முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓய்வு பெறுங்கள்… ….

final_on_11
90 வயது. 90 வயதில் ஒரு மனிதன் உயிரோடு இருக்க முடியும்.  உண்டு, உறங்கி, எப்போது காடு அழைக்கும் என்று காட்டை எதிர்நோக்கி அந்தக் காலத்தைப் போல வருமா என்று புலம்பியபடி காலம் தள்ள முடியும். சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டு, பெரும்பாலான நேரம் உறங்கி, விழிக்கும் நேரத்தில் உடல் உபாதைகளைப் பற்றி புலம்பிக் கொண்டே பொழுதைப் போக்க முடியும்.
ஆனால், காலையில் எழுந்ததும் அனைத்து செய்தித்தாள்களையும் படித்து, உதவியாளர் சொல்லும் தகவல்களைக் கேட்டறிந்து, எந்தெந்த செய்திகளை பாராட்ட வேண்டும், எந்தெந்த செய்திகளை மறுக்க வேண்டும் என்று தேவையான குறிப்புகளை உதவியாளருக்கு கொடுத்து, கட்சியில் என்ன நடக்கிறது என்பதைக் கேட்டறிந்து, அறிவாலயம் சென்று, கட்சிக்காரர்களைப் பார்த்து, விபரங்களைக் கேட்டறிந்து, கோபாலபுரம் சென்று, மனைவி தயாளுவின் உடல் நிலையை விசாரித்து, மகன் என்ன செய்கிறான் என்று பார்த்து, மதுரை மகன் இன்று ஏதாவது பஞ்சாயத்து வைத்திருக்கிறானா என்பதை விசாரித்துக் கொண்டு, பத்திரிக்கையாளர்களை சந்தித்து, யாரையாவது தாக்கிப் பேசி, தான் பேசுவதால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை விவாதித்து, தொலைக்காட்சி நிருபர் ஏதாவது மோசமான கேள்விகளைக் கேட்டால், அவரைத் திட்டி, மாலை மீண்டும் கட்சித் தலைவர்களோடு ஜெயலலிதாவையும், அதிமுகவையும் பற்றி விசாரித்தறிந்து, ஜெயலலிதாவை வாயாரத் திட்டி, அடுத்து என்ன அறிக்கை விட வேண்டும் என்பதை கேட்டறிந்து, மாலை செய்தித்தாள்களைப் படித்து,  இரவு துணைவியார் வீடு இருக்கும் சிஐடி காலனிக்குப் போய், அவர் வைக்கும் ஒப்பாரியை முழுமையாக கேட்டு, மகளை எப்படி ராஜ்யசபை எம்.பியாக்குவது, எவனை வாங்குவது, எவனைக் கவிழ்ப்பது என்று யோசித்து, மகள் சொல்லும் புகார்களைக் கேட்டு, புதிதாக வந்திருக்கும் தமிழ்த்திரைப்படத்தின் சிறப்புக் காட்சி காட்டினால் அதை சென்று பார்த்து, அதற்கு விமர்சனம் எழுதி, இரவு உறங்கச் சென்று, மீண்டும் அதிகாலை எழுந்து, மீண்டும் செய்தித்தாள்களைப் படித்து…. …. …..
இதை உங்களால் 90 வயதில் செய்ய முடியுமா ?   நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது அல்லவா ? இதை கருணாநிதி 90 வயதில் செய்து கொண்டிருக்கிறார்.  இது ஒரு மனிதனால் சாத்தியமா என்பதை நம்ப முடியவில்லை.  கருணாநிதி ஒரு விஞ்ஞான அதிசயம்தான்.
விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மூளையை விஞ்ஞானிகள் பரிசோதித்தது போல கருணாநிதியின் மூளையையும் பரிசோதிக்கத் தகுந்ததே. அப்படிப்பட்ட அசாத்திய திறமை வாய்ந்தவர் கருணாநிதி. கருணாநிதியைப் போன்ற மிகச்சிறந்த நிர்வாகியைப் பார்க்கவே முடியாது. கருணாநிதியோடு பணியாற்றிய பெரும்பாலான உயர் அதிகாரிகள் அத்தனை பேரும் தயங்காமல் ஒப்புக் கொள்ளும் விஷயம், கருணாநிதி ஒரு சிறந்த நிர்வாகி என்பது. சட்டம், நிர்வாகம், உளவு, அரசியல், இலக்கியம் என்று கருணாநிதி ஒரு பன்முகத் திறன் படைத்தவர் என்பதை அவர் எதிரிகளும் ஒப்புக் கொள்ளவே செய்வர். கை ரிக்சாவை ஒழித்தது, இலவச கண் சிகிச்சை முகாம், திருமண உதவித் திட்டம், கிராமப்புரங்களை சீர்திருத்த அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கிராமங்கள் சுய நிர்ணயம் பெறும் வகையில் நமக்கு நாமே திட்டம், இது தவிரவும் பல்வேறு உட்கட்டுமானப் பணிகள் என்று கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தமிழகத்துக்குச் செய்த சேவைகள் குறிப்பிடத் தக்கவை.
இவையெல்லாவற்றையும் விட, கருணாநிதியிடம் குறிப்பிடத்தகுந்த பாரட்டக் கூடிய ஒரு குணம், அவரது சிறந்த நகைச்சுவை உணர்வு.  ஜெயலலிதாவுக்கு இந்த உணர்வு சுட்டுப்போட்டாலும் வராது. கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ஜெயலலிதா சரியான சிடுமூஞ்சி.  ஜெயலலிதா எப்போதாவது சிரித்தார் என்றால் அது அதிசயிக்கத்தக்க சம்பவமாக இருக்கும்.  நான் நல்ல ஆட்சி தருகிறேன் என்று ஜெயலலிதா தான் பேசுவது நகைச்சுவை என்பதே தெரியாமல் ஜோக் அடித்தால்தான் உண்டு.
ஆனால் கருணாநிதியின் ஒவ்வொரு வார்த்தையிலும் சிலேடையும், நகைச்சுவை உணர்வும் இருக்கும். தர்மசங்கடமான கேள்விகளுக்கு சிலேடையாகவும், நகைச்சுவையாகவும் பதில் கூறி, அந்தக் கேள்வியையே முனை மழுங்கச் செய்வதில் கருணாநிதிக்கு நிகரே கிடையாது.
இவையெல்லாம் கருணாநிதியின் ஒரு முகம்.  கருணாநிதிக்கு மற்றொரு முகம் இருக்கிறது. அது சகித்துக் கொள்ள முடியாத முகம். தொடக்க காலம் முதலாகவே கருணாநிதி, தான் தன் குடும்பம் என்பதை மனிதில் வைத்தே அத்தனை காரியங்களையும் ஆற்றியிருக்கிறார்.
சுயமரியாதை இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு மாணவ நேசன் என்ற கையெழுத்துப் பத்திரிக்கையோடு தன் அரசியல் வாழ்வை தொடங்கிய கருணாநிதி, தன் அக்காள் சண்முக சுந்தரம்மாளின் மகன் மாறனை தன் இளமைக் காலம் தொடங்கியே கூடவே வைத்திருந்தார்.   முதல் மனைவி பத்மாவதியின் மறைவுக்குப் பிறகு, தயாளு அம்மாளைத் திருமணம் செய்த கருணாநிதிக்கு தயாளு அம்மாள் வழியாக அழகிரி, ஸ்டாலின், தமிழரசு மற்றும் செல்வி என்று நான்கு பிள்ளைகள்.  அடுத்ததாக வந்து சேர்ந்தார் துணைவியார் தர்மாம்பாள் என்கிற ராசாத்தி அம்மாள். அவர் வழியாக கனிமொழி. இந்தக் குடும்பங்களும், மாறனின் குடும்பங்களின் வளர்ச்சியே திமுக மற்றும் கருணாநிதியின் வளர்ச்சி.
எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக தன் மகனை களமிறக்கி தோல்வி கண்ட கருணாநிதி முத்துவின் மீதான நம்பிக்கையை இழந்தார். 1953ல் பிறந்த ஸ்டாலின், 1969 பாராளுமன்றத் தேர்தலில் முரசொலி மாறனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நெருக்கடி நிலையில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததைக் காரணம் காட்டியே அவரை கட்சியின் இளைஞர் அணித் தலைவராக்கினார்.  1980ல் இளைஞர் அணித் தலைவரான ஸ்டாலின் இன்று வரை அந்தப் பதவியை விடவில்லை. டெல்லியை கவனித்துக் கொள்ள முரசொலி மாறனும், தமிழகத்தில் தனக்கு அடுத்து மு.க.ஸ்டாலினும், தென் தமிழகத்துக்கு அழகிரியும் என்று மெள்ள மெள்ள, போராட்டத்தில் உதித்த திராவிட முன்னேற்றக் கழகத்தை தனது குடும்ப நிறுவனமாக மாற்றினார் கருணாநிதி.
தனக்கு போட்டி என்று கருதி எம்.ஜி.ஆரை வெளியேற்றினார், தன் மகனுக்கு போட்டி என்று கருதி வைகோவை வெளியேற்றினார்.  தனக்கும், தன் குடும்பத்துக்கும் யார் யாரெல்லாம் எதிரி என்று கருதினாரோ, அத்தனை பேரையும் ஒழித்துக் கட்டினார். வி.பி.சிங் அரசாங்கத்தில் மந்திரி பதவி என்ற வாய்ப்பு வந்ததும், அப்போது ராஜ்யசபா எம்.பிக்களாக இருந்த யாரையும் பரிந்துரைக்காமல், முரசொலி மாறனைத்தான் பரிந்துரைத்தார் கருணாநிதி. 2004ல் வாய்ப்பு வந்தபோது முரசொலி மாறனின் வாரிசைத்தான் மந்திரியாக்கினார் கருணாநிதி. கட்சியின் தொழிற்சங்கத்தில் முக்கிய பங்காற்றிய செ.குப்புசாமியை எம்.பியாக்கத் தோன்றிய கருணாநிதிக்கு அவரை அமைச்சராக்கத் தோன்றவில்லை. 2009ல் எம்.பியான அழகிரியை மந்திரியாக்கத் தெரிந்த கருணாநிதிக்கு, கட்சி மற்றும் தமிழகத்தின் குரலாக பாராளுமன்றத்தில் தொடர்ந்து உரையாற்றி வரும் திருச்சி சிவாவை அமைச்சராக்கத் தோன்றவில்லை.
பதவிக்கான போட்டிகள் இவர்கள் குடும்பத்திற்குள்தான் எழுந்தனவே தவிர குடும்ப உறுப்பினர் அல்லாதவர்கள் போட்டியிட முடியவில்லை. அழகிரியின் கோபம் பல பேருந்துகளை எரித்தது.  தான் வாரிசாகத் தகுதியில்லை என்று சர்வே வெளியிட்டதற்கு வந்த கோபம் மூன்று உயிர்களை பழிவாங்கியது. ஆட்சி பொறுப்பில் இருந்து இவற்றைக் கண்டித்திருக்க வேண்டிய கருணாநிதி, தன் பிள்ளைகளை மயிலிறகால் வருடிக் கொடுத்தார்.
karuna_family_tree
மாறன்களோடு பகை உருவானபோது, அவர்களுக்குப் போட்டியாக தன் மூன்றாவது மனைவியின் மகள் கனிமொழியை டெல்லி பிரதிநிதியாக கட்சியின் மீது திணித்தார். தன்னையோ, தன் குடும்ப உறுப்பினர்களையோ தலைவர்களாக ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்பதை ஏறக்குறைய வெளிப்படையாகவே அறிவித்தார்.  திமுக என்பது, தனது குடும்ப சொத்து என்பதை பகிரங்கப்படுத்தினார் கருணாநிதி.
குடும்பம் என்ற புதைமணலில் சிக்கிய கருணாநிதி அந்த புதை மணலில் இருந்து வெளிவர முடியாமல், அதற்குள் நின்று கொண்டே கட்சி தொடர்பான அத்தனை முடிவுகளையும் எடுக்கத் தொடங்கினார். அப்போது இடுப்பு வரை அவரை விழுங்கியிருந்த புதை மணல், அவர் சிந்தனையை மழுங்கடித்தது.
