.
சில்க் ஸ்மிதா அளவுக்குப் பிரபலமாக இருந்த நடிகை தமிழ் சினிமாவில்இன்றளவுக்கும் வேறு யாருமில்லை.ஒருமுறை முன்னாள் இந்திய ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்தி "யார் இந்த சில்க?"என்று சிரித்துக்கொண்டே கேட்கும் அளவுக்கு சில்க ஸ்மிதாவின் பெயர் இந்தியா முழுவதும் பரவியிருந்தது.பெண்களுக்கும் சிலுக்கைப் பிடித்திருந்தது.இன்றைய கவர்ச்சி நடிகைகள் யாருமே சில்க்கின் நிழலைக் கூட தொட முடியவில்லை.அன்றைய கதாநாயக நடிகர்கள் கூட பிரபலம் என்ற அளவில் சிலுக்குவுக்குப் பின்னால்தான் இருந்தார்கள்.
17 ஆண்டுகள் ஓர் ஒட்டுமொத்த சமூகத்தின் பாலியல் கனவாக விளங்கினார் சில்க.இது எப்படி நிகழ்ந்தது என்று ஆய்வு செய்தால்,தமிழ்ச்சமூகத்தை மிகச் சிறந்தமுறையில் புரிந்துகொள்ள முடியும்!.
ஆந்திரா பற்றித் தெரிந்தவர்களுக்குத் தெரியும்.அங்கே முக்கால வாசிப் பெண்கள் சில்க ஸ்மிதாவைப் போல்தான் இருப்பார்கள்.அவர்களில் ஒருவரைத் தூக்கிக் கொண்டுவந்து ஒரு மாநிலம் தனது கனவுக்கன்னியாக வைத்துக் கொண்டதற்குக் காரணம் என்ன?
உலகில் பாலியல் வறட்சி(SEXUAL POVERTY) மிகுந்த பிரதேசங்களில் தமிழ்நாடு முன்னணியில் வரும் என்றே நினைக்கிறேன்.
அப்போதெல்லாம் கழிப்பறை வசதி கொண்ட கேரவன்கள்கிடையாது.அதனால்
வெளிப்புறப் படப்பிடிப்பின்போது நடிகைகள் பெரும் அவதிக்குள்ளாவது உண்டு.அப்படி ஒரு தனியான இடத்தைக் கண்டுபிடித்து சிறுநீர் கழித்திருக்கிறார் சில்க.முடித்துவிட்டு பார்த்தால் சுவரிலும்,பக்கத்திலிருந்த மரக்கிளைகளில் பல ஆண் உருவங்கள்.இதனை சிலுக்கே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.அவர் இறந்த பிறகு அவரது பிரேதம் necrophila செயலுக்கு ஆட்பட்டதாக தமிழ்நாடு முழுவதும் ஒரு பரவலாக பேச்சு உண்டு.
பல நாட்கள் கோமாவில் இருந்த போது,அந்த மருத்துவமனையின் வார்ட் பாயிலிருந்து மூத்த டாக்டர் வரை சில்கின் ஜனனேந்திரியத்தைப் பார்த்து விட்டுச் சென்றார்களாம் ,அங்கே பணிபுரிந்த பெண் மருத்துவர் கூறுகிறார்.
ஹைப்பர்ரியால்டி என்பது யாதர்த்தம் அல்ல.அதே சமயம்,அதில் எதார்த்தத்தின் சாயலும் உண்டு,Hallucinatoryஎன்கிறார் பெத்ரியார்.இந்த மாயத் தன்மையால் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த சில்க் ஸ்மிதாவின் கதையை ஆராய்ந்தால ஒரு
வேளை அது தமிழர்களின் கதையையே சொல்லக் கூடும்.
சில்க் ஸ்மிதா!
அரையிருள் திரையரங்குகளில் அவர் எழுதிய சொப்பன உலகின் மாதிரியைக்கூட இன்று வரை யாராலும் எழுப்ப முடியவில்லையே.ஆண்களின் மன ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தவரை ஆடிய கயிறு,ஏன் தூக்குக் கயிறாக இருந்தது என்று தெரிந்துகொள்ள விரும்பினேன்.ஒரு கனவிலேயே அத்தனை ஆண்களுக்கு ஆறுதல் கொடுத்த பெண்ணுக்கு,ஏன் ஒரே ஓர் ஆறுதல் கனவுகூட எந்த ஒரு நிஜமான ஆணாலும் உண்டாக்க முடியவில்லை?
இன்று சில்கின் நினைவு நாள்..
ஸ்மிதா..கனவின் புதிர்!
சாரு நிவேதிதா உதவியுடன் நிருபன் மகேஸ்.
புகைப்படத்திற்கு நன்றி:ஸ்டில்ஸ் ரவி
கருத்துகள்
கருத்துரையிடுக