சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு - தமிழில் : கே.வி.ஷைலஜா
போக புகலிடம் எதுவும் இல்லை. நாளை பற்றிய எந்த ஒரு திட்டமும் இல்லை. ஒரு வைராகியத்தில் பதினெட்டு வயதில் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். கவிதை ஒன்றே சொத்து அதை தவிர வேறு ஒன்றும் இல்லை. இயற்கை வாகனமான கால்கள் கொண்டே எங்கும் செல்கிறார். பசியில் வாடி வதங்கி போகிறார், சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று கிடைக்கும் இடத்தில் அள்ளி அள்ளி சாப்பிடுகிறார். கிடைக்காத நாட்களில் தண்ணீரே துணை என்று நடந்து கொண்டே இருக்கிறார். ஒரு தோசைக்காக ஐயரிடம் செவில் வீங்க அரை வாங்குகிறார். இப்படி பாலன் எதையும் மறைக்காமல் ஒப்புகொள்கிறார்.
சிதம்பர நினைவுகள் - கண்டிப்பாக படித்தே தீரவேண்டிய புத்தகங்களில் ஒன்று. படித்து பாருங்கள் நான் சொன்னதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று நீங்கள் உணருவீர்கள்.
நாற்பதாவது இயக்குனர்கள் விழாவில் பாலசந்தர் ரஜினியிடம் அவரின் சுயசாரிதம் எழுத சொல்லி கேட்டார். காந்தி போல தைரியம் இருந்தால் கண்டிப்பாக எழுதுவேன் என்று ரஜினி சொன்னார். இந்த புத்தகத்தை ரஜினி படித்து இருந்தால் கண்டிப்பாக காந்தி பெயருடன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் பெயரையும் இணைத்தே சொல்லி இருப்பார்.
என்ன மனுஷயா இந்த ஆளு, இப்படி எல்லாம் கூட இருந்து இருக்கானே என்று பல சமயம் பரிதாபப்பட தோன்றுகிறது சில சமயம் ச்சேய் இவன் எல்லாம் ஒரு மனுஷன என்று திட்டவும் தோன்றுகிறது.
சிதம்பரம் கோவிலில் இருந்து தொடங்குகிறது நினைவு குறிப்புக்கள். வாழ்வின் அத்தனை நல்லது கெட்டததையும் பார்த்து சிதம்பரம் கோவிலில் உயிரை விட வேண்டும் என்கிற வைராகியத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு வயதான தம்பதியரை சந்திக்கிறார். பிச்சைக்காரர் என்று முதலில் நாமும் நினைத்தாலும் அவர்கள் பின்னணியை பற்றி படிக்கும் போது எதற்கு இந்த மனித பிறவி என்கிற ஐயம் ஏற்படுகிறது.
போக புகலிடம் எதுவும் இல்லை. நாளை பற்றிய எந்த ஒரு திட்டமும் இல்லை. ஒரு வைராகியத்தில் பதினெட்டு வயதில் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். கவிதை ஒன்றே சொத்து அதை தவிர வேறு ஒன்றும் இல்லை. இயற்கை வாகனமான கால்கள் கொண்டே எங்கும் செல்கிறார். பசியில் வாடி வதங்கி போகிறார், சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று கிடைக்கும் இடத்தில் அள்ளி அள்ளி சாப்பிடுகிறார். கிடைக்காத நாட்களில் தண்ணீரே துணை என்று நடந்து கொண்டே இருக்கிறார். ஒரு தோசைக்காக ஐயரிடம் செவில் வீங்க அரை வாங்குகிறார். இப்படி பாலன் எதையும் மறைக்காமல் ஒப்புகொள்கிறார்.
அத்தியாயம் தொடங்கும் போது எல்லாம் நன்றாக இருக்கிறது முடியும் போது தான் மனுஷன் நம் மனசை நோக அடிச்சிடுறாரு. ஹாப்பி எண்டிங் என்று எதுவும் இல்லை பட் ஸ்டார்டிங் உண்டு.
