முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முடிவின் ஆரம்பம்.

18 செப்டம்பர் 1949 அன்று சென்னை பவழக்காரத் தெருவில் நடந்த அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அமைப்புக் குழுக் கூட்டத்தில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் உருவெடுத்தது. “நாம் இதுவரையில் பரப்பி வந்த கொள்கைகளையும் லட்சியத்தையும் தொடர்ந்து பரப்பவும், உடனடியாக வேலைகளைத் துவக்கி நடத்தவும் நாம் “திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு செயலாற்றுவதெனவும் இக்கமிட்டி தீர்மானிக்கிறது.
DMK_flag
நீண்ட சதுர வடிவத்தில் மேல் சரிபாதி கறுப்பு நிறமாகவும், கீழ் சரிபாதி சிவப்பு நிறமமாகவும் அமைந்திருக்க வேண்டும்.
கறுப்பு : அரசியல் பொருளாதார சமுதாய வாழ்விலுள்ள இருண்ட நிலையை உணர்த்தி நிற்கும் அறிகுறியாகும்.
சிவப்பு : அம்மூன்று துறைகளிலும் உள்ள இருண்ட நிலையைப் போக்கி ஒளி நிலையை உண்டாக்க வேண்டும் என்பதைக் காட்டும் அறிகுறியாகும்.  இருண்ட நிலையை ஒளிநிலை அழித்துக் கொண்டு வரவேண்டும். அழித்துக் கொண்டு வருகிறது.  இருண்ட வானின் அடியில் தோன்றி எழும்பும் இளம்பரிதி ஒளி போல் என்ற கருத்துடன், கறுப்பு மேலும், சிவப்பு கீழும் வைக்கப்பட்டுள்ளது.  இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்காலிகக் கொடியாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.”
இந்தத் தீர்மானத்தோடுதான் திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது. ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் நடந்த அந்தப் பொதுக்கூட்டத்தில் மழையையும் பொருட்படுத்தாது நனைந்தபடி கேட்ட பொதுமக்களிடையே உரையாற்றிய அண்ணா
“திராவிடர் கழகமாகட்டும் – திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும்.  படை வரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான்.  திட்டமும் வேறு அல்ல என்ற நிலை இருந்தே தீரும். படைவரிசை இரண்டுபட்டு விட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிக்கும், வடநாட்டு ஏகாதிபத்யத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும். இரு கழகங்களும் இரு திக்குகளிலுமிருந்து வடநாட்டு ஏகாதிபத்யத்தை ஒழித்து, வைதீகக் காட்டை அழித்து சமதர்மப் பூங்காவை, திராவிடத்தை செழிக்கச் செய்தல் வேண்டும். அதிலே எந்தக் கழகம் பூங்காவை அமைத்தாலும் அதில் பூக்கும் பூக்கள், காய்கள், கனிகள், திராவிடத்தின் எழுச்சியை, மலர்ச்சியைத் தான் குறிக்கும்.  இரு பூங்காக்களும் தேவை.  ஒன்றோடொன்று பகைக்கத் தேவையில்லை, அவசியமும் இல்லை.   எது புஷ்பித்தாலும் மாலையாகப்போவது திராவிடத்துக்குத்தான் என்ற எண்ணம் வர வேண்டும்” என்று பேசினார்.
மொழி என்பது தமிழர்களின் ரத்தத்தோடு கலந்த ஒரு விவகாரமாக இருந்த காலம் அது. 1948ல் மாணவர்களின் இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னை செயின்ட் மேரி மண்டபத்தில் நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் அறிஞர் அண்ணா போராட்டத்தின் தளபதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
திமுக தொடங்கப்பட்ட பிறகு 1950 நவம்பர் 8 அன்று அதே செயின்ட் மேரி மண்டபத்தில் சத்தியேந்திரன் தலைமையில் திராவிட மாணவ முன்னேற்றக் கழக மாநாடு நடைபெறுகிறது.  அம்மாநாட்டில் தனித்திராவிட நாடு உட்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதைத் தொடர்ந்து 1955 நவம்பரில் திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது மாநாடு சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்றது.  இதைத்தொடர்ந்து தமிழகமெங்கும் மாணவர் இயக்கங்களை திமுக கட்டமைத்தது.
