முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்பான கனிமொழி… ….

கடந்த காலங்களில் சென்னை சங்கமத்தின் ஒரு பகுதியாக நீங்கள் புழல் சிறைக்கு சென்று நிகழ்ச்சி நடத்திய போதெல்லாம், அந்தக் கைதியோடு கைதியாக இருப்பீர்கள் என்பதை நினைத்துப் பார்த்திருக்க மாட்டீர்கள்.  காலம் எப்படியெல்லாம் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடுகிறது !!!
 DSC_4400
சிறை என்பது மனிதர்களை பக்குவப் படுத்தவும் செய்யும், அழிக்கவும் செய்யும்.  ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த போதுதான் தன் மகளுக்கு கடிதங்கள் வாயிலாக, உலக சரித்திரத்தை எழுதினார்.   சவுக்கு அந்தப் புத்தகத்தை புழல் சிறையில்தான் படிக்க நேரிட்டது.   அதே நேரத்தில் சிறை ஒரு மனிதனுக்கு தன்னுடைய நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காண உதவும். சிறைக்குக் சென்றவுடன் நண்பர்கள் என்று கருதிக் கொண்டிருந்தவர்கள் நடந்து கொள்ளும் தன்மையே வித்தியாசமாக இருக்கும்.  புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.  புதிய நண்பர்கள் காலா காலத்துக்கும் நண்பர்களாக இருக்கும் வாய்ப்பு உண்டு.

உங்கள் விஷயத்தில், உங்கள் தந்தையின் கட்டாயத்திற்காக வேறு வழியின்றி உங்களை சிறையில் வந்து சிலர் பார்த்திருக்கக் கூடும்.  ஆனால் உண்மையில் நீங்கள் சிறையில் இருப்பதற்காக வருத்தப் பட்டவர்கள் யார் என்பதை புத்திசாலிப் பெண்ணான நீங்கள் கண்டு பிடித்திருப்பீர்கள்.

2ஜி விஷயத்தில் உங்களை விட தப்பு செய்தவர்கள் வெளியில் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.  ஆனாலும் 2ஜி விவகாரத்தில் உங்களுக்குப் பங்கே இல்லை என்பதை ஏற்க முடியாது.   அந்த 200 கோடிப் பணத்தை நீங்கள் வாங்கவில்லை என்பதையும், அது லஞ்சப் பணம் என்பதையும், சிபிஐ நீதிமன்றத்தில் நிரூபிக்கத் தவறலாம்.    ஆனாலும் உண்மை என்ன என்பதை உங்கள் மனசாட்சி அறியும்.   உங்களை நீங்களே எந்தக் காலத்திலும் ஏமாற்ற முடியாது.

எம்.பி பதவிக்கு வருவதற்கு முன்பெல்லாம், உங்களை மிக மிக நல்ல மனிதர் என்றே சொல்லுகிறார்கள், உங்களோடு பழகியவர்கள்.  பத்திரிக்கையாளர் நண்பர்களிடம் பேசிய போது, உங்களை ஒரு அறிவுஜீவித் தளத்திலேயே வைத்துப் பார்க்கிறர்கள்.   ஒரு பத்திரிக்கையாளர் உங்களை ஒரு முற்போக்குச் சிந்தனையாளர் என்று குறிப்பிட்டார்.

சவுக்குக்கு உங்களைப் பற்றி முதலில் கேள்விப் பட்ட சம்பவம் உங்கள் முதல் கவிதைத் தொகுதி வெளியீட்டின் போது.  உங்கள் கவிதைத் தொகுப்பு வெளியிடப் பட்டவுடன், சவுக்கு மதிக்கக் கூடிய தமிழாசிரியர் ஒருவர், அதைப் படித்து விட்டு, கருணாநிதி மகள் என்பதற்காக அல்லாமல், தனிப்பட்ட முறையிலேயே ஒரு நல்ல கவிஞராக வரக் கூடியவர் என்ற குறிப்பிட்ட போது உங்கள் மீது நல்ல மரியாதை ஏற்பட்டது.  கருணாநிதியின் கலை உலக வாரிசாக முயற்சித்து, உங்கள் அண்ணன் மு.க.ஸ்டாலின், குறிஞ்சி மலர் கதாநாயகன் அரவிந்தனாக தொலைக் காட்சித் தொடரில் நடித்து வெற்றி பெற முடியாமல் போனதெல்லாம் உங்களுக்குத் தெரியும்.

