முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆக்ரமிப்பில் வேதா நிலையம் ?

போயஸ் தோட்டத்தில் உள்ள பெரிய கதவுகள் திறக்கின்றன.   பத்துக்கும் மேற்பட்ட அதிமுக கரை வேட்டி கட்டியவர்கள் நுழைகின்றனர்.   சசிகலா சோகம் ததும்பும் முகத்தோடு அவர்களை வரவேற்கிறார்.  வருகை தந்தவர்களில் பலர் காலில் விழுகின்றனர்.  காலில் விழுவதற்கு எந்த தடையும் சொல்லாமல் சசிகலா அவர்களின் வணக்கத்தை ஏற்றுக்கொள்கிறார்.      ஜெயலலிதாவின் காலில் அதிமுகவினர் விழுகையில் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தவரின் காலிலேயே பழக்கத்தை மாற்றாமல் அதிமுகவினர் விழுகின்றனர்.   நபர் மட்டும்தான் மாறியுள்ளார்.    காட்சிகள் மாறவில்லை.    கிட்டத்தட்ட ஒரு மகாராணி தர்பார் நடத்துகையில் தன் பிரஜைகளை சந்தித்து குறைகளைக் கேட்டறிபவர் போல இக்காட்சிகள் அரங்கேறுகின்றன.    ஆனால் தர்பார் நடத்தும் இடம் மகாராணிக்கு சொந்தமானது இல்லை என்பதுதான் கேலிக்கூத்து!
ammajayalalithaa
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும், அவரோடு மருத்துவமனையிலேயே தங்கியிருந்த சசிகலா, அந்த காலகட்டத்தில் ஓரிரு முறை மட்டும் போயஸ் கார்டன் சென்று வந்தார். மற்ற நாட்களில் மருத்துவமனையிலேயேதான்…    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவோடு, மன்னார்குடியின் மொத்த உறவுகளும் தற்போது வேதா நிலையத்தில் குடியேறி உள்ளனர்.
போயஸ் தோட்டத்து வீடு, ஆர்.சரளா என்பவரிடமிருந்து, ஜெயலலிதாவின் தாயார் சந்தியா தேவி மற்றும் ஜெயலலிதா சம பங்குதாரர்களாக இருந்த ‘நாட்டிய கலா நிகேதன்’ என்ற நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டது.    1971ம் ஆண்டு இறந்த சந்தியா தேவி, தன் மகள் ஜெயலலிதாவின் பெயருக்கு போயஸ் தோட்ட இல்லத்தை 1.11.1971 நாளிட்ட உயிலின் மூலம் எழுதி வைத்தார்.   அதன் பின்னர் தொடர்ந்து ஜெயலலிதா வசம் அந்த வீடு வந்தது.   ஜெயலலிதா அரசியலுக்கு நுழைந்தபின், அதிகாரத்தின் சின்னமாகவே அந்த வீடு மாறிப் போனது.    இப்படிப்பட்ட ஓர் அதிகாரத்தின் பீடத்தில்தான் சசிகலா தற்போது இருந்து வருகிறார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவரது சொத்துக்கள் யாரைச் சேரும் என்ற விவாதங்கள் ஊடகங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.    அவர் உயில் எழுதி வைத்துள்ளதாக இது வரை எந்தத் தகவலும் இல்லை.     இந்நிலையில், இந்த சொத்துக்கள் யாரைச் சேரும், சசிகலா போயஸ் தோட்ட இல்லத்தில் குடியிருக்க உரிமை உள்ளதா? என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் விசாரித்தோம்.    பெயர் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு விளக்கமாகவே பேசினார் அந்த வழக்கறிஞர்.
“ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.   அப்படி ஒரு உயில் இருந்தால், இந்த விஷயத்தில் விவாதிப்பதற்கு ஒன்றுமே இல்லை.     சென்னை மாநகரத்தைப் பொருத்தவரை, உயில் இருந்தாலும் கூட, அது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ‘ப்ரொபேட்’ செய்யப்பட வேண்டும்.  அப்படி செய்யாதவரை அந்த உயிலும் செல்லாது. ப்ரொபேட் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படுமேயானால், அவ்வாறு செய்யக்கூடாது என்று அந்த சொத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகவும் சட்டத்தில் இடமுள்ளது.
இடைத்தேர்தலில் பொதுச் செயலாளரின் சார்பில் கையெழுத்திட வேண்டிய இடத்தில் ஜெயலலிதாவின் விரல் ரேகை வைக்கப்பட்டே படிவம் பூர்த்தி செய்யப்பட்டது.  இப்படிப்பட்ட நிலையில் ஜெயலலிதா ஒரு விரிவான உயில் எழுதியிருப்பார் என்று நம்புவதற்கில்லை.   ஜெயலலிதாவுக்கு குழந்தைகள் இல்லாத பட்சத்தில் அந்த சொத்துக்கள் யாரைச் சேரும் என்ற கேள்வி எழுகிறது.   நேரடி வாரிசுகள் இல்லாத நிலையில், அந்த சொத்துக்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் தீபாவையே சேரும்.
