35 வயசுக்கு மேல இருக்கும் பெண்கள் தான் சமூக வளைதளங்களில் அதிகம் தப்பா விமர்ச்சிக்கபடறாங்க. 40 வயதைக்கடந்த பெண்கள் அனைவருமே காம பிடித்து அலையறது இல்லை.. அந்த வயதைக்கடந்தவர்களுக்கு உடலில் ஏற்படும் ஒருவித ஹார்மோன் கோளாறு. இதனை மெனோபாஸ் காலம் என்று சொல்வாங்க. நீங்க கூட நெட் ல சர்ச் பண்ணிப்பார்த்தா இதன் முழுவிவரம் தெரிஞ்சுக்கலாம்..
மெனோபாஸ் என்பது பெண்களுக்கு 50 வயதில் தான் ஆரம்பிக்குன்னு சொல்லுவாங்க. ஆனால் இன்றைய வாழ்க்கை சூழலில் பூப்பெய்தல் எப்படி சிறுவயதில் நடந்து விடுகிறதோ அதை போல மெனோபாஸ்ஸும் முந்திக்கொண்டு விடுகிறது.மாதவிடாய் முடியும் தருணத்தில் உடலில் பல மாறுதல்கள் நிகழும் மனரீதியாகவும் பல மாறுதல்கள் வரும். உண்மையில் இந்த நேரத்தில் sex feel சில பெண்களுக்கு கொஞ்சம் அதிகமா இருக்கும்.. அது இயற்கை.
இந்த மாற்றம் அவர்களுக்கு ஒரு வித குழப்பத்தையும், நல்ல குடும்ப பெண்களுக்கு குற்ற உணர்வையும் கொடுக்கும். இது ஒண்ணும் இப்போ மட்டும் நடக்கும் விஷயம் இல்ல நம்ம அம்மாக்களுக்கு இருந்தது தான். நல்லா யோசிச்சு பார்த்தா தெரியும் நம்ம அம்மாக்களே அர்த்தமில்லா கோபம், நியாபக மறதி, அர்த்தமில்லா அழுகை எல்லாம் செஞ்சிருப்பாங்க. ஹிஸ்டீரியா நோயாளி போல கத்தியிருப்பங்க ஒரு காலகட்டத்தில். இது எல்லாமே அந்த குற்ற உணர்வின் வெளிப்பாடு தான்.
ஆரம்பத்தில் இருந்தே நம்ம கலாச்சாரத்தில் பெண்கள் sex உணர்வு என்பது ஆணின் (புருஷனின்) தேவை ஒத்து தான் இருக்கணும்னு சொல்லி வளர்க்கப்படும் போது இந்த மாற்றங்கள் அவர்களுக்கு மனரீதியான அழுத்தத்தை கொடுக்கும். அதன் வெளிப்பாடு தான் இது. அந்த உணர்வை கட்டுப்படுத்த அப்பப்போ கோவில் குளம்ன்னு சுத்துவாங்க. அதனால் மன அழுத்தம் குறைஞ்சுடும். அவர்கள் பெரிசா அதனால எந்த பாதிப்பும் அடையல. ஆனால் இன்றய நிலைமை வேறுமாதிரி இருக்கு. இப்போது பெண்கள்ல எல்லாரும் படிச்சு அறிவாளிகளாக மாறிவருகின்றனர் ... இந்த 40 வயதைக்கடந்த சூழலை கடக்க சிலர் மைண்ட் டைவர்ஷன் ன்னு நல்ல இசை, புத்தகம் , மெடிடேசன்னு போறதும் எந்த பாதிப்பும் இல்லை.
ஆனா இப்போ..... சரி. தப்பை அப்பறம் பேசுவோம் சரிய இப்போ பேசுவோம். இந்த நிலையில் இருக்கும் பெண்களுக்கு முதலில் ஆறுதலும், அன்பும், அரவணைப்பும் தான் தேவை அதை கண்டிப்பா கொடுக்கவேண்டியது கணவன் குழந்தைகள் மற்றும் குடும்பம் தானே. ஆனா நடக்கிறது வேற.... அவர்களையும் தப்பு சொல்ல முடியல. அவர்கள் சூழல் அப்படி. உதாரணமா ஹஸ்பெண்ட்ஸ் பணத்தை தேடியும், புள்ளைகள் படிப்பை தேடியும் ஓடிடுராங்க. குடும்பப் பொருப்பினை கவனித்துக் கொண்டு வீட்டில் இருக்கும் போது தனிமை அவர்களை வதைக்க ஆரம்பிக்கின்றது. அங்க தான் பிரச்சனை ஆரம்பிக்கின்றது. தனிமை மட்டும் காரணம் இல்ல. உளவியல் ரீதியான காரணங்களும் இதுல இருக்கு. எப்படி வேணும்னாலும் வாழலாம்னு நினைக்கும் பெண்களை விட இப்படித் தான் வாழனும் இருக்கும் பெண்களை தான் இந்த தனிமையும், உடலில் ஏற்படும் ஹார்மோன், மெனோபாஸ் சார்ந்த பாதிப்புகளும் அதிகம் ஏற்படுது. தன்னுடைய மன அழுத்தத்தையும் உடல்ரீதியான பிரச்சனைகளையும் சந்திக்க முடியாமல் தவிக்கின்றனர்.
இந்த விஷயம். இந்த பதிவை எழுதி முதலில் மூன்று சகோதரர்களுக்கு தான் அனுப்பி கருத்தை கேட்டேன் ஒருவர் கூட முகம் சுழிக்கவில்லை மிகவும் அவசியமான பதிவுமா கண்டிப்பா பதிவிடுங்க ன்னு சொன்னாங்க. இதை படிக்கும் என் நட்பு வட்டத்தில் இருக்கும் ஆண் தோழர்கள் அவர்கள் மனைவியும் மாற்றங்களை புரிந்துகொண்டு அவர்களிடம் அன்போடும் அனுசரையோடும் நடந்துகொண்டால் அதுவே போதும். அன்பையும், அமைதியை தேடி அல்லல்படும் உயிர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.
.....Umayal
கருத்துகள்
கருத்துரையிடுக