முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

(பரத்தை கூற்றின் முன்னுரை)

பரத்தை கூற்று / சி.சரவணகார்த்திகேயன் / அகநாழிகை / விலை ரூ.50 
அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது அவனிடத்துத் தன்னைத் தானே ஒப்படைத்துக்கொள்கிறாளே அந்தச் சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது. சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் ஒருவனே இதைப் புரிந்து கொள்ளமுடியும். எது எப்படி இருப்பினும் ‘தேவடியாள்’ என்பதை ஒரு வசைச் சொல்லாகப் பயன்படுத்த நியாயமே இல்லை.
ஜி.நாகராஜன் (சதங்கை, ஏப்ரல் 1984)
கற்பு – அது மகாவார்த்தை
அதுவும் இந்த தேசத்தைப் பொறுத்த வரை அது ஒரு தர்மம் – ஒருதலைப்பட்சமான ஒரு கருத்துருவாக்கத்தை த‌ர்மம் என்ற‌ழைப்பதே முரண்நகை என்ற போதிலும். கற்புக்காக உயிரை விட்ட, ஊரை எரித்த பெண் பிம்பங்கள் வாழ்ந்த இதே மண்ணில்தான் ஒருவேளை சோற்றுக்காக பெண்கள் கற்பை விற்கும் அவலமும் நிகழ்கிறது. பார்க்கப் போனால் கற்பு என்பதே ஓர் ஆணாதிக்க நுண்ணரசியல் தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாய் பெண்களுக்கு எதிரான‌ அச்சித்தாந்தத்தை மிகுந்த பிரேமையுடன்‌ முன்னெடுத்துச் செல்வதே பெண்கள் தான் – கற்புக்கரசியாய்த் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் நம் வீட்டுப் பெண்கள்.
இரு உறுப்புக்களின் சில நிமிட உராய்வு எப்படி ஒருத்தியின் ஒழுக்கவியல் அந்தஸ்தைத் தீர்மானிக்கிறது என்பதை நினைக்க நினைக்க ஆச்சரியத்தின் சுகந்தமே தேங்கி நிற்கிறது. ஆந்த்ரபோலஜியின் அடிப்படையில் பார்த்தால், இன்னாரை இன்னார் மட்டுமே புணரலாம் என்கிற ஆதாரக் கோட்பாட்டுடன் நாகரிக மனிதன் தொடங்கி வைத்த நமது பாரம்பரிய குடும்ப அமைப்பு முறை தான் முதல் வேசி ஜனிக்க‌க் காரணமாய் இருந்திருக்கக் கூடிய ஆணி வேர் எனத் தோன்றுகிறது. இன்று சில்லாயிரமாண்டுப் பரிணாமத்திற்குப் பின் அது முகிழ்த்தெழுந்து கிளை பரப்பி மிகப் பிரம்மாண்ட‌மானதொரு விருட்சமாகியிருக்கிறது.
இன்று இது வெறும் தொழில் அல்ல; வர்த்தகம் – ஓராண்டில் உலகம் முழுக்க கிட்டத்தட்ட ஐந்து லட்சம் கோடி ரூபாய்கள் புர‌ளும் விஷயம். ஆனால் அதை நேரடியாய் முன்னின்று நிகழ்த்தும் தொழிற்காரிகளுக்கு உலகின் எந்த மூலையிலும் மதிப்பில்லை – இந்த வியாபாரத்தின் தாய்நாடாகக் கருதப்படும் தாய்லாந்தில் கூட. பெண் எனப்படுபவள் இங்கு தான் நிஜமாலுமே சுரண்டப்படுகிறாள் – தன்னைச் சுற்றி இயங்கும் போலீஸ்காரன், பத்திரிக்கை நிருபன், பாலியல் மருத்துவன், சாராயம் விற்பவன், அரசியல் செய்பவன், சினிமா எடுப்பவன், ஆன்மீகம் போதிப்பவன், ரவுடித்தனம் பண்ணுபவன், வியாபாரத்தில் பழுத்தவன், காசுக்கு வருபவன் என‌ப் பாரபட்சமின்றி எல்லோராலும் எப்போதும் எங்கும்.