போயஸ் தோட்ட வீடான வேதா நிலையம் ஒரு சாதாரண வீடல்ல.   முன்னாள் முதல்வரின் வீடு.   அதிகாரத்தின் சின்னம்.  அதை மற்ற சொத்துக்களைப் போல ஒரு சாதாரண சொத்தாக பார்க்க முடியாது.  இப்படிப்பட்ட ஒரு சொத்தை ஜெயலலிதாவின் வாரிசுகள் மட்டுமே அனுபவிக்க முடியும்.   ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, அவரோடு சசிகலாவோ அவரின் உறவினர்களோ தங்கியிருப்பதில் தடையேதும் கிடையாது.  ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவ்வாறு யாராவது தங்க விரும்பினால் ஒன்று அவர்கள் வாடகைதாரராக இருக்க வேண்டும்.  அல்லது குத்தகைக்கு வீட்டை எடுத்திருக்க வேண்டும்.  இல்லாவிடில் வீட்டின் உரிமையாளரின் அனுமதியோடு குடியிருக்க வேண்டும்.  இவை இல்லாத பட்சத்தில் சட்டவிரோதமாக வேதா நிலையத்தில் குடியிருப்பதாகத்தான் கருத வேண்டும்.
சசிகலா போயஸ் தோட்ட இல்லத்துக்கு எவ்விதமான வாடகையும் தருவதாகத் தெரியவில்லை. ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில் அவரின் அனுமதியையும் பெற்றிருக்க இயலாது.  அவர் ஜெயலலிதாவின் தோழி என்ற அந்தஸ்தில் நிச்சயமாக அந்த வீட்டில் குடியிருக்க இயலாது.
தொடர்ந்து அந்த வீட்டில் சசிகலா குடியிருக்க வேண்டுமானால், அந்த சொத்துக்கு சட்டவூர்வமான வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோரின் கூட்டு அனுமதியோடு மட்டுமே போயஸ் தோட்ட வீட்டில் குடியிருக்க முடியும்.   இவ்விருவரில் ஒருவர் அனுமதி மறுத்தாலும் சசிகலா அங்கே இருக்க முடியாது.
தீபக் தற்போது மன்னார்குடி வகையறாக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவரின் அனுமதியை மட்டும் பெற்றால் போதுமா என்றால் அது போதாது.  ஏனெனில், அந்த வீடு, பாகப்பிரிவினை செய்யப்படவில்லை.   பாகப்பிரிவினை செய்யப்பட்டால்தான் எந்த பகுதி தீபாவுக்கும், எந்த பகுதி தீபக்குக்கும் என்பது தெரியும்.  அது முடிவாகாத வரையில், இருவரில் ஒருவரின் அனுமதி கிடைக்காவிட்டால் கூட சசிகலா வீட்டை காலி செய்ய வேண்டும்.
dc-cover-j333h6ma31hl4r76cvuhfbjjl5-20161215080619-medi
சட்டரீதியாக தற்போது தீபா வீட்டை காலி செய்யுங்கள் என்று சசிகலா குடும்பத்தினருக்கு எதிரான நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும்.   இதுவரை ஜெயலலிதா அனுமதியோடு குடியிருந்தீர்கள்.  ஜெயலலிதா இறந்து விட்ட காரணத்தால் அவரின் அனுமதி தற்போது கிடையாது. ஆகையால் வீட்டை காலி செய்யுங்கள் என்று உரிமையியல் நீதிமன்றத்தில் தீபா வழக்கு தொடுக்க முடியும்.    அப்படி வழக்கு தொடர்ந்தால், தீர்ப்பு தீபாவுக்கு சாதகமாகவே அமையும்.” என்றார் அந்த வழக்கறிஞர்.
தீபா தரப்பில் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்று வழக்கறிஞர்களோடு ஆலோசனையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு சாதாரண வீட்டுக்கே இத்தனை சட்டச் சிக்கல்கள் உள்ள நிலையில், லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ள ஒரு கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவுக்கு உரிமை உள்ளது என்பதற்கான அடிப்படையாக ஒரு நிதி நிறுவனத்தில் செய்த முதலீட்டில் நாமினி என்று சசிகலா பெயர் குறிப்பிட்டிருக்கும் ஆவணத்தை முன்னாள் அமைச்சர் பொன்னையன் காண்பிப்பது நகைப்புக்கு உரியது. அதுவும் 1991ம் ஆண்டு கையெழுத்திட்டதை காட்டுகிறார். அதன் பின்னர் இரண்டு முறை சசிகலா போயஸ் கார்டன் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அதோடு நாமினி என்பது அந்த குறிப்பிட்ட சொத்துக்கு மட்டும்தான். ஒருவேளை பணத்துக்கு உரிமையாளர் இறந்துவிட்டால், அந்த பணத்தை குடும்பத்தினருக்கு வாங்கி கொடுக்க வேண்டுமே தவிர அவர் எடுத்துச் செல்ல சட்டத்தில் இடமில்லை என்கின்றனர் வழக்கறிஞர்கள்.
சொத்துக்கு சொந்தக்காரர் ரோட்டில், சம்பந்தம் இல்லாதோர் வீட்டில் என்ற நிலைமையில், வீடு யாருக்கு சொந்தமாகப் போகிறது என்பதை காலம்தான் முடிவு செய்யும்.
நன்றி
நம்ம அடையாளம்

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...