முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐ.க்யூ அழகி விசாலினி


10 வது 12 ஆவது எல்லாம் படிக்காமலேயே கசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இஞ்சினீயரிங் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறார் விசாலினி. எதையும் சுலபமாக எடுத்துக்கொள்ளும் ஆபூர்வ ஆற்றல் உடைய இவரது ஐ.க்யூ 225

"ஏழு மாசத்துலேயே குறை பிரசவத்துல பிறந்தேனாம்,அதனால் குச்சி மாதிரி இருந்தேனாம்.இன்குபெட்டர்ல வச்சு எப்படியோ என்னைக் காப்பாத்திட்டாங்கா  சின்ன வயசுல  எதை பார்த்தாலும் கேள்வி கேட்பேனாம்.வயசுக்கு மீறின வளர்ச்சினு என் மூணு வயதில் 5 முறை ஐ க்யூ எடுத்தாங்க.அப்பதான் ஐ க்யூ லேவல் 225 இருப்பதை கண்டுபிடிச்சாங்க.

ஆல்பர்ட் ஐன்ஸ்டின் ஐ க்யூ 190
ஸ்டீபன் ஹாக்கிங் ஐ க்யூ 160
பில்கெட்ஸ் ஐ க்யூ 160

மூன்றரை வயசிக்கு இந்த ஐ க்யூ  ரொம்ப அதிகம்னு சொன்னாங்க‌
இந்த அறிவை ஆக்கத்துக்கும் பயன்படுத்தலாம் அழிவுக்கும் பயன்படுத்தலாம்.எல்லாம் உங்கள் வளர்ப்பில்தான் இருக்குனு சொல்ல அம்மா வேலையைவிட்டு என்னை கவனிப்பதில் முழு நேரத்தையும் செலவழிச்சாங்க.

ஒண்ணாவது இரண்டாவது ஒரு வருடத்தில் படித்து முடித்தேன். அப்படி ஆறாவது படித்து வர உங்க மக மத்த குழந்தைகளுடன் ஒப்பிடும்போது பல மடங்கு வேகமா படிக்கறா...ஸ்கூலுக்கு வேணாம்னு சொல்லி டிசி கொடுத்துட்டாங்க இதுனாலேயே ஆறாவது படிக்க்கும்போது நாலு ஸ்கூல் மாறியாச்சு.டீச்சர் கேட்டும் கேள்விக்கு
நான்கு சரியான பதில்கள் சொல்வேன்.
எப்படியோ ஒன்பதாவதை என் 8 வயசுலேயே வேகமாக படிச்சு முடிச்சுட்டேன்!

இன்சினியரிங் முடிச்சவங்க எழுதும் சிசிஎன்ஏ பாடங்களை நாலே மாத்ததில் படித்து என் பத்து வயசுலே தேர்வு எழுதி 90 சதவீத மதிப்பெண்கள் வாங்கினேன்.இது உலக சாதனைனு சொன்னாங்க" என்கிற விசாலினி அடுத்த ஓராண்டில் எழுதிய 12 தேர்வுகளில் ஐந்தில் உலக சாதனை
இந்த நேரத்துல ஐ ஒ பில..வங்கிகளை எப்படி டெவலப் பண்றதுனு ஒரு மணி நேரம் பேசினேன். அதை தொடர்ந்து பி ஹெச் டி மாதிரியான கம்ப்யூட்டர் கோர்ஸ் ஹரியானாவில் தங்கி படிக்கறதுக்கான வாய்ப்பு ஐ ஒ பி மூலமா கிடைச்சது.ரெண்டு வருசமா அம்மா என் கூட இருந்தாங்க,பிறகு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்கக் கூப்பிட்டாங்க.ஒரு வெளிநாட்டு கம்பெனி 153 கோடி ரூபாய்க்கு வேலைக்கு கூப்பிட்டாங்க.எங்க அப்பா "வேண்டாம்"னு சொல்லிட்டாங்க.
அப்புறம் கூகுள் நிறுவனம் நடத்திய சர்வதேச மாநாட்டில் "கூகுளின் இளவயது பேச்சாளர்" அங்கீகாரத்தை கொடுத்தாங்க. சரவதேச மாநாட்டில்" இளம் பேச்சாளர் பட்டம் கொடுத்தாங்க.போன வருசம் பிரதமர் மோடியுடன் பேசும் வாய்ப்பு கிடைச்சது.இந்த நாட்டுக்கு நான் எப்படி அறிவால் பெருமை சேர்ப்பது"னு கேட்டேன்."இந்த இளம் வயதில் நீ செய்துள்ள சாதனையே இந்திய நாட்டுக்கான சேவைதான்"னு பாராட்டினார்" என்று உற்சாகமாகிற விசாலினிக்கு ,தன் அறிவை என்றும் நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்படுத்த ஆசையாம்



கருத்துகள்