. BY SAVUKKU · மே 15 கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியான பின்னால், பல்வேறு ஊடகங்களில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்துள்ளன. காங்கிரஸின் தோல்வி, அதில் சித்தாராமைய்யாவின் பங்கு, பிஜேபியின் திடீர் வெற்றி, மோடியின் செல்வாக்கு, கர்நாடகத்தில் உள்ள பெரும்பான்மை சாதிகளான ஒக்கலிகா மற்றும் லிங்காயத் சாதி சமன்பாடுகள், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் தேவேகவுடா குமாரசாமியின் செல்வாக்கு, அமித் ஷாவின் தேர்தல் யுக்தி உள்ளிட்ட பலவற்றை ஆராய்ந்து பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இந்த கட்டுரைகள் அத்தனையும் படித்துப் பார்த்தால், ஒவ்வொரு காரணமும் சரியான காரணங்களாகவே தோன்றும். ஆனால் இந்த ஆராய்ச்சிகளிலும், காரணங்களிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஓரளவு உத்தேசமாக ஒரு ஊகத்துக்கு வர மட்டுமே இத்தகைய ஆராய்ச்சிகள் உதவும். 1991 தேர்தலில், அடித்த ராஜீவ் காந்தி மரண அனுதாப அலை, 1996ல் ஏற்பட்ட ஜெயலதா மீதான கோப அலை, 2004ல் ஏற்பட்ட ஜெயலலிதா எதிர்ப்பு அலை போன்ற சமயங்களில் மட்டுமே தேர்தல் முடிவுகளுக்கான உறுதியான காரணங்களை கண்டறிய முடியும். சாதாரணமாகவே, இந்திய வாக்காளர்கள...
கருத்துகள்
கருத்துரையிடுக