பிரா மிஸ்
பல முறை பிரேசியர் வாங்கும்போது கவனித்து இருக்கிறேன். பெண்கள் வருவார்கள் , குசுகுசுவென சைஸ் சொல்வார்கள்.விற்பனைப்பெண்களும் கர்ம சிரத்தையாக வளையம் வைத்தது , ஸ்பான்ச் வைத்தது ,கப் வைத்தது , வலை வைத்தது ,பேட் வைத்தது என பல வகையான பிரேசியர்களை பல வண்ணங்களில் சளைக்காமல் எடுத்துப்போடுவார்கள்.
பெண்கள் ஒவ்வொரு பிராவாக எடுத்து டாக்டர் எக்ஸ்ரே ஷீட்டை பார்ப்பது போல விரித்து தூர வைத்து பார்ப்பார்கள்.அழுத்தி பார்ப்பார்கள் , தடவி பார்ப்பார்கள் , பின் எய்ன்ஸ்டீன் யோசிப்பது போல தலையை 30 டிகிரி சாய்த்து எங்கோ பார்த்து யோசிப்பார்கள்.கடைசியில் ப்ச் என சன்னமாக ஒரு சவுண்ட் விட்டுவிட்டு உதட்டை பிதுக்கிவிட்டு விறுவிறுவென அந்த இடத்தை விட்டு அகன்று விடுவார்கள்.
என்ன எதிர்பார்க்கிறார்கள் ? என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை.
அந்த விற்பனைப்பெண் பாவமாக என்னை பார்ப்பாள். நான் குறுஞ்சிரிப்போடு உதட்டை பிதுக்குவேன். அவள் தனக்குள் சிரித்துக்கொள்வாள்.
உனக்கு என்ன வேலை அங்கே???
கிஃப்ட் வாங்க போவேன் ஹி ஹி...#அராத்துசீனிவாசன்,சமூக ஆர்வலர் .
கருத்துகள்
கருத்துரையிடுக