இந்தியாவில் 28 லட்சம் பாலியல்தொழிலாளிகள் இருக்கிறார்கள் – இது மே 8, 2007 அன்று அப்போதைய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணையமைச்சராய் இருந்த ரேணுகா சௌத்ரி பாராளுமன்ற‌ லோக்சபாவில் அளித்த அதிகாரப்பூர்வத்தகவல். ஆனால் கிட்டதட்ட இதே காலகட்டத்தில் வெளியிடப்பட்ட‌ HUMAN RIGHTS WATCH என்ற சர்வதேசிய‌ அமைப்பின் ரிப்போர்ட் வேறு கணக்கை முன்வைக்கிற‌து. இந்தியாவில் 1½ கோடி பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக அது சொல்கிறது. அதாவது‌ இந்த தேசத்தின் மொத்த மக்கட்தொகையான 110 கோடியில் சரிபாதி 55 கோடி பேர் பெண்கள் என்று வைத்துக் கொண்டால், ந‌ம் கல்லூரியில், நம் அலுவலகத்தில், நம் வீட்டில் என நம்மைச் சுற்றியுள்ள, நாம் நன்கறிந்த‌ 36 பெண்களில் ஒருத்தி தன் பாலியலை ஏதேனும் ஒருவகைப் பொருளாதாரப் பண்டமாற்றில் விற்றுக்கொண்டிருகிறாள் என்று அர்த்தம்!
0
பாலியல் தொழிலாளி என்பது நாசூக்கு – தேவடியாள் என்பதில் தெறிக்கும் வேதனையும் கம்பீரமும் இதிலிருப்பதாக‌த் தோன்ற‌வில்லை. இன்றைய தேதியில் பொருளாதார, சமூக மற்றும் மத காரணிகள் தாம் விபச்சாரத்தை நோக்கி ஓர் இந்தியப் பெண்ணை இழுப்பவை. இதில் இடம், பொருள், ஏவலுக்கேற்ப‌ Streetwalkers, Brothels, Escorts என‌ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புத்தவதாரம் கொள்கிறாள் அவள். உடலே இதன் முதலீடு.
அதிலும் இளமையே பிரதானம் (“The profession of a prostitute is the only career in which the maximum income is paid to the newest apprentice” – William Booth). இதனாலேயே‌ உலகின் வறுமையண்டிய பிரதேசங்கள் பலவற்றிலும் பூப்படையாத‌ சிறுமிகள் அல்லது just now பூப்படைந்தவர்கள் கூட என்ன நடக்கிறது என்கிற‌ புரிதல் சிறிதுமற்று விபச்சாரத்தில் ஈடுபடத் தொடங்குகிறார்கள். இதில் ஒவ்வொருத்திக்கும் ஒரு கதை கவிதை காவியம் – இளமை வறுமை மட்டும் பொது. பெண்ணைப் பொதுவுடைமையாக்குகிற‌ புரட்சி இது!
“The world’s second oldest profession” என்ற புகழ் பெற்ற பிரயோகம் மூலம் அரசியல், உலோகவியல், யுத்தம், தத்துவம், உளவு, உழவு, கல்வி, கடவுள் என சில‌வற்றை உலகின் இரண்டாவது மிகப்புராதனமான தொழில் எனக்குறிக்கிறார்கள் – அதாவது இப்பயன்பாடு பிரபல்யமடைந்ததே மறைமுகமாக விபச்சாரத்தை முதலாவதெனக் குறிப்பதால் தான். பால் ரெனால்ட்ஸ் என்ற பிபிசி பத்திரிக்கையாளர் பைபிளின் பழைய ஏற்பாட்டிலிருந்து ஆதாரம் சொல்லி இதன் தொன்மத்தை நிறுவுகிறார் – ஆதாம் ஏவாள் காலத்துப் பழமை!