இரண்டாம் தாரத்து வாரிசுகளுக்கு எப்போதுமே இரண்டாம் இடம்தான்.  முதல் தாரத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் தாரத்து வாரிசுகளை, சொத்தில் தேவைப்படாத ஒரு பங்கு என்றே பார்ப்பார்கள்.  பெரிய இடத்துக் குடும்பமான உங்கள் குடும்பத்தில் இந்தப் பகையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.  அண்ணாமலை ரஜினிகாந்த் போல உங்கள் குடும்பம் குறுகிய காலத்தில் பெரும் செல்வந்தக் குடும்பம் ஆனது.   இதனால் உங்கள் மீதான வெறுப்பு முதல் குடும்பத்திடம் அதிகமாகவே ஆகியிருந்திருக்கும்.  ஆனாலும், உங்கள் தந்தை கருணாநிதி உங்கள் மீது வைத்திருந்த பாசம், உங்களை இத்தனை நாட்களும் நம்பிக்கை இழக்காமல் வளர வைத்தது.
 kanimozhi-8
இரண்டாம் தாரத்துப் பிள்ளை என்பதால், நீங்களும் அரசியலில் பெரிய அளவில் இறங்காமல், நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்றுதான் இருந்து வந்தீர்கள்.

ஆரம்பகாலத்தில் உங்களோடு பழகியவர்கள் உங்களை மிகச் சிறந்த பெண்ணியவாதி என்று குறிப்பிட்டதைக் கூறுகிறார்கள்.  2002ம் ஆண்டில் குஜராத் கலவரம் மிகப் பெரிய அதிர்ச்சியை நாடெங்கும் ஏற்படுத்தியது.    நான்கு பண்டாரங்கள் சேர்ந்து தொடங்கிய கட்சி என்று பிஜேபியை விமர்சித்த உங்கள் தந்தை பின்னாளில் அக்கட்சியோடு கூட்டு சேர்ந்து அப்போது மத்திய பிஜேபி அரசில் அங்கம் வகித்துக் கொண்டிருந்தார். அப்போது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்று ஞாபகம்.  அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டம், சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெற்றது. அப்போது அந்த அரங்கில் பேசிய பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலன், உங்கள் தந்தையை பிடி பிடியென பிடித்தார்.   நாடே பதை பதைக்கும் அளவுக்கு நடந்திருக்கும் ஒரு கலவரத்தை “அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை” என்று வர்ணிக்கும் ஒரு தலைவர் எப்படி தன்னை சுயமரியாதைக் கட்சியின் தலைவன் என்று அழைத்துக்கொள்ள முடியும்.  இவர் என்ன பகுத்தறிவு வாதி என்றே வெளிப்படையாக உங்களை மேடையில் வைத்துக் கொண்டே பேசினார்.  அவருடைய கருத்தில் உடன்பாடு உள்ளதோ என்று தோன்றுவது போலவே, நீங்கள் ஒரு சுயமரியாதைக் கட்சியின் தலைவர் எப்படிப் பேசுவாரோ அப்படியே பேசினீர்கள்.  உங்கள் தந்தையைப் பற்றி டி.என்.கோபாலன் பேசியதை நீங்கள் பொருட்படுத்தவில்லை.  ஒரு கை தேர்ந்த மேடைப் பேச்சாளருக்கு உள்ள சொல் அலங்காரம் இல்லாமல், உணர்வோடு நீங்கள் பேசியதைக் காண முடிந்தது. அப்போது உங்கள் மீதான மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் நீங்கள் ஒரு ஆட்டோவில் சென்றதாக நினைவு.

உங்கள் முதல் திருமண வாழ்வில் உங்களுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சி இல்லாததோடு மட்டுமல்லாமல், கடும் சித்திரவதைகளையும் அனுபவித் திருக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள்.  ஒரு முதலமைச்சர் மகளையே சித்திரவதை செய்கிறேன் பார் என்ற வெற்று ஈகோவுக்காகவே நீங்கள் வதைக்கப் பட்டீர்கள் என்று சொல்கிறார்கள்.