இந்தி எதிர்ப்பு என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து, 25 ஜனவரி 1965 தினத்தை மாணவர்கள் துக்க தினமாக அறிவித்தனர்.   மெரினா கடற்கரையில் 10 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர் 21 அடி உயர இந்தி அரக்கி கொடும்பாவி கொளுத்தப்பட்டது.   சில மாதங்களுக்கு முன் திருச்சியில் நடந்த போராட்டத்தில்  நடத்தப்பட்ட தாக்குதலைப் போலவே காங்கிரஸ்காரர்கள் மதுரையிலும் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ராஜேந்திரன் என்ற மாணவர் உயிரிழந்தார்.  தமிழகமெங்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.  அரசு கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்தது.  அந்த ஆண்டு முழுவதுமே தொடர்ந்து மாணவர்களின் போராட்டம் நடந்தவண்ணம் இருந்தது.  இந்த போராட்டத்தின் வீச்சை அப்போதைய காங்கிரஸ் அரசு சரிவர மதிப்பிடத் தவறியது.
1967 தேர்தலுக்கு சற்று முன்னதாக நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணா இவ்வாறு பேசினார். “ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும், அமைச்சரவை ஏற்க வேண்டும் என்பதுதான் கழகத்தின் இறுதி முடிவு என்று யாரும் கருதி விடக் கூடாது.  அதுதான் லட்சியம் என்றால் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து, கொடுக்க வேண்டியவைகளை கொடுத்து அழைக்க வேண்டியவர்களை அழைத்து பதவியைப் பெற முடியாது என்பது முடியாத காரியமல்ல…!! காமராசரிடம் சென்று நீங்களே இருங்கள் நாங்கள் கீழே இருந்து கொள்ளுகிறோம் என்று சொன்னால் அது முடியாத காரியமா ?  இந்த முறை சரியானதல்ல என்று கருதுகிறேன்.
தமிழ் மொழியைக் காத்தாக வேண்டும்.  தமிழ் இனத்தை, தமிழ்ப் பண்பாட்டைக் காத்தாக வேண்டும்.  இதற்கு இன்னும் ஐம்பது ஆண்டுகளாவது தொடர்ந்து உத்வேகத்துடன் பாடுபட்டால்தான் உலக வரலாற்றில் நாங்கள் தமிழர்கள் என்று தலை நிமிர்ந்து கூறக்கூடிய நிலை ஏற்படும்.  எனவே, புதிய வரலாற்றில் சிறப்பான அத்தியாயத்தை தோற்றுவிக்க வேண்டும்.  அந்த லட்சியத்தை அடைய நான் மேற்கொள்ளும் பணியில் நீங்கள் பங்கு கொள்ள உங்களை அழைக்கிறேன்.” இதுதான் அறிஞர் அண்ணா திமுக ஆட்சிப்பொறுப்பேற்கும் முன் விடுத்த அழைப்பு.  தமிழ் மொழியைக் காத்தாக வேண்டும், தமிழ் இனத்தை காக்க வேண்டும். இதுதான் அறிஞர் அண்ணாவின் லட்சிய மூச்சாக இருந்தது.  எந்தத் தமிழினத்தைக் காக்க வேண்டும் என்று அறிஞர் அண்ணா உறுதிபூண்டு தேர்தல் களத்தில் குதித்தாரோ, அதே தமிழினத்தின் அழிவுக்கு வழிகோலிய ஒரு இயக்கமாக திமுக மாறிப்போனது காலத்தின் விசித்திர கோலமே.
எத்தனையோ ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த திமுக இன்று மீளாத சரிவுப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.  தேசியம், தேசியம் என்று பேசி எந்தக் காங்கிரஸ் கட்சி தமிழினத்தை மீளாத்துயரில் ஆழ்த்தியதோ, அந்த காங்கிரஸ் கட்சியிடமிருந்து தமிழினத்தையும், தமிழகத்தையும் மீட்டெடுக்கப்போகிறோம் என்று சூளுரைத்து பதவியேற்றது திமுக.
