முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூடர் கூடம்…

Moodar-Koodam-Movie-Poster-01
 .
அங்காடித் தெரு மற்றும், வழக்கு எண் 18/9 கதையம்சம் உள்ள உணர்வுபூர்வமான படங்கள்.  மூடர் கூடம் படம் அப்படிப்பட்டதா.  அப்படி என்ன அப்படத்தின் சிறப்பான கதை ?   நான்கு பேர் சேர்ந்து ஒரு வீட்டில் திருடுகிறார்கள். இதில் என்ன சிறப்பு இருக்கிறது… இது என்ன அப்படிப்பட்ட புதுமையான கதையா ?  என்ற கேள்விகளுக்கான விடைதான் இந்தக் கட்டுரை.
ரிசர்வாயர் டாக்ஸ் திரைப்படம், ஹாலிவுட்டில் ஒரு புதிய அலையை ஏற்படுத்தியது. அந்தப் படத்தின் கதை என்ன ?  ஆறு பேர் சேர்ந்து ஒரு வங்கியை கொள்ளையடிக்கிறார்கள்.  ஹாலிவுட்டின் போக்கையே மாற்றிய படம் என்று புகழப்பட்ட படம் பல்ப் ஃபிக்ஷன்.  அந்தப் படத்தின் கதை என்ன ?  நிழல் உலகத்தைச் சேர்ந்த ஒரு எட்டு கேரக்டர்களிடையே நடக்கும் கதைதான் படம்.   இந்த இரு படங்களையும் எடுத்த இயக்குநர் க்வென்டின் டாரன்டினோ.
timthumb
க்வென்டின் டாரன்டினோ
இந்தி சினிமாவில்   இசையமைப்பாளராக இருந்த விஷால் பரத்வாஜ் இயக்கிய திரைப்படம்  மக்பூல்.  இது   ஷேக்ஸ்பியரின் மேக்பெத். அடுத்து அவர் இயக்கிய படம் ஓம்காரா.  இது  ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ நாடகத்தின் தழுவல்.  இதே விஷால் பரத்வாஜ் எடுத்த மற்றொரு படம் கமீனே    அந்தப் படத்தில் என்ன புதுமையான கதை ?  இரட்டைப் பிறவிகளான இரண்டு சகோதரர்கள் நடுவே சண்டையிட்டுக் கொண்டு இறுதியில் ஒன்றாக சேர்கிறார்கள்.   ஒருவன் நல்லவன். ஒருவன் கெட்டவன். இறுதியில் இருவரும் திருந்தி ஒன்று சேர்கிறார்கள்.
Vishal_Bhardwaj
விஷால் பரத்வாஜ்
விஷால் பரத்வாஜைப் போலவே பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு, நம்பிக்கையோடு விவாதிக்கப்படும் மற்றோரு இயக்குநர் அனுராக் காஷ்யப்.  இரண்டு பகுதிகளாக எடுக்கப்பட்ட கேங்ஸ் ஆப் வாசிபூர் (Gangs of Wasseypur) என்ற திரைப்படங்கள், கல்ட் க்ளாசிக் என்று கொண்டாடப்பட வேண்டிய அளவுக்கு வரவேற்பை பெற்றன.     இந்தப் படத்தின் கதை என்ன ?  மூன்று தலைமுறையாக இரு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் வன்முறையான மோதல்தான் கதை.  கிட்டத்தட்ட சரத்குமாரின் நாட்டாமை கதைதான்.
Anurag-Kashyap-Headshot-for-web
அனுராக் காஷ்யப்
க்வென்டின் டாரன்டினோ, விஷால் பரத்வாஜ் மற்றும் அனுராக் காஷ்யப் ஏன் கொண்டாடப்படுகிறார்கள் ?  அப்படி என்ன புதுமையைச் செய்து விட்டார்கள் ? காலங்காலமாக சினிமாவில் கதை சொல்லப்பட்டு வந்த விதத்தை மாற்றி, புதிய பாதையில் சினிமாவை பயணம் செய்ய வைத்ததாலேயே இந்த இயக்குநர்கள் கொண்டாடப்படுகிறார்கள்.
க்வென்டின் டாரண்டினோ, விஷால் பரத்வாஜ் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகிய இயக்குநர்களின் வரிசையில் நம்பிக்கை ஏற்படுத்தும் ஒரு திரைப்படம்தான் மூடர் கூடம்.
