பல பெண்களுக்கு ரகசிய ரோல் மாடல்,தனித்துவாழும்
பெண்களுக்கான நம்பிக்கைவிளக்கு ஜெயலலிதா
..அவருடைய கடந்தகால தருணங்கள் இதோ...
மிகச் சிறிய வயதில் அப்பாவை
இழந்தவர்...(2 வயதில்)..
அப்பாவின் இரண்டாம் தார மனைவியின் மகள்,,இளம்
பருவத்தில் அம்மாவை இழந்தவர்.நல்லது கெட்டது புரியத் தொடங்கும் நேரத்தில் தனது
குரு எம்.ஜீ.ஆரை இழந்தவர்.இந்த இழ்ப்பே அவரை சுயம்புவாக வார்பித்தது.நடனம் ,இசை.ஓவியம்,நடிப்பு
என தன்னைச் செதுக்கிக் கொண்டார்.ஓய்வு
நேரங்கள் அனைத்திலும் உள்ளூர் இலக்கியம் முதல் வரலாறு வரை படித்தார்.
படப்பிடிப்பில் சிறிதளவு இடைவெளை கிடைத்தாலும் புத்தகத்துடன்
உட்கார்ந்திருப்பார்.வீட்டில் பெரிய நூலகமே வைத்திருந்தார்.யாரைப் பார்த்தாலும்
புத்தகங்கள் பற்றி பேசுவார்.ஆங்கிலத்தில் கவிதை எழுதினார், தமிழில்
கவிதைகள் எழுதினார். அந்த தனிமையை,தனது அறிவு,ஆளுமைச் செழுமையாக மாற்றினார்.அவர் தன்
ஜெயலலிதா.
"அம்மா சம்பாதித்ததை எல்லாம் சேர்ந்து
வைத்திருந்தால் நான் சினிமாவுக்கே வந்திருக்க வேண்டாம்.என்னை நல்லா படிக்க வெச்சு 18,19
வயசுல கல்யாணம் பண்ணிக் கொடுத்து,நாலு குழந்தைகளுக்கு தாயாகி இருப்பேன்.வாழ்க்கையில்
இவ்வளவு மேடு பள்ளங்கள் இருந்திருக்காது.வாழ்க்கை ரொம்ப ஸ்மூத்தாக
போயிருக்கும்" என்று தனது சினிமா வாழ்க்கையின்போது வருத்தப்பட்டுச் சொன்னார்
ஜெயலலிதா.
பாலா என்ற நிருபர்,தனது
திருமணப் பத்திரிக்கையை ஜெயலலிதாவிடம் தருகிறார்."நீங்க எல்லாம் லக்கி
பாலா..கல்யாணம் குடும்பம்னு செட்டில் ஆகுறிங்க!" என்று சொன்ன தொனியில் ஜெயலலிதாவின் வலி தெரிகிறது"
எப்ப உங்க கல்யாணம்? என்று
கேட்கிறார்கள்..இதெல்லாம் நம்ம கையிலயா இருக்கு?" என்று விரக்தி காட்டி இருக்கிறார்.
அரசியல் வெற்றிகளுக்குப் பிறகும் இதே
போன்ற கேள்வி கேட்கப்பட்டது.உங்களது அரசியல் வெற்றிகளை அருகில் இருந்து பார்க்க
உங்களது தாய் இல்லையே ?" என்று வருத்தப்படுகிறீர்களா? என்றபோது
, அம்மா இருந்திருந்தால் இந்த கேள்விக்கே இடம்
இருந்திருக்காது.ஏனென்றால் என்னை அவர் அரசியலில் நுழைய அனுமதிருக்க
மாட்டார்"என்று பதில் அளித்தார்.
கவர்ச்சிகரமான சினிமா உலகமும்,அதிகரமயமான
அரசியல் களமும் தனது மனதுக்குப் பிடித்தது இல்லை என்பதை எப்பொழுதும்
வெளிக்காட்டியே வந்தார் ஜெயலலிதா.ஆனால் ,மனதளவில் ஒதுங்கியே இருந்தார்.அவர்தான்
ஜெயலலிதா.
ஜனநாயகத்தைப் பற்றி எல்லோரும்
பேசுகிறார்கள்.ஆனால் நமது நாட்டில் பெண்களுக்கு வீட்டில் ஜனநாயக உரிமை
இல்லை.பெண்ணுக்கு திருமணமாகும் வரை தான் சுதந்திரம்.திருமணமாகி விட்டால் சுதந்திரத்தை இழந்துவிடுகிறார்கள்.இந்திய
அரசியல் சட்டத்தில் பல்வேறு சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால் வீட்டில்
ஆண்களுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டியிருக்கிறது என்று ஒரு திருமண விழாவில்
எம்ஜீஆரின் முன்னிலையில் துணிச்சலாக பேசினார் ஜெயலலிதா.