m-karunanidhi-sonia-gandhi-rahul-gandhi-dayanidhi-maran-2009-5-19-11-53-40
ஆனால் அதே காங்கிரஸ் கட்சியிடம் தன் குடும்பத்துக்காக ஒரு இனத்தையே பலி கொடுத்த வரலாற்றையும் திமுகவே அரங்கேற்றியிருக்கிறது. 2004ல் காங்கிரஸ் கட்சியோடு ஏற்பட்ட உறவு 2ஜி ஊழல் பணத்தால் வலுவாக கட்டப்பட்டது.  தன்னுடைய கட்சியின் ஆதரவினால் மட்டுமே நடந்த முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடமிருந்து, எப்படிப்பட்ட பசையான துறைகளைப் பெற முடியுமோ, அப்படிப்பட்ட பசையான துறைகளை மிரட்டிப் பெற்றார் கருணாநிதி.  அப்படிப் பெற்ற துறைகளில் மூலமாக ஆயிரக்கணக்கான கோடிகளை தன் குடும்பத்தினரும், அமைச்சர் பெருமக்களும் கொள்ளையடிப்பதை அகமகிழ்ந்து ரசித்தார் கருணாநிதி.
தன்னுடைய பல ஆண்டு கால பொதுவாழ்வில் காணக்கிடைக்காத பணம் அவர் கண்ணை மறைத்தது. அந்த நேரத்தில் வளர்ந்து தலையெடுத்த குடும்பம், அவர் சிந்தையை முடக்கியது. தன் கணவனைக் கொன்றதற்காக ஒரு இனத்தையே அழிப்பேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கிய பெண்ணுக்கு, துணை நின்று, “ஒரு அடிமை இறைஞ்சுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்” என்றார். தன்னை நிரந்தர அடிமையாக்க, காங்கிரஸ் கட்சி 2ஜி என்ற வலையை விரித்து வைத்திருப்பதை உணரத் தவறிய அவர், வகை தொகை தெரியாமல் அந்த வலையில் தான் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தையும் சிக்க வைத்தார்.  தானாகவே வந்து வலையில் சிக்கிய திமுகவை தத்தளிக்க வைத்தது காங்கிரஸ்.  நீரா ராடியா உரையாடல்கள் உள்ளிட்ட வெவ்வேறு ஆதாரங்களை அவ்வப்போது ஊடகங்களில் வெளியிட்டு, கனிமொழிக்கு நெருக்கடி என்பதை உணர்த்தியே, ஈழப்போரில் சிங்களன் கையை வலுப்படுத்த, கருணாநிதியே கேடயமாக பயன்படுத்தியது காங்கிரஸ்.  தன் மீதும், திமுக மீதும் எரியப்பட்ட அத்தனை  அம்புகளையும், தாங்கிக் கொண்டு காங்கிரஸ் கட்சிக்கும், மத்திய அரசுக்கும் முட்டுக் கொடுத்தார் கருணாநிதி.
தனது உயிருக்குயிரான ஆசை மகளை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கோபாலபுரத்திலும், சிஐடி காலனியிலும் வந்து பேசிய காங்கிரஸ் தலைவர்களிடமெல்லாம் மன்றாடினார் கருணாநிதி.  ஆனால், நம்ப வைத்து கழுத்தறுத்தது காங்கிரஸ் கட்சி.  பெற்ற மகள் திஹார் சிறையில் உழலுவதைப் பார்த்து எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் புலம்பினார் கருணாநிதி. ஆனால் அவர் புலம்பலைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்தனர் காங்கிரஸ் கட்சியினர்.  வசமாகச் சிக்கினான் நமக்கு ஒரு அடிமை என்று அகமகிழ்ந்தனர்.   புதைமணலில் சிக்கியவன் எது கிடைத்தாலும் கரையேறத் துடிப்பது போல, பிடிப்புக்காக அலைந்து காங்கிரஸ் கட்சி வீசிய கிளையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் கருணாநிதி.  தனது சுயமரியாதைக்கும், கட்சியின் மரியாதைக்கும் சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டின்போது வந்த சிக்கலான நேரத்தில் ஒரு கணம் தடுமாறி கூட்டணியை விட்டு விலகுகிறேன் என்று வீராவேசமாக அறிவித்தார்.  காங்கிரஸ் கட்சி 2ஜி வழக்கை சுட்டிக்காட்டி, கையை முறுக்கியதும், எந்த 63 தர முடியாது என்று வீரவசனம் பேசினாரோ அதே 63 இடங்களை வழங்கியதோடல்லாமல், 63 நாயன்மார்கள் என்று வாழ்த்துப்பா பாடினார்.
