல்லோ சார் என்ன ஆன்லைன்ல ஆளையே காணோம்?
….fever ஹாஸ்பிடல்ல இருக்கேன்
அச்சோ என்ன ஆச்சு? இப்ப எப்படி இருக்கு?
….மழைல நனைஞ்சு… இப்ப பரவால்ல
ம்ம்ம் அவங்கள எங்க?
…வீட்ல இருக்கறா, k போய்ட்டு வந்து கூப்பிடறேன்.
..k ”
….fever ஹாஸ்பிடல்ல இருக்கேன்
அச்சோ என்ன ஆச்சு? இப்ப எப்படி இருக்கு?
….மழைல நனைஞ்சு… இப்ப பரவால்ல
ம்ம்ம் அவங்கள எங்க?
…வீட்ல இருக்கறா, k போய்ட்டு வந்து கூப்பிடறேன்.
..k ”
நீண்ட நாட்களாகவே சரோவுக்கும் மதுவுக்கும் இடையே கயமையொன்று ஊடாடிக் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டே இருக்கிறது.., அடுத்த பெண்களின் அந்தரங்கள் பேசுவதாக அவன் ஆரம்பித்தான், புரணி கேட்கும் ஆவலில் அவன் சொற்களை அனுமதித்தாள், அவனின் எல்லை மீறல் பேச்சுக்களை சாதாரணம் என்று தன்னை நம்பவைக்க அல்லது அவனுக்கு நம்பவைக்க அல்லது இதில் என்ன தப்பு என்று இருவருமே வெளிக்காட்டிக்கொள்ள பிற ஆண்களின் மனமுதிர்ச்சியின்மை பற்றி பேசிக்கொள்வார்கள்.. பெண்களின் அறியாமை பற்றி அவன் சுட்டிக்காட்டுவான். இருவரும் ஒருவரை ஒருவர் உயர்த்திக்கொண்டனர்..,
நல்லவன் கெட்டவன் லாம் யாரும் இல்ல எல்லாருமே சந்தர்ப்பவாதி தான். ஒரு வகைல பொறுக்கிதான்.
… ஆமா எனக்கு தெரியும்.
சரி சொல்லு நான் நல்லவனா கெட்டவனா பொறுக்கியா?
…நீயா!? தெர்லயே.. நீ தான் மனசுல எதுவுமே வச்சுக்காம சொல்லிடற சோ உன்னை ஜட்ஜ் பண்ற அவசியம் எனக்கு வரல நீ யாரா வேணா இரு.. ஆனா நீ ஒரு நல்ல friend.
16 வயசுல இப்படி இருக்குமா? எவனாச்சு கை வச்சு இருப்பான் இந்த பொண்ணுகளுக்கு விவரமே இல்ல ப்ச் என்று தேவையில்லாத அக்கறையோடு சொல்வான்.. அப்படி எல்லாம் இல்லை எனக்கே அப்படிதான் இருந்தது என்று தன் தற்பெருமை வெளியிடுவாள்.. பேச்சுக்கள் எங்கு சுற்றினாலும் கடைசியாக காமம் தொடர்பான ஏதோ ஒன்றி வந்து நிற்பது அவர்கள் அறிந்தே நடந்தது. இயல்பாக நடப்பதாக காட்டிக்கொள்ள வேறு எதையேனும் ஒப்புக்கு பேசினார்கள்.
”ஓய் நேத்து என்ன ஆச்சு?
…தூங்கிட்டாரு
ஹாஹஹா பாவம் நீ
…சிரிக்காத சனியனே… சரி பையன ஸ்கூல் கிளப்பிட்டு இருக்கேன். c u
c u”
நாட்டில் இருக்கும் அத்தனை பிரச்சினைகளையும் புறந்தள்ளிவிட்டு எதிர்காலத்தில் காமத்திற்கு சுதந்திரம் வேண்டும் என்பதைப் பற்றி பேசுவார்கள்.. இப்படி பேசுவதால் நாம் யாரோடு வேண்டுமானலும் படுக்கலாம் என்பதாக அர்த்தம் செய்வார்கள் அதனால் இதை பொதுவில் சொல்ல முடிவதில்லை., புரிதல் இல்லாதவர்களோடு பேசுவதற்கு சும்மா இருக்கலாம் என்பதில் இருக்கும் மறைமுக செய்தி.. நான் உன்னோடும் நீ என்னோடும் இப்படியெல்லாம் பேசுவதால் நாம் புணர வாய்ப்பில்லை. தங்களின் ஒழுக்கத்தன்மை தூக்கிப்பிடிப்பார்கள்.