இன்று திராவிட இயக்கத்தின் மூத்த முதுபெரும் தலைவராக உருவெடுத்திருக்கும், தமிழ்த் தாய் குஷ்பூ “கற்பு” கட்டுரையால் சர்ச்சையில் சிக்கிய போது உங்கள் தந்தை உங்களுக்கு நேர்மாறான நிலைபாடு எடுத்தார் என்பதை நீங்கள் மறந்திருக்க முடியாது.  குஷ்பூ பேசியதை வெளிப்படையாக எதிர்க்காவிட்டாலும், மறைமுகமாக அதை கடுமையாக எதிர்த்தார்.   இந்த நிலைபாட்டை எதிர்த்து நீங்கள் ஆனந்த விகடனில் தந்தையோடு இதனால் மனக்கசப்பு என்று பேட்டியே கொடுத்தீர்கள்.   நீங்கள் வெளிப்படையாகவே குஷ்பூவை ஆதரித்தீர்கள்.   இதே கருணாநிதி, குஷ்பூ கட்சியில் சேரும்போது குஷ்பூ கருத்தை ஆதரித்து சங்க இலக்கியத்திலே “களவொழுக்கம்” என்ற பிரிவே உண்டு என்று பசப்பியது வேறு விஷயம்.
 DSC_0235
அந்த நேரத்தில் உங்கள் தந்தை உங்களோடு பேசாவிட்டாலும் கூட பரவாயில்லை என்று தெளிவாக கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தவர் நீங்கள்.  உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளாமல், உங்கள் தந்தையே உங்களிடம் வந்து பேசியவுடன் தான் நீங்கள் பேசினீர்கள். அதையொட்டித் தொடங்கப் பட்டதுதானே கருத்து என்ற இணையதளம் ?
 23
பத்திரிக்கையாளர்கள் மத்தியில் உங்களுக்கு மிக நல்ல பெயர் இருக்கிறது.  நல்ல பத்திரிக்கையாளர்கள் மத்தியில்.  இன்று உங்களுக்கு நண்பராக இருக்கும் இரா.சரவணன் அல்ல.  மிக மிக தன்நம்பிக்கை உடைய பெண் என்றே உங்களை வர்ணிக்கிறார்கள்.

உங்களின் சரிவு தொடங்கியதே இந்த 2ஜி விவகாரத்தால் தான் என்பதை நீங்கள் சற்றே யோசித்துப் பார்த்தீர்களென்றால் தெரியும். அது வரை அமைதியாக நதியினில் ஓடமாகத்தான் போய்க் கொண்டிருந்தது உங்கள் வாழ்க்கை.  2ஜியில் வந்த பணம் உங்கள் வாழ்க்கையை புயலில் சிக்கிய தோணியாக மாற்றிப் போட்டு விட்டது.

2004 பொதுத் தேர்தலின் போதே உங்களுக்கு எம்.பியாக போட்டியிட வாய்ப்பு வந்தது. ஆனால் ஏற்கனவே குறிப்பிட்டது போல உங்கள் இயல்பு உங்களை அரசியலையும், பதவியையும் உதாசீனப் படுத்த வைத்தது.

16 மே 2007ல் ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகிறார்.  அவர் அமைச்சரான மறுநாளே ஒரு பெரும் தொகையை கருணாநிதியிடம் கொண்டு வந்து கொடுத்தாக டெல்லி வட்டாரங்களிலும், சென்னையிலும் சொல்லப் படும் தகவல்.  உங்கள் குடும்பத்தை சாராதவராக இருப்பதால், தன்னுடைய அமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ள ராசா உங்களையும், உங்கள் குடும்பத்தையும் நம்புகிறார். ராசா கொண்டு வந்து கொடுத்த பணத்தைப் பார்த்த உங்கள் தாயாரின் பேராசை கொழுந்து விட்டு எரிகிறது.    ராசாவே இவ்வளவு சம்பாதிக்கிறார் என்றால், நம்முடைய பெண் அமைச்சரானால் எவ்வளவு சம்பாதிப்பார் என்ற மனக்கணக்கோடு, உங்களை எம்.பியாக்க வேண்டும் என்று உங்கள் தந்தையை நிர்பந்திக்கிறார்.  உங்கள் தந்தையும் வேறு வழியின்றி, உங்களை ஜுலை 2007ல் பாராளுமன்ற உறுப்பினர் ஆக்குகிறார்.  திமுகவே உங்கள்  குடும்ப சொத்துதானே… உங்களைத் தவிர வேறு யார் வர முடியும் ?