2ஜி வழக்கில் உதவி செய்கிறோம், உதவி செய்கிறோம் என்று கடைசி வரை நம்ப வைத்துக் கழுத்தறுத்த காங்கிரஸ் கட்சிக்கு சரியான பாடம் புகட்டுவதற்காக காத்திருந்த கருணாநிதிக்கு வசதியாகக் கிடைத்தது, தமிழ் மாணவர்களின் போராட்டம்.  எந்த திமுகவும் கருணாநிதியும், ஈழப்போராட்டத்தை அழித்தார்களோ, அதே கருணாநிதி மாணவப் போராட்டத்தைக் காரணம் காட்டி காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற நேர்ந்தது.  ஐக்கிய நாடுகள் அவையில் எடுத்து வரப்பட்ட தீர்மானத்தைக் காரணம் காட்டி, காங்கிரஸ் கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் வாங்கினார் கருணாநிதி. எந்த ஈழத்தமிழர்கள் அழியக் காரணமாக இருந்தாரோ, அதே ஈழத் தமிழகர்கள் பேரால் முண்டா தட்டினார் கருணாநிதி. டெசோ அமைப்பால் ஈழத்தை பெற்றே தீருவேன் என்று சூளுரைத்தார்.
வாபஸ் வாங்குவதென்ற முடிவெடுத்ததும், செய்தியாளர்களிடம் ஈழத்தமிழர்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்தார்.
செய்தியாளர் :- நீங்கள் கோரும் மாற்றம் செய்யப்படவில்லை என்றால், மத்திய அமைச்சரவையில் நீடிப்பதில்லை என்று ஏற்கனவே நீங்கள் எடுத்த முடிவு உடனடியாக எடுக்கப்படுமா?
கலைஞர் :- எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால், எங்களுக்கும் இந்தக் கூட்டணிக்கும் உள்ள உறவு நீடிக்குமா என்பது சந்தேகம் - நீடிக்காது என்பது உறுதி.
செய்தியாளர் :- இந்தியா திருத்தங்களைக்கூறினால், அதனை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும் என்று நினைக்கிறீர்களா?
கலைஞர் :- இந்தியா வலியுறுத்த தவறினால், அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாததை விட அது பெரிய தவறு. அமெரிக்கா ஏற்றுக் கொள்கிறதோ இல்லையோ, அதைக்கூட இந்தியா சொல்லத்தவறினால், அது இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் பெருத்த அநீதி என்று நாங்கள் கருதுகின்ற காரணத்தினால்தான், இந்தக்கூட்டணியிலே நீடிப்பதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை என்று நான் ஏற்கனவே சொல்லியிருக் கிறேன். அதையே இப்போதும் சொல்கிறேன்.”
மத்திய அரசிலிருந்து, குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி ஆகியோர் நேரில் வந்து முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்ட போதும், முடியவே முடியாது…. மகளைக் காப்பாற்றாத உங்களுக்கு எதற்கு ஆதரவு தரவேண்டும் என்று உள்ளே பேசி விட்டு, வெளியே நிருபர்களிடம் “எனவே, ஈழத்தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப் பட்டுள்ள நிலையில், இதற்குப்பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக்கழகம் மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.“ என்று பசப்பு நாடகமாடினார்.
karuna_kanimozhi_delhi
“இதற்குப் பிறகும், இந்திய மத்திய ஆட்சியில் திமுக நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை“ எப்படிப்பட்ட கடுமையான வார்த்தைகள்…. ?
இந்த வார்த்தைகளைக் கேட்டு, உடன்பிறப்புகள் அகமகிழ்ந்தனர், ஆர்ப்பரித்தனர், ஆனந்தக் கூத்தாடினர்… விரலிடுக்கில் உறுத்திக் கொண்டிருந்த பேனா விலகிப்போனது என்றனர்… காலில் குத்திய நெருஞ்சி முள் பிடுங்கி எறியப்பட்டது என்றனர். இனி நாங்கள் யாருக்காகவும் சிலுவை சுமக்கவேண்டியதில்லை  என்றனர்…  பட்டாசு வெடித்தனர்… பண்டிகை போலக் கொண்டாடினர்…..
திகவின் மூத்த சொம்பு குஞ்சாமணி இது குறித்து அறிக்கை வெளியிட்டார்.