நமது பண்டைத் தமிழ்க் கலாசாரத்தில் பரம்பரையாகப் பொட்டுக் கட்டி இறைவனுக்கு நேர்ந்து விட்ட யுவதிகளை ‘தேவரடியாள்’ என்பர். இதே முறை சில‌ வித்தியாசங்களுடன் வட‌ இந்தியாவில் ‘தேவதாசி’ என்றழைக்க‌ப்படும். இன்னமும் மகாராஷ்ட்டிர‌ – கர்நாடக எல்லை மாவட்டங்களில் இம்முறை புழக்கத்தில் இருக்கிறது. சங்கப்பாடல்களில் வரும் பரத்தையும், சிலப்பதிகாரம் கூறும் மாதவியும் இவ்வினமே. இவர்கள் பிரதானமாக ஆடும் கலையையும், பின் நிதானமாகக்கூடும் கலையையும் கைகொண்டிருந்த‌தார்கள். ஒழுக்க விதிகளின் அழுத்தத்தினின்று ஆண் வர்க்கம் பிசகினால் கெடக் கூடிய‌ சமூக அமைதியை நிலைநிறுத்துவதற்குக்கட்டமைக்கப்பட்ட வடிகால்களாகவே இவர்கள்தென்படுகிறார்கள்.
இவர்களுக்கென்று ஊரில் தனி இடம் (தளிர்ச்சேரி என்பர்) இருந்திருக்கிறது. இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயில் கட்டிய போது சிற்பிகளுக்கும், பிறருக்கும் உற்சாகம் அளிக்கும் வகையில் 400 தேவரடியார்களை அனைத்து வசதிகளும் செய்து தந்து உடன் வைத்திருந்ததைப்பற்றியெல்லாம் படிக்கும் போது பொது மக்களுக்கும் இவர்களிடம் ஒரு வகையான கலவையான‌ மதிப்பும் மரியாதையும் இருந்திருப்பதாகவே தோன்றுகிற‌து.
பின் வந்த முகமதியர் படையெடுப்பு, ஆங்கிலேயர் ஆட்சி போன்ற பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களால் அதன் விளைவான கலாசார மாற்றங்களால் இந்த‌ இனம் சிதறிப் போயிருக்க வேண்டும். குறிப்பாய்க் கடைசி ஐந்து நூற்றாண்டுகளில் பிறப்பின் அடிப்படையில் மட்டுமல்லாது வறுமையின் காரணமாகவும் பெண்கள் வேசித் தொழில் புரியத்தலைப்படலாயினர். தேவரடியாள் இறந்தாள்; தேவடியாள் பிறந்தாள்.‌
0
தன் கணவனுடன் மட்டும் கூடி, அவனில்லாத போழ்து (அவனிருக்கும் போதும்!) மனதால் கூட பிற ஆடவனை நினையாத பதிவிரதைகளான உரைசால் பத்தினிகளை உயர்ந்தோர் ஏத்தினர். கதையில் இங்கு தான் சிக்கல் ஆரம்பம் – ஒன்றை ஏற்றினால் மற்றொன்றை இறக்கித்தானே ஆகவேண்டும். நேரெதிர்நிலையாக‌, வழி தேடியலையும் சுக்கிலத்துக்கும் வக்கிரத்துக்கும் கட்ட‌ணக்கழிப்பிடமாய், ஆண் அவ‌ஸ்தைக்கெனப் பிர‌த்யேகமாய்ப் புனையப்பட்ட‌ தூமைத்துணிக்கிழிசலாய் வாழ்ந்து கொண்டிருந்த‌ வேசியினம் இதற்கு இல‌க்கானது. பத்தினிகள் இன்பந்துய்க்கும் பொருட்டு அத்தினிகள் துன்பமேற்கலாயினர்.
ஒதுக்குதல் அல்லது ஒதுங்குதல் தான் ஆதாரப்பிரச்சனை.
மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் – நம்மிடையே ஆழப்பதிந்திருக்கும் வேசிகள் குறித்த கோபமும், வெறுப்பும் எவ்வளவு தூரம் நியாயமானது, எத்தனை சதவிகிதம் நிஜமானது. யோசித்துப்பார்த்தால் வேசி என தனித்து ஓரினமும் கிடையாது. நாம் ஒவ்வொருவருமே ஏதாவதொரு கணத்தில் விபச்சாரியாக‌ நடந்து கொள்கிறோம் – மனதாலும் உடலாலும். அதிலும் குறிப்பாய்ப் பெண்ணினம் ஆதிகாலந்தொட்டு ஆணைச் சார்ந்து வாழ நேர்வதால் தன் உடலையே மூலதனமாக்கி தான் விரும்பியதை சாதித்துக் கொள்ள முயல்கிறது. (“இழப்பதற்குப் பல்லிக்கு வாலும், பெண்ணுக்குக் கற்பும், மனிதனுக்குக் கொள்கையும், கடவுளுக்கு முகமூடியும் உண்டு” என்று ஒரு புளியமரத்தின் கதை நாவலில் சுந்தர ராமசாமி சொல்வதைக் கவனியுங்கள்). பரிணாமத்தின் ஓர் எளிய சமன்பாடு இது.
வேசியினம் தோன்றும் முன்பே வேசித்தனம் தோன்றி விட்டது என்ப‌து தெளிவு.
க்ளியோபாட்ரா முதல் மர்லின் மன்றோ வரை இதற்கு பல சர்வதேசிய‌ உதாரணங்கள் சொல்லலாம் (இவ்விடயத்தில் உள்நாட்டு சங்க‌திகளை எடுத்துக்காட்டுவது சரீரத்திற்கு அவ்வளவாய் உகந்ததில்லை என்பதாலும், name-dropping செய்வது நவீன‌ இலக்கிய‌‌ மோஸ்தர் என்பதாலும்). நாம் எல்லோரும் தேவையேற்படும் போது மட்டும் செய்யும் விஷயத்தை வேசிகள் தொழிலாகவே செய்கிறார்கள் என்பது தான் பிரதம‌ வித்தியாசம்.
நூற்றாண்டுகளாய் வையம் முழுக்க இது புரிந்து கொள்ளப்படவே இல்லை (அல்லது புரிந்து கொள்ள விரும்பவில்லை). வேசிகள் எதிலும் தவிர்க்கப்பட்டார்கள்; நஞ்செனத் தூற்றப்பட்டார்கள்; காறி உமிழப்பட்டார்கள். புணர்ச்சி தான் அவர்களுக்கு நாமளிக்கும் உச்சபட்ச மரியாதை. தீண்டலால் அவர்கள் அடையும்‌ தீண்டாமை இது. சட்ட‌ ரீதியாய் அவர்களுடைய களப்பணி அங்கீகரிக்கப்படாதிருப்பதால் நிகழும் பிறழ்வு. அவர்களுக்கு நேரும் அத்தனை அவமானங்களையும், துர்அனுபவங்களையும் அதன் நீட்சியாகவே கொள்ள வேண்டும். இந்தத் தொகுப்பின் நோக்கமே அல்லது தேவையே அங்கே தான் மையமிட்டிருக்கிறது – அதாவது விபச்சாரிகள் என்று சிலரை முத்திரை குத்தி, சமூக அந்தஸ்தை மறுத்து கீழானவர்களாக நடத்துவதை எதிர்க்கும் நோக்கிலான‌ அரசியல்.
ஒரு குற்றத்தை இரண்டு வழிகளில் அணுகலாம். முறையான சட்டங்களின் மூலமாக‌ யாருமே அதைச் செய்யாது கட்டுப்படுத்துவ‌து முதல் வழி. தடுக்க முடியாத அளவுக்கு கை மீறிப்போன விஷயமென்றால் எல்லோரும் அதைச்செய்ய அனுமதிக்கும் வகையில் சட்டப்பூர்வமாக்கி விடுவது மற்றொரு வழி. இந்த இரண்டாவதின் முக்கிய நோக்கமே அதைக் குற்றமில்லை என்று சொல்வதன் மூலமாக தொடர்புடைய உபகுற்றங்களைத் தடுப்பது தான். விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்குவதன் மூலமாக மட்டுமே அவர்களுக்கு உரிய பாதுகாப்பையும் ஒப்பீட்டளவில் ச‌ற்ற‌திக சமூக அந்தஸ்தையும் அளிக்க முடியும்.