இதன் பிறகுதான் கனிமொழி உங்களிடத்தில் ஒரு அசுரத்தனமான மாற்றம்.   இத்தனை மென்மைத் தன்மையாடு இருந்த நீங்கள் உங்களின் மறுபக்கத்தைக் காட்டுகிறீர்கள்.   நீங்களா இது என்று உங்களோடு நெருக்கமான நட்போடு இருந்த இலக்கியவாதிகளும், நல்ல நண்பர்களும் விலகி ஓடுகின்றனர்.  கொள்ளையடிப்பதையே நோக்கமாகக் கொண்ட கொள்ளைக் காரர்கள் உங்களோடு நெருக்கமாகிறார்கள்.   அப்படி உங்களோடு நெருக்கமானவர்கள் தான் போலிப் பாதிரி ஜெகத் கஸ்பர், ஜாபர் சேட், ரவிக்குமார் போன்றவர்கள் எல்லாம்.
 A4
இவர்களோடு சேர்ந்து நீங்கள் நடத்திய சென்னை சங்கமம் நிகழ்ச்சியைப் பார்த்து எரிச்சலடைந்தவர்களே அதிகம்.  அதுவும் அந்தப் போலிப் பாதிரியை அருகில் வைத்துக் கொண்டு நீங்கள் அரசு அதிகாரத்தை தாறுமறாக துஷ்பிரயோகம் செய்தது பலருக்கும் உங்கள் மீது வெறுப்பையே ஏற்படுத்தியது.

ஒரு எம்.பி. பதவியைக் கூட வேண்டாம் என்று புறந்தள்ளிய நீங்கள், 2009 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நீரா ராடியாவோடு உரையாடியதைக் கேட்டவர்கள் அதிர்ந்து போனார்கள். இப்படிப் பட்ட பதவி வெறி பிடித்த பெண்ணா இந்தக் கனிமொழி என்று.  அரசியலே வேண்டாம் என்று விலகி இருந்த உங்களை ஒரு தரகரோடு திரை மறைவு பேரங்கள் நடத்த வைத்தது எது  என்பது உங்களோடு பழகியவர்கள் அனைவருக்குமே புரியாத புதிராக இருந்தது.
DownloadNamePlaySizeLength
downloadKanni--15-188819-0-09-20090522-144615
1.7 MB3:43 min
downloadKanni--17-188819-0-09-20090522-200419
1.8 MB3:58 min
downloadKanni--22-188819-0-11-20090524-092731
1.5 MB3:13 min
downloadKanni--32-188819-0-20-20090522-224116
4 MB8:40 min
downloadKanni--34-188819-0-21-20090522-111541
1.1 MB2:29 min
downloadKanni--46-188819-0-26-20090522-104506
1 MB2:14 min
downloadKanni-37-188819-0-22-20090523-095902
3.4 MB7:26 min
Joomla! web design... 
இத்தனை பேரங்களை நீங்கள் நடத்தினாலும், சமுதாயத்தைப் போலவே அரசியலிலும் பெண் வெற்றி பெறுவது எளிதானது அல்ல என்பதையே உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காதது காட்டியது.

குஷ்பூ குறித்த சர்ச்சை வந்த போது வெளிப்படையாக உங்கள் தந்தையையே எதிர்க்கத் துணிந்த நீங்கள், ஈழப் போர் உச்சக் கட்டத்தில் இருந்த போது உங்கள் தந்தையோடு சேர்ந்து நடத்திய நாடகம், உங்களை ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியாக, மாற்றியது.    உங்கள் தந்தை நடத்திய எம்.பி.பதவி ராஜினாமா நாடகத்தின் போது முதல் ஆளாக ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பாமல், உங்கள் தந்தையிடம் அளித்து விட்டு நல்ல பிள்ளை போல கை கட்டி இருந்தீர்கள்.

இது மக்களிடத்தில் உங்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச அபிப்பிராயத்தையும் அடியோடு நீக்கியது.  வெள்ளைக் கொடியோடு நடேசன் சென்ற போது அவர் கொல்லப் பட்டதன் பின்னணியில் உங்கள் பங்கு என்ன என்பது நன்கு தெரிந்தாலும், இப்போது அதைச் சொல்ல விரும்பவில்லை.