“ஈழத் தமிழர் வாழ்வுரிமையைக் காப்பாற்றத் தவறியதோடு, மனித நேயத்தையும் மறந்த இலங்கை ராஜபக்சே அரசின் தமிழர் இனப் படுகொலை, போர்க் குற்றங்கள் – ஆகியவற்றிலிருந்து இன்னமும் இலங்கை அரசைக் காப்பாற்ற சர்வதேச அரங்கிலும் முயற்சிக்கும் இந்திய அரசிலிருந்து தி.மு.க. வெளியேறுவது என்ற (கூட்டணியிலிருந்தும்கூட) அதன் முடிவு – மிகவும் பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த முடிவு ஆகும். காலத்தே எடுக்கப்பட்ட சரியான முடிவு – தேவையான முடிவும் கூட.
ஞாலம் வரவேற்கும் என்பது உறுதி. ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைக்காக முன்பு இரண்டு முறை, தமிழ்நாட்டு ஆட்சியை – அரசைத் தியாகம் செய்த தி.மு.க. -இப்போது 9 ஆண்டுகளாக பங்கேற்ற மத்திய ஆட்சியிலிருந்து, அக்கூட்டணி அரசிலிருந்து வெளியேறி அதன் தியாக வரலாற்றில் மேலும் ஒரு வைரக் கல்லைப் பதித்து உயர்ந்துள்ளது.”
குஞ்சாமணியின் அறிக்கைகள் கருணாநிதியின் அறிக்கைகளே…
ஆனால் என்ன நடந்தது ?   எந்த காங்கிரசோடு உறவாடுவது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்று வர்ணித்தாரோ, அதே காங்கிரஸிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தி சென்றார்.  எந்த காங்கிரஸ் கட்சியைப் பார்த்து முண்டா தட்டினாரோ, அதே காங்கிரஸ் கட்சியிடம் இன்று மடிப்பிச்சை ஏந்தி நிற்கிறார்.  கூட்டணியிலிருந்து விலகியதிலிருந்து மீனவர் பிரச்சினைக்கும், கச்சத்தீவு பிரச்சினைக்கும் குரல் கொடுத்து வீராவேசம் பேசி வந்தவர், ஊட்டியில் சிங்கள ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்ததைக் கண்டும் காணாமலும் இருந்தார்.  நாள்தோறும் ஜெயலலிதாவை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு புளகாங்கிதம் அடைந்தவர், ஜெயலலிதாவைக் கூட பகைக்க விரும்பாமல் தேர்தல் முடியும் வரை எந்த அறிக்கைகளும் விடாமல் அமைதி காத்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இருந்த ஒன்பது ஆண்டுகால உறவில், என்றாவது ஒரு நாள், எந்த திமுக தலைவரின் கால்களாவது சத்யமூர்த்தி பவனில் பட்டிருக்குமா ?   கருணாநிதி குடும்பத்தின் எந்த வாரிசாவது சத்யமூர்த்தி பவனில் கால் பதித்திருப்பார்களா ?  ஆனால், கருணாநிதியின் மகள் கனிமொழியே நேராக சத்யமூர்த்தி பவன் சென்று காங்கிரஸ் தலைவர்களிடம் ஆதரவு கேட்கும் நிலை ஏற்பட்டது.  குடியரசுத் தலைவராக இருந்தாலும் கருணாநிதியை வீட்டில் வந்து சந்திக்கும் நிலையில் இருந்த திமுகவின் வாரிசுகளில் ஒன்று சத்தியமூர்த்தி பவனில் மடிப்பிச்சை கேட்டது.
இப்படியெல்லாம் மன்றாடுவது எதற்காக ?  செத்து மடியும் ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதற்காகவா ?  ஈழத்தில் போரை நிறுத்துவதற்காகவா ?  தமிழ் மொழியை காப்பாற்றுவதற்காகவா ?  குறைந்தபட்சம் மாநிலத்தில் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காகவா ?
1580992854_599b99cbe0_b_1
மகளை பாராளுமன்ற உறுப்பினராக்குவதற்காக இத்தனை தியாகங்களையும் செய்யத் துணிந்தார் கருணாநிதி. தன் குடும்பத்தின் நலனுக்காக, தன் சுயநலனுக்காக, எதை வேண்டுமானாலும் செய்யத் தயங்காதவர்தான் கருணாநிதி என்பதை கனிமொழியை எம்.பியாக்குவதற்காக அவர் நடத்திய நாடகம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.  காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவில்லை என்று அறிவித்த மூன்று மாதங்கள் கூட வைராக்கியமாக இருக்க முடியாமல், தன் குடும்பத்துக்காக கூழைக்கும்பிடு போடுகிறார் கருணாநிதி. இதற்கு பிரதிபலனாக, அடுத்து எம்.பி பதவி முடியும் தருவாயில் இருக்கும் ஜெயந்தி நடராஜனை மீண்டும் எம்.பியாக்குவதற்கு அனைத்து உதவிகளையும் செய்யப்போகிறவர் இதே கருணாநிதிதான்.