நான்கு பேர் சந்தர்ப்ப சூழலால் காவல் நிலைய லாக்கப்பில் சந்திக்கிறார்கள். அவர்கள் நான்கு பேருக்கும் அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாத பராரிகள்.  அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து, அந்த நான்கு பேரில் ஒருவரின் உறவினர் வீட்டில் திருடலாம் என்று முடிவெடுக்கிறார்கள். வழக்கமாக காவல் நிலையத்தில் சிக்குபவனை போட்டுப் புரட்டிப் புரட்டி எடுக்கும் காவல்துறை அதிகாரிகளையே காட்டும் சினிமாவிலிருந்து மாறுபட்டு, நிஜ வாழ்வில் அபூர்வமாக நடப்பது போல அந்த இன்ஸ்பெக்டர் எந்த வழக்கும் போடாமல் அவர்களை துரத்தி விடுகிறார். போகும்போது செலவுக்கும் பணம் கொடுத்து அனுப்புகிறார்.  அவர்கள் நால்வரும் வெளியேறி டாஸ்மாக் பாருக்குள் தண்ணியடிப்பதில் கதை தொடங்குகிறது. நவீன், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் படித்தவன்.  செண்ட்ராயன், கஞ்சா வியாபாரி. குபேரன்,சமுதாயத்தால் முட்டாள் என ஒதுக்கப்பட்டவன்.வெள்ளை, அனாதையாக வேலைவாய்ப்புக்காக சென்னைக்கு வந்து இறங்குபவன்.
21
இவர்கள் நான்கு பேரையும் வைத்து, இவர்கள் நான்கு பேரும் கஷ்டப்பட்டு(?) முன்னேறும் அரைத்த மாவு சென்டிமென்ட் கதை உருவாக்கலாம். நான்கு பேரும்  ஆளாளுக்கு ஒரு பெண்ணை காதலிப்பதாக வைத்து ஆளுக்கொரு டூயட் வைக்கலாம். எவ்வித பொறுப்புணர்வும் இல்லாமல் படம் நெடுக லொள்ளு சபா டைப் காமெடிகளை மட்டுமே வைத்து படமெடுக்கலாம். இன்னும் நூற்றுக்கணக்கான தமிழ் சினிமாவின் வழக்கமான சாத்தியக்கூறுகள் உள்ளன.
ஆனால் அந்த வழிகளைக் கையாளாமல் புதிய முறையில் பார்வையாளர்களையும் கவரும் விதமாகக் கதை சொல்லியதில்தான் இத்திரைப்படம் மாறுபட்டு நிற்கிறது. திரைக்கதையின் வடிவம் செம ஃப்ரெஷ்.  ஒவ்வொரு முக்கிய பாத்திரத்துக்கும் முன் கதையாக படத்தின் பல்வேறு இடங்களில் ஃப்ளாஷ் பேக்குகள். ஒவ்வொரு ஃப்ளாஷ் பேக்கிற்கும், இந்த சிறிய பட்ஜெட்டிற்குள்ளும் சினிமாவின் பல்வேறு யுக்திகளை உபயோகப்படுத்திருப்பதும் அவை ரசிக்கும்படியாகவும் இருப்பதும் தான் ஹைலைட். படத்தில் நடித்திருக்கும் நாய்க்குக் கூட பாடலுடன்  முன்கதை.(இந்த ஃப்ளாஷ் பேக்கும் நவீனின் ஃப்ளாஷ் பேக்கும் இப்போது வெட்டப்பட்டுள்ளது வருத்ததிற்குறிய விஷயம்)
வீட்டுக்குள் திருடப் புகுந்ததிலிருந்து கதை விறு விறுவென்று நகர்த்தப்பட்டிருக்கிறது. அந்த வீட்டிற்குள் இருக்கும் கணவன், மனைவி. இரண்டு மகள்கள்.  ஒரு மகன். அந்த வீட்டுக்குள்ளே வேறு ஒரு காரணத்துக்காக திருட வந்த இன்னொரு திருடன். என்று முதல் பாதி பரபரப்பாக எடுக்கப்பட்டிருக்கிறது.  தொடக்கத்தில் வந்தவர்கள் யாரென்று தெரியாமல், பணக்காரத் திமிரோடு குடும்பமே அந்த நாலு பேரையும் வேலை வாங்குகையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற பரபரப்பை ஏற்படுத்துகிறது. அனால் இந்த பரபரப்புகளுக்கு திடீர் திருப்பங்கள் என்று செயற்கையாக எதையும் புகுத்தாமல் திரைக்கதையில் தனது சாகசத்தைக் காட்டியிருக்கிறார் இயக்குநர் நவீன்.