இதற்குப் பிறகு, சென்னை சங்கமம் நடத்திய போது மக்களுக்கு உங்கள் மேல் கோபம் தான் வந்தது. அதை நீங்கள் உணரத் தவறினீர்கள்.   அப்போது உங்களுக்கு நெருக்கமாக இருந்த போலிப் பாதிரியும், ஜாபர் சேட்டும், உங்களுக்கு தைரியம் கொடுத்து, உங்களின் மெல்லிய உணர்வுகளையெல்லாம் பட்டுப் போக வைத்து உங்களை முழு நேர அரசியல்வாதியாக்கினார்கள்.
 Kanimozhi_20110507
2ஜி விவகாரம் முழுமையாக வெளியான போது, நீங்கள் கைது செய்யப் படுவீர்களா இல்லையா என்று சர்ச்சைகள் எழுந்த போது, பெரும்பாலான கருத்து நீங்கள் சிறை செல்ல வேண்டும் என்பதுதான்.   நீங்கள் சிறைக்கு சென்ற போது, எத்தனை பேர் அகமகிழ்ந்தார்கள் தெரியுமா ?  இந்த மகிழ்ச்சிக்கு காரணம் உங்களின் கடந்த கால நடவடிக்கைகள் தான்.  இறுதியாகக் கூட, கைது செய்வதற்கு முன்பாக, மீனவர்கள் கொல்லப் பட்ட செய்தி கேட்டு, நீங்களே ஒரு போராட்டத்தை அறிவித்து, உங்கள் தந்தையின் காவல்துறையை வைத்து கைது செய்யப் பட்டு, பி.எஸ் உயர்நிலைப் பள்ளியில் ஒரு நாள் இருந்து, கனிமொழி கைது, கனிமொழி கைது என்று நீங்களே செய்தியைப் பரப்பினீர்களே…. நினைவிருக்கிறதா ?    அது போன்ற நடவடிக்கைகள் உங்கள் மீதான வெறுப்பை அதிகரித்தது.

சரி பழசையெல்லாம் விடுவோம்.   இனி நீங்கள்  விரும்பாவிட்டாலும் அரசியலை விட முடியாது.  அப்படி ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளீர்கள்.   2ஜி வழக்கு விசாரணை எப்படிப் போகிறதோ அப்படிப் போகட்டும்.  நீங்கள் இனி செய்ய வேண்டியதெல்லாம் உங்களை கட்சியில் பலப்படுத்திக் கொள்வதுதான்.  கட்சியில் உங்கள் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடுபவர்கள் உங்கள் சகோதரர்களும், உறவினர்களும் தானே தவிர, வேறு யாரும் அல்ல.  கட்சியின் மூத்த தலைவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்றே தோன்றுகிறது.

உங்கள் தந்தை சொன்னாரே… கூடா நட்பு என்று.  ஜெகத் கஸ்பர், ஜாபர் சேட், இரா.சரவணன் போன்ற கூடா நட்பை விட்டு ஒழியுங்கள்.  நாளை நீங்கள் சென்னை வந்தவுடன், இரா.சரவணனும், ஜாபர் சேட்டும், ஜுனியர் விகடனில் தொடர்ந்து செய்தி வருவதற்கு நாங்கள் தான் காரணம் என்று சொல்லக் கூடும்.  ஆனால், இந்த ஜாபர் சேட்டால் தான் இன்று திமுகவே நிலைகுலைந்து போய் உள்ளது என்பது மற்ற யாரையும் விட உங்களுக்கு நன்கு தெரியும்.

உங்களோடு நண்பர்களாக இருந்தவர்களை தேடிப் போய் சந்தியுங்கள். பழைய நட்பு வட்டாரத்தை புதுப்பியுங்கள்.  கட்சியின் தொண்டர்களை சந்தியுங்கள்.  இன்றுதான் புதிதாக அரசியலில் இறங்குவதாக நினைத்துக் கொள்ளுங்கள்.  நேற்று நீங்கள் கைது செய்யப் படும் வரை ஆரவாரமாக ஆர்ப்பரித்து கவர் ஸ்டோரி வெளியிட்ட இதழ்கள் உங்களுக்கு இன்று கொடுக்கும் ஆதரவை நம்பி விடாதீர்கள்.   அதே இதழ்கள் உங்கள் சகோதரரோடு சேர்ந்து உங்களை கவிழ்க்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடும்.  அவற்றை நம்பாதீர்கள்.  உங்களின் உண்மையான பலம் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவதுதான்.
 3854625319_2bd6942499_b
உங்கள் அரசியல் வளர்ச்சிக்கு ஜெயலலிதாவின் ஆட்சி நிச்சயம் உதவி செய்யும்.

ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்தது என்ன என்று உங்களிடம் ஒரு பேட்டியில் கேட்ட போது, “அவரது துணிச்சல்” என்று சொன்னீர்கள்.  அந்தத் துணிச்சல் உங்களுக்கு நிச்சயம் வேண்டும்.

வாழ்த்துக்கள்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...