சிறிது சிறிதாக கருணாநிதியை விழுங்கிய புதை மணல், 2006ல் அவரை கழுத்து வரை விழுங்கியது.  தண்ணீரில் மூழ்கி தத்தளிக்கும் ஒருவன் சிந்தனை செய்ய முடியாமல் எப்படித் தடுமாறுவானோ, அது போலவே தடுமாறத் தொடங்கினார் கருணாநிதி.  அது வரை, மறைமுகமாக அமைச்சர்கள் மூலமாக வசூலில் ஈடுபட்ட கருணாநிதியின் குடும்பம், நேரடியாகவே வசூலில் இறங்கத் தொடங்கியது.  இரண்டாம் தாரத்துக்கும், மூன்றாம் தாரத்துக்கும் இடையே இருந்த போட்டிகளும், மாறன் குடும்பத்தோடு நடந்த போட்டிகளும், வரைமுறை இல்லாமல் கொள்ளையடிக்க வைத்தன.  டெல்லியில் ஒரு புறமும் தமிழகத்தில் மறு புறமும், கருணாநிதியின் குடும்பம் அடித்த கொள்ளைகள், சம்பல் பள்ளதாக்கில் அடித்த கொள்ளைகளை விஞ்சின.  இந்தக் கொள்ளைகளையெல்லாம் தடுத்திருக்கும் வல்லமை படைத்த கருணாநிதி தன் கட்டுப்பாட்டை இழந்து, சண்டை போடாமல் கொள்ளையடியுங்கள் என்றார்.
சொந்தங்களுக்குள்ளேயே சிக்கல் என்ற நெருக்கடி வந்தபோது, சொந்தங்களை விட குடும்பமே பெரிது என்று முடிவெடுத்தார்.  பிரிந்த சொந்தங்கள், குடும்பத்தை அச்சுறுத்தியதும், சொந்தங்களுக்கும், குடும்பத்துக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்தினார். மூன்று உயிர்கள் பலியான விவகாரத்தை, அது முடிந்து போன விவகாரம் என்று புறந்தள்ளினார். இனித்த இதயத்தை தடவிக் கொண்டும் பனித்த கண்களை துடைத்துக் கொண்டும், மறைந்த உயிர்களை மறந்து போனார்.  தினகரன் நாளிதழில் நடந்த கொலைகளை கருணாநிதி கையாண்ட விதம், அவர் குடும்பத்துக்காக எத்தனை உயிர்களையும் பலி கொடுக்க தயங்க மாட்டார் என்பதை உணர்த்தியது.
ஒரு சாதாரண திரைப்பட எழுத்தாளராக தன் வாழ்வை தொடங்கிய கருணாநிதியின் குடும்பம், இன்று தென்னிந்தியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பமாக உருவெடுத்திருக்கிறது.  கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது.  ஆனால் அந்த குடும்பத்தின் பேராசைகள் அவர்களை சட்டத்தின் பிடியிலும் சிக்க வைத்திருக்கிறது.  பதவி ஆசையில் மகன் கொலை வழக்கை சந்தித்தார். பண ஆசையில் மகள் சிறை சென்றார்.  பெரும் பேராசையில் மருமகன்கள் சிறை செல்ல இருக்கின்றனர்.
இவர்களைக் காப்பாற்றும் நெருக்கடியில் இருந்த கருணாநிதி தனது அத்தனை விழுமியங்களையும் இழந்தார்.  தமிழினத் தலைவர் என்று தொண்டர்கள் வாயாரப் புகழ்வதைக் கேட்டு புளகாங்கிதம் அடைந்த கருணாநிதி அந்த இனத்தின் படுகொலைக்கு மவுன சாட்சியானார்.  தமிழ் தமிழ் என்று மொழியால் தன்னை வளர்த்துக் கொண்ட கருணாநிதி, அந்த மொழியை வாழவைக்கும் தமிழர்களின் இனப்படுகொலையைப் பார்த்து வாளாயிருந்தார்.