மூடர் கூடம் என்ற தலைப்பை முக்கிய கதாபாத்திரங்களாக வரும் நால்வருமே அடிக்கடி வெளிக்காட்டுகிறார்கள். நவீனின் கதாபாத்திரம் அந்த நான்கு பேருக்கும் தலைவனாக வழி நடத்துபவனாக நடந்து கொள்கிறது.அந்த கதாபாத்திரத்தின் இறுக்கமான முகம்.  உணர்ச்சிகளே இல்லாத டயலாக் டெலிவரி.  ஆனால், இப்படி உணர்ச்சிகளே இல்லாத நவீனின் கதாபாத்திரம் பேசும் பல வசனங்களின் மூலமாக சமுதாய அவலத்தை புரிந்து கொள்ளவும் அதே சமயத்தில் பல இடங்களில் வெடிச்சிரிப்பும் ஏற்படுகிறது.  இடைவேளைக்குப் பிறகு மேலும் சில பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. கேங்ஸ் ஆப் வாசிப்பூர் திரைப்படத்தில் வரும் சிறு சிறு பாத்திரங்கள் கூட முக்கியப் பங்கு வகித்து, படத்தின் சிறப்பைக் கூட்டுவது போலவே, இந்தப் படத்திலும் வரும் அத்தனை பாத்திரங்களும், சிறிது நேரமே வந்தாலும், திரைக்கதையின் விறுவிறுப்பைக் கூட்டுவதோடு, படத்தை சுவையுள்ளதாக ஆக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு கேரக்டருக்கும்  நபர்களைத் தேர்வு செய்யும் பணியை இயக்குநர் நவீன் மிகுந்த சிரத்தையோடு, மிக மிக கவனமாக செய்திருக்கிறார்.   இறுதிக் காட்சிகள் எதிர்ப்பார்த்தபடியே இருந்தாலும் கூட, இது ஏற்கனவே பார்த்ததுதானே, அல்லது தெரிந்ததுதானே என்ற அயர்ச்சி சிறிதும் ஏற்படவில்லை.
22
சென்ட்ராயன், நவீன்,  ரஜாஜ் மற்றும் குபேரன் சிறப்பாக நடித்துள்ளார்கள் என்று சொல்வது, அந்தத் திரைப்படத்தில் நடித்துள்ள மற்றவர்களை குறைத்து மதிப்பிடுவதாகும். ஃபோனில் பேசும் சிறு குழந்தை, நாய் உள்ளிட்ட அனைவரையும் இத்தனை சிறப்பாக நடிக்க வைத்த பெருமை, இயக்குநர் நவீனையே சாரும்.   குறிப்பாக சென்ட்ராயனிடம் இயக்குநர் வாங்கிய வேலை மலைக்க வைக்கிறது. சென்ட்ராயனுக்கு இது ஒரு life time character. பாத்திரப் படைப்புக்கு அடுத்ததாக, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது இசை.  க்வென்டின் டாரன்டினோ திரைப்படங்களில் இசைக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இத்திரைப்படத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த திரைக்கதையை மேலும் செழுமையூட்டும் விதத்தில் இசையமைத்துள்ளார் நடராஜன் சங்கரன். இவரும் இயக்குநர் நவீனும் ஒன்றாக பணியாற்றி, ஒன்றாக வேலையை விட்டு, ஒன்றாகவே திரைத்துரையில் வாய்ப்பு தேடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் முதுகெலும்பாக அமைந்துள்ள வசனங்களை தனித்தனியாக சொல்ல இயலாது.  அது படம் பார்க்கும் அனுபவத்தை குறைக்கும். திரைப்படம் முடிந்து வருகையில் தமிழில் ஒரு அற்புதமான இயக்குநர் உருவாகியுள்ளார் என்ற நிறைவு இருந்தது.
இயக்குநர் நவீன் பற்றி கொஞ்சம்..