நளினி ஜமீலா தனது ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை நூலில் சொல்வது போல் – “இங்கே விற்பனை செய்யப்படுவது அன்போ, காதலோ அல்ல. ஒரு நபருடன் குறிப்பிட்ட நேரத்தைச்செலவிட ஒரு சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான அப்போதைய மன அமைதியையும் பரிவையும் அளிக்கிறோம். இதை விற்பனை செய்யக் கூடாது என்று சொல்வதை விட தேவைப்படாதவர்கள் வாங்க வேண்டாம் என்று முடிவு செய்து கொள்வது தான் நல்லது”. இது மிக முக்கிய, முதிர்ச்சி வழி வந்த‌ ஒரு நிலைப்பாடு.
0
சங்க இலக்கியங்களின் புறத்திணைப்பாடல்களில் இன்னாரை இன்னார் பாடியது என்று பெயரோடு வெளிப்படையாகவும், அகத்திணைப்பாடல்களில் இன்னார் கூற்று என்று பெயர் தவிர்த்து பொதுப்படையாகவும் கூறுத‌ல் வழக்கம். இவற்றில் தலைவன் கூற்று, தலைவி கூற்று, தோழி கூற்று, செவிலி கூற்று, கண்டோர் கூற்று போன்றவற்றோடு பரத்தை கூற்றும் காணக்கிடைக்கிறது – ஒப்பீட்டளவில் மிகக்குறைந்த எண்ணிக்கையில்.
பரத்தை கூற்றாய் எட்டுத்தொகையுளடங்கும் சங்க இலக்கியங்களான அகநானூற்றிலும் குறுந்தொகையிலும் சில பாடல்கள் இருந்த போதிலும் அவை யாவும் மேலோட்டமாய் பேசிச் செல்லும், பூசி மெழுகப்பட்ட வகையறா. அந்தச் சிற்றினத்தின் (சிற்றின்ப இனத்தின் என்றும் கொள்ளலாம்) உணர்வுகளை வெளிப்படையாய் அவை முன்வைக்கவில்லை. வள்ளுவர் கூட திருக்குறளில் அயல் மகளிரை நாடுதல் பெரும்பாவம் என்பதான ஓழுக்கவியல் கோட்பாட்டைத் தான் நிறுவியிருக்கிறாரே ஒழிய (பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் / ஏதில் பிணந்தழீஇ அற்று) அப்பெண்களின் நிலையிலிருந்து ஏதும் பேசவில்லை.‌ இப்படித் தான் பன்னெடுங்காலம் பயணித்தோம்.
பின்பு நவீனத் தமிழிலக்கியத்தில் புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன், தஞ்சை பிரகாஷ், சாரு நிவேதிதா, புஷ்பா தங்கதுரை போன்றவர்களது படைப்புகளில் இது பற்றிய பதிவுகள் காணக் கிடைக்கின்றன. நவீனக் கவிதைகளில் தமிழ்நாடன் (காமரூபம்), மகுடேசுவரன் (காமக்கடும்புனல்), விக்ரமாதித்யன் (தேவதைகள் பெருந்தேவிகள் மோகினிப்பிசாசுகள்) , ஆண்டாள் பிரியதர்ஷினி (மன்மத எந்திரம்), வா.மு.கோமு (சொல்லக் கூசும் கவிதை) என நீளும் காலவரிசையிலான இப்பட்டியலின் வால்புறம் நிற்கிறதென் பரத்தை கூற்று.
இக்காப்பிய‌த்தில் பரத்தையே தலைவி.
களைத்துறங்குபவன் குறட்டையொலிக்கும், ஓயாது மனதிசைக்கும் சிருங்கார ஒலிக்கும் இடையே இழைக்கப்பட்டவை இக்கவிதைய‌னைத்தும். அழுக்காய் அசிங்கமாய் நாசி பெயர்த்தெறியும் துர்வீச்சத்துடன் இருக்கலாம் பிசுபிசுத்த‌ ஈரச்சீழ் வடிந்துலர்ந்த இந்த‌ யோனியெழுத்து – அது படிப்பவர் மனசு பொறுத்து. என் வரையில் குற்றவுணர்ச்சியோ பாசாங்கோ இல்லாததொரு நனிநெஞ்சம் மிக விரும்பும் இக்கவிதைகளை. அதே போல் இவற்றை நிராகரிக்கும் உரிமையும் தகுதியும் உண்டு உண்மையுணர்ந்த வேசிகளுக்கு.