தனக்கு பிடிக்காததை எம்ஜீரை சொன்னாலும்
ஏன்..தன் அம்மாவே செய்தாலும் அதனை துணிச்சலுடன் எதிர்த்தவர்
ஜெயலலிதா.புரட்சித்தலைவர் என் மீது மிகவும் அன்பு காட்டுபவர்.என் தாயார் மறைந்த
பிறகு எனக்கு எல்லாமே அவர்தான்.தாய் தந்தை குரு நண்பர் தத்துவாதி,வழிகாட்டி
எல்லாம் அவர்தான்,என் மீது அவருக்கு கரிசனம் இருந்தது.அவர்மீது
எனக்கு அனுதாபம் இருந்தது.ஏனென்றால் அவரும் வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட்டு
முன்னேறியவர்.ஒரு காலகட்டத்தில் நானே அவர் படங்களை தவிர மற்றவற்றில் நடிப்பதை
நிறுத்திக் கொண்டேன்.என் வாழ்க்கையில் எனது தாயாரும் புரட்சிதலைவருமும்
செல்வாக்குச்செலுத்தியவர்கள்" என்று சொன்னவர் ஜெயலலிதா.
தனது வாழ்க்கையின் முதல் 20 ஆண்டுகள்
தாய் சந்தியாவின் கட்டுப்பாட்டில் வளந்தார்.அடித்த 20 ஆண்டுகள் எம்ஜீஆரின் கட்டுப்பாட்டில்
வளர்ந்தார்.அடுத்த 28 ஆண்டுகள் தனது வாழ்க்கையை தானே வாழ்ந்து மறைந்தார்.ஒரு வகையில் தனித்து விடப்பட்ட
வாழ்க்கைதான் அவருடையது.தனித்துவிடப்பட்டவர்கள் மகா கோழைகளாக இருப்பார்கள்.அல்லது
ஆதீத தைரியசாலிகளாக இருப்பார்கள்.ஜெயலலிதா இரண்டாவது ரகம்.
சினிமாவிலும் அரசியலிலும் ஆண்கள்படும்
துன்பத்திற்கும் பெண்கள் படும் துன்பத்திற்கும் மலையளவு வேறுபாடு உண்டு.இரண்டிலும்
ஆண் வளர நிறைய உழைக்க வேண்டும்.பெண் வளர கல்நெஞ்சம் வேண்டும்.இதற்கு ஜெயலலிதா
வாழ்க்கையிலேயே ஏராளமான உதாரணங்கள் உண்டு.
சொந்த குடும்பத்தில் உறவுகளில் நட்புகளில்
எதிர்க்கட்சிகளில்,சொந்தக் கட்சிகளில்.அவரால்
வளர்க்கப்பட்டவர்களில் அவரால் பணம் சாம்பாதித்தவர்களில் இருந்து வந்த பழிச்
சொற்களே,பல்லியைக் கண்டால் எனக்குப் பயம்"என்று
பேட்டி அளித்த ஜெயலலிதாவை சீறும் சிங்கமாக மாற்றியது.
தங்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய
நம்பிக்கை துரோகம் எது? என்று கேட்டபோது"ஒன்றா இரண்டா
வார்த்தைகளில் சொல்ல? என்று திருப்பிக் கேட்டவர் அவர்.பெண்ணாக
இருந்ததாலேயே இத்தனை துரோகங்கள் அடுத்தடுத்து அவருக்கு செய்யப்
பட்டன."பெண்ணாக பிறந்தது தவறு என்று நினைக்கிறீர்களா?" என்று
கேட்ட போது "இல்லை..இல்லவேஇல்லை" என்றும் துணிச்சலாகச் சொன்னவர் அவர்.
ஜெயலலிதாவை நேருக்கு நேர் நின்று
வெற்றி பெற முடியாதவர்கள்,அவரை அவமானப் படுத்துவதன் மூலமாக விரட்டிவிட
நினைத்தார்கள்." என்னை எப்படியும் அரசியலை விட்டு அப்புறப்படுத்துவதே எனது அரசியல்
எதிரிகள் நோக்கம்.தீராத மன உளைச்சல் தரும்போது நான் ஹைதராபாத் ஓடிவிடுவேன் அல்லது
அமெரிக்கா ஓடிவிடுவேன் என்று கனவு காண்கிறார்கள்.நான் எங்கும்
போகமாட்டேன்.இங்கேதான் இருப்பேன்" என்று சொன்ன துணிச்சல்காரன்.அவர்தான்
ஜெயலலிதா,
"தங்களுக்குப் பிடித்த பொன்மொழி எது? என்று
ஒரு முறை கேட்கப்பட்டபோது அப்பர் வாக்கை சொன்னார் ஜெயலலிதா.அது இதுதான்:
" அஞ்சுவது யாதொன்றுமில்லை
அஞ்ச வருவதுமில்லை!"
கருத்துகள்
கருத்துரையிடுக