ஒரு பொறியாளர்.  தமிழகத்தில் உள்ள ஈஐடி பாரி நிறுவனத்தில் பணியாற்றிய பின்னர் சில காலம் டெல்லியில் ஹார்லிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.  நல்ல சம்பாத்தியம் இருந்தும், சினிமாவின் மீதான தணியாத காதலால் குடும்பக் கடமைகளை முடித்து விட்டு தமிழ்த் திரையுலகை நாடி வருகிறார்.   ஒரு சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய பின்னர், தனியாக கதை பண்ண வேண்டும் என்று முடிவெடுத்து உருவாக்கிய ஸ்க்ரிப்ட்தான் மூடர் கூடம்.  இப்படிப்பட்ட கதையை சில தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறார்.  பல தயாரிப்பாளர்கள் என்ன சார் இது.. காமெடி படம்னு சொன்னீங்க.. காமெடியே இல்ல ? என்று கேட்டிருக்கிறார்கள்.  சிலர், சார்… எடுத்தவுடனே, டாஸ்மாக் பார்லயே குடித்து விட்டு டான்ஸ் ஆடுவது போல ஒரு குத்துப்பாட்டு வையுங்களேன் என்றிருக்கிறார்கள்.   தன் கதையை சிதைக்க விரும்பாத நவீன், தன் சகோதரி, அவர் கணவர் ஆகியோரிடம் பணம் வாங்கி படத்தை சொந்தமாக எடுப்பது என்று முடிவு செய்கிறார்.  படத்தை எடுக்கத் தொடங்கியதும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.   பண நெருக்கடி மிரட்டுகிறது.  ஆனால் அதிர்ஷ்ட வசமாக நண்பர்கள் செய்த உதவியால் ஒரு வழியாக படத்தை முடிக்கிறார்.  அவர் இயக்குநராக பணியாற்றிய பாண்டிராஜே இந்தப் படத்தை வெளியிட முடிவெடுத்து வெளியிட்ட பிறகுதான் இன்று வெள்ளித்திரையில் மிளிர்கிறது மூடர் கூடம்.
25
க்வென்டின் டாரன்டினோவின் பல்ப் ஃபிக்ஷன் திரைப்படத்தில் முதல் காட்சியில் பம்ப்கின் என்ற பாத்திரமும் ஹனி பன்னி என்ற பாத்திரமும் ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.  அந்தக் காட்சியில் மொத்தம் நாற்பது வார்த்தைகள் வந்தால் 35 வார்த்தைகள் கெட்ட வார்த்தைகளாக இருக்கும்.  குற்றத்தில் ஈடுபடும் நிழல் உலகத்தைச் சேர்ந்தவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்.  இதே போல கஞ்சா வியாபாரம் செய்யும், சென்ட்ராயன் கஞ்சா வாங்க வருபவர்களிடம் இப்படித்தான் பேசுகிறான்.  ஆனால், அந்த வார்த்தைகள் அனைத்தும், ம்யூட் செய்யப்பட்டிருக்கின்றன.  அதே போல, சென்ட்ராயனை அறிமுகப்படுத்தும் காட்சியில் சென்ட்ராயன் கஞ்சா சிகரெட்டை தயார் செய்யும் காட்சியும் அப்படியே தூக்கப்பட்டிருக்கிறது.
ஏன் இந்த சமரசங்கள் செய்யப்பட்டன ?  படத்துக்கு “யு” சர்ட்டிபிகேட் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை சமரசம்.
ஏன் யு சர்ட்டிபிகேட் வேண்டும் ?  யு சர்ட்டிபிகேட் கிடைத்தால்தான் தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கும்.   இப்படி வரிவிலக்கு கிடைப்பதற்காக பல்வேறு சமரசங்களைச் செய்யும்படி படைப்பாளிகள் நெருக்கடிக் குள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.இது   மூடர் கூடம் இயக்குநர் நவீனும் இது போன்ற நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டு இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஏ சர்டிபிகேட்டோடு எவ்வித வெட்டுக்களும் இல்லாத படமாக இது வந்திருக்க வேண்டும்.
courtesy: ASNR