கோயிலில் பூஜை செய்வதைப்போல், எல்லையில் யுத்தம் புரிவதைப்போல், உள்ளாடை ஏற்றுமதி செய்வதைப்போல், சாக்கடையில் மலம் அள்ளுவதைப்போல், ஐபிஎல் க்ரிகெட் விளையாடுவதைப்போல், உடம்பை விற்கும் விபச்சாரமும் மற்றுமொரு தொழில் தான் – நெல்முனையளவு கூட எந்த வித்தியாசமும் இல்லை, அதைச் செய்து பிழைக்கும் பெண் எந்த வகையிலும் தீங்கானவள் அல்ல என்ற சமூக உளவியலை ஏற்றவே இக்கவிதைகள் பிரயத்தனப்படுகின்றன – அவள் உடல் அல்லாது மனமே இதில் நிர்வாணப்பட்டிருக்கிறது.
இக்கவிதைகள் தீர்ப்போ தீர்வோ அல்ல. எது நிலையோ எது நிஜமோ அதைப் பற்றின‌ ஒரு புனிதம் கெடாத பகிரல் மட்டுமே. கோபமாக, விரக்தியாக, எள்ளலாக, புலம்பலாக, சோகமாக, சாபமாக எல்லாவற்றுக்கும் மேலாக உண்மையாக அவர்களின் உண‌ர்வுகளை அவர்களின் உணர்ச்சிகளை அவர்களின் பாஷையிலேயே எவ்வித‌ கவித்துவப்பூச்சுகளோ, படிமங்களின் பாசாங்கோ இன்றி‌ (கவிதைகளின் ஐந்திணைக் கருப்பொருள் பகுப்பும் கூட‌ loosely-coupled சமாச்சாரமே) அசலாய்ப் பதிவு செய்ய முயன்றிருக்கிறேன். மற்றபடி, வசன கவிதைகள் எழுதிப் படிப்பதால் எல்லாம் மாறிவிடப்போவதில்லை இந்தப் புராதனப் பேரினத்தின் சரித்திரமும் தரித்திரமும் – புன்னகை அல்லது கண்ணீர் கூடப்பயனில்லை.
தேவை புரிதல் – இந்த Vaginal Monologues யாசிப்பதெல்லாம் அதைத்தான்.
0
காமம் என்பதை வெறும் பெயர்ச்சொல்லாக‌வும் (அதுவும் தொழிற்பெயர்!), கொஞ்சம் கற்பனையாகவும் மட்டுமே ஸ்பரிசித்திருந்த ஓர் இருபத்தியொரு வயது இளைஞனால் இன்றிலிருந்து சரியாய் நான்கரை வருடங்களுக்கு முன்பு வேசியின் கவிதைகள் என்ற தலைப்பில் ஐந்நூறு சிறுகவிதைகள் ‌(மூன்று முதல் ஒன்பது அடிகளுள்அமைந்தமையால் சிறுகவிதை என்றழைக்க விரும்புகிறேன்) எழுதப்பட்டன – கிறுக்கப்பட்டன என்பதே சரி.
அந்தக் கவிதைகள் இவை; அந்த இளைஞன் நான்.
கடந்து போன சமீபங்களில், குறைந்தபட்சம் பத்து முறைகளேனும் அக்கவிதைகளைத் திருத்தியிருக்கிறேன்; பல்வேறு அடிப்படைகளில் சொல், பொருள், வரிசை எல்லாம் கலைத்துப் போட்டு மறுபடி சீராக்கியிருக்கிறேன்; ஓர் அறுவை சிகிச்சைக்கொப்பாக அவற்றின் உருவத்தை, உள்ளடக்கத்தை கூறாக்கிக் கூராக்கியிருக்கிறேன்; கிட்டதட்ட முக்கால்வாசிக்கும் மேல் பலவீனமானவை என்று நிராகரிக்கவும் செய்திருக்கிறேன். சில புதிதாகச் சேர்த்தவை. இறுதியில் மிஞ்சியவை தாம் இந்த நூற்றைம்பது பாக்கள்.
