மதிப்பிற்குரிய நரேந்திர மோடி, பிஜேபியின் தலைவர் அமித்ஷா ,தமிழக பிஜேபியின் தலைவர் சகோதரி தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோர்களுக்கு ஜோதிமணியின் வணக்கம். நேற்றுமுதல் தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் உங்கள் ட்ரோல் படை (ஆபாசமாக ,பாலியல் ரீதியாக ,கொச்சையாக அவதூறு செய்தல்) என்னிடம் எவ்வளவு கண்ணியமாக நடந்துகொள்கிறார்கள் என்பதற்கு சில உதாரணங்களை கீழே கொடுத்துள்ளேன். பிஜேபியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தங்கள் சித்தாந்தத்தோடு முரண்படுபவர்கள் மாற்றுக்கருத்து உள்ளவர்கள்,இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை எனும் மகத்தான அடையாளத்தை தாங்கிப்பிடிப்பவர்களுக்கு எதிராக எப்படி ஆபாச ஆயுதங்களை ஏவுதல் , கொலை , அமில வீச்சு,பாலியல்வன்புணர்வு மிரட்டல் ஆகியவற்றின் மூலம் எதிர்கொள்கிறார்கள் என்று பிஜேபியின் முன்னாள் தொண்டரான சாத்வி கோஸ்லா அவர்கள் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டி இந்திய ,உலக ஊடகங்களில் வெளிவந்து இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. எனக்கு( பொதுவாழ்வில் போர்குணத்தோடு ஈடுபடும் பல பெண்களுக்கும்,ஆண்களுக்கும்) உங்கள் படையிடமிருந்து ஆபாச அவதூறுகள் ,அச்சுறுத்தல...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்