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

The Amma I knew

Lakshmi Subramanian and J. Jayalalithaa with the Jaya TV team in 2001 in Chennai I was waiting outside the gates of the Apollo Hospital in Chennai talking to my sources and media friends on the night of December 5 when the hospital issued a statement announcing the demise of chief minister Jayalalithaa Jayaram. Even though I had been expecting the announcement, when I actually received it, it shook me for a second from head to foot. My blood pressure shot up, and I felt sad for her as a woman. I had seen her at close quarters early in my career and I had experienced her charm as well as her ruthlessness. I had started my career in 1999 as a cub reporter at a regional TV channel that was on air for just three months. One day I accompanied a senior reporter to Kundrathur on the outskirts of Chennai, where Jayalalithaa’s auditor K. Rajashekaran lay in a bed in a small room. His hands and an eye were swathed in bandages and there were bruises and swellings all over his body. He...

லாஞ்சரி(Lingerie)

சித்ரா பவுன் இளம்பெண்.(பெயர் மாற்றப்பட்டுள்ளது).சென்னையில் வசிப்பவர் ..அவருடைய பாய்பிரண்ட்  ஜெபராஜ்  ஒரு லாஞ்சரி ( lingerie )பிரியர்.லாஞ்சரி என்பது பெண்களுக்கான நவீன உள்ளாடை.அதை வாங்கி வந்து சித்ரா பவுனை அணியச் சொல்லி அழகு பார்ப்பது அவர் வாடிக்கை."லாஞ்சரியில் என்னைப் பார்ப்பதால்தான் அவருக்கு செக்ஸ் மூடே வருகிறது.பணத்தை உள்ளாடைகளுக்காக அதிகம் செலவழிப்பதும் அடிக்கடி அவற்றை அணியச் சொல்லி வற்புறுத்துவதும் எனக்கு பிடிக்கவில்லை.பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சில பெண்கள்தான் லாஞ்சரி அணிந்து , கவர்ச்சி காட்டி ஆண்களை ஈர்க்கப் பார்ப்பார்கள்.என் போன்ற குடும்பப் பெண்ணை அணியச் சொல்வது சரியா ? என்றார் சித்ரா பவுன்.நியாயமான கேள்வி! உணர்ச்ச்சிகளுக்கும் உள்ளாடைகளுக்கும் தொடர்பிருக்கிறதா ? அதை பார்க்கும் முன் லாஞ்சரியின் வரலாற்றை முதலில் பார்க்கலாம். பிரெஞ்சு மொழியில் Linge என்றால் ' துவைக்கக்கூடியது ' என்று பொருள். ”Lin” என்பதற்கு லினைன் என்ற துணிரகத்தை சார்ந்தது என்ற அர்த்தமும் உண்டு.இவ்விரண்டு வார்த்தைகளின் கலவைதான் லாஞ்சரி உருவானது. 20 ம் நூற்றாண்டு வரை உள்ளாடைகளை மூன்...

ரூ.150 தள்ளுவண்டி கடையில் தொடங்கி ரூ.50 கோடி சர்வதேச ஹோட்டல் சாம்ராஜ்யம் நிறுவிய ‘தோசா ப்ளாசா’ ப்ரேம் கணபதி!