முதலில் இத்தொகுதிக்கு வைத்திருந்த தலைப்பான வேசியின் கவிதைகள் என்பது ஓர் ஆரம்பக்கல்விப் பாடப்புத்தகத்தனத்துடன் இருப்பதாகத்தோன்றியதாலும், அத்தலைப்பில் நவீனத்துவம் அல்லது பின்நவீனத்துவம் போன்றவை கிஞ்சித்தும் இல்லாதிருந்ததாலும்‌, அந்த லேபிளெல்லாம் இல்லாவிட்டால் தீவிர இலக்கிய வாசகர்கள் மட்டுமல்லாது புத்தக‌ விநியோகஸ்தர்கள், பழைய பேப்பர் வியாபாரிகள் கூட‌ பிரதியை நிராகரிக்கும் அபாயம் இருந்ததாலும் தொடர்புடைய‌ சிலபல பெயர்களைப்பரிசீலித்து (அவற்றில் ஒன்று யோனி; மற்றொன்று அதன் பிரபலமான‌ தமிழ்க்கொச்சை!) இறுதியில் தேர்ந்தது பரத்தை கூற்று.
யோனி என்று தலைப்பு யோசித்தது கூட‌ அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக (மட்டும்) அல்ல.அதை விடப்பொருத்தமாய் இதற்கு வேறொ‌ரு பெயர் இருக்க முடியாது என்பது என் அந்தரங்க நினைப்பு. மென்பொருள் துறையில் வேலை செய்பவர்களைப் பற்றிய ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கு கணிப்பொறி என்று பெயர் வைப்பதைப் போல், சாவு மேளம் அடிக்கும் சகோதரர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்ட ஒரு தடிமன் நாவலுக்கு பறை என்று பெயர் வைப்பதைப் போன்றதே இது. வேசித்தொழிலுக்கு யோனியே குறியீடு. அதைத் திரிதலின்றிப் புரிந்துணரும் பக்குவம் சமூகத்துக்கு வாய்க்க‌ இன்னுமொரு யுக‌ம் தேவை. காத்திருக்கும் பொறுமையில்லாததால் சிறிய ஏற்பாடாகத் தலைப்பை மாற்றினேன்.
அதே போல், புத்தகத்தின் அட்டைக்கு எம்.எஃப்.ஹுசைனின் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஓவியங்களைப் பயன்படுத்தலாம் என்கிற எண்ணத்தை நமது கலாசார காவலர்களின் மேலுள்ள அபிரிமித மரியாதையினால் கைவிட வேண்டியதாயிற்று. பதிலாய் தற்போது அட்டையிலிருப்பது 1907ல் பிக்காஸோவால் வரையப்பட்ட Les Demoiselles d’Avignon என்ற ஆயில் பெயிண்டிங். ஒரு விபச்சார விடுதியில் ஐந்து வேசிகளை காட்சிப்படுத்தும் இதற்கு ஆணாதிக்கம் முதல் காலனியாதிக்கம் வரை பல அர்த்தங்கள் சொல்கிறார்கள்.
இக்கவிதைகள் “Of the Prostitutes, By the Prostitutes, For the Prostitutes” என்ற போதிலும் இவையாவும் யான் கண்டு கேட்டு கற்றுயிர்த்தவையின் ஞாபகச்சில்லுகளே. மற்றப‌டி, வேசியைப் பற்றி எழுத உனக்கென்ன தகுதியிருக்கிறது, உனக்கு எப்படித் தெரியும் இதெல்லாம், நீ போயிருக்கிறாயா ஒருத்தியிடமாவது, குறைந்தபட்சம் சாவித்துவாரம் வழியாகவேனும் பார்த்திருக்கிறாயா போன்ற அறிவுஜீவிக் கேள்விகளையெல்லாம் எளிமையான ஒரு புன்னகையின் துணையோடு கடந்து போக உத்தேசித்திருக்கிறேன்.
இங்கே நான் நிறுத்துகிறேன் – இனி வேசிகள் பேசுவார்கள்.
(பரத்தை கூற்றின் முன்னுரை)

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...