விஞ்ஞானிகளே வியக்கத்தக்க அசாத்தியமான திறமைகளைக் கொண்ட கருணாநிதியை ஒரு தட்டிலும், தன் குடும்பத்துக்காக அந்தத் திறமைகளை சீரழித்த கருணாநிதியை மறு தட்டிலும் வைத்தால், குடும்பத்துக்காக தன் இனத்தை பலிகொடுத்த கருணாநிதியின் பக்கமே எடை கூடுகிறது.
விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் அறிவுக்கும் திறமைக்கும் ஈடு கிடையாது. அந்த ஐன்ஸ்டீன், தன்னுடைய கண்டுபிடிப்புகளை மனித குலத்தின் அழிவுக்குப் பயன்படுத்துவதற்கும், கருணாநிதி தன்னுடைய அசாத்திய திறமைகளை குடும்பத்தை வளர்த்து இனத்தை அழிக்க பயன்படுத்தியதற்கும் வேறுபாடு இல்லை.
இந்த வயதிலும், பிடிவாதமாக நீங்கள் அரசியலில் ஈடுபட்டு, மகனுக்குக் கூட பதவியை விட்டுக் கொடுக்காமல் இருப்பதன் காரணம் நீங்கள் நார்சிஸ்ட் என்பது மட்டுமல்ல.  நீங்கள் பதவியில் இல்லாமல் இருந்தால், உங்கள் குடும்பங்கள் அடித்துக் கொண்டு தெருவுக்கு வந்து விடுவார்கள் என்பதும்தான்.  ஆனாலும் இந்த வயதில் நீங்கள் விடாமல் இந்தப் பதவியைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, உங்கள் பிள்ளைகளே ஏசுகிறார்கள்… உங்களை சபிக்கிறார்கள். உங்களைப் பார்த்ததும், அப்பா என்றும் தலைவர் என்றும் அவர்கள் பாசமாகப் பேசுவது நடிப்பு என்பது உங்களுக்கும் தெரியும். ஆனால் நீங்கள் அதை பாசமென்று நம்ப விரும்புகிறீர்கள். இதனால் அது உங்களுக்கு உண்மையாகத் தோன்றுகிறது.
இத்தனை நாட்களாக நீங்கள் குடும்பத்துக்காக உழைத்தது போதும். உங்கள் குடும்பங்களுக்காக பல கோடிகளை சேர்த்து வைத்திருக்கிறீர்கள். இது நீங்கள் ஓய்வெடுக்க வேண்டிய காலம். நீங்கள் காலதாமதம் செய்வீர்களேயானால், உங்கள் பிள்ளைகளே உங்களை வெளிப்படையாக வெறுக்க நேரிடும்.  அந்த நிலை உங்களுக்கு இந்த முதிய வயதில் வரக்கூடாது.
சுயசரிதை என்பது ஒரு மனிதனின் உயில் போன்றது.  அந்த உயிலில் பெரும்பாலும் பொய் இருக்காது.  ஆனால் உங்களின் நெஞ்சுக்கு நீதி ஆறு பாகங்களும் முக்கால் பகுதி பொய்யைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன. யாருடைய நெஞ்சுக்கும் நீதி வழங்காதது உங்கள் சுயசரிதை.
உங்களின் இந்த 90வது பிறந்த நாளில், அரசியலில் இருந்து ஓய்வு பெறுங்கள். ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் செய்த துரோகத்தை தமிழர்கள் ஒரு நாளும் மன்னிக்க மாட்டார்கள்.  அரசியலில் இருந்து நீங்கள் ஓய்வு பெறுவது ஒன்றுதான் தமிழினத்துக்கு நீங்கள் செய்யும் ஒரே உதவி.
ஓய்வு பெற்ற பிறகு, உங்கள் வாழ்வில் நடந்த பல்வேறு சம்பவங்களை எழுதுங்கள்.  உண்மையை எழுதுங்கள்.  உங்கள் வாழ்வின் உண்மைகள் உங்களோடு அழிந்து போக வேண்டாம்.
Kalangher
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...