”எனக்கு உன்னையும் பிடிக்கும் மது.. பட் அதுக்காக நீ தேவைன்னு அர்த்தம் கிடையாது.
..ஹ்ம்ம்
u have good structure. எந்த ஆணையும் சுலபமாக கவரும்.. அழகு அதற்காக அடையணும் நினைக்கறது தப்பு.. ரசிப்பேன். செல்ப்பி அனுப்பேன்
…முடியாது போ
ஏய் ச்சீ முகத்த மட்டும்தான்டி
….அடச்ச்சீ சனியனே. – சிரிப்புகள் பேச்சை வளர்க்கும் சம்மதங்கள். :)”
எந்த ஒன்றுமே பூடகமாக இருக்கும் வரைக்கும் மறைத்து மறைத்து சந்கேதங்களில் பேசும் வரைக்கும் தான் சுவாரஸ்யம். அதை வெளிபடையாக்கிய பின் அங்கு வெறுமை சூழ்ந்து நிற்கும் வேறு என்ன பேசுவது எதைப்பற்றி பேசுவது? முக்கியமாக எதிர் பாலை entertain செய்ய முடியாத சூழல் அதற்குதான் வருந்த நேர்கிறது. அதற்கு பின் சுவாரஸ்யங்களுக்கு சந்திப்புகளே உதவுகின்றன அதுவும் அதிக நாட்களுக்கு அல்ல. சிறுபொறி பெருந்தீயாக மாறி தன் ஜுவாலைகளில் சங்கமிக்க தருணத்தூண்டல் எதிர்பார்த்து காத்திருக்கும். முற்றுப்பெறுதலுக்கு
”எப்ப வருவார்?
…நைட் ஆகும்
ஓக்கே நான் கிளம்பறேன்
ம்ம்ம்”
அனுமதி வழங்கலை ஆடைகள் முன்னமே செய்கின்றன. வலுவிழந்த சொற்கள் கூடுதலாய் ஈர்க்கும்.. முதல் காமத்தின் முதுகு ரோமாஞ்சனங்கள் மீள்பதிக்கும். காலங்காலமாக கவிதை சொல்லிய காதலும் காமமும் இணைந்த கூற்றை தனித்தனியாக மனம் பிரிக்கும். தேகத்தேவையில் காதலென்ன காதல்.?! ஜுவாலைக்குத் தீயெரியும் தூண்டல் தீண்டல்.
”நீ என்னை தப்பா நினைச்சுக்குவியா சரோ?
…நீ என்னை தப்பா நினைக்காம இருந்தா சரி”
தீவிரங்கள், முயக்கங்கள், முதற்காம கிறக்க நினைவுகள், புதிய தொடுகை சொர்க்கம், துடித்தடங்கிய உடலில் துளிர்க்கும் வியர்வைக் கண்ணீர். சூழும் பேரமைதியை மூச்சுக்காற்று குழைக்கும்.. இனி எப்படி நடிக்க என்று இருவரும் யோசனை செய்துகொண்டிருந்தார்கள்.
கொண்டாடவும் ஒதுக்கவும் தெரியாத காமம்.. நாடகத்தை தானே நடத்தி தானே முடிக்கும்.. இதனால் என்ன? இதில் என்ன தவறு? எதுதான் சரி? எதுதான் தவறு? தனக்கு சலிக்கும் வரை எல்லாம் சரி.!
”ஹல்லோ என்ன ஆளையே பார்க்க முடில?
…….
……”
நீடுழி வாழ்க
கருத்துகள்
கருத்துரையிடுக