முதல் குழந்தையை கருவிலே கொன்றுவிடும் அந்த அத்தியாயத்தை படிக்கும் போது ஏனோ கண்களில் இருந்து நீர் வருவதை நிறுத்தமுடியவில்லை. கவிதைகள் என்றால் தொலைதூரம் சென்றுவிடுவேன். ஆனால் இந்த அத்தியாத்தில் இடம் பெற்று இருக்கும் பிறக்காத போன என் மகனுக்காக என்கிற கவிதையை தாண்டி செல்ல மனம் வராமல் படித்தேன், எப்போது அடுத்த அத்தியாயம் சென்றேன் என்றே தெரியவில்லை. அவ்வளவு கனமான ஒரு படைப்பு.
நடிகர் திலகம் சிவாஜி அவர்களுடன் அருந்திய ஸ்காட்ச் பற்றி எழுதி இருக்கும் அத்தியாயம் கொஞ்சம் பிசிகினாலும் தண்ணி அடிக்க மட்டுமே சென்றதாக ஆகிவிடும். அப்படி இல்லாமல் மிக நேர்த்தியாக அந்த அத்தியாயத்தை கொண்டு சென்று இருந்தது அவ்வளவு அழகு. நடிகர் திலகத்தை வர்ணித்த விதம் அவரை ஆழ்ந்து ரசித்த ஒருவனால் மட்டுமே அவரின் நடை உடை பாவனைகளை வைத்த கண் வாங்காமல் அதற்கு அர்த்தம் சொல்லுவான். அந்த தீவிர ரசிகர் இவர்.
பாலன் அவர்களின் மனைவியை பற்றி சொல்லியே தீர வேண்டும். ஒரு வேசி பெண்ணை அவரின் வீட்டிற்கே அழைத்து வருவதும். இவர் பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் பெண்ணை ஜன்னல் வழியாக நோட்டம் விடுவதை பார்த்து சண்டையிடுவதை. வேறு வழியே இல்லாமல் கண்களில் கண்ணீருடன் ஆஸ்பத்திரி அறையினுள் செல்வதும். எதை நம்பி படிக்கும் போதே வீட்டின் எதிர்ப்பையும் மீறி கல்யாணம் செய்துகொண்டார் என்கிற கேள்வி எழுகிறது. கவிஞரின் மனைவியாக இருப்பது எவ்வளவு கொடுமையானது என்று அவர் வரும் சில அத்தியாயங்கள் நம்மை உணர செய்கிறது.
மொத்த 21 அத்தியாங்கள் உள்ள நினைவு குறிப்புகள் இதில் தொகுத்து உள்ளார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம், வேசியுடன் கடற்கரையில் கழித்த ஒரு இரவு, லைலாவுடன் அருந்திய ஜின், ஓணம் பண்டிகை அன்று பிச்சைகாரன் போல ஒரு வீட்டில் சாப்பிட்டது, கையில் காசு இல்லாமல் ரத்தத்தை விற்றது, ஊறுகாய் விற்க வந்த பெண்ணிடம் அடிவாங்கியது என்று தனது வாழ்வில் நடந்த சில சம்பவங்களை மறைக்காமல் சொல்லி இருக்கிறார்.

மிக இயல்பான நடையில் வாசிக்க வாசிக்க புத்தகத்தை கீழே வைக்க மனம் வராமல் அவரின் நினைவுகளில் அவருடன் நாமும் ஒரு நண்பனாய் சேர்ந்து கொண்டு அந்த நினைவுகளின் பின்னாலே பயணித்து கொண்டு இருக்கிறோம். தமிழில் மொழி பெயர்த்த
சிதம்பர நினைவுகள் - கண்டிப்பாக படித்தே தீரவேண்டிய புத்தகங்களில் ஒன்று. படித்து பாருங்கள் நான் சொன்னதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று நீங்கள் உணருவீர்கள்.
சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு - தமிழில் : கே.வி.ஷைலஜா
வம்சி பதிப்பகம்
விலை :- 100 ருபாய்
கருத்துகள்
கருத்துரையிடுக