தோசை என்றவுடன் வட்ட வடிவு, தொடுக்கொள்ள விதவிதமான சட்டினி, மிளகாய் பொடி, சாம்பார்... இதுதானே நம் எல்லார் நினைவிலும் வரும். ஆனால் அதே தோசை முக்கோணம், கோபுரம், சதுரம், ரோல்கள் என்ற பல வடிவுகளில் ’ சேஸ்வான் தோசா’, ’மெக்சிகன் ரோஸ்ட் தோசா’, ’சேண்ட்விச் ஊத்தப்பம்’, ’ராக்கெட் தோசா’, ’அமெரிக்கன் டிலைட் தோசா’ என்று நீண்டு செல்லும் புதிய பெயர்களில் தோசை வகைகள் கிடைப்பது என்று தெரிந்தால் யாருக்குதான் நாவில் எச்சில் ஊறாது??  இத்தனை புதுவகை தோசைகளுடன் தொடுக்கொள்ள கிடைக்கும் புதுவகை சாஸ்கள், சட்னிகள் என்று சர்வதேச அளவில் தோசையின் பெருமையையும், அதை உண்பதற்கான ஈர்ப்பையும் உருவாக்கியுள்ள  ‘தோசா ப்ளாசா ’, உலகளவில் 1 500 ஊழியர்கள் கொண்டு, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன், துபாய், சிங்கப்பூர், மலேசியா என பல  கிளைகளை விரித்து சுமார் 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. உணவுச்சந்தையில் உள்ள சர்வதேச உணவுவகைகள் மற்றும் பிரபல ப்ராண்டுகளுடன் போட்டியிட்டு இந்த சாதனையை படைத்துள்ள ’தோசா ப்ளாசா’ வின் பின்னணியில் இருப்பவர், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தூத்துக்குடியில் பிறந்து, வளர்ந்த தமிழ் ...

The Sasikala web: how a maze of shell companies link up to her, her family and friends

V.K. Sasikala.   These shell companies have fake addresses, no business activity and large transactions Sandhya Ravishankar Midas and Jazz Signet Exports Sri Jaya Finance and Investments Fancy Steels Jazz Cinemas Missing People, Fake Addresses In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two. A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman. The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier H...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

Flitring - டெக்ஸ்ட் - ஆடியோ - விடியோ செக்ஸ் -

விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எந்த நோக்கத்துக்காக கண்டு பிடிக்கப்பட்டாலும் அதில் செக்ஸையும் தூக்கி போட்டு அழகு பார்ப்பது உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கும் விளையாட்டு. லேண்ட் லைன் காலத்திலேயே போன் செக்ஸ் ஆரம்பித்தது. ஆள் வச்சிகிட்டு இருப்பவர்கள் மட்டும்தான் போன் செக்ஸில் ஈடுபட முடியும் என்ற கவலை வேண்டாம் , காசு இருந்தால் போதும் போன் செக்ஸில் ஈடுபடலாம் என்ற சமூக அக்கறையுடன் இந்திய தொலைபேசி நிறுவனத்தின் ஆசியுடன் போன் செக்ஸிற்காக பல விளம்பரங்கள் தினசரியில் சக்கை போடு போட்டன. 5 நிமிஷம் பேசினாலே ஆண்குறி எகுறுகிறதோ இல்லையோ பில் எகிறி விடும் எகிறி . இந்தியாவில் இந்த சர்வீஸ்தான் முதல் 24/7 கால் செண்டராக இருந்திருக்க வாய்ப்பு அதிகம்.இதற்குப்பிறகான பேஜரில் அவ்வளவாக செக்ஸ் நர்த்தனம் நடக்கவில்லை. இருவருக்கும் இடையில் ஒரு ஆசாமி இருந்து லவ் யூ மெசேஜிற்கு மேலே கிளுகிளுப்பு செல்லாமல் பார்த்துக்கொண்டார். இந்த குறைபாட்டால் பேஜரையே ஊத்தி மூட வேண்டியதாகி விட்டது. செக்ஸிற்கு இடமளிக்காத எந்த விஞ்ஞான கண்டு பிடிப்பும் நீண்ட காலம் “நிலைத்து” நிற்க முடியாது. லேண்ட்லைன் காலத்தில் வைல்ட் செக்ஸ் அவ்வளவாக இருக்...