“தமிழ் மொழியைக் காத்தாக வேண்டும்.  தமிழ் இனத்தை, தமிழ்ப் பண்பாட்டைக் காத்தாக வேண்டும்.  இதற்கு இன்னும் ஐம்பது ஆண்டுகளாவது தொடர்ந்து உத்வேகத்துடன் பாடுபட்டால்தான் உலக வரலாற்றில் நாங்கள் தமிழர்கள் என்று தலை நிமிர்ந்து கூறக்கூடிய நிலை ஏற்படும். “ என்ற லட்சியத்தோடு தொடங்கப்பட்ட திமுகவை  இன்று குடும்ப நிறுவனமாக மாற்றியிருக்கிறார் கருணாநிதி.  தமிழினத்தை அழிக்கத் துணைபோனவர் என்ற அவச்சொல்லையே அகற்ற முடியாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கருணாநிதி, மீண்டும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைக் கேட்டுப் பெற்ற நிலையில், புதைகுழியிலிருந்து வெளி வர கிடைத்த கடைசி ஆதாரத்தையும் கைவிட்டு விட்டார்.
1009764_10151540556698303_318832425_n
கனிமொழிக்காக காங்கிரஸிடம் கையேந்தி அவர் பெற்ற பதவி, அவர் குடும்பத்துக்குள் நிலவும் வாரிசுச் சண்டையை மேலும் கூர்மைப்படுத்தவே செய்யும்.   குறுகிய கால நினைவு உள்ள தமிழக மக்கள், தன் துரோகங்களை மறந்து விட்டு, மீண்டும் தன் குடும்பத்திடம் அதிகாரத்தை வழங்குவார்கள் என்று கருணாநிதி நினைப்பாரோயானால், அவரைப் போன்ற முட்டாள் யாரும் இருக்க முடியாது.  திமுக என்ற ஆலமரத்தின் வேரில் வெந்நீர் ஊற்றும் வேலையை கருணாநிதி தொடர்ந்து செய்து வருகிறார்.   எந்தக் குடும்பத்தின் காரணமாக 2011 தேர்தலில் தன் ஆட்சியை இழந்தாரோ, அதே குடும்பத்தின் காரணமாகவே 2014 தேர்தலையும் இழக்கப்போகிறார்.   கருணாநிதி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மீது உள்ள வெறுப்பின் அடிப்படையிலேயே மீண்டும் ஜெயலலிதாவுக்கு மக்கள் வாக்களிக்கப் போகின்றனர்.  2014
தேர்தலிலும், திமுகவை படுதோல்வியை நோக்கி இட்டுச் செல்கிறார் கருணாநிதி.
27cm7
கருணாநிதியின் தொடர்ந்த தவறுகளால், திமுக மீள முடியாத அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.   எத்தனையோ நெருக்கடிகளைச் சந்தித்து மீண்டெழுந்த திமுகவை, மீண்டெழ முடியாத மயான படுகுழியில் தள்ளியிருக்கிறார் கருணாநிதி.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

கெட்ட வார்த்தைகள் தெரியுமா? ஒன்றிரண்டு தெரியாது இது மனச்சாட்சியின்படி ஆண் பெண் இருபாலரது நேர்மையான பதில்

அன்புள்ள ஜெ.  வணக்கம் …                   பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி மாவட்டம். இந்த கால கட்டத்தில் தான் நிறைய கெட்ட வார்த்தைகள் எனக்கு அறிமுகம்..                 இன்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் எல்லா பகுதி சொல்வழக்கையும் நான் கேட்டதுண்டு. நான் கேட்டவரையில் எங்கும் தாயைப் பழிக்கும் சொல்லால் ஒருவரை ஏசினால் கண்டிப்பாக கைகலப்பில்தான் முடியும். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் நான் படி...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....